விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் கவனத்திற்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எழூதாலாம் பக்கத்திலேயே கட்டுரையை உடனடியா தொடங்க கூடிய பொட்டகத்தை தருவது நன்று. சுட்டி, சுட்டி என்று சென்றுகொண்டிரூபது நல்ல வடிவமைப்பு அல்ல. --Natkeeran 14:32, 24 அக்டோபர் 2006 (UTC)

இந்தப் பக்கம் வேண்டிய பக்கங்கள் பட்டியலில் வருவதற்கு காரணம் என்ன ? --மணியன் 10:37, 12 அக்டோபர் 2009 (UTC)

அறப்போர்[தொகு]

 அறப்போர்

அந்த காலத்தில் மண் வளம் எப்படி இருந்தது எல்லாமே இயற்கை தன்மையுடையதாய் மனித உயிர்களுக்கு முக்கிய பங்குகாற்றியது மண். நம் மூதாதையர்கள் நமக்கு விட்டு சென்ற இயற்கை வளம் கொண்ட மண்ணை இன்று எப்படி வைத்திக் கொண்டு இருக்கிறோம்..?

விவசாயத்திற்கு வேப்பம் இலை அரசயிலை மாட்டின் சாணம் கலந்த குப்பை ஏறுக்களே நம் விவசாய நிலத்துக்கு உறமாக பயன்படு த்தினார்கள்!

எவ்வித இரசாயன மருந்துக்களை பயன்படுத்தவில்லை அப்போது வேதி உறங்களை கண்டுபிடிக்க வில்லை என்றாலும் மண்ணின் உயிர் தனது உயராக நினைத்து காத்தார்கள் நோய்கள் இல்லாமலும் உடல் வலிமையும் கொண்டு இயற்கை சார்ந்தே வாழ்ந்தார்கள் அது மட்டும் இல்லாமல் சரியாக பயிர்கள் வளரவில்லை என்றே சொல்ல முடியாத அளவுக்கு ஏங்கும் பசுமையாகவே இருந்தது.!

அப்படி இருந்த மண் வளம் இன்று இல்லையே என்று மனம் வேதனை படுகிறது.

இப்போது நம்மிடம் ஒர் அறப்போர் செய்கிறார்கள் என்பதை நாம் உண்ணிப்பாக பார்த்தால் புரியும்

விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்று காந்தி சொன்னார் அது உண்மை தான் அந்த முதுகெலும்பை எப்படி உடைக்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்தவர்கள் பலர் அவர்கள்

நம் மீது போர் தோடுத்தால் எளிதில் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியும் ஏன் என்றால் நமது மக்கள் தொகை அவ்வாறாக இருக்கிறது! பின் எப்படி இந்த அறப்போர் சாத்தியம் என்றால் நாட்டின் முதுகொலும்பை உடைப்பதே அவர்களின் எண்ணமாக அந்த காலம் முதல் இன்று வரையிலும் உள்ளது.

அதில் முதல் விதி நிலத்தை சேதபடுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்

ஏன் முதலில் நிலத்தை விழுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றால் நமது மண் வளம் அத்தகைய தன்மைக் கொண்டது எந்த விதையும் எளிதில் வளர செய்துவிடும் கால நிலைகளும் சமநிலையில் இருக்கிறது மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா அடுத்த நிலையில் தமிழகம் தான் வளம் நிறைந்தது பாதுகாப்பான நாடு என்பதை உணர்ந்து தான் ஆக வேண்டும்

நிலத்தை வைத்தே ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் கீழ் தான் எல்லாமே இயங்குதிசை யாக உள்ளது என்பதை புரிந்தவர்கள் வெளிநாட்டவர் நமக்கு விடுதலை தந்தாலும் வளர்ச்சி ரிதியாக எல்லா இடத்திலும் அவர்களின் பங்கே அதிகம். எங்கே இவர்களின் உள்நாட்டு உற்பத்தி திறனை வேகப்படுத்திவிடுவார்களோ என்ற அச்சமும் நமக்கே எதிரியாக உருவாகி நம்மையே எதிர்த்து நின்று விடுவார்களோ என்ற எண்ணத்திலும் அன்று முதல் இந்த போரை தொடங்கிவிட்டார்கள் அதில் முதல் கட்டமாக

