விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வார்ப்புரு:விக்க்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியா

கட்டுரைத் தெரிவு[தொகு]

முதற்பக்க கட்டுரைகளுக்கு முதலில் ஒலி வடிவில் அமைக்கலாம். பிறகு ஒலிவடிவில் சேர்க்கப்படுவனவற்றை அதிகாரிகள் சரிபார்த்தபின் வெளியிடும் படியாக அமைக்கவும். அதன் பிறகு பயனர்கள் எந்த பக்கங்களை விக்கியில் அதிகம் தேடுகிறார்கள் என்பதனை விக்கி புள்ளி விவரங்களில் இருந்து எடுத்து அவ்வகையான பக்கங்களில் முதலில் ஒலி வடிவம் கொண்டுவரலாம். --இராஜ்குமார் 12:28, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
கட்டுரைகளைத் தெரிவு செய்யும் போது சிறப்புக் கட்டுரைகள் அல்லது சிறப்புக்கட்டுரை போல பூரணமான கட்டுரைகளைத் தேர்ந்து எடுக்குமாறு பணித்துள்ளனர் ஆங்கில விக்கியில். ஆங்கில விக்கியை பின்பற்றவேண்டும் என்பதற்கில்லை. நீங்கள் சொல்வது போல முற் பக்கத்தில் உள்ள கட்டுரைகளுடன் ஆரம்பிக்கலாம்.
கட்டுரை ஒலியாக்கம் முடிவுற்றவுடன், அதை என்னொருவர் சரி பார்ப்பதற்கான அட்டவணை திட்டப் பக்கத்தின் முற்பக்கத்தில் விரைவில் இடப்படும். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி. --ஜெ.மயூரேசன் 13:00, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

விக்கித்திட்டத்தின் பெயர்[தொகு]

பேச்சு விக்கிப்பீடியா என்பதை விட பேசும் விக்கிப்பீடியா என்ற பெயர் பொருத்தமாக இருக்கலாம். அதிகம் பார்க்கப்படும் கட்டுரைகளுக்கான தரவுகளைப் பெற்று அவற்றுக்கு முன்னுரிமை தந்து ஒலிவடிவாக்கலாம்--இரவி 18:10, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

ரவி நானும் அதைத்தான் நினைத்து கருத்து தெரிவிக்க இங்கு வந்தேன். பேசும் விக்கிப்பீடியா என்பதில் விக்கிப்பீடியா என்கிற வார்த்தை (பெயர்வெளியில் உள்ள விக்கிப்பீடியா) இருமுறை வருகிறது, அதனால் விக்கிப்பீடியா:பேசும் விக்கி என்று சுறுக்கலாமே? --மாஹிர் 16:30, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
மாஹிர், விக்கிப்பீடியாவின் பெயரிடல் கொள்கையின் படி விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் என்பது கட்டாய சொற்களாகின்றது. அதைவிட எஞ்சியிருக்கும் பகுதியான பேச்சு விக்கிப்பீடியா என்பதை பேசும் விக்கிப்பீடியா என்று மாற்றலாம் என்பது என் எண்ணம். --ஜெ.மயூரேசன் 17:50, 10 ஆகஸ்ட் 2010 (UTC)