விக்கிப்பீடியா பேச்சு:வழிமாற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பக்கத்தை விக்கிப்பீடியா:வழிமாற்றிக் கொடுத்தல் என்று பெயரிடலாமா ? #REDIRECT செய்தால் வழிமாற்று என்றுதான் வருகிறது. ஆகவே ஒரே சீராக வழிமாற்று என்ற சொல்லையே ஆளலாம் என கருதுகிறேன். --மணியன் 08:09, 13 ஏப்ரல் 2010 (UTC)

ஆங்கில வழிமாற்று[தொகு]

தமிழ் விக்கியில் ஏன் ஆங்கில பக்கமுகவரிகள்(வழிமாற்றி) அனுமதிக்கப்படுவதில்லை? ta.wikipedia.org என்பதே ஆங்கிலம் தானே? ஆங்கில முகவரி இருப்பதன் மூலம் தமிழ் தட்டச்சு தெரியாதவொரு பாமரரும் தேட/நுழை பயனடைவார்களே! தமிழில் மட்டும் இருப்தால் கிடைக்கும் அனுகூலமென்ன என அறிய ஆவல். --நீச்சல்காரன் (பேச்சு) 03:21, 20 ஏப்ரல் 2012 (UTC)

தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவரும் எழுத்துப்பெயர்ப்பு முறையில் தட்டச்சு செய்து தேடவே தமிழில் எழுத என்னும் வசதி தரப்பட்டுள்ளது. மேலும் ஆங்கில வழிமாற்றுத் தேவையில்லையே. ஆங்கில விக்கிப்பீடியாவிலோ வேறு விக்கிப்பீடியாகளிலோ சென்று பார்த்தால் இடது பக்கத்தில் Languages என்பதன் தமிழ் மொழி இணைப்பும் தரப்பட்டிருக்குந்தானே! --மதனாஹரன் (பேச்சு) 04:50, 20 ஏப்ரல் 2012 (UTC)

நீச்சல்காரர் கேட்பதை பார்த்தால் அவர் தமிழ் விக்கிப்பீடியா இணையப்பக்கத்துக்கு கேட்பது போல் தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:30, 20 ஏப்ரல் 2012 (UTC)

நீச்சல்காரர் விக்கிப்பீடியா.ஆர்க் என்பது போன்ற பக்கமுகவரியை கூற முற்படுகிறார் என எண்ணுகிறேன். அது சாத்தியமே .ஆர்க் என்பதற்கு பதிலாக .தமிழ் என்று இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:18, 20 ஏப்ரல் 2012 (UTC)

இல்லை.
//தமிழ் விக்கியில் ஏன் ஆங்கில பக்கமுகவரிகள்(வழிமாற்றி) அனுமதிக்கப்படுவதில்லை?//
ஆங்கில வழிமாற்றிகள் வேண்டுமென்றே கேட்டுள்ளார். எ-டு: தமிழ் விக்கிப்பீடியா என்பதற்கு Tamil Wikipedia என்ற ஆங்கில வழிமாற்றி. இவை தேவையற்றவையே. இதனாலேயே விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் ஆங்கிலப் பெயர் தலைப்புக்கடுத்து அடைப்புக்குள் கொடுக்கப்படுகிறது.
நீச்சல்காரன் தமிழ் ஆள்களப் பெயரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனாலும் தமிழ் ஆள்களப் பெயர் என்பது சிறந்த பரிந்துரையே. ஆனால், .தமிழ் என்னும் ஆள்களப் பெயரை இது வரை பெறமுடியாது. அவ்வாறு பெறுவதற்கு எதிர்காலத்தில் முயற்சிகள் எடுக்கப்படுமாயின் நன்று. .இந்தியா, .இலங்கை ஆகிய தமிழ் ஆள்களப் பெயர்களை மாத்திரமே தற்போது பெற முடியும். விக்கிப்பீடியா ஒரு நாட்டிற்குரியதல்லவே. ஆகவே, இவ்வாள்களப் பெயர்கள் பொருத்தமற்றவை என்பதே எனது கருத்து. --மதனாஹரன் (பேச்சு) 10:11, 20 ஏப்ரல் 2012 (UTC)
ஆமாம் நான் குறிப்பிடுவது http://ta.wikipedia.org/wiki/தமிழ் என்ற விக்கி பக்கத்திற்கு http://ta.wikipedia.org/wiki/Tamil என்ற பக்கவழிமாற்றி(redirect) அமைப்பதைப்பற்றிதான். --நீச்சல்காரன் (பேச்சு) 02:26, 21 ஏப்ரல் 2012 (UTC)
மேலும் பார்க்க: ஆள்களப் பெயர் :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:38, 20 ஏப்ரல் 2012 (UTC)

சில விளக்கங்கள் / கருத்துக்கள்[தொகு]

நீச்சல்காரன், உங்கள் கேள்வி பல அம்சங்களைக் கொண்டது, அதனை தனித்தைனியாக கீழே இட்டுள்ளேன். முக்கியமான இந்த உரையாடலை தொடங்கியமைக்கு மிக்க நன்றி :) விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு காரணமாக உரலி எனக்கு பிடித்தமான ஒன்று. நீண்ட உரைக்கு மன்னிக்கவும்.இவை நாம் ஏன் பக்க வழிமாற்றுகளை கையால் உருவாக்க பெரிய பலனளிக்காது என்பதற்கான என்னுடைய காரணங்களே.ஆனால் நான் த.விக்கிக்கு வருவதற்க்கு முன்னரே இது எடுக்கப்பட்ட முடிவு. முதியவர்கள் பழைய விவாதங்களை சுட்டலாம் (நான் தேடியதில் கிடைக்கவில்லை).