நிலத்தை வாங்க முதலில் நினைத்தார்கள் ஆனால் அன்றைய தலைவர்களின் மனம் தனது மண்ணே உயிர் என்று இருந்தார்கள் வெளிநாட்டவர்களுக்கு நம் விளை நிலங்களை தர மக்கள் மறுத்தார்கள் பின் வந்த தலைவர்களின் முடிவு எப்படியாக இருந்தது என்றால் நமது நாட்டின் வளர்ச்சி மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டும்அவர்களின் கட்சி நலன் கட்சியை வழி நடத்த போதுமான பணத்தை பெறவே சில நிறுவனங்களை அமைக்க வழி வகை செய்தது இது தான் நமக்கு கிடைத்த நல்வழி என்று வெளிநாட்டவர்களும் சட்றென்று நம் நாட்டில் அதுவும் தமிழகத்தில் அச்சாணியை போல் அவர்களது நிறுவனங்களை நிலைநாட்டினார்கள்.

நமது மண் வளத்தை நம்மை விட அவர்களே அதிகம் தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதே உண்மை நமது ஆட்சியாளர்கள் நமது விவசாயத்தை மட்டும் வைத்து வளர்ச்சி அடைய முடியாது வெளிநாட்டு நிறுவனம் வந்தால் நமக்கு தேவையான வருவாய் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றே மாய பிம்பத்தை அன்றே மக்கள் மனதில் விதைத்து விட்டார்கள் நம் ஆட்சியாளர்கள் இது தவிற நம் நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்தவும் மறந்துவிட்டார்கள்!

இதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு பணத்தை அள்ளி விசியது வெளிநாடுகள் வேலை வாய்ப்பு அதிகளவில் தருகிறோம் உங்கள் நாடு வளர்ச்சி பெறும் அதுமட்டும் இல்லாமல் தேர்தல்நேரங்களில் பணத்தையும் கொடுத்து தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்கள் வெளிநாட்டவர்கள்

பின் நமக்கு அதிக வளர்ச்சி பெற உதவி செய்வதாக சொல்லி நமது வளத்தை நம்மை வைத்தே அழிக்க ஆரம்பித்தார்கள் அதில் எத்தனை வளர்ச்சிகள் தொழிற்சாலைகள் கணினி தொழில்நூட்ப்பம் உயர்கட்டடம் என்று புகுத்தினார்கள் ஆனால் இவையெல்லாமே விவசாய நிலங்கள் காடுகள் என்பதை நாம் உணர வேண்டும்!

நமக்கு அதிநவீன வளர்ச்சி தேவைதான் ஆனால் அவை நமது உரிமைகளையும் நிலத்தையும் அழிக்கும் நவீன முறை வேண்டாமே!

மக்களை பணத்தை மட்டுமே நினைக்க வேண்டும் என்பதற்க்காக ஆடம்பர வாழ்க்கையை நமக்குள்ளே புகுத்தவே கணினி தொழில் நிறுவனங்களை நிறுவினார்கள் இதில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்றால் ஆங்கிலம் தெரிய வேண்டும் என்று சொன்னார்கள் கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை நகரத்தை நோக்கி அனுப்பினார்கள் இதுவே தான் இளைஞர்கள் நிலத்தின் அறுமை மறத்தலுக்கு காரணம் என்றாலும் திரைப்படத்தை பார்த்தும் பலர் மாறினார்கள்

பின் மக்கள் மனதில் பணத்தை மட்டுமே குறிக்கோள்ளாக உணர வேண்டும் என்பதற்காக அவர்களின் ஆடம்பர வாழ்க்கை வெளிநாட்டு கல்விமுறையை நம் திரைப்படம் முலம் காண்பித்து நம் நிலத்துடன் இருந்த உறவையும் நமது ஒற்றுமையும் உடைக்க செய்தார்கள் இதை அவர்கள் செயல்படுத்த எவ்வளவு ஆண்டுகள் தேவை பட்டுள்ளது! ஏன் என்றால்

