உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:மார்ச் 5, 2011 விக்கிப் பட்டறை புத்தனாம்பட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்த்துகள்

[தொகு]
  • பட்டறை சிறப்படைய வாழ்த்துகள்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 14:50, 27 பெப்ரவரி 2011 (UTC)

  • தொடர் முயற்சிகளுக்கு வாழ்த்துகள், சோடா பாட்டில். நேரம் கிடைக்குமானால், ஒரு அரை மணி நேரத்தில் விக்கிப்பீடியாவுக்கு வெளியேயான தமிழ் இணையம் (நூலகம் திட்டம், வலைப்பதிவுகள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ்99), திறமூல இயக்கம் (உபுண்டு..) போன்றவற்றையும் அறிமுகப்படுத்தலாம். கல்லூரியியில் நடக்கும் கூட்டம் என்பதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒரே ஊரில் அடுத்தடுத்துப் பட்டறைகள் நடத்தும் முன் 3-6 மாத கால இடைவெளி உள்ளவாறும் திட்டமிடலாம்--இரவி 08:58, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • பட்டறை சிறப்பாக நடைபெற முன்கூட்டியே எனது வாழ்த்துக்கள். சோடாபாட்டிலுக்கு நன்றிகள்.--Kanags \உரையாடுக 09:09, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள படங்களில் சில தேதி 10-03-2011 என்று உள்ளதே.காமிராவில் தவறான தேதியைத் தேர்வு செய்து விட்டார்களோ? சரி அது இருக்கட்டும்... சோடாபாட்டில், இந்தப்படங்களில் தங்கள் படத்தைக் காணோமே...? உங்கள் முகத்தைக் காட்டாமல் மறைப்பது ஏன்...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:48, 6 மார்ச் 2011 (UTC)
முன்னிருந்து எடுக்கும் படங்களிலும் குளோசப் ஷாட்டுகளிலும் முகத்தைக் காட்டிலும் தொப்பைப் பெரிதாகத் தெரிவதால் என் கிளாமர் இமேஜைக் காப்பாற்ற இந்த முன்னேற்பாடு :-). --சோடாபாட்டில்உரையாடுக 07:51, 6 மார்ச் 2011 (UTC)
  • பட்டறையைச் சிறப்பாகத் தனி ஆளாக இருந்து நடத்தி முடித்தமைக்கு சோடாபாட்டிலுக்கு எனது பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.--Kanags \உரையாடுக 07:58, 6 மார்ச் 2011 (UTC)
அப்பாடா! சோடாபாட்டில் முகத்தை மட்டுமில்லை முழு உருவத்தையும் காண்பித்து விட்டார்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:19, 6 மார்ச் 2011 (UTC)

பட்டறையின் விபரிப்பு ஆர்வம் ஊட்டுகிறது. நிச்சியமாக கலந்துகொண்டவர்கள் மிகப் பயன் அடைந்திருப்பார்கள். நன்றி. --Natkeeran 15:05, 6 மார்ச் 2011 (UTC)

சிறப்பான முயற்சி. பாராட்டுகள். பல்வேறு பின்னணியில் உள்ளவர்களைச் சந்திப்பதின் மூலம் நமது சமூகத்தையும் திட்டத்தின் குறை நிறைகளையும் அறிந்து கொள்ள முடியும். இன்னும் கூட சில குறிப்பிட்ட பார்வையாளர்களை இலக்கு வைத்து பட்டறைகள் நடத்த இயலுமா என்று சிந்திக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு: ஆசிரியப் பள்ளி பயிற்சி மாணவர்கள் (இவர்கள் பணிக்குச் செல்லும் போது மாணவர்களுக்கு வழிகாட்டுவார்கள்), ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ( பணி ஓய்வுக் காலத்தில் நல்ல பயனுள்ள பணிகளைச் செய்ய விரும்பக் கூடும் ), போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் ( விக்கிப்பீடியா பங்களிப்பு எப்படி அவர்களுக்கு உதவக் கூடும் என விவரிக்கலாம் ), ஊடகத்துறை மாணவர்கள், புகைப்படக்கலை ஆர்வலர்கள். பொத்தாம் பொதுவான கூட்டத்தைக் காட்டிலும், இப்படி இலக்கு வைக்கப்பட்ட பார்வையாளர்கள் கூடுதல் பங்களிப்பாளர்களைத் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பெற்றுத் தரலாம்.--இரவி 16:13, 6 மார்ச் 2011 (UTC)

சோடாபாட்டில் சிறப்பான விக்கிப் பட்டறை ஒன்றை நடத்தி முடித்தமைக்குப் பாராட்டுக்கள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:45, 6 மார்ச் 2011 (UTC)

  • பாராட்டுகள், சோடா! சிறந்த முயற்சி. --பரிதிமதி 01:57, 7 மார்ச் 2011 (UTC)

declaration

[தொகு]

இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் நல்கைத் திட்டத்தின் (University Grants Commission XI Plan Merged Scheme) கீழ் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு வரும் வளவசதி நபருக்கு (resource person) 2500 இந்திய ரூபாய் அரசு தருகிறது. இதன்படி கல்லூரியில் இருந்து எனக்கு அளிக்கப்பட்ட 2500 ல் செலவு 400 போக (போக்குவரத்து + காலை உணவு + விக்கிப்பீடியா துண்டறிக்கை 100 படிகள் அச்சு) மீதமிருந்த 2100 ரூபாயை (46 $) விக்கிமீடியா அறக்கட்டளைக்கு நன்கொடையாகக் கொடுத்து விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:17, 6 மார்ச் 2011 (UTC)

எடுத்துக்காட்டத்தக்க செயல்பாடு. பாராட்டுகள். இந்திய விக்கிமீடியா பிரிவு தொடங்கப்பட்ட பின் நன்கொடைகளை இந்தியாவுக்கு என்று குறித்தும் நல்கலாம் என்று நினைக்கிறேன். முறைப்படியாக இல்லாவிட்டாலும், தனிநபர் அளவில் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரைகளுக்கு இது வரை பலர் நன்கொடை நல்கியுள்ளனர். குறிப்பாக, போன ஆண்டு இணைய மாநாட்டில் நடந்த பட்டறைச் செலவுகளுக்கு. இனி வருங்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குத் தேவைப்படக்கூடிய செலவுகளை முன்னிட்டு (இறுவட்டு, புத்தகம், பரப்புரை...) தமிழ் விக்கிப்பீடியாவுக்கென முறைப்படி நன்கொடைகள் பெற வழிவகைகளை ஆராய வேண்டும்--இரவி 16:13, 6 மார்ச் 2011 (UTC)
டீனுவும் ஷிஜுவும் வாங்கியுள்ளது போல ஒரு நல்கை ஒன்றை வாங்கினால் நன்றாக இருக்கும் (ஆனால் இரண்டு மூன்று பேர் முதலில் செய்யவிட்டு பின் செய்வோம். டீனு வின் அனுபவங்களைக் கேட்டால், முதலில் வழித்தடம் போடுபவருக்கு பல வேலைகள்/சிக்கல்கள் உள்ளன என தெரிந்தது. ஹிஷோம் முண்டோல் ஏதோ அவுட்ரீச் கிட் செய்யப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். என்ன விசயம் என்று தெரியுமா?--சோடாபாட்டில்உரையாடுக 16:51, 6 மார்ச் 2011 (UTC)