விக்கிப்பீடியா பேச்சு:Request to remove sysop access

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெகுநாட்களாக தொடர்பில் இல்லாத நிருவாககளின் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறலாமா என்று முன்பு ஒரு முறை உரையாடினோம். அதே போல், தமிழ் விக்கிப்பீடியாவை விட்டு விலகி உள்ள வினோத்தின் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறலாம் என்று உரையாடினோம். தற்போது, பிற விசயங்கள் தொடர்பாகவும் விக்கிமீடியா stewardகளை (தமிழில் என்ன?) அணுக வேண்டி உள்ளதால், இந்த வேண்டுகோளையும் வைக்கலாமா?--ரவி 19:04, 14 மே 2010 (UTC)Reply[பதில் அளி]


steward - பொறுப்பாளர் . நீண்ட நாட்கள் பங்களிக்காத\தொடர்பில் இல்லாத நிருவாகிகளின் நிருவாக அணுக்கத்தை திரும்பப் பெறுவதே சிறந்தது முறை. இவ்வேண்டுகோளையும் வைக்கலாம். --குறும்பன் 19:51, 14 மே 2010 (UTC)Reply[பதில் அளி]
ஆம், குறும்பன் சொன்னது போல பொறுப்பாளர் என்பது நல்ல சொல். sysop, bureaucrat, steward ஆகிய மூன்று சொற்களுக்கும் சரியான தமிழ்ச்சொற்களை ஆள்தல் நல்லது. ஆட்சியர், மேலாட்சியர், தலையாட்சியர் (பொறுப்பாட்சியர்) எனக் கூறலாம். அல்லது நடத்துநர், நிறுவாட்சியர், பொறுப்பாட்சியர் எனலாம். நிருவாகி, அதிகாரி என்பன நிறைவு தருவதாக இல்லை. --செல்வா 04:37, 15 மே 2010 (UTC)Reply[பதில் அளி]

நிருவாகி, அதிகாரி, ஆட்சியர் போன்ற சொற்கள் அதிகார வாடை அடிப்பதாக ஒரு சில பயனர்கள் தனிப்பட கருத்து தெரிவித்திருந்தனர். எனவே, நடுநிலையான வேறு சொற்களை ஆயலாம். sysop என்பது webmaster என்ற சொல்லைப் போல் இருக்கிறது. இதற்கான தமிழாக்கத்தை இதனை ஒத்துச் செய்யலாம். மேற்பார்வையாளர்கள்? நடத்துனர்கள்? காப்பாளர்கள்?

bureaucratஐப் பொறுப்பாளர் எனலாம். அல்லது, பொறுப்பாளர் நல்ல சொல் போல் தோன்றினால் sysopகளை பொறுப்பாளர் எனக் குறிப்பிட்டு bureaucratக்கு வேறு பெயர் தேடலாம்.

steward என்பதற்கு http://dictionary.reference.com/browse/steward தளத்தில்

a person who manages another's property or financial affairs; one who administers anything as the agent of another or others.

a person appointed by an organization or group to supervise the affairs of that group at certain functions.

போன்ற பொருள் தரப்பட்டுள்ளது. எனவே, stewardஐ சார்பாளர் என்று குறிப்பிடலாம்--ரவி 05:51, 15 மே 2010 (UTC)Reply[பதில் அளி]