விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயிற்சித் திட்டம்[தொகு]

பயிற்சித் திட்டம் குறித்தும் நாட்கள் குறித்தும் அறிந்த பின்னர் பங்கேற்பு குறித்து கருத்திடுகிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 15:27, 18 ஆகத்து 2018 (UTC)

இலங்கை பயனர்கள் பங்குபெறும் ஒழுங்கு வகைகள் உரிய காலத்தில் அறிவிக்கப்பட்டால் பங்குபெறுதல் குறித்து தீர்மானிக்க வசதியாயிருக்கும். சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:34, 24 ஆகத்து 2018 (UTC)

 • வேங்கைத் திட்ட வெற்றியாளர்கள் மட்டும்தான் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டுமா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:10, 15 அக்டோபர் 2018 (UTC)

குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள்[தொகு]

 • //குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள்// என இருப்பதால், தற்போது வந்துள்ள புதிய நண்பர்கள் குறுகிய காலத்தில் அந்த எல்லையைத் தாண்ட பின்வருவனவற்றைக்கூற விரும்புகிறேன். சிறந்த கட்டுரையாக்கம் என்ப்து ஓரிரு வருடங்கள் செய்து செய்து பார்க்கும் போதே, பெரும்பாலோருக்கு கைவசமாகும். கீழ்காணும் பங்களிப்புகளும், சிறந்த கட்டுரையாக்கத்திற்கானப் படிகளில் ஒன்றாகும்.
 • பொதுவகத்தில் இல்லாத, தமிழ் ஒலிக்கோப்புகளைப் புதியதாக உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, c:Category:Tamil pronunciation of the words with Tamil script அதேப் போல, படங்களையும் ஏற்றலாம்.
 • பொதுவகத்தின் படங்களை விக்சனரியின் சொற்களில் உருவாக்கலாம். எடுத்துக்காட்டு
 • பகுப்பு மாற்றங்களைச் செய்யலாம்.துப்புரவுப் பணிகளைச் செய்ய பகுப்பிடுதல் முக்கியமாகும். எடுத்துக்காட்டு
 • ஆங்கிலக்கூட்டுச்சொல் தலைப்புகளுக்கு, பொதுவகத்தில் உருவாக்கப்படுவதில்லை. எனவே, இது போல துப்புரவுப் பணியைச் செய்யலாம்.
 • பலவற்றைத் தானியங்கிகளைக் கொண்டு செய்யலாம் என்றாலும், ஒவ்வொரு இலக்குக்கும், 100 பதிவுகளையாவது நம் கையால்செய்துவிட்டு, அதன் பின், தானியங்கியை இயக்கக்கற்பது சிறப்பது. அப்பொழுதே இரண்டு முறைமைகளையும் தெளிவுற கற்கலாம்.
 • விக்கித்தரவில் இதுபோல மாற்றங்களை உருவாக்கலாம். கீழ்கண்ட கருவிகள் அதற்கு துணை நிற்பவை ஆகும்.

கருவிகள்[தொகு]

  • Petscan
    1. பகுப்பு தத்தலில் ta, பிறகு wikipedia, பகுப்பின் பெயர் மட்டும்(பகுப்பு: என்ற முன்னொட்டு தேவையில்லை)
    2. விக்கித்தரவு என்ற தத்தலில் //Add items, where available// என்பதனைச் சொடுக்கவும்.
    3. Output தத்தலில், CSVஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு அதனை விரிதாளில் திறந்தால் Qமட்டும் எடுக்கலாம். பிறகு QuickStatements வடிவம் தரணும்.
  • Quickstatements சில நூறு மாற்றங்களை உருவாக்கத் தானியங்கி அனுமதித் தேவையில்லை.

--உழவன் (உரை) 09:20, 6 நவம்பர் 2018 (UTC)

எண்ணங்கள்[தொகு]

 • நான் ஒரு Audio file Record செய்தேன். அதை [1] இந்த Website-ல் OGG ஆக Convert செய்து பொதுவகத்தில் Upload செய்திருக்கிறேன். [2] பிழை இருப்பின் சொல்லவும்.

