விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் நலவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

நலவியல் என்ற தலைப்பு கூடிய பொருத்தமாக இருக்குமா? --Natkeeran 17:56, 24 ஏப்ரல் 2008 (UTC)

மூளை, மனம், உயிர்[தொகு]

பின்வருவன சில முக்கிய தலைப்புக்கள் ஆகும். அத்தலைப்புக்களில் கட்டுரைகளை வரைய முன் அச்சொற்களுக்கிடையான தொடர்பையும், சொற்கள் தெரிவிக்கும் எண்ணக்கருக்களையும் அலசுவது முக்கியமாக படுகின்றது. எனவே அவற்றை இங்கே இடுகின்றேன்.

சில கேள்விகள்[தொகு]

  • மனத்துக்கும் சிந்தைக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
  • அனுபத்துக்கும் நினைவுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
  • அறிவுக்கும் சிந்தனைக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
சிந்தனை ஒரு செயல்பாடு, அறிவு ஒரு நிலை.
  • உள்ளுணர்வுக்கும் மனத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
  • மனம், சிந்தை, உள்ளுணர்வு மூளையின் ஒரு விளைவா (விளைவுகளா)?
  • உணர்ச்சி மனதின் ஒரு நிலையா?
  • சிந்தனை மனத்தின் ஒரு நிலையா, அல்லது செயல்பாடா?
  • ஆத்மாவும், உயிரும் எதை நோக்கி குறிக்கின்றன? விஞ்ஞான நோக்கில் அப்பிடியான ஒன்று இல்லை என்றுதானே ஒரு அனுமானம் இருக்கின்றது. ஆனால் பல மனிதர்கள் அப்படி ஒன்று இருப்பதாக நம்புகின்றார்கள். இந்த நம்பிக்கை பிழையான நம்க்கையாக இருக்க சந்தர்பம் உண்டு. ஆகவே ஆத்மா, உயிர் என்றால் என்ன, அவற்றின் முக்கியத்துவம் என்ன?

பல நிலை ஆய்வு[தொகு]

மேலே தரப்பட்ட தலைப்புக்கள் பல நிலைகளில் இருந்து ஆயப்படுதல் முக்கியாமாகும். மொழியியல், உளவியல், சமூகவியல், அறிவியல் போன்ற துறை வழிகளிலும். சமய அல்லது ஆத்மீக நிலைப்பாடிலும் ஆயப்பட வேண்டும்.

உசாத்துணைகள்[தொகு]