நம் மக்கள் எல்லோரும் நிலத்தை சார்ந்தே இருக்கிறார்கள் மக்கள் எண்ணங்களில் சுதுவாது தெரியாமலும் எப்பொழுதும் உதவி கரம் தந்துந்தும் நாம் அனைவரும் ஒன்றே சாதியால் வேறு என்றாலும் நாட்டின் நல்லதுக்கான போராட்டத்தில் ஒன்றாகவே நிற்பது தான் தமிழக மக்களின் வலிமையை உடைக்கவே எல்லா திட்டத்திலும் தமிழகம் முதலாக இருக்கும் இங்குதான் எல்லா விதமான பயிர் வகைகள் நம்மிடமே உள்ளது நூறு ஆண்டுகள் வாழ வழி செய்தது நம் இயற்கை விவசாயம் இதை உடைக்க பல வழியில் நடந்த போராட்டத்தில் இப்போது நம் நிலங்களும் நம் உறவுகளும் எல்லாமே இறந்துப்போய் விட்டதே!

ஆம் நம்பிதான் ஆக வேண்டும்!

இப்போது ஒரு சாதாரண பூச்சேடி வாங்கினால் அதை மண்ணில் வைத்து அந்த பூச்சேடி வளர தேவையான இரசாயன உறமே மண்ணில் சேர்த்து புதைத்த பின்னே தான் தண்ணீரை உற்றி வளர்க்கிறோம் இந்த நடைமுறை அன்று இல்லை என்பதை நாம் உணர வேண்டும். இப்போது இருக்கும் ஆட்சியாளர்களை எதிர்க்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லையே?

அன்று அவர்கள் நினைத்தலாம் ஒன்றே ஒன்று தான் எப்படியாவது இந்த விவசாய மண்ணை சேதப்படுத்திட வேண்டும் அதற்காகவே

இரசாயன வேதி பொருட்களை முதலில்அறிமுகம் செய்தார்கள் இவை மண்ணில் கலந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்தார்கள் ஆனால் நம் விவசாயிகள் சேவிசாய்க்கவில்லை மண் சேத்துப் போகும் என்றார்கள் 

ஆனால் மேல்நாட்டவர்கள் விடுவார்களா என்ன நேராக அரசிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது அதில் அதிக மகசூல் தர விதையில் மரபணு மாற்றம் முறையை அறிமுகம் செய்கிறார்கள் அப்போது தான் இந்த வேதிய உறம் மண்ணில் தெளிக்க முடியும் என்பதை உணர்ந்த மேல்நாடுகள் ஆட்சியளார்களை மடக்கினார்கள் பின் அவர்களின் எண்ணம் போன்றே அதில் மரபணு மாற்றம் செய்யப்படுகிறது ஆட்சியாளார்களிடம் இருந்தே இந்த அறிவிப்புகள் வருகிறது சில சலுகைகளை கொடுக்கப்படுகிறது.

பின் மரபணு மாற்றம் செய்த விதைகளை பயிர் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்றார்கள் அதனுடனே இந்த வேதிய இரசாயன உறத்தையும் கொடுக்கிறார்கள் இந்த உறத்தை தான் நீங்கள் பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டூம் என்றார்கள் அவர்களின் வார்த்தைகளை விவசாயி கள் ஏற்கவில்லை என்றாலும் காலநிலைகளும் அரசும் அவர்களை இந்த மாற்றத்திற்க்கு தள்ளிவிட்டது ஆனால் ஒரு சில விவசாயி கள் இதை விரும்பவில்லை பாராம்பரியம் அழிந்துபோகும் என்பதை உணர்ந்தார்கள் ஆனாலும் அவர்களின் நிலையை புரிந்து கொள்ள யாரும் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்

இப்படியாக தனது நிலையை வலுபெற செய்தார்கள் வெளிநாட்டவர்கள் என்றாலும் நமது ஆட்சியாளர்களின் தனது சுய இலாபத்திற்கும் கட்சியின் பலம்பெறவும் தேர்தலுக்கான வருவாய் சேர்ப்பதிலுமே இருந்ததால் இவர்கள் நினைத்ததை போன்றே இன்று மண்ணில் விஷத்தை விதைத்துவிட்டார்கள்

காய்க்கும் பழங்கள் முதல் சாப்பிடும் அரிசி வரையிலும் சத்துக்கள் இல்லை மாறாக எல்லாமே நோய்களை மட்டுமே தருகிறது

இந்த மாற்றத்தால் மனித உடலிலும் பல வகை நோய்களை கொண்டு வந்து சேர்த்துவிட்டாது நாம் அதிக நவீன மருத்துவமனைகளையே தான் பெற்றுவாட்டோம் இந்த வளர்ச்சியை தான் நாம் கொண்டாடுகிறோம் ஆனால் மேல்நாட்டவர்கள் தங்களில் எண்ணங்களை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்றால் மிகையாகாது.