 • விக்கிப்பீடியாவில்(தமிழ் மட்டும் அல்ல, ஆங்கில விக்கியிலும் கூட) நேரடியாக பக்க உரலிகளை தட்டச்சு செய்து பக்கங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. சுட்டிகள் மூலமாகவும், இணையத் தேடல் மூலமும், விக்கியிலுள்ள தேடல் மூலமும் தான் பெருவாரியானவர்கள் பக்கங்களைப் பார்ப்பார்கள் என்பது என் கருத்து. விக்கி தேடல் பயன்படுத்துவது பொதுவாக நல்லது, இதனை அனேக "விக்கிபாமரர்களும்" அறிவர் :). ஏனெனில் நாம் பக்கத்தை பெயரிடும் முறை, விக்கி-பாமர மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. உதா - இந்திய_நுகர்வோர்_பாதுகாப்புச்_சட்டம்,_1986. இடைவெளி,(,), இன்னும் பல சிறப்பு எழுத்துக்கள் எங்கு போட்டால் பக்கம் வரும் என்பதை நம்மால் கூட சில சமயம் சொல்ல முடியாது. இது தமிழுக்கு மட்டுமல்ல ஆங்கிலத்திற்கும் பொருந்தும். தமிழுக்கு கூடுதலாக ஒற்று பிரச்சனையும் சேரும்(ஒன்று மக்களுக்கு(சிலருக்கு/பலருக்கு(?)) ஒற்று சேர்க்கும் இலக்கணம் தெரியாமலிருக்கலாம், அல்லது, விக்கியர்கள் தவராக தலைப்பிட்டிருக்கலாம்)
 • //தமிழ் தட்டச்சு தெரியாதவொரு பாமரரும்// --> இந்தக் கூட்டத்தை சேர்ந்தவர்களை நான் இரண்டாகப் பிரிப்பேன்.
 • தமிழ் நன்கு அறிந்து, ஆனால் கணினியில் தட்டச்சு அறியாதவர்கள் -- இவர்களுக்கு தட்டச்சு செய்ய நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எளிதாக்குகிறோமோ அவ்வளவும் நல்லது. சென்ற ஆண்டு தட்டச்சுக் கருவி ஒரு சாராருக்கு தடைகளை அகற்றியது.(அதாவது தட்டச்சு முறை அறிந்து, ஆனால் கருவியில்லாதவர்களுக்கு). சில நாட்களில் அதில் on-screen-keyboard சேர்க்கப்படும் முன்னோட்டம் (இப்பக்கத்தில் தேடல் பெட்டியில் சொடுக்குக). இது மக்கள் தட்டச்சு முறையை அறிய உதவும். தட்டச்சுக் கருவியை எளிமையாக்கி தமிழ் தட்டச்சு தெரியாதவொரு பாமரரை அதனை அறியவைப்பது, சிக்கலின் வேர்வரை சென்று களையும் :)
 • தமிழ் படிக்க மட்டுமே தெரிந்த,ஆங்கிலம் பால் அதிக ஈர்ப்பு கொண்டவர்கள்(அதாவது என்னை விட தமிழில் மோசமானவர்கள்) / பிற மொழிக்காரர்கள் -- இவர்கள் பொதுவாக தமிழ் விக்கியை நாடுவது கிடையாது. இவர்கள் தமிழ் விக்கியில் content-discovery செய்ய ஆங்கில் உரலி மிகமிகச் சிறிய(0 க்கு பக்கத்தில்) தாக்கத்தை ஏற்படுத்தும். mw:Universal_Language_Selector இவர்களுக்கான content-discovery பிரச்சனையையும், மேலும் மொழி சார்ந்த பல விடையங்களை மென்பொருள் வடிவமைப்பின் தளத்திலிருந்து மாற்றும்.
 • கைபேசி :- தற்பொழுது உள்ள பெரும்பாலான கைபேசிகளில் தமிழ் தட்டச்சு வசதி இல்லாததால், கைபேசிகளில் இந்த ஆங்கில உரலிகள் தேவைப்படலாம். ஆனால் இங்கும் பிரச்சனையின் வேர்வரை சென்று தாக்க வேண்டும். தமிழ் தட்டச்சு கைபேசிகளில் எளிமையாக்க வேண்டும் (முதலில் எழுத்துருக்கள் வேண்டும்). தற்பொழுதைக்கு விக்கியிடை சார்ந்த இக்கருவி கைபேசிகளில் ஓரளவு மட்டுமே தீர்க்கும். http://tawp.in/e/Chennai சென்னை பக்கத்திற்க்கு வழிமாற்றும். ((இடைவெளி),(,), இன்னும் பல சிறப்பு எழுத்துக்கள் பிரச்சனை இங்கும் இருக்கும்). அனைத்து ரக கைபேசிகளுக்கு விக்கிப்பீடியா மென்பொருள் தனியாக உருவாக்கப்பட்டு வருகின்றது, கைபேசியில் தட்டச்சு / எழுத்துரு இல்லாமல் இருந்தாலும் விக்கிப்பீடியா மென்பொருள் அதனை செய்ய உதவ வேண்டிய முயற்சிகள் அவற்றின் Roadmapஇல் உள்ளது.
 • //தமிழில் மட்டும் இருததால் கிடைக்கும் அனுகூலமென்ன என அறிய ஆவல்// ஆங்கில வழிமாற்றுகளை நாம் கையால் உருவாக்கும் முயற்சிக்கும், அதன் தாக்கத்திற்க்கும் 'செலவு-பயன்' முறைப்படி பார்த்தால் பெரியதாக நன்மை இல்லை என்பது என் கருத்து. ஒட்டு மொத்த வார்த்தைகளை எழுத்துபெயர்க்கும் கருவிகளை உருவாக்கி அதன் மூலம் வழிமாற்றுகளை உருவாக்குவதே scalable.
 • பி.கு, மலையாள விக்கியில் ஆங்கில வழிமாற்றுகள் மிக அவசியமென கருதி ஒவ்வோர் பக்கத்திலும் இடுகிறார்கள், நான் சிலருடன் அந்த முறை பற்றி உரையாடியதில் "we agreed to disagree" :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 11:40, 20 ஏப்ரல் 2012 (UTC)
விரிவான தொழில்நுட்ப சிக்கல்களை விளக்கியமைக்கு நன்றி.அண்ணாப்பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அலைபேசியில் K9 என்ற தமிழ் உள்ளீடு முறையை உருவாக்கியுள்ளார்.அது ஆங்கில அலைபேசி உள்ளீட்டு முறையான, T9-ஐ விட மிகச்சிறப்பாக உள்ளது. விரைவில் அது அலைபேசி சந்தைக்கு வரும். இணையத்தமிழின் வளர்ச்சி, இனி அலைபேசியைத்தான் சார்ந்துள்ளது. //நீண்ட உரைக்கு மன்னிக்கவும்.// என்று இனி தயவுசெய்து சொல்லாதீர்கள்.ஸ்ரீகாந்த்.!மிக ஆழமான சிந்தனை. வாழ்த்துக்கள். வணக்கம்பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

