விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/திசம்பர், 2013

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு ஐயம்! உரைப் பகுதி மட்டுமே 15,000 பைட்டுகளுக்குள் அடங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்குள் படிமம், ஆதாரங்கள் உள்ளிட்டன அடங்குமா? அல்லது இவற்றையும் இறுதியில் தன சேர்க்க வேண்டுமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:43, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

அடங்கக் கூடாது என்பது எனது விளங்கிக் கொள்ளல். அப்படி இருப்பதுதான் சரியாக இருக்கும். --Antonஃ٠•●♥Talk♥●•٠ஃ 14:26, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
இவற்றை சேர்க்காமல் உரையை மட்டும் எழுதிவிட்டு, பின்னர், சரியான இடத்தில் படிமத்தையும், ஆதாரத்தையும் தேடித் தேடி சேர்ப்பது கடினமான செயல். இதைத் தவிர்க்கலாம். அதற்காக, ஒரே வரிக்கு நான்கு ஆதாரங்கள் போன்றவற்றைச் சேர்த்து, 15,000 பைட்டுகளை எட்டுவது ஏற்க இயலாத ஒன்று. சில கட்டுரைகளில் பட்டியல்களும் உள்ளன. இவற்றையும் உரைப்பகுதியாகவே கணக்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:59, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
அப்படியாயின் "15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பவை யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும்" என்ற போட்டி விதியை மாற்ற வேண்டும். அதற்கு மற்ற பயனர்களின் ஆதரவும் இருந்தால் நன்று. --Anton·٠•●♥Talk♥●•٠· 16:21, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
இதற்குத் தீர்வாக "15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பவை யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும்" என்ற போட்டி விதியை நீக்கிவிட்டு கட்டுரையின் உள்ளடக்கம் 20,000 பைட்டுகளுக்கு குறையாது இருக்க வேண்டும் என மாற்றலாம்.--மணியன் (பேச்சு) 20:53, 12 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
உரைப்பகுதி தவிர்த்து, வார்ப்புருக்கள், அட்டவனைகள், வெளியிணைப்புக்களால் கட்டுரை நிரப்பப்பட வாய்ப்புள்ளது. 15360 பைட்டுக்கு மேல் உசாத்துணைகள், வெளியிணைப்புகள் போன்றவற்றுடன் நல்ல முறையில் கட்டுரையினை வளர்த்தெடுக்கும் பட்சத்தில் இவ்விதி பற்றி கூர்ந்து அவதானிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், விதியைச் சான்றாகக் கொண்டு 15360ஆவது பைட்டைச் சேர்க்க ஏரணத்துடன் செயற்படுவதுதான் உறுத்தலாகவுள்ளது. எனவே ஏரணம் தவிர்க்க விதியை மட்டும் அமுலாக்கும் கட்டாயத்தை போட்டியளர்களே ஏற்படுத்துகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டதுபோல் 20,000 பைட்டுகளுக்கு மேல் "குறிப்பிடத்தக்க" உரைப்பகுதியுடன் பிற உள்ளடக்கங்களைக் கொண்ட கட்டுரைகளை போட்டிக்குத் தகுந்தவையாகக் கருதலாம் (விதியாக அன்றி, புரிந்துணர்வாக). முன்னர் பலர் 15360ஆவது சேர்த்த பின்னும் நல்ல முறையில் கட்டுரையினை வளர்த்துள்ளனர். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:47, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

படிமம், ஆதாரங்கள், வார்ப்புருக்கள், அட்டவணைகள் ஆகியவற்றையும் உரைப்பகுதியாக கருதியே அவ்விதியை எழுதினேன். கட்டுரையை எழுதிய பிறகு இவற்றை மீண்டும் பார்த்து தேடிப் பார்த்துத் திணிப்பது சுமையாக இருக்கலாம். இயல்பான போக்கில் தேவைப்படும் விசயங்களை உள்ளடக்கி கட்டுரையை விரிவாக்கலாம். கட்டுரையின் இறுதியில் வழக்கமாக வரும் விசயங்களை மட்டும் முதலிலேயே வெட்டி ஒட்ட வேண்டாம் என்றும் கருதினேன். ஆனால், இந்த விதி தரும் சலுகையை யாராவது தொடர்ந்து முறைகேடாக பயன்படுத்துவது போல் தோன்றினால், போட்டி நடக்கும் காலத்திலேயே ஒருங்கிணைப்பாளர்களிடம் முறையிடலாம். போட்டி முடிவதற்கு தக்க காலம் இருக்கும் முன்பே ஒருங்கிணைப்பாளர்களும் போட்டியாளர்களிடம் இதனைக் கவனித்துத் திருத்துமாறு அறிவுறுத்தலாம். --இரவி (பேச்சு) 17:07, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]