Joshua-timothy-J (பேச்சு) 10:57, 7 நவம்பர் 2018 (UTC)

  • இரைச்சலைத் தவிர்க்கவும். உங்களது ஒலி வாங்கியின்(Mic) திறனை குறைத்து விட்டு, headphones பயன்படுத்தவும். இதற்குரிய எளிய ஒரு ஆன்ட்ராய்டு செயலியை சீனிவாசன் உருவாக்க எண்ணியுள்ளார். உங்களது எண்ணங்களை அவருக்குத் தெரியப்படுத்தலாம்.--உழவன் (உரை) 12:56, 7 நவம்பர் 2018 (UTC)

@Joshua-timothy-J: யோசுவா! பின்வரும் முயற்சிகளைச் செய்து, அனுபவங்களை பகிர்க. இது குறித்தவைகள் கோர்வையாக இருக்கவே இங்கு தொடர்கிறேன்.

 1. டெலிகிராமில் ஒரு சொல்லைப் பதிவு செய்து, அதன் ஒலிக்கோப்புப் பற்றி கூறுக. நான் கூறுவதற்குக் காரணம், அதன் கோப்பு நீட்சி .ogg.
 2. கட்டற்றமென்பொருளை நிறுவி, [3] இணைய இணைப்பின்றி பெருமளவு சொற்களை உருவாக்கலாம்.
 3. மேற்கூறிய அனுபவங்களோடு, சீனியின் இந்த நிரலும் இணைக்கப்பட்டு, ஒரு அலைப்பேசி செயலி உருவாக்க முயற்சிக்க வேண்டும். அது அழிந்து வரும் பல மொழிகளைப் பேணும்.--உழவன் (உரை) 05:38, 7 திசம்பர் 2018 (UTC)

பதிவுகளை அழிப்பது ..[தொகு]

பா. தென்றல் என்பவர் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அது மற்றொரு பயனரால் அழிக்கப்பட்டு வேறொரு பெயர் இணைக்கப்பட்டுள்ளதே... தகுதி இருக்கிறதோ இல்லையோ பதிவுகளை அழிப்பது எவ்விதத்திலு ஏற்கப்படலாமா? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:25, 8 நவம்பர் 2018 (UTC)

பா. தென்றல் இவர் நேற்று இரவு விருப்பத்தை பதிவு செய்திருந்தார். யாராலோ அது அழிக்கப்பட்டுள்ளது.. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:30, 8 நவம்பர் 2018 (UTC)
@Parvathisri: அதை நான் தான் நீக்கினேன், பா. தென்றல் இதில் பங்குபெற விருப்பத்தை தெரிவித்த போது, அவர் புகுபதிகை செய்யாமல், ஐ.பி. முகவரியைக் கொண்டு தான் பெயரை சேர்த்துள்ளார். இதைப் பற்றி நான் அவருடைய உரையாடல் பக்கத்தில் எழுதியிருந்தேனே, ஏன் அவர் அதை கவனிக்கவில்லையா ?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:06, 8 நவம்பர் 2018 (UTC)

\

TI Buhari நான் என் விருப்பத்தை இன்று பகல் பதிவு செய்திருதேன். யாராலோ அது அழிக்கப்பட்டுள்ளது.. --:::@TI Buhari:
தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுவிட்டது. பதித்ததற்கு நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:36, 8 நவம்பர் 2018 (UTC)

பஞ்சாப் பயிலரங்கு பட்டியலில் நீக்கல் கோரிக்கை[தொகு]

@Balajijagadesh: இந்த இரு(தேர்தெடுக்கப்பட்டோர் பட்டியல், பரிந்துரைபட்டியல்) பக்க வரலாற்று படி, அப்பட்டியல்களில் இரு பெயர்கள் நீக்க வேண்டும். ஒன்று நான், மற்றொன்று யோசுவா. --உழவன் (உரை) 15:17, 12 நவம்பர் 2018 (UTC)

 • உடல் நிலையில் விரைந்து மாற்றங்கள் நிகழ்வதால் நானும் கலந்து கொள்ள உள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வப்போது அலைப்பேசியில் பேசி எனக்கு ஆலோசனை வழங்கிய பாலாஜிக்கு (@Balajijagadesh: ) மிக்க நன்றி.--உழவன் (உரை) 12:49, 30 நவம்பர் 2018 (UTC)

கூடுதல் நபர்[தொகு]

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறைக்கு முறையாக அறிவித்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ஒருவருக்கு கூடுதலாக வாய்ப்பு வழங்க வாய்ப்பு இருந்தபடியால் காத்திருப்பு பட்டியியலில் இருந்த கார்த்திகேயன் னும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:35, 28 நவம்பர் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற எனது பெயரையும் சேர்த்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி பாலாஜி -- கார்த்திகேயன் (பேச்சு) 09:04, 29 நவம்பர் 2018 (UTC)