விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/மே, 2014

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:Antan, இம்மாத கட்டுரைப் போட்டி முடிவுகளை அறிவிக்க உதவுமாறு தென்காசியார் கேட்டிருந்தார். நீங்கள் இம்மாத முடிவுகளைக் கவனித்து வருகிறீர்களா? உதவி தேவையெனில் என்னால் இணைய முடியும். போட்டிக் காலம் முடிந்த பிறகும் சிலர் முடிவுகள் பக்கத்தில் கட்டுரைகளைச் சேர்த்து வருகிறார். கடந்த மாதங்களில் இதை எவ்வாறு அணுகி இருந்தீர்கள்? ஒரு வேளை, மாத இறுதிக்கு முன்பு விரிவான / முடிவுகள் பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட கட்டுரைகளை மட்டும் கணக்கில் கொள்ளலாமா?--இரவி (பேச்சு) 14:31, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]

மாத ஆரம்பத்தின் பின்பும் இறுதிக்கு முன்பும் விரிவான கட்டுரைகளை மட்டும் கணக்கில் கொள்வதே பொருத்தமானது. கடந்த மாதங்களிலும் நான் உட்பட சில/பல பயனர்கள் போட்டிக்கான மாதத்தில் கட்டுரைகளை விரிவாக்கி அடுத்த நாளில் தெரிவித்துள்ளோம். கட்டுரைப் போட்டிப் பணிகளில் நீங்களும் இணைந்துகொண்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். ஏனெனில் இன்னும் பல பணிகள் தேக்கத்தில் உள்ளன.

  1. மார்ச் மாத முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் வெற்றிபெற்ற பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் பதக்கத்துடன் முடிவு தெரிவிக்கப்படவில்லை.
  2. ஏப்ரல் மாத முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.
  3. மே மாத முடிவுகள் சரிபார்த்து அறிவிக்கப்பட வேண்டும்.

விரைவில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கின்றேன்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:04, 4 சூன் 2014 (UTC)[பதிலளி]

@இரவி அவர்களே நானும் முடிந்த வரை உதவி செய்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:06, 4 சூன் 2014 (UTC)[பதிலளி]

ஸ்ரீகர்சன், நிலுவையில் இருக்கும் பணிகளைக் கவனத்துக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி. மார்ச்சு 2014 வெற்றியாளர் பதக்கங்களைத் தற்போது அளித்துள்ளேன். ஏப்ரல், மே மாதம் வந்த கட்டுரைகளைச் சரி பார்த்து உதவ முடியும் எனில் நன்று. சூன் 15க்குள் அனைத்து முடிவுகளையும் அறிவிக்க முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 13:59, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:37, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]
தாராளமாக இம்மாத கட்டுரைப் போட்டி முடிவுகளை அறிவியுங்கள். தற்போது சற்று நேரம் கிடைத்துள்ளதால், நானும் உதவுகிறேன். --AntonTalk 18:00, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]
Anton, போட்டிக்கு வந்த கட்டுரைகளை வழக்கம் போல் சரி பார்த்து உதவியமைக்கு நன்றி. நிலுவையில் உள்ள மாதங்களுக்குப் பதக்கங்கள் அளிப்பது, வாகையாளர்களை அறிவிப்பது, பரிசுத் தொகையை இறுதி செய்து உரியவர்களுக்குச் சான்றிதழ்களுடன் அனுப்பி வைப்பது ஆகிய பணிகளை இனி வரும் நாள்களில் மேற்கொள்கிறேன். போட்டியாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:02, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் அப்படியே ஆகட்டும் இரவி அவர்களே!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:52, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]

புதிய கட்டுரைகளைச் சேர்க்க வேண்டாம்[தொகு]

போட்டிக் காலம் முடிந்து விட்டதால் புதிய கட்டுரைகளை முடிவுகள் பக்கத்தில் சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.--இரவி (பேச்சு) 14:31, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]

கட்டுரை எண்ணிக்கை பற்றிய தெளிவு தேவை[தொகு]

மே மாதம் 15 போட்டிக் கட்டுரைகள் உள்ளதாக இங்கு பதிவாகியுள்ளது. ஆனால், இந்தப் பக்கத்தைப் பார்த்தால் எவை தகுதி பெற்றன என்று குழப்பமாக உள்ளது. எண்ணிக்கையும் 15 வருவதாக தெரியவில்லை. தெளிவு தேவை. விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் பக்கத்தில் இத்தரவைச் சேர்க்க வேண்டியுள்ளது. நன்றி. கவனிக்க: அன்டன், சிறீகர்சன். --இரவி (பேச்சு) 11:54, 9 சூலை 2014 (UTC)[பதிலளி]

@இரவி அவர்களே ஆமாம், 8 கட்டுரைகள் தான் விரிவாக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி பூட்டப்பட்டுள்ளதால் நீங்களே மாற்றிவிடுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:24, 9 சூலை 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --AntonTalk 14:45, 10 சூலை 2014 (UTC)[பதிலளி]