விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/கூகுள் மொழியாக்கக் கருவியின் பயன்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ்கண்ட உரையாடல்களின் தொடக்கம் இங்குள்ளது. அதனின் படியும், தொடர்ச்சியையும் இங்கு காணலாம்.பல பக்கங்களில் இந்த நோக்கம் குறித்து, உரையாட வாய்ப்பு இருப்பதால் அவையனைத்தும் இங்கு தொடர்ந்து குவியப்படுத்தப்படும்.


@Mayooranathan, Sundar, Kanags, Ravidreams, Gowtham Sampath, and Arularasan. G: பொதுவாக ஒரு கட்டுரை போட்டி நிகழும் பொழுது, பிறரை விட அதிக கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். தற்போது இப்போட்டியில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் பல, கூகுள் மொழியாக்கக் கருவியின் தரவை, அப்படியே உள்ளிடாக உள்ளதைக் காண முடிகிறது. குறிப்பாக ஆங்கில சொல்லான and என்பது, தவறாகவே இக்கருவி மொழிபெயர்ப்பாதாகத் தெரிகறிது. 'உம்' விகுதியின்மையால், அவ்வாக்கியத்தின் பொருண்மையே தவறாகத் தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, "mother,he and me went the tour" என்பதை கூகுள் எந்திரம்,

"அம்மா, அவரும் நானும் சுற்றுப்பயணத்திற்கு சென்றோம்" என்று மொழியாக்கம் செய்கிறது. இது பார்ப்பதற்கு சரி போல தெரிந்தாலும், தவறான பொருண்மையி்ல் அமைந்துள்ளது. ஏனெனில் அம்மாவிடம் கூறுவது போல இருக்கிறது. அம்மா என்பவள் அச்சுற்றுலாவுக்கு வராத பொருண்மை, இங்கு அமைந்து விடுகிறது.

"அம்மாவும், அவரும், நானும் சுற்றுலாவிற்குச் சென்றோம்" என்றே அமைய வேண்டும் அல்லவா?

ஆனால் பலர் இடப்பட்ட வாக்கியங்களின் பொருண்மையைக் கணக்கில் கொள்ளாமல், தரவுகளை மாற்றம் செய்யாமல், அப்படியே படி எடுத்து ஒட்டி விடுகின்றனர். தமிழ் எழுத்துநடையையும், பேண வேண்டியது நமது கடமை அன்றோ. மேலும் போட்டி விதிப்படி, கூகுளின் மொழிபெயர்ப்புத் தரவுகளால் கட்டுரைகளில் நிரப்பக்கூடாது என்பதை மீறும் கட்டுரைகளை என்ன செய்வது? மொழியாக்கம் சரியில்லை என்று பகுப்பிடலாமா? அவரவரே திருத்தினால், இத்தகைய அடையாளமிடல் தேவையில்லை தானே? என்ன செய்யலாம்? தரமே, நிரந்தரம் என்பதால், இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இத்திட்டக் கட்டுரைகள் இருக்கும் பகுப்பின் உரையாடற்பக்கத்தில் குறிப்பிடல் சிறப்பு என எண்ணுகிறேன்.அப்பகுப்பில் கட்டுரை சொற்களின் எண்ணிக்கை குறைபாடு உள்ளதையும், பகுப்புப் பிழை உள்ளதையும், மேற்கோள் இல்லாதவைகளையும், விக்கித்தரவு இணைப்பு இல்லாதவைகளையும் குறிப்பிட முன்மொழிகிறேன். --உழவன் (உரை) 02:11, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

