விக்கிப்பீடியா பேச்சு:2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னையில் வரும் பெப்ரவரி 25 நடக்கும் விக்கிப் பட்டறையில், நம்மில் முனைப்பாக உள்ள பயனர்களில் எவரும் கலந்து கொள்ளாமல் போகும் வாய்ப்பு உள்ளது. இல்லை, கலந்து கொள்ளும் ஓரிருவரும் தமிழ் விக்கிபீடியாவை பிரதிநிதித்துவப்படுத்தி (இதற்கு தமிழ்ச் சொல் என்ன? இங்கே பார்க்கவும்- --செல்வா 16:57, 16 பெப்ரவரி 2007 (UTC)) பேசுவார்கள் என்பதால் அவர்களுக்கு உதவும் வகையிலும் பிற ஊடகங்களுக்கு தகவலை சேர்க்கும் வகையிலும் நாம் இணைந்து தமிழ் விக்கிபீடியாவின் தற்போதைய நிலை, போக்குகள், பிரச்சினைகள், வருங்கால குறிக்கோள்கள்-எதிர்ப்பார்ப்புகள், பயனர் விவரங்கள், பிற இந்திய மொழி விக்கிபீடியாக்களுடனான ஒப்பீடு (இது முக்கியமானது) ஆகியவற்றை ஓர் அறிக்கையாக இங்கு உருவாக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். என் முதற்கட்ட அறிக்கையை திட்டப்பக்கத்தில் தருகிறேன். வழக்கம் போல் அனைவரும் தொகுக்கலாம். கருத்துக்களை தெரிவிக்கலாம்.--Ravidreams 18:25, 12 பெப்ரவரி 2007 (UTC)


நற்கீரன் கருத்துக்கள்[தொகு]

ரவி: மிக்க நன்றி.

  • குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் த.வி. யில் பங்களிக்க முன்வந்து தமது ஆக்கங்களை அனுப்பிவைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • (பிற இந்திய விக்கிகளையும் பார்க்க) நாம் அடிப்படைகளில் (கொள்கை-உதவி-செயற்பாட்டு முறைமை), உள்ளடக்கத்தில் (பரப்பு-ஆழம்-தரம்), ஆரோக்கிய பயனர் சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இயன்றவரை நன்றாக அமைத்துவருவதை சற்று வீச்சாக/அழுத்தமாக சொல்லலாம்.
  • தமிழ் விக்கிபீடியாவின் கட்டற்ற தன்மை, நடுநிலைமை, இணக்க முடிவு, மெய்யறிதன்மை போன்றவற்றையும் குறிப்பிட்டு சொல்லாம். மேற்கோள்கள்களையும், ஆதாரங்களைகளையும் நாம் இயன்றவரை சேர்ப்பதையும் குறிப்பிடலாம்.
  • த.வி. தொலை நோக்கு, பொறுப்பு மிக்க தன்மை, மாற்று மூல அல்லது ஊடக தன்மையையும் சுட்டலாம்.
  • வகைப்படுத்தலுக்கு நாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும் குறிப்பிடலாம். விக்கியைப் பொறுத்தவரை அது முக்கியம்.
  • தமிழ் விக்கியின் தனித்துவ பண்புகளை விரிவாக சுட்டலாம்: ஐரோப்பிய மையப் பார்வைய தவிர்து எழுத்தல், எளிய தமிழில் நல்ல தமிழ் சொற்களைப் பயன்படுத்தி எழுதல், எழுத்து தமிழ் நடை அல்லது பொதுத் தமிழ் நடையை பின்பற்றல், தமிழர்களை பற்றிய தகவல்களை கவனம் தந்து சேர்த்தல் போன்ற பண்புகள்.
  • முக்கியமாக விக்கி பட்டறை எமக்கு எவ்வாறு உதவ முடியும் என்று தெளிவாக புள்ளியிட்டு காட்ட வேண்டும்.
  • த.வி. பரந்த அளவில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தல்.
  • நேரடி பங்களிப்பு
  • Programming - நுட்ப உதவி (த.வி. நுட்ப ரீதியில் இன்றைப்படுத்த வேண்டும்)
  • Graphics - வரைகலை (தனித்துவமான icons கோவை ஒன்றைத் தயாரித்தால் நன்றாக இருக்கும்.)
  • கல்வியில், கல்விக்கு தேவைப்படும் அறிவில் கட்டற்ற திறந்த மூல கொள்கையை முன்னிறுத்தல்.
  • இந்திய மொழிகளுக்கிடையான தொடர்புகளை விரிவாக்கல்.
  • கல்லூரி நிலையில் பட்டறைகளை நடத்துதல்...
  • எம்முடன் தொடர்ந்து தொடர்புகளைப் பேணி ஒரு பொதுத் திட்டத்தில் பங்களித்தல்.
  • தமிழ்நாட்டு அரசை அவர்களின் படிமங்களையும் தகவல்களையும் கட்டற்ற முறையில் அல்லது பொதுவில் தருவதற்கு உந்துதல். காப்புரிமை தொடர்பாக தமிழ்நாட்டு அரசு தளம் தெளிவாக இல்லை. குறிப்பாக படிமங்கள் தொடர்பாக. இதில் ஒரு தெளிவு தர உந்த வேண்டும். மாராத்தி விக்கிபீடியாவில் அவர்கள் அரச படிமங்களையோ தகவல்களையோ பயன்படுத்த முடிகின்றது, ஆனால் த.வி. அவ்வாறு செய்ய இன்னும் முடியவைல்லை.
http://www.maharashtra.gov.in/index.php
http://www.tn.gov.in/misc/disclaimer.htm
http://mr.wikipedia.org/wiki/Current_events

