விக்கிப்பீடியா பேச்சு:விக்கிமீடியா வியூகம் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Natkeeran: இந்திய அளவில் நடந்த இரண்டு இந்திய விக்கிமீடியர் கூடலிலும், இந்திய அளவில் நடந்த இரண்டு பயிலரங்குகளிலும் கலந்து கொண்டபோது பலவற்றை என்னால் உணர முடிந்தது. குறிப்பாக நாம் தனித்து செயற்படுவதில் முன்னணியில் இருக்கிறோம். ஆனால், பிற சமூகங்களைப் போல, விட்டுக் கொடுத்து, ஒருவருக்கு ஒருவர் வழிகாட்டல்களை அதிகம் பெறவல்ல கூட்டுழைப்பு பயிற்சியை இன்னும் பெற வேண்டும் என்றே எண்ணுகிறேன். விக்சனரி குறித்த தேவைகளை பல விக்சனரி சமூகத்தினர், தமிழ் விக்சனரியரிடம் கூறியதை இங்கு காணலாம். அதே போல, விக்கிமூலத்தில் இருந்து நமது சமூகத்தினர் திறனை பிறமொழியினர் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். நாமும் அவர்களிடம் இருந்து அடித்தளக் கட்டமைப்புகளைப் பெற்றும் வருகிறோம். ஆனால், முழுமையான பல நுட்பங்களை பகிரந்து கொள்ளும் முறை இதுவரை விக்கியிடைத்திட்டங்களில் இல்லையென்றே கூறலாம். எனவே, ஒவ்வொரு சமூகத்திடம் இருந்து உதவிகளைப் பெற கூட்டு விண்ணப்ப முறை வேண்டும். அது நிறைய நன்மைகளை, தொழினுட்பங்களைத் தமிழ் விக்கிமீடியருக்கு அளிக்கும். நாமும் அளிக்கத் தொலைநோக்குத்திட்டங்களை நம்முள் வளர்ப்போம். இருப்பதைத் துப்புரவு செய்வது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு முக்கியம் நம்மால் பல சமூகத்தினருக்கு வழிகாட்டிட, விக்சனரி, விக்கிமூலம் விடவும், நம்திறமைகள் வளர்க்கப்பட வேண்டும். தேவைப்படின் விரிவாக அலசுவோம். வணக்கம்.--உழவன் (உரை) 18:35, 15 ஏப்ரல் 2017 (UTC)

சென்னையில் ? விக்கியூட 2030 உரையாடல்கள்[தொகு]

விக்கியூட 2030 வியூகம் பற்றி [https://goinggnu.wordpress.com/2017/05/31/how-wikimedia-movement-should-be-in-2030/ சுவையான உரையாடல் ஒன்றைப் பற்றிய பதிவு. இத்தகைய உரையாடல்கள் தமிழ் விக்கிக்கு feedback ஆக இணைக்கப்பட்டால் பயன்மிக்கதாக இருக்கும்.

  • Space for adding tiny data. என்பதற்கான தரப்பட்ட எடுத்துக்காட்டு தவறானது என்பது என் கருத்து. அதாவது பொருள்களின் விலை பற்றி விக்கி தெரிந்துருக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டு. Space for adding tiny data என்ற அணுகுமுறை சரியே. ஒரு அணுகுமுறை இணைப்புத் தரவாக அமையலாம். இணைப்புத் தரவின் ஊடாக எளிமை மும்மைகளால் ஒன்றைப் பற்றி கூற்றுக்களைச் சேர்த்துக் கொண்டே போகலாம்.
  • "Archiving old photos, pamphlets, advertisements, magazines" - காப்புரிமையை நிறுவுவதே பெரிய சிக்கலாக இருக்கும். Archive.org இன் பணியை duplicate செய்யாமல் இருக்க வேண்டும்.

@Tshrinivasan மற்றும் Ravidreams:

--Natkeeran (பேச்சு) 20:19, 2 சூன் 2017 (UTC)