முன்னொட்டு மூலம் தமிழுக்கு தாவலாமா?[தொகு]

ஸ்ரீகாந்த், உதாரணத்திற்கு நான் en.wikipedia.org/wiki/India என்ற கட்டுரையை நான் என்னுடைய கைபேசியில் படித்துக்கொண்டிருக்கிறேன் எனக் கொள்வோம். இதை தமிழில் பார்க்க விரும்புகிறேன். உடனே உரலியில் சென்று "en" என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டு "ta" என இடுகிறேன். அப்போது என்னை தமிழில் உள்ள "இந்தியா" கட்டுரைக்கு தாமாகவே அழைத்துச் செல்லுமாறு செய்யமுடியுமா?. செல்பேசியில் Operamini போன்ற உலாவிகளில் "Language-->Tamil" என்ற வழியில் வருவது மிகவும் சிரமமாக உள்ளது. Drop Down Box ல் உள்ள மொழிகள் பட்டியல் bmp ஆகக் கூட காட்டுவதில்லக். (As you know already, Operamini doesn't support Tamil or other complicated fonts directly. It actually uses bmp image conversion technique instead to showing the original fonts for such languages}. எனவே தமிழ் எது என தேர்ந்தெடுக்க இயலவில்லை. தமிழிலேயே கட்டுரைகள் படிக்க வருவோருடன் ஆங்கில விக்கியில் இருந்து அதற்கு இணையான தமிழ் கட்டுரைக்கு மாற நினைப்பவர்களும் கணிசமானோர் உண்டு. என்னைப்போல். ஆங்கிலத்தில் கிடைக்கும் ஒரு கட்டுரைக்கு தமிழ் கட்டுரை இல்லை என்றால் அதை ta முன்னொட்டு சேர்க்கும் அந்த பயனரிடமே எடுத்துரைத்து முடிந்தால் அந்த கட்டுரையை தொடங்கக் கேட்டுகொள்ளலாம். --எஸ்ஸார் (பேச்சு) 14:52, 20 ஏப்ரல் 2012 (UTC)
எஸ்ஸார், Operamini பிரச்சனை புரிகிறது. mw:Extension:MobileFrontend இல் விக்கியிடை உரலிகளை அணுக எளிமையாக(accessible) சேர்க்கும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டறிகிறேன். (எண்ணம் இருப்பது போல் நினைவு).
// ஆங்கிலத்தில் கிடைக்கும் ஒரு கட்டுரைக்கு தமிழ் கட்டுரை இல்லை என்றால் அதை ta முன்னொட்டு சேர்க்கும் அந்த பயனரிடமே எடுத்துரைத்து முடிந்தால் அந்த கட்டுரையை தொடங்கக் கேட்டுகொள்ளலாம்// பார்க்க - mw:Universal_Language_Selector#Nambi. விரைவில் துவங்கவுள்ள இத்திட்டம் மொழி/மொழி விக்கிகள் சார்நத பல பரிமாணங்களை ஆராய்ந்து, ஆங்கிலமல்லா பிற மொழி விக்கிகளுக்கு இது போன்ற பல வசதிகளைத் தரும். //Support recurrent language change among a small set// இது வரும் பொழுது ஒரு விக்கியிலிருந்து இன்னோரு விக்கி தாவுவது "கடினமான ஒன்றாக இருக்காது". ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:44, 21 ஏப்ரல் 2012 (UTC)
கண்டேன் வழுவை ;) பார்க்க bugzilla:33444 , bugzilla:32115 ஸ்ரீகாந்த் (பேச்சு) 18:22, 22 ஏப்ரல் 2012 (UTC)

