விக்கிப்பீடியா பேச்சு:பெப்ரவரி 6, 2011 கார்ட்டே பிலாஞ்சு பட்டறை சென்னை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா:பெப்ரவரி 6, 2011 கார்ட்டே பிலாஞ்சு பட்டறை சென்னை என எழுதலாமா? -- சுந்தர் \பேச்சு 05:23, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

அல்லது விக்கிப்பீடியா:பெப்ரவரி 6, 2011 வெற்றுக் காசோலை பட்டறை சென்னை என மொழிபெயர்க்கலாமா ?--மணியன் 05:29, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
பெயர்ச் சொல் மொழிபெயர்ப்பு தேவையற்றது எனக் கருதுகிறேன். தலைப்பை கார்ட்டே ப்லாஞ்ச் என்றோ கார்ட்டே ப்லாஞ்சு என்றோ மாற்றலாம். எண்ணிப் பார்க்கவும்...

--சூர்ய பிரகாசு.ச.அ. 15:47, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தமிழகம் தழுவிய பட்டறைகள்[தொகு]

இந்தப் பட்டறைக்கு வழக்கம் போல வாழ்த்தும் கலந்து கொள்ள இயலாததற்கு வருத்தமும் :( இது வரை நிறைய பட்டறைகளைச் சென்னையில் நடத்தி விட்டோம். தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் செல்ல சரியான நேரம். ஏற்கனவே சில நண்பர்கள் இது குறித்து ஆர்வம் தெரிவித்து இருந்தார்கள். பாண்டிச்சேரி, திருச்சி, கோவை, ஈரோடு முதலிய பகுதிகளில் நடத்த முயலலாம். இதற்குப் பொறுப்பேற்கவும், கலந்து கொள்வதை உறுதிப்படுத்தவும் சிலர் முன்வந்தால், நிகழ்வு ஏற்பாட்டுக்கான முயற்சிகளைத் தொடங்கலாம். நன்றி--இரவி 06:14, 20 சனவரி 2011 (UTC)[பதிலளி]

  • இரவி சொல்லும் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். மாநிலத் தலைநகரான சென்னையில் இது போன்ற பட்டறைகள் நடத்த வேண்டியது அவசியமாக இருந்தாலும் பிற ஊர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒரே ஊரில் பல பட்டறைகளை நடத்துவதை விட, தமிழ்நாட்டின் பிற ஊர்களிலும் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை நடத்தப்பட்டால் அந்தப் பகுதியிலிருக்கும் சிலர் பங்களிக்க முன் வருவதுடன், அந்தப் பகுதி குறித்த செய்திகள் தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகம் இடம் பெறும் வாய்ப்பும் அதிகமாகும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 10:13, 20 சனவரி 2011 (UTC)[பதிலளி]
    • இது முதலில்,பட்டறையை அல்லாமல் காட்சிகூடமாக தான் எற்பாடு செய்யப்பட்டது. ஆதரவினால் பட்டறையும் அறிவிக்கப்பட்டது. விரைவில் (பெப்ரவரி 18-20) திருச்சியிலும் ஓர் பட்டறையை சோடாபாட்டில் நடத்தவுள்ளார்.ஆங்கில பயனர் தீனு செரியன் தமிழகத்தில் பட்டறைகள் நடத்த ஆர்வமுடன் இருக்கிறார். விரைவில் சில பட்டறைகளை எதிர்ப்பாருங்கள். உங்கள் உதவியும் அதற்கு தேவை :) ஸ்ரீகாந்த் 12:10, 20 சனவரி 2011 (UTC)[பதிலளி]
  • நான் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பட்டறைக்காக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியர் ரேணுகா தேவி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினேன். மார்ச் மாதம் வரை பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து இருப்பதாகவும் துறைத்தலைவரிடம் பேசி ஏப்ரல் மாதத்தில் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார். இங்கு பணியாற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயனர் மகிழ்நன் அவர்களிடமும் சொல்லியிருக்கிறேன். அவரும் பேசுவதாகச் சொல்லியிருக்கிறார்.கூடிய விரைவில் நல்ல பதில் கிடைக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 16:58, 20 சனவரி 2011 (UTC)[பதிலளி]
ஃபெப்ரவரி கடைசி வார இறுதியில் கோவை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியிலும் ஒரு விக்கிப்பீடியா பட்டறைக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன். நாளும் நேரமும் உறுதியான பின்னர் அதற்கான பக்கத்தை உருவாக்கி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:29, 20 சனவரி 2011 (UTC)[பதிலளி]

பட்டறைச் செலவுகள்[தொகு]

இந்திய விக்கிமீடியா குழுமம் தொடங்கப்பட்டுள்ளதால், இது போன்ற பட்டறைச் செலவுகளுக்கு நிதி பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே, இனி வரும் பட்டறைகள் தொடர்பான செலவுகளுக்கான கட்டணச் சீட்டுகளைப் பத்திரப்படுத்தி வைக்கக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி--இரவி 06:15, 20 சனவரி 2011 (UTC)[பதிலளி]

விக்கிபாசா கேள்வி[தொகு]

விக்கிபாசாவை இன்று\இப்போது நிறுவினேன், ஆனால் தொகுத்தல் பக்கத்திலுள்ள "launch wikibasha tool" ஐ சொடுக்கினால் "please select a valid article from wikipedia and invoke wikibhasha beta" என்று வருகிறது. இதனை சரியான முறையில் நான் பயன்படுத்தவில்லையா அல்லது விக்கிபாசா தமிழை ஆதரிக்கவில்லையா என்று தெரியவில்லை. மைக்ரோசாப்ட் ஆய்வகத்தின் விக்கிபாஷா கருவிப் பயன்பாடு பற்றி இப்பட்டறையில் விளக்குவதால் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். --குறும்பன் 22:55, 5 பெப்ரவரி 2011 (UTC)

குறும்பன் அந்தக் கருவியை Bookmark கருவிப் பட்டையில் ஒட்டிக் கொண்ட பின், ஏதேனும் ஓர் ஆங்கில விக்கி கட்டுரைப் பக்கத்திற்குச் சென்ற பின்னர் அந்தக் கருவியைச் சொடுக்கவும். வரும் திரையில் தமிழ் இருப்பின் தமிழைத் தேர்ந்தெடுத்து மொழிமாற்றம் செய்யவும். (நேற்று நான் செய்ததில் தமிழ் இல்லை.)

அவ்வளவுதான்... பட்டறை முடிந்த பின் முழு விபரங்களை அளிக்கிறேன்....

--சூர்ய பிரகாசு.ச.அ. 05:49, 6 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி சூரிய பிரகாசு விக்கிபாசா இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் தான் இப்போது ஆதரிக்கிறது. (5 கட்டுரைகளை முயன்றேன்) மற்ற இந்திய மொழிகளை ஆதரிக்கவில்லை --குறும்பன் 21:57, 6 பெப்ரவரி 2011 (UTC)

Sorry for the delay response. Tamil was included temporarily in sandbox version of WikiBhasha specifically for this workshop. Now Tamil is included in the production WikiBhasha. You can try now and give us your feedback to wbmsri@microsoft.com. Sorry for posting the response in English.

படங்கள்[தொகு]

பட்டறையிலும் பயிலரங்கிலும் எடுக்கப்பட்ட படங்களை விக்கி பொதுவில் பதிவேற்றினால் பரவாயில்லை! --சூர்ய பிரகாசு.ச.அ. 10:07, 7 பெப்ரவரி 2011 (UTC)