விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்கத்தின் பெயர்[தொகு]

இத்திட்டப் பக்கத்தின் தலைப்பை தமிழ் விக்கியூடகத் திட்டமிடல் அல்லது தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் எனும் பொதுவான பெயருக்கு மாற்றினால் என்ன?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:49, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வியூகம், திட்டமிடல் இரண்டும் ஒரே பொருளை தராதா? -- மாகிர் 04:18, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]

என் சிற்றறிவுக்குத் தெரிந்தவரை வியூகம்(strategy), திட்டமிடல்(planning) என நினைக்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 05:06, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]
ஆமாம், வியூகத் திட்டமிடல் என்பதை Strategic Planning என்ற பொருளில் இங்கு பயன்படுத்தினேன்.--Natkeeran 05:07, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வியூகம் என்ற சொல் குறித்த உரையாடல்[தொகு]

வியூகம் தமிழ்ச்சொல்லா? உத்தி அதே பொருளைத் தருகிறதா? அதுவாவது தமிழ்ச் சொல்லா :) --இரவி 05:10, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வியூகம் தமிழ் சொல் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் ஓரளவு பயன்பாட்டில் உள்ளது என்று நினைக்கிறேன். உபாயம், மூலோபாயம் போன்ற சொற்களும் உள்ளன. உத்தி ஈடான நல்ல தமிழ்ச் சொல் என்றால் அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். உத்தி tactics என்றே பொருள் தருவதாக எனக்குப் படுகிறது. --Natkeeran 05:14, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]
நான் அறிந்தவரை..
வியூகம், உத்தி என்ற இரண்டுமே வடமொழிகள்.
(எ.கா) போரில் வெற்றியடைய பல வியூகங்கள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வியூகத்திலும், வேறுபடுகின்ற யுக்தி(உத்தி)கள் கையாளப்படுகின்றன.
இங்கு வள்ளுவத்தில், அதிகாரம் 50-இல் இடனறிதல் என்று கூறப்படுவதை நோக்குக. செருமன் இணைய அகரமுதலி இடத்திற்கு ஏற்றாற் போல பல பொருட்களை தருகிறது. அதில் தளத்தகை என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை.
மேற்கண்டவற்றைக் காணும்போது,Strategic Planning என்பதனை, இடனறி திட்டம்/ திறன்முறை திட்டம் எனலாம். பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
Strategy என்ற ஆங்கிலச் சொல் ஏறத்தாழ "வெற்றிக்கு வழிகோலும் செயல்முறை" என்பதாக அமையும். வெற்றிச்செயல்முறைத் திட்டமிடல் என்றும் கூறலாம்.--மணியன் 13:52, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]

த.உழவன், யுக்தி - உத்தி தொடர்பைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருக்குறளில் நீங்கள் குறிப்பிட்டுள்ள இடனறிதல் என்பது strategic location என்ற பொருளில். தளத்தகை என்பதும் அதே பொருளில் வருகிறது. ஆனால், நாம் உரையாடும் strategy அதில் இருந்து மாறுபட்டது. :)

  • சரி.இலக்கியங்களில் அச்சொல்லைத் தேடுகிறேன். கேட்டுப்பார்க்கிறேன். ஆனால், ஐயமொன்றுண்டு. யாதெனில், இங்கு கருதப்படும் வியூகதிட்டமிடல் என்பது
என்ன? தமிழ்விக்கிப்பீடியாவின் நாளை வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதா? அல்லது தற்பொழுதுள்ள கட்டுரைகளை தரமுயர்த்துவதா? அகரமுதலியியலில் ஆர்வமாக நான் இருப்பதால், இத்தகைய கேள்விகளை முன் வைக்கிறேன். இங்கு குறிப்பிடப்படும் strategy என்றால் என்ன? பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

மணியன், வியூகம், உத்தி அனைத்தும் போருடன் தொடர்புடையவை என்பதால், கண்டிப்பாக இதற்கான சரியான சொல் சங்க இலக்கியத்தில் இருந்தே ஆக வேண்டும். இது போன்றவற்றுக்கு ஒற்றைச் சொல்லாக, அதுவும் ஏற்கனவே புழங்கிய சொல்லா இருப்பது நன்று --இரவி 14:40, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விமர்சனங்கள்[தொகு]