ஆங்கில வழிமாற்றிகளின் பயன்[தொகு]

ஸ்ரீகாந்த் நண்பருக்கு,

ஆழமான விளக்கம் தந்ததற்கு நன்றிகள். எனது கேள்வியின் நோக்கம் என்னவெனில் ஆங்கில வழிமாற்றிகள் தடைசெய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என வினாவுவதேயாகும். எனக்குத் தெரிந்து தடையால் பயனேதுமில்லை. ஆனால் அனுமதி அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் கீழே குறிப்பிடவிரும்புகிறேன்.

 • உரலியின் அளவு சுறுங்கும். உரலிகளைப் பகிரும் போது UTF-8 வடிவில் %E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE என்பதற்குபதில் india என பயன்படுத்தலாம். குறுந்தொடுப்புகள் பற்றி அறியாதவருக்கு உதவும்.
 • அலைபேசி பக்கவடிவில்(Mobile view) பிறமொழி விக்கி சுட்டிகள் எல்லா அலைபேசியிலும் இருப்பதில்லை. எஸ்ஸார் கூறியது போல முன்னொட்டை மட்டும் மாற்றி பக்கத்தை பயன்படுத்தலாம்.
 • ஜாவாஸ்கிரிப்ட் செயலில்லா(disabled) கணினி, அலைபேசி, பிற உபகரணங்களில் விக்கியின் தமிழ் தட்டச்சு கடினமே. அங்கே ஆங்கில முகவரிகள் மிகவும் பயன்படும்.
 • எனக்கு தமிழ் படிக்கத் தெரியும் ஆனால் பிழையுடன்தான் எழுதவரும் என்பவருக்கு ஆங்கில முகவரிகள் எளிதில் பயனை அளிக்கும். உதாரணம் பைபில் என அடித்து பைபிளை எடுக்கமுடியாமல் போவதற்கு பதில் bible என முகவரியிருந்தால் நல்லதுதானே! மற்றும் பல வார்த்தைகளுக்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கும் தெரியாது நானறிந்த லோகோ, இலச்சினை, லச்சினை என எதுவும் இல்லாது அடையாளச் சின்னம் எனபக்கமிருந்தால் நான் எப்படி கண்டுபிடிப்பேன்? இதற்காக ஆங்கில விக்கி சென்று அங்கிருந்து மீண்டு இங்குவரவேண்டுமா?
 • விக்கியின் பிறமொழிச் சுட்டிகள் எல்லாம் சரியானவையும் அல்ல. மொழிஅறிதல் இல்லாதவரும், தானியங்கியும் தலையிடுவதால் கூட இவை நிகழ்திருக்கலாம். இன்றும் ஆங்கிலம் அல்லாத பிறமொழி விக்கியில் 'இந்தி'பக்கமும் 'இந்து'பக்கமும் கலந்துவுள்ளது.
 • தமிழ்ப்பக்கத்தினை பல்மொழியினருக்கும் அடையாளப்படுத்த ஆங்கில தலைப்பும் சேர்க்கிறோம் அதனை முகவரியிலும் வழிமாற்றி செய்தால் தேடும் பெட்டியில் பல்மொழியினரும் தேடலாம். தமிழ் கற்க விரும்புகிறவருக்கும் உதவும்.
 • எதிர்காலத்தில் வெறும் முன்னொட்டுகளை மட்டும் மாற்றி எல்லா மொழியினரும் படிக்கும்படி ஒரு திட்டம்/நுட்பம் அமைந்தால் ஆங்கில முகவரி உதவும்
 • இந்திய மொழிகள் இந்தி,மராத்தி,கன்னடம்,தெலுங்கு,ஒடியா,மலையாளம்,செங்கிருதம் முதலியவையும், சிங்களம், கெமர், போர்த்துக்கீசு என பல மொழிகளும் ஆங்கில வழிமாற்றியை தடை செய்யவில்லை. மற்றும் ஆங்கில விக்கியில் தமிழ் வழிமாற்றிகள் தடைசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(எல்லா மொழி விக்கியிலும் எல்லா மொழி முகவரிகளும் அனுமதிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும், அதை விவாதத்தில் வைக்கவில்லை)

