விக்கிப்பீடியா பேச்சு:நவம்பர் 13, 2010 பேர்கன் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேர்கனில் விக்கியில் எழுதப் பயிற்சி[தொகு]

நேற்று சனிக்கிழமை (06.11.10 அன்று) பேர்கன் தமிழ்ப் பாடசாலையில், தமிழ்விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கான பயிற்சி ஒன்று வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சி வருகின்ற கிழமை நிகழவுள்ள விக்கி மராத்தனுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது என நினைக்கிறேன். பல ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் எழுதுவதற்குத் தேவையான விடயங்களைக் கேட்டு அறிந்து கொண்டனர். ஆனாலும், பல தொழில்நுட்பம் தொடர்பான தமிழ்ச் சொற்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதாகவும், அவற்றை இலகுவாக எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் கேட்டனர். இப்படியான தொழில்நுட்பச் சொற்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பை எங்கே பெறலாம்? இந்த பயிற்சியை வழங்குவதற்குத் தேவையான சில தகவல்களை இணையத்தொடர்பு மூலம் எனக்கு அளித்த பயனர்:Mayooranathan, பயனர்:Sodabottle க்கும் எனது நன்றிகள்.--கலை 14:50, 7 நவம்பர் 2010 (UTC)

நல்ல செய்தி கலை. உடனேயே பயனர் கணக்கு ஏற்படுத்துவது, எடுத்துக்காட்டு கட்டுரைகளை உருவாக்குவது உதவும். விக்கி கலைச்சொற்களுக்கான ஒரு பக்கம் உள்ளது. சோடா உங்களுக்கு சுட்டியைத் தரவார். படங்கள் இருந்தால் பகிரவும், நன்றி. --Natkeeran 15:01, 7 நவம்பர் 2010 (UTC)
நன்றி நக்கீரன். உண்மையில் சனிக்கிழமையே பயிற்சி கொடுக்கும்போது, பயனர் கணக்குகளை ஏற்படுத்தி, எடுத்துக்காட்டு கட்டுரைகளை உருவாக்கத்தான் இருந்தேன். 30 பேரளவில் வந்திருந்தார்கள். ஆனால் வந்தவர்கள் கணினியை எடுத்து வராமையால், அப்படி செய்ய முடியாமல் போனது. ஆனால் எடுத்துக்காட்டு கட்டுரை, கோப்பை பதிவேற்றி, கட்டுரையுடன் இணைத்தல், சிறு திருத்தங்கள் என எடுத்துக் காட்டினேன். அடுத்த கிழமை அனேகமாக சிலர் புதிதாக பயனர் கணக்கைத் தொடங்கி எழுதுவார்கள் என நம்புகின்றேன். அன்று படங்கள் எடுக்காமல் விட்டு விட்டேன். வருகின்ற சனிக்கிழமை நிகழ்வில் படங்கள் எடுத்து பதிவேற்றுகின்றேன். --கலை 21:21, 8 நவம்பர்

குட்டி விக்கி மரத்தான்[தொகு]

நேற்று பேர்கன் தமிழ்ப் பாடசாலையில் நடந்த விக்கியில் எழுதும்பயிற்சி நிகழ்வில் பங்குபற்றியோர் கணனிகளைக் கொண்டு வராமல் விட்டு விட்டதால், முறையான பயிற்சியை வழங்க முடியவில்லை. ஆனாலும் பலர் ஆர்வத்துடன் எழுதும் முறைகள்பற்றி கேட்டு அறிந்து கொண்டனர்.

வருகின்ற 14ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த கலைவிழா நடைபெறாது என்பதால், அன்றே அனைவரும் தமிழ்ப் பாடசாலையில் ஒன்றுகூடி இந்த விக்கி மரத்தானில் பங்களிப்பதுபற்றி யோசித்தோம். ஆனால் அன்று அங்கே இணைய வசதியைப் பெற முடியாத சூழல் இருப்பதனால், முதல் நாளான 13 ஆம் திகதி தமிழ்ப் பாடசாலையில் இதனை மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். எத்தனைபேர் கலந்து கொள்வார்கள், எவ்வளவு தூரம் வெற்றி கிட்டும் என்பது தெரியவில்லை. எவரும் முன்னர் எழுதி அனுபவமற்றவர்களாக இருப்பதனால் பெரிய வேகத்தை எதிர் பார்க்க முடியாது. ஆனாலும் அன்றைய தினத்தில் ஒரு சில புதிய கட்டுரைகளாவது எழுதப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்துடன் ஒரு சில தொடர் பங்களிப்பாளர்களையாவது உருவாக்க முடியுமா எனப் பார்க்கிறேன்.

விக்கி மரத்தான் நிகழ்வில் பதிவேற்றப்படும் புதிய கட்டுரைகள் ஏதாவது வகையில் அடையாளப்படுத்தப்படுமா?--கலை 15:24, 7 நவம்பர் 2010 (UTC)

இனிதே நடைபெற வாழ்த்துக்கள். --Natkeeran 15:29, 7 நவம்பர் 2010 (UTC)
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். --மயூரநாதன் 17:52, 7 நவம்பர் 2010 (UTC)
நன்றிகள் நக்கீரன், மயூரநாதன். முடிந்த வரையில் சிலரது தொடர் பங்களிப்பைப் பெற முயற்சிப்பேன்.--கலை 21:28, 8 நவம்பர் 2010 (UTC)

மகிழ்ச்சி கலை. விக்கி மாரத்தான் அன்று எழுதப்படும் கட்டுரைகளை தனியே அடையாளப்படுத்துவதற்கான தேவையும் எண்ணமும் இல்லை. நாள் முடிவில் எத்தனைக் கட்டுரைகள் என்று முடிவெடுக்கலாம்.

