விக்கிப்பீடியா பேச்சு:பெப்ரவரி 26, 2011 கிரியா பட்டறை கோவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லூரி விதிகளின் காரணமாக திறந்த பட்டறையாக்க முடியவில்லை. 100 ரூ. நுழைவுக் கட்டணம் வேறு விதித்து விட்டார்கள். நுழைவுக் கட்டணத்தை நீக்கப் பேசி வருகிறேன் (ஆனால் பட்டறைகளுக்கு சிறிதேனும் நுழைவுக் கட்டணம் விதிப்பது நிகழ்ச்சியின் விதி என்று ஒருங்கிணைப்பாளர் சொல்லுகிறார்). திறந்த பட்டறை இல்லையென்பதால் தள அறிவிப்பில் இதனை இடவில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 06:47, 9 பெப்ரவரி 2011 (UTC)

கட்டணம் விதித்தும் 85 பேர் வந்திருந்தது விக்கிப்பீடியா பெறும் வீச்சை அறிவிக்கிறது. தனி ஒருவராக சிறப்பாக ஒருங்கிணைத்தும் பங்காற்றியும் வரும் உங்களின் பணி சிறப்பானது. பாராட்டுக்கள் !!--மணியன் 18:20, 27 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி மணியன். 100 rs கு ஒரு சான்றிதழ் வழங்கினார்கள். அதனால் மாணவர்கள் நுழைவுக்கட்டணத்தைப் பொருட்படுத்தவில்லை. மேலும் 150 பேர் முன்பதிவு செய்து முதல் அமர்விலேயே வரவேண்டும் என்று நெருக்கிக் கொண்டிருந்தனர். மதியம் வாருங்கள் என்று சொல்லி பலரை திருப்பி அனுப்பினோம் ஆனால் மதிய அவர்வுக்கு வெகு குறைவானவர்களே மீண்டும் வந்தனர்.--சோடாபாட்டில்உரையாடுக 10:12, 28 பெப்ரவரி 2011 (UTC)

சோடாபாட்டில், பட்டறை நிகழ்வுகளை விரிவாக அறியக் காத்திருக்கிறேன். வழக்கமான விக்கி தொகுத்தல் அறிமுகம் போக, இது போன்று தொழில்நுட்பக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த என, நாம் தனியாக ஒரு திட்டம் வகுக்க வேண்டும். பல மீடியாவிக்கி நிரலாளர்கள், தமிழ் விக்கி தானியங்கிப் பணிகளைச் செய்யக்கூடியோர் இங்கிருந்து கிடைக்கலாம். தொகுத்தல் பணியைக் காட்டிலும் இதில் சிலருக்கு ஆர்வம் இருக்கலாம்--இரவி 09:45, 28 பெப்ரவரி 2011 (UTC)

ரவி,
வந்திருந்தவர்களில் நிரலாளர்கள் ஒருவர் கூட இல்லை. (நான் பயந்து கொண்டிருந்தேன். எங்கு பாட், மீடியாவிக்கி பற்றி கேட்டு விடுவார்களோ என்று). வந்திருந்தவர்களில் பெருமாலானோர் கணினித்துறை அல்லாத பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். நன்றாக கவனித்தார்கள் ஆனால் திருச்சி போன்று இது திற மூல ஆர்வலர் கூட்டமில்லையென்பதால் அவ்வளவு ஆர்வமில்லை. திருச்சியில் நடந்தது திற மூல கூட்டமென்பதால், மாணவர்களிடம் இந்த விசயத்தில் அறிவு கொஞ்சம் அதிகம். பிஎஸ்ஜியில் ஆர்வம் இருந்தது ஆனால் அனைவருக்கும் புதிய விசயமாக இருந்தது. --சோடாபாட்டில்உரையாடுக 10:12, 28 பெப்ரவரி 2011 (UTC)