மேற்கண்ட விதத்தைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் தடுத்துவிடலாமா. எதேனும் கருத்துக்கேட்பு முறை மூலம் பயனர்களிடம்(விக்கிப்பீடியர்தவிர) விருப்பமும் கெட்கலாம். ஆங்கிலப் பக்கவழிமாற்றிகளை எல்லா பக்கத்திற்கும் கையால் உருவாக்க கேட்கவில்லை.ஆங்கில பக்கமாற்றிக்கு அனுமதி மட்டும் அளிக்கவேண்டுகிறேன். விரும்புகிறவர்கள் கட்டுரை ஆக்கத்தின் போதே உருவாக்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் முக்கிய/அதிகம் பார்க்கப்படும் கட்டுரைகளுக்கு ஆங்கில வழிமாற்றியாவது அமைவும். ஆங்கில பக்க முகவரிகள் அல்ல ஆங்கில வழிமாற்றி பக்க முகவரிகளே மேற்கண்ட விவாதப்பொருளாகும். --நீச்சல்காரன் (பேச்சு) 02:20, 21 ஏப்ரல் 2012 (UTC) 👍 விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:25, 21 ஏப்ரல் 2012 (UTC)


பழய பயனர்களான நமக்கு எப்படி ஒரு கட்டுரையை கண்டறிய வேண்டும் என்பது தெரியும். பகுப்புகளிலிருந்தோ ஆங்கில விக்கியிலிருந்தோ கண்டறிவோம். ஆனால் புதுப்பயனர்களுக்கு அது இயலாத காரியம். பழய பயனர்கள் எதிர்ப்பே தெரிவிப்பார்கள். புதுப்பயனர்களுக்கு இங்கே இப்படி ஒரு உரையாடல் நடக்கிறது என்று தெரியப்படுத்துவதற்கு முன் இவ்வாக்கெடுப்பு நடத்தினால் பழய பயனர்கள் மூலம் எதிர்ப்பே அதிகம் வரும். அது முறையான வாக்கெடுப்பாக இருக்குமா என்பது கேள்விக்குறி என்பது என் கருத்து.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:00, 22 ஏப்ரல் 2012 (UTC)

தமிழ்க் கட்டுரைகளைக் கண்டறிவது பற்றி முதற்பக்கத்தில் ஓர் உதவிக் குறிப்பை வழங்கலாம் என்பதே எனது கருத்து. ஆங்கில வழிமாற்றிகள் அனுமதிப்பதால் பயன்கள் அதிகமாக இல்லை. --மதனாஹரன் (பேச்சு) 06:38, 22 ஏப்ரல் 2012 (UTC)
//எதேனும் கருத்துக்கேட்பு முறை மூலம் பயனர்களிடம்(விக்கிப்பீடியர்தவிர) விருப்பமும் கெட்கலாம்// -- //புதுப்பயனர்களுக்கு இங்கே இப்படி ஒரு உரையாடல் நடக்கிறது என்று தெரியப்படுத்துவதற்கு முன் இவ்வாக்கெடுப்பு நடத்தினால் பழய பயனர்கள் மூலம் எதிர்ப்பே அதிகம் வரும்//.
விக்கிப்பீடியர் x பயனர்கள்,(நிருவாகி x நிருவாகி அல்லாத, முதலிய) என்று கடினமாகப் பார்க்க தேவையில்லை. பொதுவாக கருத்தின் பொருளில் தான் உரையாடல்கள் இங்கு நடக்கின்றன.யார் அந்தக் கருத்தைக் கூறுகிறார் என்பது பொருட்டேயல்ல. விஷமியில்லை எனக் காட்டிக் கொள்ள பொதுமான வரை இங்கு பங்களித்தால் போதும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:41, 22 ஏப்ரல் 2012 (UTC)