"பிற தமிழ் விக்கித் திட்டங்கள் போன்று வியூகத் திட்டமிடல் பிற பயனர்களின் நேரத்தையும் ஆற்றலையும் மேலாண்மை செய்வதற்கான ஒரு வழிமுறையாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகக்" கூறப்படுகிறது. இத் தருணத்தில் அத்தகைய அச்சங்களைத் தவிர்ப்பது முக்கியம் என்பதால் நான் எண்ணம் பகிர்ந்த இதை இப்போதைக்கு பின்வாங்கிக் கொள்கிறேன். ஆர்வம் முன்வைத்த, பங்களிப்புச் செய்த அனைத்து பயனர்களுக்கு நன்றிகள். நீங்கள் விரும்பினால் இதை பிற பயனர்களோடு உரையாடி தொடரலாம். இப்போதைக்கு இதை நான் தொடராமல் இருப்பதே நல்லது என்று உணர்கிறேன். நன்றி. --Natkeeran 21:00, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இப்படியொரு அபாயம் நேரும் என்ற கருத்தியலில் நான் உடன்படவில்லை. அப்படியாயின் விக்கியில் நாம் செய்யும் முதல் பக்க அறிமுகம் உட்பட பல்வேறு ஊக்குவிப்பு முயற்சிகள், ஊடகப் போட்டி என்பன எல்லாமே ஏதோ ஒரு வகையில் பயனர்களின் நேரத்தையும் ஆற்றலையும் மேலாண்மை செய்யத்தான் செய்யும் அல்லவா? நக்கீரன் தன் முன்மொழிவைப் பின்வாங்குவதுபற்றி மீள்பரிசீலிக்கவும். தொடர்ந்து வியூகத் திட்டமிடல் பணியை செய்யமுன்வரவும். நன்றி--சஞ்சீவி சிவகுமார் 04:06, 3 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நற்கீரன், வியூகத் திட்டமிடல் நம்மில் பலருக்கும் புதிது. அதனால், அதை எப்படிச் செய்வது, அது எப்படி நம்மைக் கட்டுப்படுத்தும் என்பது போன்ற அச்சங்கள், குழப்பங்கள் நேர்வது இயல்பு. எனவே தான், இது தொடர்பான கேள்விகளை எனது கேள்விக் கொத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தேன். முதலில் செயற்பாட்டுக் குழு என்றால் என்ன, அதன் பணிகள் என்ன, எவ்வளவு காலம் பிடிக்கும், எப்படிப் பங்களிப்புகளைக் கட்டுப்படுத்தாது என்பதைத் தெளிவாக வரையறுத்தால் ஒரு தெளிவு பிறக்கும்.

இது தொடர்பாக உங்களிடம் சிலர் தனிமடலில் ஏதேனும் தெரிவித்து இருக்கலாம். பெயர் குறிப்பிடாமல் கூட அவற்றின் சுருக்கத்தைத் தெரிவித்தீர்கள் என்றால், இன்னும் சிறப்பாக இதனை எப்படி முன்வைக்கலாம் என்று யோசிக்கலாம்.

ஏற்கனவே நூலகம் திட்ட திட்டமிடலில் நீங்கள் ஈடுபட்டத்தால் உங்கள் அனுபவம் முன்னின்று ஒருங்கிணைக்க உதவும். நமது வளங்களுக்கு உட்பட்டுத் திட்டமிடலை வேறு அணுகுமுறையில் கூட செய்யலாம். முக்கியமாக, சமகால தமிழ் இணையத் திட்டங்கள், தமிழ் விக்கியை ஒத்த உலகளாவிய வளரும் விக்கிகள் ஆகியவற்றிடம் இருந்து நாம் பெறக்கூடிய பாடம் என்ன என்பது முக்கியமான ஒரு விசயம். இந்தப் புரிதலோடு முன்னகர வேண்டும்.