இங்கு விளையும் தரமான இயற்கை காய்கறி பழங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கும் மரபணு மாற்றம் செய்த எளிதில் உடல் கேடும் வகை பொருட்களே நாம் உண்ணுகிறாம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

எல்லாமே பணத்தை அடிப்படை யாக வைத்தே செயல்படுகிறார்கள் இங்கு நாம் உண்ணும் உணவு சத்துக்கள் நிறைந்தது தான் என்றால் எதற்கு இத்தனை மருத்துவமனைகள்? எது சாப்பிட்டாலும் உடல் ஒத்துவருவத்திலையே நாமும் நேராக மருத்துவரை தானே பார்க்கிறோம்.

வெளிநாட்டு உணவு பழக்கத்தை நமக்கு பழக்கிவிட்டு நமது பாராம்பராயத்தை வெளிநாட்டவர்கள் பயன்படுத்துகிறார்களே இது எத்தனை நபர்களுக்கு தெரியுமோ?

இன்றைய நிலையில் எந்த காய்கறி பழங்கள் வாங்கினாலும் குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள் ஆகிறது அவை அழுக இதுதானா இயற்கை விவசாயம் சொல்லுங்கள்..!

இந்த விவசாய நிலம் பக்கம் இளைஞர்கள் யாரும் வந்து விடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள் அதுவே வெளிநாட்டு வேலை ஐடி துறை என்று இளைஞர்களை கவர ஆடம்பரம்மான வாழ்க்கையை அவர்களின் தலைமீது வைத்தார்கள் அதனால் இந்த நிலத்தை கண்டுக்கொள்ள வில்லை நாம்

வேலை வாய்ப்பை நமது அரசே உருவாக்கலாம் ஆனால் அப்படிசெய்தால் நம் ஆட்சியாளர்கள் கட்சியை வழி நடத்தமுடியது வருவாய்களை சேர்த்து வைக்கமுடியாது என்பதை தெரிந்தே தான்

இளைஞனை எப்போதுமே ஒரே வழியில் பயணிக்க வைக்கதான் நம்மவரின் வெளிநாட்டவர்கள் இளைஞர்களின் மனதில் ஆடம்பரத்தை நுழைத்து நிலத்தில் இருந்தும் நமது உரிமைகளில் இருந்தும் பிரித்து வைத்தார்கள் அதுவும் நம் ஆட்சியாளர்களை கொண்டே. நாமும் பணம் தான் உலகம் என்று அதன் பின் ஒடி வந்துவிட்டோம் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நடப்பது நம் உயிர்களுக்கு நிலையில்லாத பல நோய்களையும் பிரிவையுமே தந்துள்ளார்கள்

ஆனால் இப்போது இளைஞர்கள் கண்டு கொண்டான் நிலத்தின் மதிப்பையும் குணத்தையும் ஆனால் என்ன பயன் நமது மண் விழுந்துவிட்டதே...!

நாட்டின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு விட்டதே இதை மாற்ற வழி கிடைத்தாலும் வெளிநாட்டவர்கள் அரசை முன்னிருத்தி போராடுபவனை நிலைக்காமல் செய்துவிடுவார்களே!  

