விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/தங்குமிட உதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நினைவூட்டல்: தங்குமிட உதவி கோருவோர் உடனடியாக திட்டப்பக்கத்தில் தங்கள் கோரிக்கைகளை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் விக்கி கையெழுத்தை மட்டும் இட்டால் போதுமானது.--இரவி (பேச்சு) 08:56, 17 செப்டம்பர் 2013 (UTC)

அண்மைய மாற்றங்கள் பக்கத்தினைக் கண்டுதான் இப்படியொரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது குறித்து அறிய இயன்றது. எனவே நிகழ்விற்கு வர சம்மதம் தெரிவித்த பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் இந்த தங்குமிட உதவியைப் பற்றி குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:44, 20 செப்டம்பர் 2013 (UTC)
சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ஆலமரத்தடியிலும், தள அறிவிப்விலும் இட்டுள்ளேன். அடுத்து பயனர் பேச்சுப் பக்கங்களிலும் இடுவோம்.--இரவி (பேச்சு) 08:05, 20 செப்டம்பர் 2013 (UTC)
பரிந்துரையை ஏற்றமைக்கு நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:28, 21 செப்டம்பர் 2013 (UTC)
  1. உதவிதேவை--≈ உழவன் ( கூறுக ) 01:19, 21 செப்டம்பர் 2013 (UTC)

பெண்களுக்கு முன்னுரிமை

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் அனைவருக்கும் தங்குமிட வசதியில் முன்னுரிமை அளிக்க வேண்டுகிறேன். அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பே செய்யாவிட்டாலும் அவர்களுடைய ஆர்வத்திற்காகவும், அவர்களது பாதுகாப்பிற்காகவும் முன்னுரிமை அளித்து தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்திட வேண்டுகிறேன். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:14, 23 செப்டம்பர் 2013 (UTC)

தங்குமிட உதவி கோரிய பார்வதி, அபிராமி, நந்தினி ஆகியோருக்கான தங்கும் இடம் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் மையத்தின் விருந்தினர் அறையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அண்ணா பல்கலை வளாகத்துக்குள் பாதுகாப்பாக உள்ள இடம். அருகே பல்கலையின் பெண்கள் விடுதியும் உள்ளது. பெண்கள் அனைவரும் ஒரே பெரிய அறையில் தங்குமாறும் ஏற்பாடு செய்துள்ளோம்.
இறுதியாக தங்குமிட உதவி கோரிய விசய ராணி அவர்களுக்கும் பாதுகாப்பான தங்குமிடம் ஏற்பாடு செய்ய முயல்வோம். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதற்கான பெயர் பதிவு போன வாரமே செய்து முடித்து விட்டோம். எனவே, விசயராணியை அங்கு தங்க வைக்க முடியுமா என்று உறுதியில்லை. . --இரவி (பேச்சு) 21:53, 23 செப்டம்பர் 2013 (UTC)

இற்றை[தொகு]

அண்ணா பல்கலையின் விருந்தினர் மாளிகை, அண்ணா பல்கலையின் முன்னாள் மாணவர் மையத்தின் விருந்தினர் அறைகள், தரமணியில் உள்ள http://www.mssrf.org/ நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை என்று மொத்தம் 26 பேர் தங்கக்கூடிய அளவுக்கு அறைகளை முன்பதிவு செய்துள்ளோம். நிகழ்வு இடத்துக்கு அருகிலேயே இருத்தல், பாதுகாப்பு, பயனர்களை அமைதியாக உரையாடுவதற்கான எழிலான சூழல் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டது. யார் யார் எங்கு தங்குகிறார்கள் என்ற விவரத்தை நாளை இற்றைப்படுத்துகிறேன். இதற்கு மேல் யாராவது தங்குமிட உதவி கோரினால், நமது பொறுப்பில் அறைகளை முன்பதிவு செய்வது இயலாது. ஒன்று, அவர்கள் உதவித் தொகை பெற ஏற்றவர்களாக இருந்தால், அவர்கள் ஏற்பாடு செய்து கொள்ளும் தங்குமிடச் செலவை ஏற்கலாம். அல்லது, விக்கிப்பீடியர் ஒருவரின் வீட்டில் அவர் தங்கலாம்.--இரவி (பேச்சு) 21:53, 23 செப்டம்பர் 2013 (UTC)