விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்க கட்டுரைகளில் படிமம் தொடர்பாக[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் சிறந்த கட்டுரைகளை முதற்பக்கத்தில் இட்டு வருகிறோம். அக்கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களையும் சேர்த்துள்ளது பாராட்டுதற்குரிய செயலே. ஆயினும் இன்றைய முதற்பக்கத்தினை பார்த்ததும், எனக்கு அதில் மாற்றுக்கருத்து எழுந்துள்ளது. விக்கிப்பீடியாவை பள்ளி செல்லும் சிறுவர் முதல், முதியவர் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர், இந்நிலையில் இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் குறித்த தகவல்கள் முதற்பக்கத்தில் இடம்பெற்று இருந்தது; அதனுடைய படிமும் உள்ளது. இது சற்று அருவெறுப்பாகவும், குழந்தைகள் மற்றும் சில பெரியவர்களுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். இதுகுறித்து மற்றவர்களுடைய கருத்து தேவை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:19, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]

+1 --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:50, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Crohn's disease
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
ஆம். உங்களின் கூற்றை, நானும் ஆமோதிக்கிறேன். இது போன்ற சில கோரிக்கைகளை முன்பு விக்சனரியில் வந்தது. அங்குள்ள படங்களில் சிவப்பு நிறம் குறைவாக இருக்கும் படத்தினைக் கட்டுரையில் மாற்றியுள்ளேன்.சரியா?-- உழவன் +உரை.. 07:44, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஒரு பொருளால் தோற்றுவிக்கப்படும் தூண்டல் அப் பொருளைப் பார்க்கும் பார்வையாளர்களின் அந்நேர மனநிலையைப் பொறுத்தது. இது பார்வையாளருக்குப் பார்வையாளர் மாறுபடுவதோடு ஒரே பார்வையாளரிடத்தும் காலத்தைப் பொறுத்து மாறுபடக் கூடியது. விவாதத்துக்குள்ளாகி இருக்கும் படம் அப்படி ஒன்றும் அருவெறுப்பாக இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. மருத்துவத் துறை அல்லாத பயனர்களின் கருத்தை வைத்து ஒரு கொள்கை முடிவுக்கு வரலாம். நன்றி--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:05, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]

தினேஷ்குமார் பொன்னுசாமி, தங்களின் கூற்று ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாயினும் கலைக்களஞ்சியத்தில் எவ்வகையான தகவலும் அடங்கலாம் என்பது கருதத்தக்கது. (தாங்கள் கூற வந்தது முதற்பக்கத்தில் படம் இடுவதைப் பற்றி மட்டும்தான் என்றால் குறிப்பிட்ட வயது மாந்தர்கள் "மேலும்: என்பதைச் சொடுகுகையில் உள்ளே இருக்கும் அப்படத்தைக் காணுவார்களே! ஆகையால் உள்ளடக்கத்தில் இருந்தும் அப்படத்தை அகற்றவேண்டும் என்று கருதமுடியாது) இக்கட்டுரைக்குப் பொருத்தமான வேறு படங்கள் பொது உரிமத்தில் இல்லாத நிலையிலேயே இப்படம் இணைக்கப்பட்டது. மருத்துவ நோக்கில் பார்க்கையில் இதில் அருவெறுப்பு ஏதும் இல்லை என்பது உண்மை. இந்நோயின் தீவிரம் பற்றி தெரியாதோர் அறிந்து கொள்ளல் அவசியமானது, நெஞ்செரிவுதானே என்று அலட்சியப்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், நோயின் நாட்பட்ட வேளையில் மருத்துவரை நாடுபவர்கள் ஏராளம். இந்த நோக்கில் பார்க்கையில் இப்படிப்பட்ட நோய் ஒன்று உண்டு, நெஞ்செரிவு வந்தால் உடனேயே அதனைக் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்பதை இப்படம் பற்றி ஆழ்ந்த நோக்கில் அலசும்போது தெரிந்துகொள்ளலாம். சிறுவர்கள் எனும்போது இப்படத்தைப் பார்த்து என்ன? ஏது? என்று தெரிந்துகொள்ள முடியாதவர்கள் தமது பெற்றோர்களிடம் கேட்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு அருவெறுப்பு என்று நாம் இதனைப் புறக்கணிப்பதை விட, இதை அறிவியல் நோக்கில் அணுக ஒரு பக்குவத்தை ஏற்படுத்துவதாக ஏன் நாம் இதைக் கருதக்கூடாது?--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 10:56, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]
படத்தின் சிவப்பைக் குறைத்துள்ளேன். கருத்திடவும். சரி என்றால், பொதுவகத்திலும் மாற்றி விடுகிறேன்.ஆவலுடன்-- உழவன் +உரை.. 11:08, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையைப் படித்தால் ஒழிய இந்தப் படிமம் என்னவென்றே முதலில் புரியாது. அப்படி இருக்க, இதில் எந்த வயதினருக்கும் ஒவ்வாதிருக்குமாறு ஒன்றும் இல்லையே? இதே படிமத்தையே காட்சிப்படுத்தலாம்--இரவி (பேச்சு) 12:04, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]

இற்றைப்படுத்தல்[தொகு]

இப்பக்கம் 2014 பெப்ரவரிக்குப் பின்னர் இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கடந்தவாரம் ஐ. மாயாண்டிபாரதி பற்றிய கட்டுரை முதற்பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அக்கட்டுரையை இங்கே காணவில்லை.--பொன்னிலவன் (பேச்சு) 03:49, 16 ஏப்ரல் 2014 (UTC)