நமது வாழ்க்கை இனிவெளிநாட்டவரின் கைகளில் தான் உள்ளது என்றாலும் கூட ஆட்சியாளர்கள் நமது மண்ணிற்கு முக்கியத்தும் கொடுத்து நமது முதுகெலும்புக்கு தெம்புட்டும் விதமாக இனி நடந்துக்கொள்ள வேண்டும்

இனியும் நாம்பிரிந்து செயல்படக்கூடாது கட்சி ஆட்சி சாதி என்ற பெயரில் நம்மை வைத்து நம்மையே அழிக்க இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துக் கொள் வேண்டும் மண் வளம் மிக முக்கியம் இயற்கை வளமும் நமது உறவும் இம்மண்ணை காத்திட வேண்டும்

இனியும் பணத்தை நம்பி அதன் பின்னே செல்லாதே. பணத்தை வைத்து விளை நிலங்களை அழிக்க நினைப்பவர்களை தவிற்க நினை

இந்த அறபோர்முனையில் அவர்களை வெற்றி பெற வேண்டும் மண்ணை மட்டும் விட்டுகொடுக்காமல் எஞ்சிய விவசாயிகளையும் விவசாய நிலத்தையும் காத்திட ஒன்றாக நின்றால் போதும் இனி இயற்கையை அழிக்க அனுமதிக்க கூடாது

இந்த கட்டுரையை படித்து முடித்ததும் ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் பின் நீங்களே உணர்ந்துக்கொள்வீர்கள் LAVANYA JAGAN (பேச்சு) 10:38, 30 சூன் 2017 (UTC)

குழந்தையின் நிலை[தொகு]

செந்தில் மீனா இவர்களுக்கு உயிர் உறவாக ஒரு பெண் குழந்தை பிறக்கிறது தங்களுக்கு முதல் தேவதையாக வந்தவள் ஆகையால் குழந்தைக்கு இளவரசி என்று பெயர் வைத்தார்கள் இரண்டு வயது குழந்தை அவள்.

உடல் நலத்திலும் நன்றாக இருந்தால் தீடிர் என்று ஒரு நாள் காலையில் இருந்து இளவரசி உடல் நலம் மாறுகிறது மீனா தனது குழைந்தைக்கு பால் தருகிறால் குடிக்கவில்லை சற்று நேரம் கழித்து உணவை ஊட்டுகிறால் அதையும் அவள் சாப்பிடவில்லை என்னாச்சி என்று குழைந்தையை தோட்டு தோட்டு பார்க்கிறால் ஏதேனும் ஜுரம் வந்து விட்டதா என்று..! ஆனால் அப்படி ஒன்றுமில்லை பின் ஏன் இவள் சாப்பிடமாட்டுகிறாளோ என்று மனதில் நினைத்து கொண்டு சரி பசி இருக்காது போல் மத்திய வேலையில் சாதம் ஊட்டிவிடலாம் என்று மீனா நினைத்துக் கொள்கிறால்.

மத்தய வேலையும் வந்துவிடுகிறது மீண்டும் காலையில் நடந்ததைப் போலவே இளவரசி நடந்து கொள்கிறால் என்னதான் இளவலுக்கு வந்தது என்று குழைந்தையே திட்ட ஆரம்பிக்கிறால் மீனா ஒரு கட்டத்தில் இளவரசியை அடிக்கவும் செய்கிறால் குழைந்தை அழ அரம்பிச்சது சரி டா சரி அம்மு என்று மீனா தனது குழைந்தையை கொஞ்ச ஆரம்பித்தால் நேரம் போக போக இளவரசி அழுகை நிறுத்தவில்லை

மீனா எவ்வளவோ முயற்சி செய்துபார்த்தால் ஆனாலும் இளவரசியின் அழுகையை நிறுத்தவே முடியவில்லை சரி இதை இப்படியே விடக்கூடாது என்று தனது கணவனுக்கு ஃபோன் செய்கிறால் மீனா

செந்தில் என்ன இவள் இந்த நேரத்தில் எப்போதும் ஃபோன் பண்ணமாட்டால் இப்பொழுது ஃபோன் வருகிறதே என்று நினைத்து கொண்டே ஃபோன்னை ஆன் செய்கிறான்

மீனா நடந்தவற்றை எல்லாற்றையும் சொல்கிறால் செந்திலும் சரி டி நீ முதல்ல குழைந்தைய மருத்துவமனைக்கு கூட்டிட்டு போ நானும் மருத்துவமனைக்கு வந்து விடுகிறேன் என்றான்

மீனாவும் சரிங்க போறேன் நீங்க கொஞ்சம் வேகமா வந்துடுங்க எனக்கு பயமா இருக்கு என்றால் செந்திலும் அதலாம் எதுவுமில்லை நீ போ நான் கேளம்பிட்டேனு மீனாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டான் மருத்துவமனைக்கு

