உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கியூடக இந்தியப் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய விக்கியூடகப் பிரிவு (Wikimedia India Chapter; விக்கிமீடியா இந்தியா) என்பது இந்தியாவில் விக்கியூடக அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுக்க உருவாக்கப்பட்ட அமைப்பு. 2004 இல் இது பற்றிய உரையாடல்கள் தொடங்கப்பட்டன எனினும் தொடர் செயற்பாடுகள் நடைபெறவில்லை. 2007 இல் மீண்டும் இவ்வமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு புத்துயிர்ப்பு தரப்பட்டது. ஆனால் அமைப்பு நிறுவப்படவில்லை. இறுதியாக 2011 சனவரியில் இம்முயற்சிகள் வெற்றி பெற்று பெங்களூரில், இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது

நிர்வாகக் குழு[தொகு]

மோக்‌ஷ் ஜுனேஜா, ஸ்ரீகாந்த் ராமகிருஷ்ணன், கார்த்திக் நாடார், ப்ரணவ் கரம்சே, விஸ்வநாதன் பிரபாகரன், நிகிடா பெலாவடே, ஜயந்தா நாத் ஆகியோர் அடங்கிய ஏழு நபர் நிர்வாகக் குழு இந்திய விக்கிமீடியா பிரிவினை நிர்வகிக்கிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


இணைப்புகள்[தொகு]