விக்கி என்டெடிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கி என்டெடிமா
பிறப்புc.1958
தன்சானியா
தேசியம்தன்சானியா
பணிஇதழியலாளர்
பணியகம்பிபிசி, யுடிடிஎஸ்
அறியப்படுவதுமனித உரிமை மீறல்களைப் புகாரளித்தல்; மனித உரிமைகள் செயல்பாடு
வலைத்தளம்
Twitter

விக்கி என்டெடிமா (Vicky Ntetema) (பிறப்பு: 1958 / 59) இவர் தான்சானியாவில் அல்பினிசம் கொண்ட நபர்கள் கொல்லப்பட்டதைப் பற்றிய கதையை வெளி கொணர்ந்ததாக அறியப்பட்ட ஒரு தான்சானிய பத்திரிகையாளர் ஆவார். பின்னர், தான்சானியாவில் அண்டர் தி சேம் சன் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானார்.

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

என்டெடிமா தான்சானியாவில் 1958இல் பிறந்தார். அரசாங்க உதவித்தொகையுடன் இவர் சோவியத் ஒன்றியத்தில் படித்தார். 1985ஆம் ஆண்டில் பத்திரிகைத் துறை. மேலும் 1998ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள லண்டன் பொருளாதாரப் பள்ளியில் தகவல் அமைப்புகள் மேம்பாட்டில் பட்டம் பெற்றார். 1991ஆம் ஆண்டில், லண்டனில் ஒரு மின்னணு ஊடக ஊடகவியலாளராக (வானொலி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர்) பிபிசி-யில் என்டெடிமா, 2006இல் தான்சானியாவில் பிபிசி உலக சேவைக்கான மூத்த பத்திரிகையாளர் மற்றும் பணியகத் தலைவராகவும் சேர்ந்தார். [1] 2008ஆம் ஆண்டில் தான்சானியாவில் அல்பினிசம் கொண்ட நபர்கள் கொல்லப்பட்டதைப் பற்றிய ஒரு கதையை அவர் வெளி கொணர்ந்தபோது என்டெடிமா கவனத்திற்கு வந்தார். தான்சானியாவில் அல்பினிசம் கொண்ட நபர்களின் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் கனேடிய தொண்டு நிறுவனமான அண்டர் தி சேம் சன் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவியேற்றார். மே 2018 இல் ஓய்வு பெறும் வரை இவர் பதவி வகித்தார்.

தான்சானியாவில் அல்பினிசம் கொண்ட நபர்களை துன்புறுத்துவது பற்றிய அறிக்கைகள்[தொகு]

சில தான்சானியர்கள் அல்பினிசம் கொண்ட நபர்களை பேய் போன்ற மனிதர்களாகக் கண்டதாகவும், உள்ளூர் சூனிய மருத்துவர்கள் "அவர்களின் உடல் பாகங்கள் மாய அழகிற்கான சக்திவாய்ந்த பொருட்களாக" கருதுவதையும் என்டெடிமாவின் இரகசிய விசாரணையில் தெரியவந்தது. [2] [3] நிலைமையை சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு இவரது அறிக்கைகள் முதன்மைக் காரணமாக இருந்தன. தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் காரணமாக, என்டெடிமா தலைமறைவாக செல்ல வேண்டியிருந்தது. நாள் முழுவதும் பாதுகாப்பு தேவைப்பட்டது. மேலும் தனது சொந்த பாதுகாப்புக்காக இரண்டு முறை நாட்டை விட்டு வெளியேறவும் வேண்டியிருந்தது. [4]

விருதுகள்[தொகு]

2010ஆம் ஆண்டில், சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை இவரது அறிக்கைகளுக்காக வீரதீரப் பத்திரிகை விருதை வழங்கியது. [1] 2016ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி என்டெடிமாவிற்கு சர்வதேச வீரதீர பெண் விருதை வழங்கினார். [5] [6]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Wray, Lindsey (2010). "Vicky Ntetema". International Women's Media Foundation. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
  2. "Tanzania fears over albino killings". BBC News. 2007-12-07. http://news.bbc.co.uk/2/hi/africa/7148673.stm. 
  3. Ntetema, Vicky (2008-07-24). "In hiding for exposing Tanzania witchdoctors". BBC News. http://news.bbc.co.uk/2/hi/africa/7523796.stm. 
  4. "Vicky Ntetema wins bravery award for BBC albino report". BBC News. 2010-05-11. http://news.bbc.co.uk/2/hi/africa/8674440.stm. 
  5. "Biographies of 2016 Award Winners Share". U.S. Department of State. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
  6. "U.S. Embassy Honors 2016 International Women of Courage Laureate Ms. Vicky Ntetema". U.S. Embassy in Tanzania. 2016-12-29. Archived from the original on 2020-06-21. பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கி_என்டெடிமா&oldid=3591884" இலிருந்து மீள்விக்கப்பட்டது