மீனா தனது குழைந்தை இளவரசியை கூட்டிக் கொண்டு மருத்துவரை சந்தித்தால் மருத்துவர் இளவரசிக்கு மருத்துவ சோதனை செய்து பார்தார் பின் மீனா விடம் கேட்டார் குழைந்தைக்கு நேற்று இரவு என்ன சாப்பிட கொடுத்தீர்கள் என்று அதற்கு மீனாவும் வழக்கமா கொஞ்சம் இட்லி சாப்பிடுவாள் பின் பால் கொடுப்பேன் என்று மருத்துவரிடம் சொல்லிக் கொண்டே இருந்தால் இங்கே மீனா கணவன் செந்திலும் வந்து சேர்கிறார் என்னாச்சி டாக்டர் என்று செந்தில் மருத்துவரிடம் கேட்டார்? மருத்துவரும் ஒன்றுமில்லை குழைந்தைக்கு வயிற்றுவலி போல் அதான் அவள் சாப்பிட வில்லை நான் எழுதி தரும் மருந்துக்களை குழந்தைக்கு கொடுங்கள் சரியாகிவிடும் என்றார் மருத்துவர்

சரி என்று செந்திலும் மீனாவும் மருந்துக்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள்.

வீட்டுக்கு வந்ததுமே குழைந்தைக்கு குல்கோஸ் கலக்கி தருகிறால் இளவரசி கொஞ்சமாக குடித்துவிட்டு சற்று உறங்குகிறால் தீடிர் என்று படுக்கையில் அழ தொடங்குகிறால் இளவரசி

தனது அழுகையை நிருத்தவே இல்லை செந்துலும் மீனாவும் மாறி மாறி தூக்கி கொஞ்சுகிறார்கள் அனாலும் சற்றும் அடங்கவில்லை அழது அழது அப்படியே குழைந்தை மயக்கநிலைக்கு சொன்றுவிடுகிறது மீனாவும் செந்திலும் தனது குழைந்தைக்கு என்னதான் ஆச்சா என்று கதறி அழுதுக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சொல்கிறார்கள்.

இளவரசி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனைகளை செய்கிறார்கள் சிறிது நேரம் கழித்து மருத்துவர் மீனாவை அழைத்து குழைந்தைக்கு காலையில் இருந்து உணவு எதுவும் நீங்கள் தரவில்லையா ?

குழைந்தை மிகவும் சோர்வுற்று கிடக்கிறால் ஆகையால் தான் குழைந்தை மயக்கநிலைக்கு சென்றுள்ளால் என்றார் மருத்துவர்!

மீனா அழதுக் கொண்டே இல்லை சார் நான் நல்லா தான் பார்த்து கொள்கிறேன் ஆனால் அவள் இன்றுதான் சுத்தமாக ஏதுவுமே சாப்பிடவில்லை என்றால் அதற்கு மருத்துவர் இல்லை இல்லை அவள் இன்று சாப்பிடாமல் இருந்தால் மட்டும் மயக்க நிலைக்கு போகவில்லை அவள் நான்கு ஐந்து நாள்வரை சரியாக சாப்பிட வில்லை என்று நினைக்கிறேன் என்றார் குழைந்தையின் இரத்தத்தை பரிசோதனைக்கு ஆனுப்பிவிட்டேன் தன் ரீசட்டு வரும் பார்ப்போம் என்றார் மருத்துவர்

மீனா கண்கலங்கி போனால் சார் அவ சரியா சாப்பிடல தான் ஆனா பால் எப்படியும் குடித்துவிடுவால் ஆனால் இன்று தான் இப்படி நடந்துக்கிட்டால் என்றால் மருத்துவரும் சரி விடுங்கள் குழைந்தை கண்விழிக்கட்டும் இன்னும் குழைந்தைக்கு சில சோதனைகள் செய் வேண்டும் பின் பேசிக்கலாம் என்றார் மருத்துவர்.

மீனா மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்து தனது கணவனிடம் மருத்துவர் சொல்லியதை அப்படியே சொன்னால் செந்திலுக்கு கோபம் வந்து மீனாவை அடித்து விடுகிறான் குழந்தையை நீ சரியாக கவனித்து இருந்தால் ஏன் இப்போது நாம் இப்படி அழவேண்டும் என்று சொல்லி மீனாவை திட்டிதீர்தான்.