இது பழைய பயனர், புதிய பயனர் விசயமில்லை :) அனைத்து உரையாடல்களிலும் பழைய x புதிய, நிருவாகி x நிருவாகி அல்லாத போன்ற ஒப்பீடுகளைத் தவிர்க்க வேண்டுகிறேன் :) இது குறித்து இது வரை விரிவான உரையாடல் நடந்தது இல்லை. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கில வழிமாற்றுகள் தேவையில்லையே என்ற பொதுவான கருத்தொற்றுமை இருந்தது. அண்மையில் நடந்த தமிங்கிலச் சொற்களுக்கான வழிமாற்றுகள் குறித்த உரையாடலையும் பார்க்கலாம். மேலே உள்ள உரையாடல் குறித்து எனது கருத்து:
 • இணையத்தில் பகிரும் போது %E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE போன்ற நீளமான முகவரிகள் வருவதைத் தவிர்க்க குறுந்தொடுப்பு பயன்படுத்தலாம். குறுந்தொடுப்பு வசதி அறியாதவர்கள் கூட bit.ly, goo.gl பயன்படுத்தலாமே?
 • தேடல் பெட்டியில் பரிந்துரைகள் வருவதால் பைபிள் x பைபில் போன்ற பிரச்சினைகள் வராது. பைபி என்று அடிக்கும் போதே பைபிள் என்ற பரிந்துரையைக் காட்டி விடுமே?
 • ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் கட்டுரைக்கான ஆங்கிலத் தலைப்பை பிறைக்குறிக்குள் தர உடன்பாடு உண்டு. இதுவே, தேடல் முடிவுகளில் கட்டுரையைக் கண்டெடுக்க உதவுமே? எ.கா: Tamil என்பதற்கான தேடல் முடிவு. வழிமாற்று / ஆங்கில முகவரி மூலம் நேரடியாகக் கட்டுரைக்குப் போக முடிவது ஒரு கூடுதல் நன்மை தான் என்றாலும், இணையத்தின் வழக்கமான தேடல் நடத்தையில், ஒரு சொல்லைத் தேடி வரும் முடிவுகளில் இருந்து தேர்ந்தெடுத்துத் தானே போகிறோம்?
 • ஆங்கிலத்திலும் கூட நமக்குச் சரியான சொல் தெரியாவிட்டால் ஒரு கட்டுரையைக் கண்டுபிடிக்க முடியாது. எனவே, சரியான தமிழ்ச் சொல் அறியாமைக்கு ஆங்கில முகவரி ஒரு தீர்வு ஆகாது. தமிழ்ச் சொல் அறிய விக்சனரி நாடலாம். இலச்சினை, லச்சினை போன்ற மாற்று வழக்குகளைக் கண்டறிந்து வழிமாற்றுகள் தரலாம்.
 • ஒரு சிலர் ஒரு சில கட்டுரைகளுக்கு மட்டுமோ முக்கிய கட்டுரைகளுக்கு மட்டுமோ ஆங்கில வழிமாற்று உருவாக்குவது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், முறையான கொள்கை இல்லா நிலையில், இப்போக்கு அனைத்துக் கட்டுரைகளுக்கும் தொடர்ந்தால், விக்கிப்பீடியா:அகர வரிசையில் கட்டுரைகள் பயனற்றுப் போவதுடன், விக்கி பராமரிப்புக்கான சுமையையும் கூட்டலாம்.
 • தமிழ் விக்கியில் ஆங்கிலம் எதற்கு என்பதை அறிவு நோக்கு எனவும் சொல்லலாம். உணர்வு நோக்கு என்றும் சொல்லலாம். தமிழ் விக்கிப்பீடியா தமிழ் அறிந்தவர்களுக்கானது. எனவே, தமிழ் அறியாதவர்கள், கற்க விரும்புபவர்களின் தேவையை முன்னிட்டு அணுகுவது சரியாக இருக்காது. ஆங்கில வழிமாற்றே கொடுத்தாலும் கூட ஆங்கிலம் அறியாத தமிழில் எழுதும் நிலை இல்லாத பயனர்களின் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. எனவே, பிரச்சினையை முழுமையாக அணுக வேண்டும்.
 • செல்பேசி முதலிய கருவிகள், சாவா நிரல் ஏற்பு இல்லாமை போன்ற நிலைகள் பிரச்சினைக்குரியவை தான். உத்தேசமாக எத்தனை வீதம் பயனர்கள் இத்தகைய பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள் என்பதும் ஆயத்தக்கது. ஆனால், சிறீக்காந்த் சுட்டியபடி, ஒரு நுட்பம் சார்ந்த பிரச்சினையை நுட்ப நோக்கிலேயே வேர் வரை சென்று தீர்க்க வேண்டும். அதற்கான முயற்சி மற்ற மொழி விக்கிப்பீடியருக்கும் உதவும்.

ஆங்கில வழிமாற்றுகளை முற்றிலும் தடை செய்ய ஒரு இறுக்கமான கொள்கை வேண்டும் என நினைக்கவில்லை. அதேவேளை, அதற்கான வலுவான தேவை இருப்பதாகவும் தோன்றவில்லை. இது போன்ற பிரச்சினைகளில் உரையாடுவதன் மூலம் பொதுக்கருத்து எட்ட முடியும் என்றே நினைக்கிறேன். வாக்கெடுப்பு மூலம் தீர்வு என்பது மிகவும் சிக்கலான தீவிரமான எதிர்க்கருத்து உள்ள நிலைகளில் மட்டும் பயன்படுத்தலாம்--இரவி (பேச்சு) 14:14, 22 ஏப்ரல் 2012 (UTC)


நீச்சல்காரன் கருத்துக்களுக்கு மறுமொழி

 • //ஜாவாஸ்கிரிப்ட் செயலில்லா(disabled) கணினி// எத்தனை பேர்? தவிர ஜாவாஸ்கிரிப்ட் இல்லையெனில் தேடல் ஆலோசனைகளே வராது.
 • // அலைபேசி// --> மேலே பார்க்கவும், வழு எண்களை பகிர்ந்துள்ளேன். விரைவில் ஒரு தீர்வு கிடைக்குமென நம்புவோம் :)
 • // பிற உபகரணங்களில் விக்கியின் தமிழ் தட்டச்சு கடினமே. அங்கே ஆங்கில முகவரிகள் மிகவும் பயன்படும். // பிற? (tablet?), அவை அலைபேசியை விட எளிமையாகத் தானே இருக்கும்.

விக்கியின் பிறமொழிச் சுட்டிகள் எல்லாம் சரியானவையும் அல்ல. மொழிஅறிதல் இல்லாதவரும், தானியங்கியும் தலையிடுவதால் கூட இவை நிகழ்திருக்கலாம். இன்றும் ஆங்கிலம் அல்லாத பிறமொழி விக்கியில் 'இந்தி'பக்கமும் 'இந்து'பக்கமும் கலந்துவுள்ளது.