இலகுவாக எனக்குத் தோன்றக் கூடிய அணுகுமுறை ஒன்று:

3 ஆண்டுக்கான வியூகத் திட்டமிடலைச் செய்யலாம். 3 ஆண்டுகளில் 12 காலாண்டுகள். இதில் காலாண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் 12 திட்டங்கள் இலக்குகள் செயற்பாடுகள் என்பதை வகுத்துக் கொள்ளலாம். சில திட்டங்கள் குறிப்பிட்ட கால இலக்குக்குள் செய்ய வேண்டியதாக இருக்கும். சில 3 ஆண்டு முழுதும் இணையாகச் செய்ய வேண்டி இருக்கும். சில இணையத்தில் செய்ய வேண்டியதாயும் சில இணையத்துக்கு வெளியே செய்ய வேண்டியதாயும் இருக்கும். ஒரே பயனர்களே பல திட்டங்களில் இயங்கலாம் என்பதால் அவர்கள் சோர்வடைந்து விடாத மாதிரி திட்டங்களின் வரிசையையும் இடைவெளியையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.

காலாண்டுக் குறிக்கோள் என்பதால் உடனடியாக விளைவுகளைக் காணக்கூடிய, நம்மால் செய்ய இயன்ற விசயங்களையே எடுத்துக் கொள்வோம். ஒரு திட்டத்தின் நடப்பை வைத்து ஆய்வு செய்து அடுத்தத் திட்டத்தைச் செம்மை செய்யும் வாய்ப்பும் உண்டு.

எப்படி ஊடகப் போட்டித் திட்டத்திலோ மற்ற திட்டங்களிலோ வேண்டிய பயனர்கள் கலந்து கொள்ளலாமோ அதே போல் இதிலும் வேண்டியவர் மட்டும் கலந்து கொள்ளலாம். மற்றவர்களைக் கட்டுப்படுத்தாது. ஆனால், ஒட்டு மொத்தமான 12 இலக்குகளை மட்டும் சமூகம் மொத்தமும் உரையாடி ஒப்புதல் அளிப்பதாக இருத்தல் அவசியம்.

இந்த அணுகுமுறை ஒத்து வரும் என்றால் இந்த 12 இலக்குகள் என்ன என்பதை இனங்காண்பது மட்டுமே இப்போது உள்ள பணி.--இரவி 05:21, 3 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நற்கீரனுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் பிற தமிழ் விக்கித் திட்டங்கள் போன்று வியூகத் திட்டமிடல் பிற பயனர்களின் நேரத்தையும் ஆற்றலையும் மேலாண்மை செய்வதற்கான ஒரு வழிமுறையாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இத் தருணத்தில் அத்தகைய அச்சங்களைத் தவிர்ப்பது முக்கியம் என்பதால் நான் எண்ணம் பகிர்ந்த இதை இப்போதைக்கு பின்வாங்கிக் கொள்கிறேன் என்ற இந்தக் கருத்தை நீங்கள் மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வியூகத் திட்டமிடல் ஒரு முக்கியமான விடயமாகும். தமிழ் விக்கித் திட்டங்களுக்கு அவசியமானதும் கூட. கடந்த எட்டாண்டுகளில் இது போன்ற திட்டமிடலொன்று இல்லாமை தமிழ் விக்கித் திட்டங்களின் வளர்ச்சிக்கு ஒரு தடைக்கல்லாகவும் இருந்திருக்கலாம். எனவே இதுபோன்றதொரு திட்டத்தை முன்வைத்த தங்கள் தூரதிருஸ்டிநோக்கை பாராட்டுகின்றேன்.

அடுத்து தமிழ் விக்கியைப் பொருத்தமட்டில் மயுரநாதன் ஐயாவுக்கு அடுத்ததாக நீங்கள் தான் மூத்தவர். அனுபவமிக்கவர். இத்திட்டத்தை வழிநடத்த சகல விதத்திலும் ஏற்புடையவர். எனவே தங்கள் பின்வாங்குதல் என்னை அதிர்ச்சியிலாழ்த்தியது. தயவுசெய்து முன்வைத்த காலை பின்னே எடுக்காதீர்கள். உங்களுடன் நாங்கள் இருப்போம். நல்ல விடயங்களை பிற்போடவும் கூடாது, காலத்தை வீணாடிக்கவும் கூடாது. விக்கியில் செயற்படும் நாம் அனைவரும் எத்தகைய வற்புறுத்தலுமின்றி சுயேட்சையாகவே செயற்படுகின்றோம். இங்கு நேர ஒதுக்கீட்டினை அவரவர் வசதிக்கேற்ப ஒதுக்கீடு செய்து கொள்கின்றனர். அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்குமேற்ப பங்களித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பிற பயனர்களின் நேரத்தையும் ஆற்றலையும் மேலாண்மை செய்வதற்கான ஒரு வழிமுறையாக அமைந்துவிடும் என்ற கருத்தை ஏற்க முடியாது. எனவே வியூகத் திட்டமிடலை தங்கள் தலைமையின் கீழ், தங்கள் வழிகாட்டலுடனே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். இதனை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. --P.M.Puniyameen 06:00, 3 சனவரி 2012 (UTC)[பதிலளி]