குழந்தை இளவரசியும் கண்விழிக்கிறால் செந்திலையும் மீனாவையும் குழைந்தையை பார்க்க மருத்துவர் அழைக்கிறார் இருவரும் உள்ளே போகிறார்கள்

உள்ளே சென்று இருவரும் கண்கலங்குகிறார்கள் குழந்தை இளவரசியை மருத்துவமனை படுக்கையில் அவர்களால் பார்க்க முடியவில்லை ஒடி ஆடி விளையாடிய குழந்தை இப்படி படுத்துக் கேடக்கிறதே என்று மனம் வெடித்து அழுதால் மீனா

இளவரசியின் பக்கத்தில் மருத்துவரும் இருந்தார் அப்போது செந்திலுக்கு ஃபோன் அழைப்பு வருகிறது சற்றென்று இளவரசி கண்களை வேகமா சுழற்றுகிறால் கண்களில் ஏதோ ஒர் ஆர்வம் குழந்தைக்கு வருவதை மருத்துவர் பார்த்து புரிந்துக் கொள்கிறார் ஆனால் செந்தில் ஃபோன் அழைப்பை தூண்டித்துவிட்டு இளவரசியை பார்த்து உனக்கு ஏதுவும் இல்லம்மா என் செல்லமே என்று கண் கலங்கி பேசுகிறார்

மருத்துவர் அவர்களை சமாதானம் செய்து நீங்கள் இருவரும் கொஞ்சம் என் அறைக்கு வாருங்கள் உங்களிடம் சில கேள்விகள் கேட்க்க வேண்டும் என்றார்

பின் செந்திலும் மீனாவும் மருத்துவர் அறைக்கு செல்கிறார்கள்

மருத்துவர் இவர்களிடம் கேள்விகளை கேட்கிறார் குழந்தைக்கு என்னென்னா பிடிக்கும் வீட்டில் அவளுடன் நீங்கள் இருவரும் விளையாடுவது உண்டா என்று கேட்டார்

அதற்கு செந்தில் ம்ம்ம் சார் நாங்கள் நன்றாகதான் அவளிடம் பேசி விளையாடுவோம் நான் வேலைக்கு சென்ற பிறகு மீனா தான் பார்த்து கொள்வாள் அவளும் நன்றாக தான் பார்த்துக்கொள்வாள் என்றான்

மருத்துவர் அதற்கு சிரித்துக் கொண்டே உங்கள் பாசம் எனக்கு புரிகிறது ஆனால் குழந்தை உணரவில்லையே அவள் ஏதையே இழந்ததைப் போல் உணர்கிறால் ஆகையால் தான் அவள் இந்த நிலைக்கு வந்துள்ளால் மீனா என்னிடம் எதுவும் மறைக்காமல் தயங்காமல் சொல்லுங்கள் என்றார்

பின் மீனா சற்று யோசித்து டாக்டர் அவள் கையில் எப்போதும் I-Pad Tab இருக்கும் செந்தில் வேலைக்கு சேன்றதும் வீட்டு வேலைகளை செய்ய நான் அவளிடம் I-pad Tab ல் Cartoon வைத்து கொடுத்துவிடுவேன் அப்படி இல்லை என்றால் குழைந்தைக்கு விளையாடும் விளையாட்டை வைத்து அவளிடம் தந்து விடுவேன் அவளும் இருக்கும் இடத்தைவிட்டு எங்கும் நகரமாட்டால் நான் எங்கே விடுகிறனோ அங்கேயே தான் இருப்பாள் நான் எல்லா வேலையும் முடித்தபிறகு தான் அவளிடமே வருவேன் என்றால்

மருத்துவர் சரி மீனா அப்புறம் வேற என்ன செய்வாள் குழந்தை என்றார் மீனா அதற்கு டாக்டர் அவளுக்கு ஏகப்பட்ட விளையாட்டு பொருட்கள் வாங்கி வைத்து இருக்கிறோம் ஆரம்பத்தில் அந்த பொருட்களை வைத்து விளையாடினால் எப்போது இந்த I pad Tab வாங்கி அவளுக்கு பழக்கம் செய்தோமோ அன்றில் இருந்து மற்ற பொருட்களை அவள் தோடுவதில்லை என்றால் மருத்துவரிடம்

