விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொடுக்கப்பட்ட ஆங்கில விக்கிப்பீடியா இணைப்புகளைக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கான தலைப்புகளைப் பட்டியல் இட முடியுமா (கட்டுரைகள் ஏற்கனவே இருக்கும் பட்சத்தில்)? உதவி தேவை. நன்றி. @Shriheeran, Shrikarsan, மற்றும் Neechalkaran:--இரவி (பேச்சு) 22:22, 25 பெப்ரவரி 2018 (UTC)

@Neechalkaran: உதவிக்கு மிக்க நன்றி. இதே போன்ற மாற்றத்தை மற்ற மொழி விக்கிப்பீடியாக்களுக்கும் செய்து தர முடியுமா? இதற்கு ஏதேனும் நிரல், கருவி இருந்தாலும் பகிர வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 22:48, 27 பெப்ரவரி 2018 (UTC)
http://apps.neechalkaran.com/wikiconverter மூலமாக மாற்றிக்கொள்ளலாம் ஆனால் timeout கட்டுப்பாட்டால் ஒரே நேரத்தில் 2000 இடமுடியாது சிறிது சிறிதாக இட்டு எடுக்கலாம். குஜராத்தி, தெலுகிற்கு மாற்றியுள்ளேன் இது சரியாக இருந்தால் மற்ற மொழிக்கும் இட்டுவிடுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:57, 28 பெப்ரவரி 2018 (UTC)
@Neechalkaran: நன்றி, நீங்களே மாற்றித் தந்து விடுங்கள். மாற்றங்கள் சரியாக உள்ளன. --இரவி (பேச்சு) 19:10, 28 பெப்ரவரி 2018 (UTC)
@Neechalkaran: கேட்கும் முன்னே புதிய கட்டுரைகளையும் வடிவம் மாற்றித் தந்தமைக்கு மிக்க நன்றிகள் :) மற்ற இந்திய மொழிகளுக்கும் இது போல் உதவ வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 14:37, 22 மார்ச் 2018 (UTC)

@Ravidreams:, வணக்கம் இரவி. இதுவரை 10 வேங்கை திட்டம் போட்டி கட்டுரைகளை fountain னில் சமர்பித்துள்ளேன். அவற்றில் இரண்டு கட்டுரைகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 8 கட்டுரைகளையும் விரைவாக சரிபார்த்து மதிப்பெண்களை வழங்கவும். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 12:54, 23 ஏப்ரல் 2018 (UTC)

@Umashankar81: தாமதத்துக்கு வருந்துகிறேன். நீங்கள் பல முக்கியமான தலைப்புகளில் செறிவான கட்டுரைகளை ஆக்க முனைந்தமைக்கு நன்றி. அதே காரணத்தினாலேயே அவற்றை மதிப்பிடவும் கூடுதல் நேரம் தேவைப்பட்டது. சில கட்டுரைகளை போட்டிக் கணக்கில் எடுத்துள்ளேன். சில கட்டுரைகளில் மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. இது குறித்துப் பேச்சுப் பக்கங்களில் தெரிவித்து உள்ளேன். இயன்ற அளவு நானும் உதவுகிறேன். தொடர்ந்து போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:14, 24 ஏப்ரல் 2018 (UTC)

தமிழர் தொடர்பான தலைப்புகள்[தொகு]

தமிழர் தொடர்பான தலைப்புகள் என்பதன் கீழ் விக்கித்திட்டம் தமிழக வரலாற்றில் காணப்பட்டும் தலைப்புகளை இப்போட்டிக்கு என உருவாக்க விரும்புகிறேன். வேறு எவருக்கும் மறுப்பு இல்லை எனில், இரு நாட்கள் காலம் கொடுத்து மே 16 முதல் இக்கட்டுரைகளை உருவாக்கத் தொடங்குகிறேன். உங்கள் ஆர்வத்தின் பேரில் வேறு துறைகளின் கீழ் கட்டுரைகளை உருவாக்க விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். இது தமிழர் தொடர்பாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்கள் ஆர்வம் கொள்ளும் வகையிலும் இருத்தலம் நன்று. நன்றி. --இரவி (பேச்சு) 00:48, 14 மே 2018 (UTC)

மேற்கண்ட அறிவிப்புக்கு ஏற்ப இத்தலைப்புகள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. --இரவி (பேச்சு) 14:33, 18 மே 2018 (UTC)