மொழியாக்கம் சரியில்லை என்று பகுப்பிடலாம் என்பது என் கருத்து. கட்டுரை எழுதியவர் மொழியாக்கத்தை சீர் செய்வேண்டியது மிக அவசியம். இப்பொழுது அதை சீர் செய்யவில்லை என்றால் அது அப்படியே தேங்கிவிடும். இதை நடுவர்கள் முதன்மையாக கவனித்து கட்டுரை எழுதுபவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். கட்டுரையின் எண்ணிக்கையைவிட தரம் மிக அவசியம்--அருளரசன் (பேச்சு) 02:55, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
நடுவர்கள் இது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு கூகுளால் மொழிபெயர்க்கப்பட்ட சில போட்டிக்கட்டுரைகளை நடுவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதை நான் அவதானித்தேன். இவற்றை உடனடியாகவே பயனருக்கு அறிவித்து கட்டுரையிலும் தகுந்த வார்ப்புரு இட வேண்டும். போட்டி முடிவடைந்தும் திருத்தப்படவில்லையானால் கட்டுரை நீக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 04:09, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
இவ்வாறு உருவாக்கும் கட்டுரைகளில் தகுந்த பகுப்பையோ அல்லது வார்ப்புருவையோ நடுவர்கள் இட்டு, அந்தப் பயனர்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து செய்து வந்தால், அவர்களை போட்டியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் அறிவிப்பு செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் கட்டுரையின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதை விட, கட்டுரைகளின் தரத்தில் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறேன். Kanags அண்ணன் சொல்வதை போல், போட்டி முடிவடைந்தும் திருத்தப்படவில்லையானால் கட்டுரை நீக்கப்பட வேண்டும். ஏனென்றால் கட்டுரைகளின் எண்ணிக்கையை விட தரமே முக்கியமானதாகும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:24, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
உடன்படுகிறேன். பல கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைச் சிறிதும் மாற்றாமல் அப்படியே இட்டுள்ளார்கள். இது குறித்து ஏற்கனவே சில பேச்சுப் பக்கங்களில் தெரிவித்து உள்ளேன். கூகுள் நம்மிடம் இருந்து தான் கற்றுக் கொள்கிறது. நாம் திருத்தாமல் அப்படியே இட்டாமல் அதற்கு மீண்டும் மீண்டும் தவறாகவே சொல்லிக் கொடுப்பதாகவே அமைந்து விடும். போட்டி எண்ணிக்கை முக்கியமில்லை. இதை இப்போது சரி செய்யாவிட்டால் அப்படியே தங்கி விடும். இத்தகைய கட்டுரைகளை நடுவர்கள் நிராகரித்து உடன் திருத்தங்களை மேற்கொள்ளச் சொல்ல வேண்டும். --இரவி (பேச்சு) 09:39, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
ஆம். நமது பொதுவான வளர்ச்சிக்கு இந்தப்போட்டியை ஓர் ஊக்கியாகக் கொள்வோம். மற்றபடி போட்டியில் வெல்வதற்காக கட்டுரைகளின் தரத்தினில் எந்தவித இசைவும் வேண்டாம். -- சுந்தர் \பேச்சு 11:44, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

மேற்கூறிய ஆலோசனைகளை நமது சமூகத்திற்கு வழங்கியமைக்கு மிகவும் மகிழ்கிறேன். இருப்பினும் தொடர்ந்து எந்திர மொழிபெயர்ப்புகளை மேம்படுத்தாமல் கட்டுரைகளை, சிலர் எழுதி வருகின்றனர். நான் அக்கட்டுரைகளை பவுன்டன் கருவியல் காணும் போது, அதுகுறித்து குறிப்புகளை அங்கு இடுகிறேன். எனினும் ஒருவரே இத்தகையப் போக்கினை மாற்ற இயலாது. போட்டி என்பதால் எண்ணிக்கையை மட்டும் இலக்காகக் கொண்டு செயல் படுவதால், இதற்குரியவைகளைத் தொடர்ந்து கவனிக்க தனிப்பக்கத்திற்கு இதனை மாற்றுகிறேன். அங்கு தொடர்வோம். தரமே நிரந்தரம் எனவே, அனைவரது ஒத்துழைப்பை நல்க, இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்ட உரையாடற்களின் தொடர்ச்சிகளையும், அதனால் விளைந்த முழுமையான மாற்றங்களையும் கீழுள்ள துணைப்பக்கத்தில் அறியலாம். இதன் உட்பிரிவு அனைத்தும் அங்கும் படியிடப்பட்டுள்ளது. --உழவன் (உரை) 01:28, 21 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]