விக்கிப்பீடியா பேச்சு:விக்கிப்பீடியா மன்றம், எக்செல் பள்ளிகள், திருவட்டாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயனர்:வைகுண்ட ராஜா இப்பள்ளியில் பணியாற்றுகின்றார்--ஸ்ரீதர் (பேச்சு) 09:24, 7 ஆகத்து 2013 (UTC)

வைகுண்டராஜா முயற்சியில்தான் இப்பள்ளியில் விக்கிப்பீடியா மன்றம் தொடங்கப்படுகிறது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:35, 7 ஆகத்து 2013 (UTC)
பயனுள்ள இத்திட்டத்திற்கு அடிகோலிய, முன்னெடுத்து நடத்துகின்ற, வழிகாட்டுகின்ற அனைவருக்கும் விக்கி சமூகத்தின் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகும் !--மணியன் (பேச்சு) 12:58, 9 ஆகத்து 2013 (UTC)
இது பிற பள்ளிகளுக்கு நல்ல எடுத்துக்காட்டா அமையும் என்று நம்புகிறேன். சாத்தியப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 14:02, 12 ஆகத்து 2013 (UTC)
கடந்த ஜனவரி 23, 2013 அன்று நாகர்கோயில் நடைபெற்ற விக்கிப்பீடியா பட்டறையில் கலந்து கொண்ட தேனி. மு. சுப்பிரமணி., நா.ஸ்ரீதர், முனைவர். துரை. மணிகண்டன், வி.பி. மணிகண்டன் ஆகிய தமிழ் விக்கிப்பீடியர்கள், விசுவபிரபா, சுகீஸ் ஆகிய மலையாள விக்கிப்பீடியர்கள் என்று இரு மொழியிலான குழுவையும் வைகுண்ட ராஜா திருவட்டாறிலுள்ள எக்செல் பள்ளிகளுக்கு வந்து பள்ளியின் தலைவரைச் சந்தித்துப் பேசுவதுடன் பள்ளியில் விக்கிப்பீடியா குறித்து ஏதாவது செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அன்றைய நிலையில் நான், முனைவர். துரை. மணிகண்டன் மற்றும் வி.பி. மணிகண்டன் ஆகியோர் அவருடைய வேண்டுகோளுக்கு ஏற்ப செல்ல முடியாத நிலையில் நா.ஸ்ரீதர், விசுவபிரபா, சுகீஸ் ஆகியோர் பள்ளிக்குச் சென்று பள்ளியின் தலைவர் ஸ்ரீ குமார் அவர்களைச் சந்தித்துப் பேசினர். அவரும் விக்கிப்பீடியாவிற்கான திட்டத்தை பள்ளியில் செயல்படுத்த விருப்பம் தெரிவித்திருந்தார். (பார்க்க:விசுவ பிரபாவின் நன்றி என்று குறிப்பிட்ட பகுதி). அதன் தொடர்ச்சியாகவே தற்போது எக்செல் பள்ளிகளில் விக்கிப்பீடியா மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வைகுண்டராஜா, நா.ஸ்ரீதர், விசுவபிரபா, சுகீஸ் ஆகியோருக்குத்தான் முதலில் நன்றியைச் சொல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து பள்ளியின் தலைவர் ஸ்ரீகுமார், முதல்வர் பிருந்தா ஸ்ரீகுமார் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவிக்கலாம். மேலும் நம் முகம் அறியாமல் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள் பல...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:09, 12 ஆகத்து 2013 (UTC)
இத்திட்டம் பெரும் பயனை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இதனை முன்னெடுத்த வைகுண்டராஜா, தேனி, மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:05, 12 ஆகத்து 2013 (UTC)