விக்கிப்பீடியா பேச்சு:தேவைப்படும் கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறைய புதிய பயனர்கள் கட்டுரைகள் எழுத முனைகிறார்கள். ஆனால், எதை எழுதுவது என்று சரியான வழிகாட்டல் இல்லை. எனவே, புதியவர்களுக்குப் பரிந்துரைக்க சில கட்டுரைத் தலைப்புகள் தேவை. இலகுவான தலைப்புகளாகவும், ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளதாகவும் இருக்கலாம். --இரவி (பேச்சு) 13:29, 2 மார்ச் 2013 (UTC)

மற்றவர்களுக்கு எது இலகுவானது என்று முன்முடிவு செய்வது கடினமானது; தவறான அணுகுமுறையும் கூட. என்னால் முடியும் என்ற அகங்காரமே (ego) மனிதரை இயக்குகிறது. மற்றவர்களின் வலியவந்து வழிகாட்டுதல்களை பெரும்பாலோர் விரும்புவதில்லை. தேவைப்படின் ஒத்தாசைப் பக்கங்களில் கேட்கலாமே ? தேவைப்படுவோருக்கு மட்டுமே உதவி என்பதே சரியான அணுகுமுறையாக நான் உணர்கிறேன்.
இருப்பினும் பொதுவான துவக்கமாக புதுப்பயனர்கள் தங்கள் ஊர், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், தாங்கள் வசிக்கும் நாடு, இடம், நிறுவனம், படித்த துறை, பிடித்த துறை, மனமகிழ்வு செயல்பாடுகள், விளையாட்டுக்கள் என எழுதத் துவங்கலாம். நான் முதலில் எழுதிய கட்டுரைகள் நான் அப்போது வாழ்ந்து வந்த மகாராட்டிர மாநிலத்தைக் குறித்தே இருந்தன.--மணியன் (பேச்சு) 03:00, 30 மார்ச் 2013 (UTC)
//என்னால் முடியும் என்ற அகங்காரமே (ego) மனிதரை இயக்குகிறது. மற்றவர்களின் வலியவந்து வழிகாட்டுதல்களை பெரும்பாலோர் விரும்புவதில்லை. //மணியன், இந்தக் கோணத்தில் நான் எண்ணிப் பார்க்கவில்லை. இனி எண்ணிப் பார்க்க வேண்டுமோ :) . ஒரு புதுப்பயனர் எதை எழுதுவது, என்ன எழுதுவது என்று ஒத்தாசைப் பக்கத்தில் கேட்டிருந்தார். புதுப்பயனர்களின் பங்களிப்பை எவ்வாறு கூட்டலாம் என்று வினவிய போது, இதைப் போன்ற தேவைப்படும் கட்டுரைகளின் பட்டியல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இன்னொரு புதுப்பயனர் கூறியிருந்தார். இந்தப் பின்னணியில் தான் இப்பக்கத்தை உருவாக்க முனைந்தேன். தள அறிவிப்புகளில் கட்டுரையாக்கத் தூண்டல்களை இட்ட பிறகு, நாள்தோறும் நிறைய புதுக்கட்டுரைகள் வருகின்றன. ஆனால், அவற்றில் பல கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றவாறு இல்லாததால் அழிக்கப்படுகின்றன. இத்தனைக்கும், விக்கிப்பீடியா:முதல் கட்டுரை பக்கத்தில் எதை எழுதலாம் என்று தெளிவான வழிகாட்டல் உள்ளது. மாதிரிக் கட்டுரைகளுக்கான இணைப்பும் உள்ளது. எனவே, இப்படி ஒரு பக்கத்தைத் தந்தால் புதிய பயனர்களுக்கு உதவியாக இருக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது. மற்றபடி, இலகுவானது என்பது ஒருவருக்கு ஒருவர் மாறும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள சிறப்புக் கட்டுரைக்கான இணைப்பு ஒன்றைப் பரிந்துரைத்தால், புதுப்பயனர் ஒருவர் மிரளக்கூடும். அதே வேளை, தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமான சிறு கட்டுரைகளுக்கான இணைப்புகளைத் தந்தால் எழுதிப் பார்ப்பதற்கான தூண்டுதல் கிடைக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 04:51, 30 மார்ச் 2013 (UTC)
சுசிந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் கட்டுரை ஏற்கனவே இருக்கிறது.நன்றி.--இரா.பாலா (பேச்சு) 08:20, 30 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]