விக்கிப்பீடியா பேச்சு:நலமுரண்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • தன்னைப் பற்றி தானே எழுதுதல் முற்றிலும் தடை செய்தல் வேண்டும்.
  • தனக்கு நேரடி அறிமுகம் உள்ளவர்கள், நிறுவனங்கள் பற்றி எழுதும் போது பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்பு இருக்கக்கூடும் என்று ஐயுறும் கட்டுரைகள் குறித்து பேச்சுப் பக்கத்தில் வினவலாம். இவ்வாறான கட்டுரைகள் வழமைக்கும் சற்றுக் கூடுதலாக குறிப்பிடத்தக்கமைத் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

அனைவரின் கருத்தையும் வரவேற்கிறேன்.--இரவி (பேச்சு) 09:36, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம். அத்துடன் அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டு, இந்திய உணவு விடுதிகள் (hotels) பற்றிய விரிவான கட்டுரைகளை ஒருவரோ ஒரு சிலரோ எழுதி வருகிறார்கள். இக் கட்டுரைகள் பொதுவாக விளம்பர நோக்கில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் போன்று தோற்றமளிக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று. [1]. இவற்றை சில விளம்பர நிறுவனங்கள் ஊதியம் கொடுத்து எழுதி வருகின்றனவோ என்றும் சந்தேகம் கொள்கிறேன். நான் பிழையாக விளங்கிக் கொண்டும் இருக்கலாம்.--Kanags \உரையாடுக 09:50, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
இவ்வாறான சில கட்டுரைகளைத் தொடங்கிய / எழுதிய சிலர் தடைசெய்யப்பட்டுள்ளனர் என்று எண்ணுகின்றேன். Amuthanan Irapann, Gajendra Narahari, Divyamani Kandiyar. தடை செய்யப்பட வணிகநோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் காரணமா என்பதை @AntanO: அறிந்திருக்கலாம் ! - ʋɐɾɯnபேச்சு 12:02, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
கைப்பாவைச் சோதனையின் அடிப்படையிலேயே மேற்கூறிய கணக்குகள் தடைசெய்யப்பட்டன. பார்க்க: meta:Steward requests/Checkuser/2015-11. விளம்பர நோக்கில் கைப்பாவைக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கலாமோ என ஐயம் எழுகின்றது. ஆண்டனும் //specially on hotel that seems to me promotional work.// என ஐயம் எழுப்பியிருந்தார். --மதனாகரன் (பேச்சு) 14:35, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]