விக்கிலீக்ஸ் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிலீக்ஸ் கட்சி (The Wikileaks Party) என்பது ஆஸ்திரேலிய அரசியல் கட்சி ஆகும். இது விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்சு மூலம் தொடங்கப்பட்டது.[1] ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற இக்கட்சி,[2] ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் 2013 மேலவைத் தேர்தலில் போட்டியிட உள்ளது.[3]

2013 மார்ச் 23 இல் விக்கிலீக்ஸ் கட்சி ஆத்திரேலியத் தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தது. இக்கட்சியில் ஏறத்தாழ 1300 பேர் பணம் செலுத்தும் உறுப்பினர்களாக உள்ளனர்.[4] இவர்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 2013 சூன் 2 இல் அதிகாரபூர்வமாக அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.[5] ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் மேலவைக்காகத் தனது வேட்பாளர்களை நிறுத்தும் என இக்கட்சி அறிவித்துள்ளது.[6]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிலீக்ஸ்_கட்சி&oldid=1454049" இருந்து மீள்விக்கப்பட்டது