விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு/மாற்றுச் சொற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

What a moronic list!! This makes Tamil Wikipedia highly avoidable site and nobody with anything to write in Tamil will write here.−முன்நிற்கும் கருத்து 62.31.227.9 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கையெழுத்திடாத பயனருக்கு, இங்கேயுள்ள பட்டியலில் உள்ளவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை என்பதல்ல. ஒரு பயனருடைய கருத்தாகவே எனக்குப் படுகிறது. இது தொடர்பில் உரையாடல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு நடைபெற்றதாகத் தெரியவில்லை. இங்கே தவிர்க்கப்படக்கூடியவை எனத் தரப்பட்டுள்ள சொற்கள் பல நிச்சயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவை அல்ல. (எகா: ஏறத்தாழ, பாரிய, கைச்சாத்து, உசாத்துணை, ஒல்லாந்தர்) மேலும் நோர்வே, சுவிற்சர்லாந்து, நியூ யோர்க் போன்றவை தமிழ் நாட்டு வழக்கிற்கு மாறாக இருந்தாலும் பிற தமிழ் வழங்கும் நாடுகளில் பயன்பாட்டில் உள்ளதனால் இவற்றைத் தவிர்க்குமாறு கூறுதல் சரியல்ல. தேவையற்ற பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது அவசியம் தான். இவ்வாறான சொற்களைக் கவனமாகத் தெரிவு செய்து பட்டியலிட்டு அவற்றுக்கான நல்ல தமிழ்ச் சொற்களையும் கொடுக்கலாம். தற்போதைக்கு இவற்றை ஆலோசனைகளாக மட்டுமே கொடுக்க முடியும். தொடர்ந்து பங்களிப்பவர்கள் காலப்போக்கில் இவற்றைக் கைக்கொள்வார்கள். மயூரநாதன் 05:56, 13 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. கொஞ்சம் மதிப்புடன் கருத்து தந்தால் நன்று. மயூரநாதன் சுட்டிய படி இங்கு சொற்களை சற்று கூடிய கவனத்துடன் தெரிவு செய்ய வேண்டும். மேலும், நீங்கள் சமசுகிருதம் மொழியில் எழுத விரும்பினால் இங்கு செல்லவும். மணிப்பிரவாளம் நடையில் எழுத விரும்பினால் ஒரு புது விக்கி திட்டம் தொடங்கலாம். தமிழுக்கு எதிராக இவ்வளவு தீவர எதிர்ப்பாளர்கள் தமிழரிடையே இருப்பார் என்று நாம் சற்றும் எண்ணவில்லை. நன்றி.--Natkeeran 15:20, 13 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

மயூரநாதன், 2005ல் த.வி தொடக்க நிலையில் இருந்த போது உருவாக்கிய பட்டியல். இற்றைப்படுத்தாமல் விட்டதற்கு வருந்துகிறேன். இடைப்பட்ட இக்காலகட்டத்தில் இலங்கை எழுத்து வழக்குக்கு உள்ள உரிய இடத்தை உணர்ந்துள்ளேன். அதற்கேற்ப பக்கத்தில் மாற்றங்கள் செய்துள்ளேன். பக்கத்தின் தலைப்பை "மாற்றுச் சொற்கள்" என்று தந்துள்ளேன். இத்தலைப்பு நடுநிலை கூடியதாக இருக்கும் என்று ந்மபுகிறேன். இது மாற்றுச் சொற்கள் பயன்படுத்த விரும்புவோருக்கான வழிகாட்டியே அன்றி அனைவருக்குமான கட்டாயமான வி்தி அன்று. நன்றி--ரவி 00:47, 14 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]