விக்கிப்பீடியா பேச்சு:2015 மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@ தினேசு, திட்டப் பக்கத்திலும், உரையாடல் பக்கத்திலும் உரிய தகவல்களை அடுத்த 2 நாட்களுக்கு தொடர்ந்து இற்றை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:38, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தினேசுக்கு நன்றி![தொகு]

பயணத் திட்டத்திற்குத் தேவையான போதிய அவகாசம் இல்லாதபோதும்... பெங்களூரிலிருந்து மதுரைக்குச் சென்று, நா. ஸ்ரீதர் அவர்களுடன் ஒருங்கிணைந்து நமது கடையினை நடத்தும் தினேசுக்கு நமது நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:00, 29 ஆகத்து 2015 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 15:15, 29 ஆகத்து 2015 (UTC) 👍 விருப்பம்-நீச்சல்காரன் (பேச்சு) 08:06, 31 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நா. ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி![தொகு]

இராமசந்திரபுரத்திலிருந்து மதுரைக்குச் சென்று, தினேசுடன் இணைந்து நமது கடையை நடத்தும் நா. ஸ்ரீதர் அவர்களுக்கு நமது நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:26, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நன்றி![தொகு]

மதுரை புத்தகத் திருவிழா 2015 எனும் கட்டுரையினை ஆரம்பித்து, மதுரை புத்தகக் கண்காட்சி தொடர்பான மற்ற கட்டுரைகளை விரிவாக்கியும் உதவும் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நமது நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:54, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

வாய்ப்புகள்[தொகு]

இப்புத்தகத்திருவிழாவில் செய்ய வேண்டியவைகளாக எனக்குத் தோன்றியவைகளில் சில:

  1. சிறு புத்தகம்/கையேடு வழங்க வேண்டும் (குறைந்தது 4-5 பக்கம்) - இலவசமாக இயலாவிட்டாலும், குறைந்தபட்ச கட்டணத்துடன் கொடுக்க வேண்டும்.
  2. தமிழ் தட்டச்சு கையேடு / புத்தகங்கள்
  3. இலவசம் குறித்த விளக்கப்படங்கள்
  4. முன்னிருத்தம் (Projector) - வாயிலாக பயனர்கள் பேசியவற்றை ஒளி-ஒலி காட்சிகள் மூலம் அறியப்படுத்தலாம்.
  5. தமிழ் விக்கிப்பீடியா குறித்து வெளியான புத்தகங்களை விற்பனை செய்யலாம்.
  6. விக்கிப்பீடியா செயலியை செல்பேசியில் தரவிறக்கம் செய்து தரலாம்.
  7. தமிழ் விக்கிப்பீடியா மற்றும் அதனின் திட்டங்கள் முழுவதும் தரவிறக்கம் செய்து குறுவட்டு அல்லது பென்ட்ரைவ் / எசுடி கார்டு மூலம் கொடுக்கலாம்.
  8. மேலதிக ப்ளெக்சு/போச்டர் (திட்டங்கள் குறித்த) தேவை.

பிற தேவைகள்[தொகு]

  1. மேசையில் போடுவதற்கான ஒரு நீளமான துணி
  2. இரண்டு அல்லது மூன்று மடிக்கணினி
  3. பயனர்களுடன் உரையாட விக்கிப்பீடியர்களுக்கு பயிற்சி ?

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:46, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

  • இத்தகைய பொருட்களை சேகரித்து வைக்கவும், வழங்கிக் கண்காணிக்கவும் சென்னை அல்லது ஓர் பொதுவிடத்தில் ஓர் ஒருங்கிணைப்பு அலுவலகம்/அலுவலர் இருப்பின் நலம்.--மணியன் (பேச்சு) 15:10, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பொதுமக்களின் எதிர்பார்ப்புகள்[தொகு]

இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பட்ட மக்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மாணவர்கள், ஓய்வு பெற்றவர்கள், நிருபர்கள், அரசு ஊழியர்கள், கணினி பற்றி தெரியாதவர்கள், ஆங்கில விக்கிப்பீடியா பயன்படுத்துவோர்கள், தமிழ் விக்கிப்பீடியாவை படிப்பவர்கள். அவர்களிடன் பேசும்போது அவர்களுடைய கேள்விகளில் சிலவற்றைத் திட்டப்பக்கத்தில் கொடுத்துள்ளேன். இவ்வனைத்துக் கேள்விகளுக்கும் நானும் ஸ்ரீதரும் எங்களுக்குத் தெரிந்த விளக்கத்தினை எங்களுடைய பார்வையில் கொடுத்துள்ளோம். இது ஒரு சிறு தொகுப்பு மட்டுமே. மக்களுடைய மனதை புரிந்து கொள்ள இக்கேள்விகளை இங்கு தொகுத்துள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:49, 31 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

அரிஅரவேலன், எஸ்ஸார் இருவருக்கும் நன்றி![தொகு]

தமிழ் விக்கிப்பீடியா அரங்கத்தில் செயல்படும் பயனர்கள் அரிஅரவேலன், எஸ்ஸார் இருவருக்கும் நமது நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:39, 2 செப்டம்பர் 2015 (UTC)

👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:00, 2 செப்டம்பர் 2015 (UTC)