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ளும் புதியவர்கள் புதிய கட்டுரைகள் இயற்றுவதில் தான் பங்கெடுக்க வேண்டும் என்று இல்லை. பின்வரும் எளிய பணிகளையும் செய்யலாம்:

  • படங்கள் இல்லாத கட்டுரைகளில் பொருத்தமான படங்கள் சேர்த்தல்
  • எழுத்துப் பிழை திருத்தம்
  • பொருத்தமான வெளி இணைப்புகள் சேர்த்தல்
  • தங்களுக்குத் தேவைப்படும் கட்டுரைகள் பட்டியலைச் சேர்த்தல்
  • விக்சனரி தளத்தில் சொற்களுக்குப் பொருள் சேர்த்தல்
  • ஏற்கனவே இணையத்தில் கிடைக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படியெடுத்துத் தமிழ் விக்கி மூலம் தளத்தில் சேர்த்தல்.

--இரவி 04:56, 9 நவம்பர் 2010 (UTC)

நன்றி இரவி. நீங்கள் கொடுத்திருக்கும் விடயங்களில் 'தேவைப்படும் கட்டுரைப்பட்டியல் சேர்த்தல்', 'தமிழ் விக்கி மூலம்' தவிர ஏனையவை ஏற்கனவே சொல்லி விட்டேன். அவை இரண்டையும் மீண்டும் கூடும்போது அவர்களுக்குச் சொல்கின்றேன். அத்துடன் விக்கி செய்திகளிலும் எழுதலாம் என ஏற்கனவே கூறியுள்ளேன். எவரும் ஏற்கனவே எழுதி அனுபவம் இல்லாதவர்கள் ஆதலால் பங்களிப்பு எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு சிலர் மிகவும் ஆர்வமாக இருப்பதாத் தோன்றுகின்றது. பார்க்கலாம். --கலை 13:51, 9 நவம்பர் 2010 (UTC)

//ஏற்கனவே இணையத்தில் கிடைக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படியெடுத்துத் தமிழ் விக்கி மூலம் தளத்தில் சேர்த்தல்.// இதற்கு குறிப்பிட்ட இணையத் தளத்திற்குரியவர்களைத் தொடர்பு கொண்டு, அனுமதி பெற்ற பின்னர்தானே இணைக்க முடியும்? அல்லது குறிப்பிட்ட இணையத் தளத்தை மேற்கோள் காட்டிவிட்டு, படியெடுத்துப் போடலாமா?--கலை 22:40, 10 நவம்பர் 2010 (UTC)

மூலத்துக்கு அனுமதி தேவையில்லை. 1950க்கு முன் இந்தியாவில் (இலங்கையென்றாலும் 50 அல்லது 60 ஆண்டுகள் என்று நினைக்கிறேன்) எழுதப்பட்ட அனைத்தும் எல்லாருக்கும் சொந்தம். மேற்கோள் காட்டினால் மட்டும் போதும். இதே போல இந்திய/தமிழக அரசுகளால் நாட்டுமையாக்கப்பட்டவையும் பொது வெளிக்கு வந்து விடுகின்றன.

திட்டப் பக்கத்திற்கு நன்றி[தொகு]

இந்த திட்டப் பக்கத்தை உருவாக்கியமைக்கு நன்றி நக்கீரன். இன்று உண்மையில் ஒரு குட்டி மராத்தன்போல நிகழ்வை ஏற்பாடு செய்ய முடியுமா எனப் பார்த்தேன். ஆனால் அனைவருமே புதியவர்கள் ஆதலாலும், மிகக் குறைந்த அளவினரே வந்திருந்ததாலும் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. இருந்தாலும் வந்திருந்த ஒரு சிலருக்கு ஆர்வத்தை தூண்டியிருப்பதாகவே தோன்றுகின்றது. அந்த வகையில் திருப்திதான். --கலை 17:15, 13 நவம்பர் 2010 (UTC)

முக்கியமாக கட்டுரைகளில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி உதவலாம். இதன் மூலம் விக்கி கட்டுரைகள் எவ்வாறு எழுதப்படுகின்றன என அறிய முடியும்.--Kanags \உரையாடுக 22:17, 13 நவம்பர் 2010 (UTC)
ஆம். ஏதாவது கட்டுரைகளை தெரிவு செய்து, எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தலாம் எனவும், அப்படித்தான் நானும் ஆரம்பத்தில் விக்கியில் பங்களிக்கத் தொடங்கினேன் எனவும் கூறியிருந்தேன். முக்கியமான கட்டுரைகளை எப்படித் தெரிவு செய்யலாம்? அப்படிக் கட்டுரைகளின் தொகுப்பு உள்ளதா?--கலை 22:46, 13 நவம்பர் 2010 (UTC)
அனைத்தும் முக்கியமான கட்டுரைகள் தாம்:). இடது பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு கட்டுரை என்பதை அழுத்தி ஒரு கட்டுரையைத் தெரிவு செய்யலாம்.--Kanags \உரையாடுக 22:52, 13 நவம்பர் 2010 (UTC)

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் பக்கத்தில் உள்ள கட்டுரைகளைச் செம்மைபடுத்தலாம்--இரவி 02:32, 14 நவம்பர் 2010 (UTC)