விக்டர் டிரம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டர் டிரம்பர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்விக்டர் தாமஸ் டிரம்பர்
பிறப்பு(1877-11-02)2 நவம்பர் 1877
டார்லிங் ஹர்ஸ்ட், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா
இறப்பு28 சூன் 1915(1915-06-28) (அகவை 37)
டார்லிங் ஹர்ஸ்ட், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை மித விரைவு வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 79)1 சூன் 1899 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு1 மார்ச் 1912 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1894–1914நியூசவுத் வேல்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 48 255
ஓட்டங்கள் 3,163 16,939
மட்டையாட்ட சராசரி 39.04 44.57
100கள்/50கள் 8/13 42/87
அதியுயர் ஓட்டம் 214* 300*
வீசிய பந்துகள் 546 3,822
வீழ்த்தல்கள் 8 64
பந்துவீச்சு சராசரி 39.62 31.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/60 5/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
31/– 173/–
மூலம்: Cricinfo, 30 செப்டம்பர் 2009

விக்டர் தாமஸ் டிரம்பர் (Victor Thomas Trumper 2 நவம்பர் 1877 - 28 ஜூன் 1915) ஒரு ஆஸ்திரேலிய முன்னாள் துடுப்பட்ட வீரர் , துடுப்பாட்டப் பொற்காலத்தின் மிகவும் பாங்கான மற்றும் பன்முக மட்டையாளர் என்று அறியப்பட்டவர் ஆவார்.இவரது அணி பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். ஆஸ்திரேலியாவில் ரக்பி லீக்கின் ஆரம்ப காலங்களில் டிரம்பர் ஒரு முக்கிய நபராக இருந்தார். [1] தேர்வுத் துடுப்பட்ட வரலாற்றில் 8 நூறுகளை அடித்த முதல் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையினைப் படைத்தார்.இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் இதுவரையில் 48 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

டிரம்பர் சிட்னியில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. [2] அவரது பிறப்பு குறித்த திட்டவட்டமான பதிவு எதுவும் இல்லை. ட்ரம்பரின் பெற்றோர் சார்லஸ் தாமஸ் டிரம்பர்மற்றும் அவரது மனைவி லூயிசா ஆலிஸ் "லூயி", நீ கோக்லான் என்று நம்பப்படுகிறது. [3]

டிரம்பர் கிரவுன் ஸ்ட்ரீட் சுப்பீரியர் பொதுப் பள்ளியில் கல்வி கற்றார் [2] துவக்கத்தில் மட்டையாளராக துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். சிட்னி துடுப்பாட்ட மைதானத்தில் ஆண்ட்ரூ ஸ்டோடார்ட்டின் தலைமையிலான இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் அறிமுகமான போது இவருக்கு வயது 17 ஆகும். இளையோர் அணி சார்பாக விளையாடி இவரந்தப் போட்டியில் 67 ஓட்டங்கள் எடுத்தார்.

1899 ஆஷஸ்[தொகு]

இவர் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 11 ஓட்டங்களையும் எடுத்தார். இரண்டாவது போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார். இவர் அந்தப் போட்டியில் 135 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இறப்பு[தொகு]

1914 ஆம் ஆண்டில் ட்ரம்பரின் உடல்நலம் விரைவாகக் மோசமானத., சிட்னியின் டார்லிங்ஹர்ஸ்டில் பிரைட் நோயின் விளைவாக அவர் இறந்தார். ஜூன் 28, 1915, 37 ஆவது வயதில் இவர் காலமானார். சிட்னியில் இதுவரை கண்டிராத மிகப் பெரிய இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு (250,000 ஆதரவாளர்களுடன்) டிரம்பர் வேவர்லி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் [4] அவரது மனைவி சாரா, அவரது மகன் விக்டர் மற்றும் மகள் நான்சி ஆகியோரும் இருந்தனர்.

ட்ரம்பரின் மகன், விக்டர் டிரம்பர்ஜூனியர் (1913-1981), 1940–41ல் நியூ சவுத் வேல்ஸிற்காக ஏழு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவர் , அட்மிரல் சர் விக்டர் ஸ்மித்தின் (1913-1998) மாமாவும் ஆவார், அட்மிரல் பதவி பெற்ற முதல் ஆஸ்திரேலியர் எனும் பெருமை பெற்றார்.

விக்டர் தாமஸின் தாய்வழி வம்சாவளி கோஃப்லின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் என்.எஸ்.டபிள்யூவின் முதல் பெண் புள்ளிவிவர நிபுணரும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தின் முதலமைச்சர் கிளேர் மார்ட்டினும் அடங்குவர். குரோம்வெல் படையெடுப்பு பின்னர் அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சத்திற்குப் பிறகு 1850 களில் கவுண்டி கார்க்கை விட்டு வெளியேறும் வரை இந்த குடும்பம் முதலில் அயர்லாந்தில் உள்ள ஆஃபாலியில் இருந்து வந்தது.  

அங்கீகாரம்[தொகு]

டிரம்பர்1903 ஆம் ஆண்டில் இந்த ஆண்டின் விஸ்டன் துடுப்பட்ட வீரராக அறிவிக்கப்பட்டார் .அவருக்கு 1914 இல் நியூ சவுத் வேல்ஸ் ரக்பி லீக்கின் நிரந்த உறுப்பினர் உரிமை வழங்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. "History". New South Wales Rugby League. NSWRL. Archived from the original on 7 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 9 October 2011.
  2. 2.0 2.1 Bede Nairn, 'Trumper, Victor Thomas (1877–1915)', Australian Dictionary of Biography, Vol. 12, MUP, 1990, pp. 269–272. retrieved 13 January 2010
  3. Ancestry.com.au Stanford Family Tree by Thomas H Stanford
  4. "Beloved Vic". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டர்_டிரம்பர்&oldid=3571518" இலிருந்து மீள்விக்கப்பட்டது