விக்கி மாநாடு, இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கி மாநாடு இந்தியா
Wiki Conference India 2023 logo
நிகழ்நிலைசெயலில்
நிகழிடம்ஐதராபாத்து
அமைவிடம்ஐதராபாத்து , இந்தியா (28 முதல் 30 வரை ஏப்ரல் 2023)
நாடுஇந்தியா
முதல் நிகழ்வு2011
கடைசி நிகழ்வு2016
அமைப்பாளர்(கள்)மும்பை விக்கிப்பீடியா சமூகம்,
விக்கிமீடியா இந்தியா
விக்கிமீடியா நிறுவனம்
ஆவண நிலைஇலாப நோக்கற்ற அமைப்பு
இணையத்தளம்Wiki Conference India 2023

விக்கி மாநாடு இந்தியா (Wiki Conference India) இந்தியாவில் விக்கிமீடியா இந்தியாவும் மும்பை விக்கிப்பீடியா சமூகமும் இணைந்து[1][2] விக்கிப்பீடியா நிறுவனத்தின் உதவியுடன்[3] நடத்திய பல்வேறு விக்கிமீடியா திட்டங்களின் பயனர்களின் மாநாடு ஆகும். இந்த மாநாடு விக்கிமீடியா இந்தியாவினால் ஆண்டுதோறும் நடத்தப்பட உள்ள நிகழ்வாகவும் பல்வேறு நாட்டினர்களும் கலந்துக் கொள்ளக்கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி விக்கிப்பீடியா மற்றும் சகோதரத் திட்டங்களில் இந்தியா குறித்த விழிப்புணர்வை கூட்டவதாக இருக்கும்.[2][4] பஞ்சாப்பில் 2016-ல் நடைபெற்ற இரண்டாவது இந்திய விக்கி மாநாட்டிற்குப் பின்னர் கோவிட் பெருந்தொற்று 2019 காரணமாக, சிறிய இடைவெளிக்குப் பின்னர், விக்கி மாநாடு இந்தியா 2023 ஐதராபாத்தில் 2023 ஏப்ரல் 28 முதல் 30 வரை நடைபெறுகிறது.[5].

விக்கி மாநாடு, இந்தியா 2011[தொகு]

முதல் விக்கி இந்தியா மாநாடு 2011 நவம்பர் 18 முதல் 20 வரை மும்பையில் நடைபெற்றது.[6]

அனைத்து இந்திய விக்கிஊடகத்தினைத் தொடர்பு கொள்ளவும், விக்கித் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒத்துழைக்கவும் ஒரு பொதுவான தளத்தை வழங்குவதை விக்கி மாநாடு இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாடு நவம்பர் 18 முதல் 20 (2011) வரை தெற்கு மும்பையில் உள்ள மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வரலாற்று பட்டமளிப்பு மண்டபத்தில் உரை நிகழ்ச்சிகள் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன.[1][7][8]

விக்கி மாநாடு, இந்தியா 2016[தொகு]

பஞ்சாபில் 2016-ல்

இந்தியாவின் இரண்டாவது விக்கி மாநாடு பஞ்சாபின் சண்டிகருக்கு அருகிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விக்கி ஊடக நிறுவன நிர்வாக இயக்குனர் கேத்ரின் மஹர் மற்றும் வாரிய உறுப்பினர் நடாலியா டிம்கிவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.[9]

விக்கி மாநாடு, இந்தியா 2023[தொகு]

விக்கி மாநாடு, இந்தியா 2023 என்பது ஒரு தேசிய அளவிலான மாநாடு ஆகும். இது இந்திய மொழி விக்கிமீடியா திட்டங்கள் மற்றும் இந்தியா மற்றும் சில தெற்காசிய பிராந்தியங்களில் இயக்கத்தின் பிற அம்சங்களில் ஆர்வமுள்ள விக்கி ஊடகத்தினர்களும் பங்குதாரர்களும் கலந்துரையாட ஒரு பொதுவான தளத்தை வழங்குகிறது. இம்மாநாடானது விக்கி ஊடகத்தினர் சந்திப்பதற்கும், கதைகள், கற்றல்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், நமது பிராந்தியத்தின் எதிர்கால உத்தியைப் பற்றி விவாதிப்பதற்கும் வாய்ப்பளிக்கும் ஒரு பொதுவான சந்திப்பிடமாகும். இந்த மாநாடு 2023 ஏப்ரல் 28 முதல் 30 வரை ஐதராபாத்தில் நடைபெறும்.

படங்கள்[தொகு]

விக்கி மாநாடு, இந்தியா 2011[தொகு]

விக்கி மாநாடு, இந்தியா 2016[தொகு]

விக்கி மாநாடு, இந்தியா 2023[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 IANS (9 November 2011). "Mumbai to host first WikiConference in India". India Current Affairs. 26 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Unattributed (09 November 2011). "Mumbai To Host First Ever National WikiConference In India". EFY Times. EFY Enterprises. 15 November 2011 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. IANS (9 November 2011). "Wikipedia conference comes to India, set for Nov 18". Northern Voices Online. 26 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. Unattributed (10 November 2011). "Wikipedia eyes India for language growth". Dawn.com. 15 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "WikiConference India 2023". Meta. 12 October 2022. 19 February 2023 அன்று பார்க்கப்பட்டது.
  6. Gupta, Bhawna (10 November 2011). "Jimmy Wales To Open The First WikiConference In India". techcircle.in. 15 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  7. Rajini Vaidyanathan (19 November 2011). "Wikipedia hosts India conference amid expansion push". BBC News Online. 19 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  8. Deo, Sumedha (9 November 2011). "Diary India - Nov 18-20". Reuters. 15 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  9. Hindustan Times

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
WikiConference India
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
செய்திகள்