புண்ணியாமீன்,

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பலரும் பல்வேறு வகைகளில் பங்களித்துள்ளனர். இதில் எவரையும் வரிசைப்படுத்துவதோ முன்னிலைப்படுத்துவதோ சரியாக இருக்காது. எனவே //தமிழ் விக்கியைப் பொருத்தமட்டில் மயுரநாதன் ஐயாவுக்கு அடுத்ததாக நீங்கள் தான் மூத்தவர்.// போன்ற கருத்துகளைத் தவிர்க்க வேண்டுகிறேன். நற்கீரன், கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையை அளித்து வருகிறார். வழமையான விக்கித் தொகுப்புப் பணிகளுக்கு அப்பாற்பட்டு திட்ட மேலாண்மை சார்ந்த நோக்கும், பட்டறிவும் பெற்று இருக்கிறார். இந்த அடிப்படையில் வியூகத் திட்டமிடல் குறித்த அவரது ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். ஆனால், இதனை தலைமை, வழிகாட்டு என்று குறிப்பிட வேண்டாமே? வழமையான விக்கிப்பங்களிப்புகள் போலவே இந்த முயற்சியும் பலரது பல்வேறு வகையான பங்களிப்புகளால் மட்டுமே சாத்தியப்படும். நன்றி--இரவி 06:52, 3 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: இதனை நற்கீரனக்கான ஒரு வேண்டுகோளாக வைத்தால் உரையாடல் திசை மாறுவதாகவே உணர்கிறேன். எனவே, இது வரை நாம் வியூகத் திட்டமிடல் குறித்து உரையாடிவற்றில் என்ன போதாமைகள் உள்ளன? தமிழ் விக்கி அடுத்து எப்படி முன்னகர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? அதனை எப்படிச் செய்யலாம்? என்ன அணுகுமுறைகள், வழிமுறைகளைக் கையாளலாம் என்பதை முன்வைத்து உரையாடினால் நற்கீரன் மட்டுமல்ல மற்ற பலரும் கூட மனமுவந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். நன்றி--இரவி 06:55, 3 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இரவி என் மனதில் பட்ட கருத்தைத்தான் எழுதினேன். தான் எண்ணம் பகிர்ந்த கருத்தை இப்போதைக்கு பின்வாங்கிக் கொள்கிறேன் என்று Natkeeran சொன்னதை என்னால் ஜீரனிக்க முடியவில்லை. இத்திட்டத்தை முன்வைத்த பின் அவர் மனது பாதிப்படையும் ஏதோ நிகழ்ந்திருக்கலாம். இவ்வாறு ஊகித்தே எழுதினேன். நான் எழுதியது விக்கி கொள்கைக்கு முரண் எனில் என் கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன். தயவு செய்து இதை விவாதமாக்கிக் கொள்ள வேண்டாம் --P.M.Puniyameen 07:27, 3 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சில எண்ணங்கள்[தொகு]

வியூகம் (strategy) வேறு நடவடிக்கைத் திட்டம் (operational plan) வேறு. திட்டப்பக்கத்தில் பேசப்படும் கேள்விகள் நடவடிக்கைத் திட்டங்களாகவே உள்ளன. அவ்வாறான பாதையில் ஆரம்பத்திலேயே பயணிப்பதால், இம்முயற்சி பற்றி என் எண்ணங்கள் பின்வருமாறு:

  • வியூகம் (strategy) என்பது பரந்த மேல்நிலை நோக்கு மற்றும் இலக்குகளை உருவாக்குதல் மட்டுமே. முதலில் அவை உரையாடப்பட்டு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படுபவை பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளாக மட்டுமே இருக்க வேண்டும், விதிகளாக அல்ல. அவை விக்கித் தன்னார்வலர்கள் யாரையும் கட்டுப்படுத்தும் விதிகளாகவோ செய்முறைகளாகவோ, ஒட்டுமொத்த விக்கி சமூகம் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளோ அல்ல - அவ்வாறு காட்சிப்படுத்தக்கூடாது.
  • வியூகம் என்பது இத்தனை ஆண்டுகள் கழித்து விக்கி இன்னினவாறு அமைய வேண்டும், இன்னின்ன விசயங்களைக் கொண்டிருக்க வேண்டும், இத்தனைப் பேரைச் சென்றடைந்திருக்க வேண்டும், இன்னின்ன நுட்பவளங்கள் வேண்டும் என்பது போன்ற மேல்நிலை விசயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். வியூகம் உருவாக்கப்பட்டு, தொலைநோக்குப் பார்வையும், இலக்குகளும் உருவாக்கப்பட்ட பின்னரே கீழ்நிலைத் திட்டமிடலும் (tactical planning) நடவடிக்கைத் திட்டமிடலும் (operational planning) செய்யப்படவேண்டும். ஆரம்பத்திலேயே நிறுவனமா இல்லையா, கட்டுரை வகை, எண்ணிக்கை, தானியங்கியா இல்லையா, பிடித்த துறை, பிடிக்காத துறை, தமிழருக்குத் தேவையானது, தேவையில்லாதது, கூலிக்குக் கட்டுரை எழுதுதல் (paid editing), பயிலரங்கு எண்ணிக்கை, இடம், வரும் ஆட்கள் போன்றவற்றைப் பேசுவது வியூகம் கிடையாது. இது நுணுக்க நிருவாகம்.
  • வியூகத்தால் உருவாக்கப்படும் இலக்குகளும் நெறிமுறைகளும் தன்னார்வலர்களைக் கட்டுபடுத்தாதவை. (non binding). வியூகமும், அதனால் ஏற்படக்கூடிய விக்கித்திட்டங்களும், அமைப்புகளும் சாதாரண விக்கிச்செயல்பாடுகளுக்கு மேலதகிமானவை, அப்பாற்பட்டவை. அவை அவற்றை சார்ந்த பயனர்களும், அதில் தாமாக முன்வந்து இணையும் பயனர்களும் மட்டும் செய்யவேண்டியன. வியூகமும் அதனால் விளையும் திட்டத்தையும் செயல்படுத்தும் பொறுப்பு அந்த அணியினது மட்டுமே. அவை ஒட்டுமொத்த விக்கி சமூகத்தின் பொறுப்புகள் ஆகா.
  • வியூகத்தால் ஏதேனும் அமைப்பு ஒன்று உருவாகின், (அறக்கட்டளை போன்று) அது ஒட்டு மொத்த தமிழ் விக்கி சமூகத்தின் பிரதிநிதியன்று. அதன் இலக்குகளும், நெறிமுறைகளும் ஒட்டு மொத்த விக்கியின் இலக்குகளோ/நெறிமுறைகளோ அன்று. அவ்வாறு வெளிக்காட்டிக் கொள்வதும் கூடாது. அவ்வாறான அமைப்பு அதில் உள்ளவர்கள் விக்கிக்காக மேலதிகமாக செய்யும் முயற்சி மட்டுமே. தொகுக்கும் உள்ளடக்கங்களின் வகைகள், தன்னார்வலர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், அவர்கள் எழுத விரும்பும் துறைகள், உருவாகும் கட்டுரைகள் எண்ணிக்கை எதனையும் கட்டுப்படுத்தும் உரிமையோ புதிதாக விக்கிக் கொள்கைகளை உருவாக்கும் உரிமையோ இந்த அமைப்புக்கும் வியூக அணியினருக்கும் கிடையாது. வியூகத்தின் இலக்குகளை அடைய விக்கித்திட்டங்கள் உருவாக்கி அதனைச் சார்ந்தவர் செயல்படலாமேயொழிய, பிற தன்னார்வலர்களை “இதைச் செய்யுங்கள், இதைச் செய்யாதீர்கள்” என்று சொல்ல உரிமை கிடையாது. அமைப்பு/வியூகம் என்று உருவானால் அதனைச் சார்ந்தவர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒட்டு மொத்த சமூகத்தின் மீது திணிக்க உரிமை கிடையாது. அவர்கள் உருவாக்கும் இலக்குகள், திட்டமிடும் செயல்பாடுகள் ஆகியவை அன்றாட விக்கிச்செயல்பாடுகளில் இருந்து எந்த விதத்திலும் வேறுப்பட்டவை அல்ல, அவற்றை செயல்படுத்துவதும் செயல்படுத்தாததும் அவர்களது பொறுப்பே, ஒட்டு மொத்த சமூகத்தினது கிடையாது.
  • வியூகம் என்பது இயல்பான விக்கி வளர்ச்சியினை கட்டுப்படுத்தும்/நெறிப்படுத்தும், தன்னார்வல வளங்களை மேலாண்மை செய்ய வழிவகை அல்ல. இயல்பான விக்கி செயல்பாட்டுக்குக் கூடுதலாக செயல்படுவதாகவே அமைய வேண்டும். வியூகத்திற்கும் வியூக அணியினருக்கும் விக்கியின் தன்னார்வல வளங்களில் மேலாண்மை செய்யும் உரிமையும், முன்னுரிமை கோரும் உரிமையும் கிடையாது.