 • பிறமொழிச் சுட்டிகள் இற்றைப் படுத்தும் தானியங்கிகள் சில ஆண்டுகளாக இயங்கிவருகின்றது. அவை தானாகவே பிழை உண்டாக்காது. தவறு கண்டால், அதை திருத்தவும். :) தவறு % மிகக்குறைவு என்பதை ஒப்புக்கொள்கறீர்களா?
 • நுட்ப சிக்கல்களை நுட்ப வாயிலாகத் தீர்ப்பது உகந்தது,ஏறிக்கடக்கத்தக்கது.

எனக்கு தமிழ் படிக்கத் தெரியும் ஆனால் பிழையுடன்தான் எழுதவரும் என்பவருக்கு ஆங்கில முகவரிகள் எளிதில் பயனை அளிக்கும். உதாரணம் பைபில் என அடித்து பைபிளை எடுக்கமுடியாமல் போவதற்கு பதில் bible என முகவரியிருந்தால் நல்லதுதானே! மற்றும் பல வார்த்தைகளுக்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கும் தெரியாது நானறிந்த லோகோ, இலச்சினை, லச்சினை என எதுவும் இல்லாது அடையாளச் சின்னம் எனபக்கமிருந்தால் நான் எப்படி கண்டுபிடிப்பேன்? இதற்காக ஆங்கில விக்கி சென்று அங்கிருந்து மீண்டு இங்குவரவேண்டுமா?

 • பைபில் பற்றி இரவி பதிலளித்துவிட்டார். அடையாளச் சின்னம் -- இலச்சினை கண்டிப்பாக வழிமாற்று செய்யப்பட்டிருக்கவேண்டும். லச்சினை க்கு வழிமாற்று தேவையா என்பது தனி வாதப்பொருள். லச்சினை என்பது இலக்கணப்பிழை. இது தொடர்ந்தால் நாளை லச்சிணை என்ற எழுத்துப்பிழைக்கும் வழிமாற்று கேட்பார்கள். இதற்கு தனி இழை தேவை. லோகோ - இதுவும் ஒரு சருக்குப்பாதை, இது தொடர்ந்தால் பின்னர், அனைத்து ஆங்கில சொற்களுக்கு தமிங்கிலத்தில் வழிமாற்று கேட்பார்கள், பின்னர் தமிங்கிலம் பொது எழுத்து வழக்காக மாறும் (தமிழ் வலைப்பதிவுகளில் ஏற்கனவே இது நடந்து முடிந்த ஒன்று)

தமிழ்ப்பக்கத்தினை பல்மொழியினருக்கும் அடையாளப்படுத்த ஆங்கில தலைப்பும் சேர்க்கிறோம் அதனை முகவரியிலும் வழிமாற்றி செய்தால் தேடும் பெட்டியில் பல்மொழியினரும் தேடலாம். தமிழ் கற்க விரும்புகிறவருக்கும் உதவும்.

 • தமிழ் விக்கி தமிழ் கற்கும் களமாக காணுவது என் பார்வையில் தவறு.

எதிர்காலத்தில் வெறும் முன்னொட்டுகளை மட்டும் மாற்றி எல்லா மொழியினரும் படிக்கும்படி ஒரு திட்டம்/நுட்பம் அமைந்தால் ஆங்கில முகவரி உதவும்

 • எதிர்காலத்தில் மொழி விக்கிகளிடையே மாற மேலும் எளிதான முறைகள் வரும். பார்க்க mw:Universal_Language_Selector

இந்திய மொழிகள் இந்தி,மராத்தி,கன்னடம்,தெலுங்கு,ஒடியா,மலையாளம்,செங்கிருதம் முதலியவையும், சிங்களம், கெமர், போர்த்துக்கீசு என பல மொழிகளும் ஆங்கில வழிமாற்றியை தடை செய்யவில்லை. மற்றும் ஆங்கில விக்கியில் தமிழ் வழிமாற்றிகள் தடைசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(எல்லா மொழி விக்கியிலும் எல்லா மொழி முகவரிகளும் அனுமதிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும், அதை விவாதத்தில் வைக்கவில்லை)

 • குறிப்பு - ஆங்கில விக்கியில் தலைப்பில் இந்திய மொழி பெயர்களை நீக்க நடத்தப் பட்ட ஓர் விவாதம் - முடிவு - உச்சரிக்கும் முறை மட்டும் பொதுமானது. நாம் அடையாளப் படுத்த ஆங்கிலத் தலைப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம், ஆனால் கட்டாயமாக்க தேவையில்லை.
 • நான் முன்னரே எங்கோ சொன்னேன், "நாம் வளர்ந்து உயர்நிலைப்பள்ளிக்கு சென்று விட்டோம், இந்திய மொழி விக்கிகளோடு இனி ஒப்பிட வேண்டாமென்று." இந்திய விக்கிகளில் பலவற்றில் வாதங்கள் இங்கு நடைபெறுவது போல் நடைபெறுவதில்லை, பயனர்கள் குறைவு, மேலும் மோசமான பிரச்சனைகள் உண்டு. பிற விக்கியில் தடைசெய்யப்பட வில்லை என்ற ஒரே காரணத்திற்காக நாமும் தடையை நீக்க அவசியமில்லை. நம் தேவையையும், பயனையும் பார்த்து முடிவெடுக்கலாமே ?