மருத்துவர் கேட்டார் அந்த Tab எப்போது வாங்கி பழகிவிட்டிர்கள் என்றார் அதற்கு மீனா செந்தில் இருவரும் சேர்ந்து ஒன்னறை வயதில் இருந்து என்றார்கள்


பின் எதற்கு அந்த Tab பைஅவளிடம் இருந்து பிரித்திர்கள் என்றார் மருத்துவர் அதற்கு மீனா டாக்டர் அவள் எப்போதுமே அதிலே கவனத்தை செலுத்துகிறால் வேற எந்தையுமே செய்யமறுக்கிறால் சென்ற வாரம் என் அம்மா வீட்டிற்கு வந்தார்கள் இளவரசியின் நடவடிக்கைகளை பார்த்து எனக்கு அறிவுரை சொன்னார்கள் அதை வைத்துதான் அவளிடம் இருந்து அதை உடனே பிரித்துவிட்டேன் என்றால் மீனா மருத்துவர் சரி தான் ஆனால் நீங்கள் செய்தது தவறு இளவரசிக்கு உங்கள் அன்பு பாச உணர்வை தருவதற்கு பதிலாக நீங்கள் ஒர் கருவின் உணர்வைதான் அதிகம் தந்துள்ளிர்கள் இப்போது அந்த குழந்தை உங்கள் மீது உள்ள ஏக்கத்தைவிட அந்த செல் ஃபோன் டெப் தன்னிடம் இல்லையே என்ற ஏக்கம் தான் அதிகமாக இருந்து இப்பொழுது மன அழுத்ததிற்கு கொண்டு சென்றது இரண்டு வயது குழந்தைக்கு மன அழுத்தம் தரும் முதல் பெற்றோர்கள் நீங்கள் என்றார் குழந்தைகளை மாலையில் வெளியில் கூட்டிச்செல்லுங்கள் மற்ற குழந்தைத்யுடன் விளையாட பழகவிடுங்கள் அத்துடன் இந்த செல் ஃபோன் டெப் க்கு முக்கியத்துவம் இல்லாமல் போகும் குழந்தைக்கும் நன்றாக மனித உணர்வை கற்றுக் கொள்ளும் நீங்கள் கருவிடம் பழகவிட்டால் குழந்தை மன ரீதியாகவும் பாதிக்கிறது அத்துடன் உங்களின் பாசம் வேற்று மனிதர்களின் நலன் உணர்வு போன்றவை இல்லாமல் வளர்கிறார்கள் ஆகையால் தான் மற்ற மனிதன் உயிருக்கு போராடும் போதுக்கூடா நாம் உதவிகளை செய்வதில்லை இதே தவறை குழந்தையிடத்திலும் நாம் வலுவாக உருவாக்கிறோம் அவர்களின் மனதிலும் தனிமையை மட்டுமே விரும்பும் எண்ணம் உருவாகும் இது இந்த தலைமுறைக்கு நாம் தரும் ஒரு வரம் தான் இந்த மன அழுத்தமும் உதவி மனப்பான்மை இல்லாத தலைமுறையை உருவாக்கின்ற பெருமையும் நாம்மை மட்டுமே சாறும் இப்போது ஒரு மனிதனை நிர்ணைப்பது செல்போனின் ஆப் லைன் ஆன் லைன் தான் இவையை மனிதர்களின் வாழ்க்கையை சுருக்கிய கருவிகள் என்றார் மருத்துவர்

பின் மீனாவும் செந்திலும் மருத்துவரின் ஆலோசனை ஏற்று குழந்தை நலனையும் இயற்கையுடன் வளர கற்றுக்கொடுக்கிறோம் உறுதிமொழி கொடுத்தார்கள். LAVANYA JAGAN (பேச்சு) 10:43, 30 சூன் 2017 (UTC)

doubt about essay writting[தொகு]

the wikipedia will allow to write a essay in our own style Anahaj (பேச்சு) 19:07, 7 பெப்ரவரி 2019 (UTC)