--சோடாபாட்டில்உரையாடுக 07:57, 4 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில், உங்கள் கருத்துகளுடன் முற்றிலும் உடன்படுகிறேன். உங்கள் கருத்துகள் , வியூகத் திட்டமிடலை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவையும் தருகின்றன. வியூகத்திட்டமிடல் என்பது கண்டிப்பாக நுணுக்க நிருவாகமாக இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. ஆனால், இது வரைப் பகிரப்பட்ட கேள்விகளில் அத்தகைய தொனி வருவதை உணர முடிகிறது. தமிழ் விக்கிப்பீடியா சிறிய சமூகமாக இருப்பதால், தற்போது என்ன நிலையில் இருக்கிறோம், எங்கு நன்றாகச் செய்திருக்கிறோம், இன்னும் வேற மாதிரி என்ன செய்யலாம் என்று எண்ணிப் பார்த்ததின் விளைவுகளே இக்கேள்விகள். தற்போது நமக்குத் தேவை, வியூகத் திட்டமிடலுக்கே ஒரு வியூகத் திட்டமிடல் :) தமிழ் விக்கிப்பீடியா தற்போது என்ன நிலையில் இருக்கிறது, எங்கு செல்ல வேண்டும், எப்படி அடையலாம் என்பது குறித்த சரியான கேள்விகளை முதலில் நாம் கேட்க வேண்டும். இதற்கு சற்று நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன்பு ஓரிரு முறை IRC / Skype / Google+ hangoutல் பேச முயற்சி எடுக்க வேண்டும். நன்றி--இரவி 13:40, 4 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சில பதில் எண்ணங்கள்[தொகு]

கடந்த ஆண்டுகளில் நாம் இந்த மாதிரியான திட்டமிடல்களைச் செய்துள்ளோம். ஆனால் இம் முறை அம் முறைமையை சற்றுச் சீர்படுத்தி முடிவுகளை தொகுத்து தருவதே நோக்கமாக இருந்தது. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை செவிமடுத்து, தகுந்த மாற்றங்கள் செய்து, தொடர்வதே நலமாக இருக்கும்.