... (ரவி நீங்கள் கேட்டபடி ஆண்டறிக்கையிலிருந்து ஒரு விக்கிபீடியா:தமிழ் விக்கிபீடியா 2007 திட்ட அறிக்கை தயாரித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அந்தளவுக்கு என்னால் இப்போது முடியாது. அத்தோடு, பயனர்களின் கருத்துக்ளில் ஓரளவு எமது பணி தெளிவாக இருப்பதாகவும் தெரிகின்றது.) --Natkeeran 15:16, 16 பெப்ரவரி 2007 (UTC)

விக்கிமூலம் தொடங்கப்பட வேண்டும்[தொகு]

தமிழ் விக்கிமூலம் தொடங்கப்படுவதற்கான வாக்கெடுப்பு நடந்து பலகாலமாகியும் இன்னமும் அது தனியாகத் தொடங்கப்படவில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. விக்கிமூலம் தொடங்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்த இந்தச் சந்திப்பைப் பயன்படுத்த வேண்டுகிறேன். கோபி 16:57, 16 பெப்ரவரி 2007 (UTC)

கோபி, தினமும் விக்கிமீடியா IRC ஒடையில் போல் விக்கிமீடியா உருவாக்குனர்கள் தலையை உருட்டுவது தான் விக்கிமூலத்தை உடனடியாகத் தொடங்க ஒரே வழி. இது வரை நாம் யாரும் போய் உருட்டாதது தான் தாமதத்துக்கு காரணம் :). நாளையில் இருந்து நான் முயல்கிறேன்--Ravidreams 20:34, 16 பெப்ரவரி 2007 (UTC)

வலைப்பதிவில்[தொகு]

இவ்வறிக்கை தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவில் பதிப்பிக்கப்பட்டுள்ளது - http://tamilwikipedia.blogspot.com/2007/02/2007.html

குறுக்கு வழி[தொகு]

இப்பக்கத்திற்கு சுருக்கமான இணைப்பு ஒன்றைப் பரிந்துரையுங்கள். வெளியாருக்கு இணைப்புத்தர வசதியாக இருக்கும். -- Sundar \பேச்சு 10:20, 25 பெப்ரவரி 2007 (UTC)

WP:tawiki2007--Ravidreams 12:01, 25 பெப்ரவரி 2007 (UTC)