விக்கிப்பீடியா பேச்சு:2011 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2011 Tamil Wikipedia Annual Review

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கில மொழிபெயர்ப்பு[தொகு]

நற்கீரன், 2005 ஆண்டு முதல் செவ்வனே இப்பணியைச் செய்து வருவதற்குப் பாராட்டுகள். வேறு எந்த இந்திய விக்கியும் இது போல் செய்கிறதா தெரியவில்லை. இந்த ஆண்டு அறிக்கையை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து விக்கியிலும் பிடிஎப் வடிவிலும் வெளியிட்டால் இந்திய / உலக விக்கிமீடியா களங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வைக் கூட்ட உதவியாக இருக்கும். வருங்காலத்தில் நமது திட்டமிடல்களுக்குச் சாதகமாக மேல் விக்கியின் அணுகுமுறை உருவாவதற்கும் இது உதவும். --இரவி 05:03, 28 திசம்பர் 2011 (UTC)

இலங்கையில் இருந்து நேரடிப் பங்களிப்புகள்[தொகு]

கோபி, மயூரன், மயூரேசன் போன்றோர் 2005களில் முனைப்பாக செயல்பட்ட பிறகு இலங்கையில் இருந்து நேரடியாகப் பங்களித்தோர் எண்ணிக்கை குறைவாகவோ முற்றிலும் இல்லாமலோ இருந்தது. கடந்த ஆண்டு இந்த நேரடிப் பங்களிப்பு, களப்பரப்புரை ஆகியவை கூடியது ஒரு முக்கியமான நிகழ்வாகத் தோன்றுகிறது. இதனையும் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடலாம்.