  • வியூக முன்மொழிவுகள் சகா-சகா பரிந்துரைகளாகவே அமையும். விக்கி சம்பளம் கொடுக்கும் காப்பிரட் அல்ல, கட்டாயம் இதைச் செய்யவும் என்று கேப்பதற்கு.
  • வியூகத்தை பற்றிய உரையாடல்களில் கீழ்நிலை திட்டமிடல், நடவடிக்கை திட்டமிடல் தொடர்பான விடயங்கள் முன்வருவது இயல்பானது. எனவே இது தான் உரையாடப் பட வேண்டும், இது உரையாடப் படக் கூடாது என்று கூறுவது செயற்கைத் தனமானது, நடைமுறைக்குப் பொருந்தாது. சில நடவடிக்கை திட்டமிடல் விடயங்கள் வியூகத் திட்டமிடலின் போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். வியூகத் திட்டமிடலுக்கு உதவும் வகையில் விக்கிமீடியாவில் இருந்து ஒரு துறை சார் வல்லுனரைக் கேட்டுப் பார்க்கலாம்.
  • ஏற்கனவே கூறியபடி வியூக உள்ளடக்கம் பரிந்துரைகள் ஆகவே அமையும். ஆனால் அது சாதாரண விக்கிச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே அமைய முடியும். விக்கிப் பட்டறைகள், துறைகள் சார்ந்த திட்டங்கள், போட்டிகள் போன்று. விக்கி வியூகம் ஒரு இணக்க முடிவுப் பரிந்துரையாக, அதாவது பெரும்பான்மை செயற்படு பயனர்கள், நிர்வாகிகளின் உடன்பாட்டினோடே முன்வைக்கப்படும். விக்கி வியூக அணி விக்கிச் சமூகத்தின் கூறாகவே அமையும். பல்வேறு கூறுகள் கொண்டதே விக்கிச் சமூகம்.
  • ஒர் அமைப்பு ஒன்று உருவாகினால், அது முறைப்படி பதிவு செய்யப்பட்டால் சில விடயங்களில் அது அதிகாரபூர்வ முடிவுகளை எடுக்கும். அது மீடியாவிக்கி நிறுவனத்தில் விதிகளுக்கு உட்பட்டு அமையும். அப்படி முறைப்படி உருவாக்கப்படும் அமைப்பு அப்படி வெளிக் காட்டிக் கொள்வது பொருத்தமானதே. இது விக்கிக்காக செய்யும் முயற்சி, இங்கு மேலதிக என்று வேறுபாடு தேவை இல்லை. தனிப்பட்ட ஒருவர் விக்கி கொள்கைகளுக்கு உட்பட்டு பங்களிக்கும் போது அவருக்கு எந்தவித மேலதிக கட்டுப்பாடுகளையும் இந்த அணி முன்வைக்க முடியாது என்பது மிகப் பொருத்தம். தமிழ் விக்கி கொள்கைகள் பொதுவாக உருவாக்கும் வழிமுறைப் படி உருவாக்கப்படும், அவற்றுக்கு உட்பட்டே இந்த அமைப்புச் செயற்படும். விக்கி கொள்கைகளுக்கு உட்பட்ட தன்னார்வலர்களுக்கு எதையும் சொய்யச் சொல்ல உரிமை கிடையாது. ஆனால் பரிந்துரைகள், வழிகாட்டிகள் வழங்கலாம். அமைப்பு/வியூகம் என்பது உரையாடில் படி இணக்க முடிவாக முன்வைக்கப்படும் ஒன்றாகவே இருக்கும். பல்வேறு விக்கித் திட்டங்களின் வெற்றிக்கு எவ்வாறு ஒட்டுமொத்தச் சமூகம் காரணியாக அமைகிறதோ, அவ்வாறே இந்த திட்டமும்.
  • விக்கித் திட்டங்களை ஒருங்கிணைப்புச் செய்வது, ஒழுங்கமைப்புச் செய்வது அத் திட்டங்களை முன்னெடுக்க அவசியமான ஒரு செயற்பாடே. அப்படிச் செய்யும் போது எதோ ஒரு நிலையில் சில குறிப்பிட்ட விடயங்களில் தமது தெரிவால் முன்வரும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணியும் வரும். அதை ஒட்டுமொத்த "தன்னார்வல வளங்களை மேலாண்மை செய்ய வழிவகை" என்று எடுத்துக் கொள்வது தவறு. இச் செயற்பாடு இயல்பான விக்கிச் செயற்பாடின் ஒர் அங்கமாகவே அமைய முடியும். ஆர்வம் உள்ளோர் கலந்து கொள்ளலாம். "விக்கியின் தன்னார்வல வளங்களில் மேலாண்மை செய்யும் உரிமையும், முன்னுரிமை கோரும் உரிமை" யாருக்கும் இல்லை. அதுவே விக்கி கட்டமைப்பின் ஒர் இயல்பு ஆகும். --Natkeeran 19:10, 4 சனவரி 2012 (UTC)[பதிலளி]