விக்கிரம பாண்டியன் (1248-1258) பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிரம பாண்டியன் (1248-1258) சுந்தர பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசனாக ஆட்சி புரிந்து வந்தான். புவனேக வீரன் என்பது இவனது பட்டப்பெயர். புவனகிரி என்னும் ஊர் இவன் பெயரால் தோன்றிய ஊர். இவனைப் பற்றிய ஆவணப் பாடல்கள் பல உள்ளன.

காகதீய குல வீரகண்ட கோபாலனை வென்று அவனது நாட்டைக் கணபதி என்பவனுக்கு அளித்தது, மற்றொரு தெலுங்குப் பகுதியில் ருத்திராம்பா என்னும் அரசி ஆண்வேடம் பூண்டு அரசாண்டது போன்ற செய்திகள் இவனைப்பற்றிய ஆவணப்பாடல்களில் உள்ளன. அவற்றில் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன.

புயலும் தருவும் பொருகைப் பவனேக வீரபுனல்
வயலும் தானம்தரும் கொற்கைக் காவல வாரணப்போர்
முயலும் கணபதி மொய்த்தசெஞ் சோதி முகத்திரண்டு
கயலுண் டெனுமது வோமுனி வாறிய காரணமே
(கட்டளைக் கலித்துறை)
வெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே
பொங்கி வடதிணையிற் போகாதே – அங்கிருப்பாள்
பெண்ணென்று மீட்ட பெருமாளே பேரிசையாழ்ப்
பண்ணொன்று வேய்வாய் பகை.
(வெண்பா)

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005