மேற்கண்ட விதத்தைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் தடுத்துவிடலாமா. எதேனும் கருத்துக்கேட்பு முறை மூலம் பயனர்களிடம்(விக்கிப்பீடியர்தவிர) விருப்பமும் கெட்கலாம். ஆங்கிலப் பக்கவழிமாற்றிகளை எல்லா பக்கத்திற்கும் கையால் உருவாக்க கேட்கவில்லை.ஆங்கில பக்கமாற்றிக்கு அனுமதி மட்டும் அளிக்கவேண்டுகிறேன். விரும்புகிறவர்கள் கட்டுரை ஆக்கத்தின் போதே உருவாக்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் முக்கிய/அதிகம் பார்க்கப்படும் கட்டுரைகளுக்கு ஆங்கில வழிமாற்றியாவது அமைவும். ஆங்கில பக்க முகவரிகள் அல்ல ஆங்கில வழிமாற்றி பக்க முகவரிகளே மேற்கண்ட விவாதப்பொருளாகும்.

 • தேர்ந்தெடுக்கப்பட்டு சில கட்டுரைகளுக்கு மட்டும் கொடுப்பதாலோ, விரும்புகிறவர்கள் கட்டுரை ஆக்கத்தின் போதே உருவாக்கிக் கொண்டாலோ சீராக இருக்காது. பயனர்கள் குழம்புவார்கள். அனைத்திற்கும் செய்வோம், இல்லை செய்யாமலிருப்போம்.தவிர ஆங்கில தலைப்பு நகற்றப்பட்டால், நாமும் மாற்ற வேண்டும்.
 • ஆங்கில வழிமாற்றிகளால் நன்மைகள் இருக்கலாம், ஆனால் அவை பிரச்சனையை உகந்த வழியில் தீர்க்காது (நுட்பமும் வளராது, தமிழறிவும் வளராது). In my opinion its a work around to different problems and doesn't seem to be a permanent fix to those.நான் இதனை எதிர்க்கப் போவதில்லை, ஆனால் இது தீர்ப்பதாகக் கூறும் பிரச்சனையை உகந்த வழியில் தீர்க்காது என உறுதியாக நம்புகிறேன். ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:41, 22 ஏப்ரல் 2012 (UTC)
மேலும் தமிழ் விக்கியில் ஆங்கிலப் பெயரில் உருவாக்கப்படும் தேவையற்ற கட்டுரைகளைத் தற்போது கண்டறிந்து நீக்கக்கூடியதாகவுள்ளது. வழிமாற்றிகள் இவ்வாறு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டால் அவ்வாறான குப்பைக் கட்டுரைகளையும் வழிமாற்றுகள் என்றே விட்டு விடுவோமே. இது சம்பந்தமாகவுங்கவனத்திற்கொள்ளுதல் அவசியமே. --மதனாகரன் (பேச்சு) 13:38, 24 ஏப்ரல் 2012 (UTC)

வாக்கெடுப்பு[தொகு]

இதற்கென வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்வு காணலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கில வழிமாற்றிகள் தேவையா? --மதனாஹரன் (பேச்சு) 13:45, 21 ஏப்ரல் 2012 (UTC)

Symbol support vote.svg ஆதரவு

Symbol oppose vote.svg எதிர்ப்பு

கருத்து

ஆங்கில வழிமாற்றிகள் தேவையில்லை என்பதே எனது கருத்து. மேலுள்ள உரையாடலைக் கவனியுங்கள். --மதனாஹரன் (பேச்சு) 13:46, 21 ஏப்ரல் 2012 (UTC)

 • விவாதம் இன்னும் நிறைவுறவில்லை. ஆங்கில வழிமாற்றுகளின் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன; அவை ஏன் தேவையில்லை எனவும் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் தேவையில்லாதும் கொடுப்பதால் விளையும் தீமைகள் கூறப்படவில்லை. தமிழ் விக்கியில் ஆங்கிலம் எதற்கு என உணர்ச்சிகரமாக சிந்திப்பதை விட அறிவுபூர்வமாக அணுகுதல் நல்லது. தமிழ்ப் பரவலைக் கூடுதலாக்க உதவும் என்றால் அதுவும் வேண்டியதுதான். எனவே விளையும் தீமைகளை அறியாது வாக்களிக்க விருப்பமில்லை.--மணியன் (பேச்சு) 13:07, 22 ஏப்ரல் 2012 (UTC) 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:52, 24 ஏப்ரல் 2012 (UTC)
 • இது போன்ற பிரச்சினைகளில் உரையாடுவதன் மூலம் பொதுக்கருத்து எட்ட முடியும் என்றே நினைக்கிறேன். வாக்கெடுப்பு மூலம் தீர்வு என்பது மிகவும் சிக்கலான தீவிரமான எதிர்க்கருத்து உள்ள நிலைகளில் மட்டும் பயன்படுத்தலாம்--இரவி (பேச்சு) 14:14, 22 ஏப்ரல் 2012 (UTC)

விக்கி நுட்பங்கள்[தொகு]

கீழ்கண்ட நுட்பங்கள், வழிமாற்றுகளை மேலாண்மை செய்ய பயன்படுத்தலாம்.

 1. Help:MySQL
 2. விக்கிப்பீடியா:விக்கிதானுலவி
 3. விக்கிக் கொட்டிடம்
 4. Quarry இணைய விக்கி வினவல் கருவி--உழவன் (உரை) 08:29, 14 அக்டோபர் 2016 (UTC)