விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கியூடகக் கையேடு/அறிமுகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

\\ மேற்கத்திய பஞ்சாபி, பீகாரி, ஒரியா, காஷ்மீரி, சிந்தி, அசாமி, சமற்கிருதம், பஞ்சாபி \\ மேற்கத்திய பஞ்சாபியும், பஞ்சாபியும் ஒன்றா? ஒரியா என்ற பெயரை மாற்றி விட்டார்களா இல்லையா? --குறும்பன் (பேச்சு) 13:49, 16 செப்டம்பர் 2013 (UTC)

மேற்கத்திய பஞ்சாபி(பாகிஸ்தானிய பஞ்சாபி), இந்திய பஞ்சாபி இரண்டும் ஒன்றே, தமிழகத் தமிழ், இலங்கைத் தமிழ் போன்றே இவையும்!. பஞ்சாப் என்னும் ஒரே பகுதியில் பேசப்பட்டாலும், இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின், இரண்டும் மாற்றம் பெற்றன. மேற்கத்திய பஞ்சாபி உருது போன்ற எழுத்துமுறையில் எழுதப்பட்டது. இந்திய பஞ்சாபி, தேவநாகரியை ஒத்த எழுத்துமுறையில் எழுதப்பட்டது.. மேற்கத்திய பஞ்சாபியில் உருது சொற்கள் அதிகளவில் கலந்திருப்பதாகவும், கூடுதல் ஒலிகள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அறிகிறோம். :) இந்திய மொழிகள் என்று பட்டியலிடும்போது இந்திய பஞ்சாபியை மட்டும் குறிப்பிட்டால் போதும்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:26, 16 செப்டம்பர் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா செப்டம்பர் 2003 அன்று தானே தொடங்கப்பட்டது? இது சரி என்றால் இதை கட்டுரையில் இணைத்து விடலாமா?--குறும்பன் (பேச்சு) 13:56, 16 செப்டம்பர் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா முதற் பக்க வரலாற்றுப் பதிவுகளின்படி அந்தப் பக்கத்தின் முதல் பதிவு 30 செப்டெம்பர் 2003ல் பதியப்பட்டது. அந்தக் காலத்தில் ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்தில், அப்போதிருந்த பிற மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியலும் கடைசியில், "Strat a new edition" என்னும் ஒரு இணைப்பும் இருந்தது. இதன் மீது சொடுக்கி ஒருவர் விரும்பும் மொழிக்கான ஒரு பக்கத்தைத் திறக்கலாம். இதன் இடைமுகம், சின்னம் எல்லாம் ஆங்கில மொழியில் இருக்கும். இவ்வாறான ஒரு பக்கத்தைத் திறந்து அதில் முதல் பதிவாக ஒரு யாகூ குழுமத்தில் சேரும்படியான வேண்டுகோள் இடப்பட்டது. உள்ளடக்கம் விக்கிப்பீடியாவுக்குத் தொடர்பற்ற ஒன்றாக இருந்தபோதிலும் https://ta.wikipedia.org/wiki/Main_Page என்னும் முகவரியுடைய ஒரு வெற்றுப்பக்கம் திறந்துவிடப்பட்டது என்ற வகையில் இதைத் தமிழ் விக்கிப்பீடியாவின் பிறப்பு எனக் கொள்ளலாம். ஆனால், தமிழ் மொழியில் விக்கிப்பீடியாவை உருவாக்குவதற்கான வேலைகள் நவம்பர் 3 ஆம் தேதிக்குப் பின்னரே தொடங்கின. ---மயூரநாதன் (பேச்சு) 04:01, 17 செப்டம்பர் 2013 (UTC)


உருவாக்கியவர் பெயர்[தொகு]

விக்கிப்பீடியா நிறுவுனர்களின் பெயர் முதலில் 'லாரி சாங்கர்' என்றும் பெயர்க்காரணம் உபதலைப்பின் கீழ் 'லாரி சாஞ்சர்' என்றும் உள்ளது. ஏதாவது ஒரு பெயரை பயன்படுத்த வேண்டுகிறேன். (Consistent usage) --சிவகோசரன் (பேச்சு) 03:53, 17 செப்டம்பர் 2013 (UTC)

வார்டு கன்னிங்காம் படத்துக்கு பதில் லாரி சாங்கர் படம் போடலாமே. நான் அறிந்த வரையில் கட்டுரையில் வார்டு கன்னிங்காம் எங்கும் குறிப்பிடப்படவில்லை--குறும்பன் (பேச்சு) 13:13, 17 செப்டம்பர் 2013 (UTC)

அறிமுகம் தொடர்பாக சில கருத்துக்கள்[தொகு]

தமிழ் விக்கியூடகங்கள் என்று பொதுவாக அறிமுகம் தர விழைவதால், தற்போதைய அறிமுகம் விக்கிப்பீடியாவை மட்டும் அமைவது போன்று இருக்கின்றது. அறிமுகத்தில் நிச்சியமாக விக்கிப்பீடியாவே முதன்மை பெறும். எனினும் விக்கியூடகத் திட்டங்கள் என்ற பகுதியில் தனிப்பட்ட திட்டங்கள் தொடர்பாக விரிவாக்கினால் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 15:48, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]