விக்கிப்பீடியா பேச்சு:பெங்களூரு தமிழ் விக்கிப்பீடியா அறிவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இதன் தலைப்பு பெங்களூர் தமிழ் விக்கிப்பீடியா அறிவகம், அல்லது பெங்களூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிவகம் என்று அமைவது கூடிய பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். --Natkeeran 00:19, 24 ஜனவரி 2009 (UTC)

நற்கீரன், இப்போதைக்கு விக்கிப்பீடியா பெயர் வெளியில் இருக்கட்டுமே. நிகழ்வை ஒருங்கிணைக்க உதவும்--ரவி 12:57, 24 ஜனவரி 2009 (UTC)
ரவி, பெயர்வள் பற்றி சொல்ல வரவில்லை. விக்கிப்பீடியா:பெங்களூர் தமிழ் விக்கிப்பீடியா அறிவகம் என்று அல்லவா இருக்க வேண்டும் என்று சுட்ட முனைந்தேன். --Natkeeran 16:11, 24 ஜனவரி 2009 (UTC)

ஊர் பேரை பெங்களூரு என்று மாற்றி விட்டதாக கேள்வி. அதான்--ரவி 19:26, 24 ஜனவரி 2009 (UTC)

நன்றி. திகதி தலைப்பில் இட வேண்டும் என நினைக்கிறேன். இன்னுமொரு பட்டறையை கார்த்திக் ஒழுங்கமைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

சில கருத்துகள்[தொகு]

  • இப்பயிற்சியில் சில அடிப்படை விசயங்களைக் கற்றுத் தரவே இயலும். எனவே, விக்கி அனுபவமுள்ள நண்பர்களை பயிற்சி அளிப்போர் பட்டியலில் சேர்த்திருக்கிறேன். பயிற்சி அளிக்க நிறைய பேர் வந்தாலும், இது ஒரு குட்டி விக்கி நண்பர்கள் சந்திப்பாக அமையலாம். அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குத் திட்டமிடலாம்.
  • நிறைய பேர் பதிந்தால் நிகழ்ச்சியை இரண்டு மீள் அமர்வுகளாகப் பிரித்து திரும்பத் திரும்பச் சொல்லித் தரலாம். --ரவி 12:57, 24 ஜனவரி 2009 (UTC)

வாழ்த்துக்கள்[தொகு]

பெங்களூரு தமிழ் விக்கிப்பீடியா அறிவகத்தின் நோக்கங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். மயூரநாதன் 05:42, 31 ஜனவரி 2009 (UTC)

நன்றி, மயூரநாதன். -- சுந்தர் \பேச்சு 05:50, 31 ஜனவரி 2009 (UTC)
பட்டறை நன்றாக நடந்தது. ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிலவன் அங்கேயே கணக்கு துவக்கி உடனடியாகப் பங்களித்தார். மற்றவர்களும் செய்வதாகச் சொல்லியுள்ளனர். -- சுந்தர் \பேச்சு 17:43, 31 ஜனவரி 2009 (UTC)

தவறுதலாக நீக்கப்பட்டு விட்டது[தொகு]

சத்யா, மன்னிக்க, அது தவறுதலாக நடந்துவிட்டது, மீட்டு விட்டேன், கருத்துக்களுக்கு நன்றி --Natkeeran 15:24, 1 பெப்ரவரி 2009 (UTC)

சத்தியா, நிகழ்வுகளை நன்றாகப் பதிந்துள்ளீர்கள். ஒன்றை மட்டும் விட்டு விட்டீர்கள்: {{புதுப்பயனர்}} வார்ப்புருவில் குக்கிக்களுக்கு பதில் வடை வைக்க வேண்டும் என்று பங்கேற்பாளர்கள் கோரினார்களல்லவா? ;) -- சுந்தர் \பேச்சு 15:31, 1 பெப்ரவரி 2009 (UTC)
அதைப் பற்றியும் நானும் யோசிச்சிட்டு, கடலை வடையா, உழுந்து வடையா, பரித்தித்துறை வடையா என்று முடிவு செய்ய முடியாமல் விட்டு விட்டேன் :-)--Natkeeran 15:34, 1 பெப்ரவரி 2009 (UTC)
ஐயா, பரித்தித்துறை வடை பற்றி கேள்விபட்டதில்லை. அது பற்றி ஒரு விக்கி கட்டுரை வெளியிடலாமே. நேற்று நடந்த விக்கி கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. :-)--Mugunth 15:56, 1 பெப்ரவரி 2009 (UTC)
முகுந்த், என்னை ஐயா ஆக்கி விடாதீர்கள், இன்னும் நிறைய காலம் இருக்கிறது. இந்தியாவில் தட்டை வடை என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அது பற்றி கட்டுரையை விரைவில் எழுதுவேன். --Natkeeran 16:02, 1 பெப்ரவரி 2009 (UTC)
என் விருப்பம் உழுந்து வடை தான். :-) முகுந்த், பட்டறைக்கு இடமளித்து, தட்டச்சுப் பயிற்சியும் தந்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. தொடர்ந்து பங்களியுங்கள். -- சுந்தர் \பேச்சு 16:14, 1 பெப்ரவரி 2009 (UTC)

படங்களை நேரடியாக இங்கு சேத்தால் சிறப்பாக இருக்கும்[தொகு]

--Natkeeran 23:17, 4 பெப்ரவரி 2009 (UTC)


இப்போது இணைத்துள்ள படங்கள் மைபெங்களூர் தளத்தினர் எடுத்தது. அதைப் பயன்படுத்த வேண்டுமானால் அனுமதி பெறுதல் நலம். முகுந்த் மற்றும் சிலர் அவரவர் செல்பேசிகளில் படம் எடுத்துள்ளனர். அவற்றைப் பதிவேற்றினால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 05:56, 5 பெப்ரவரி 2009 (UTC)