விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/நல்கை விண்ணப்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருத்துக்கள்[தொகு]

நற்கீரன்[தொகு]

நல்ல தொடக்கம். Fit to strategy, Measures of success ஆகிய இரண்டும் விரிவுபடுத்தப்பட வேண்டும. http://meta.wikimedia.org/wiki/Grants:Index/Requests இன்னும் கூடிய புள்ளிகள் சேர்க்கலாம். விரைவாகச் சில கருத்துக்கள்:

Project scope இல் சேர்க்கக் கூடிய விடயங்கள்:[தொகு]

  • மாநாட்டில் 36 பயனர்கள் பங்கேற்பதை உறிதிப்படுத்தியுள்ளார்கள் என்பதைக் குறிப்பிடலாம்.
  • மாநாடு தமிழுக்கு இந்த வகையான முதலாவது பன்னாட்டு ஒன்றுகூடலாக இருக்கும் என்பதைக் குறிப்பிடலாம்.
  • பயண உதவித் தொகை இலங்கை, இந்திய பயனர்களுக்கு மட்டும் என்பதைக் குறிப்பிடலாம்.
  • முன்னெடுக்கப்படும் இதர சமார்ந்தரப் பரப்புரைகள் பற்றி குறிப்பிடலாம்.

Schedule and Activities[தொகு]

  • திட்டமிடல் பற்றிய குறிப்புக்களைச் சேர்க்கலாம்

Budget இல்[தொகு]

  • குறிப்புக்கள் சேர்க்கலாம். எ.கா உதவித்தொகை இலங்கை, இந்திய பயனர்களுக்கு மட்டும். எ.கா. இந்திய ரூபாய் கணக்கு காட்டப்படலாம். * போட்டு மாறக்கூடிய கணக்குக்களைச் சுட்டலாம்.

Fit to strategy[தொகு]

  • Participation and Community: The conference will aid community development and strengthen offline networking. Will aid in creating better enviornment for collaboration, particularly in resolving policy disaggrements.
  • Quality Content: (Same as second point. This can be ellaborated as well)
  • Increasing Reach: (Same as third point. But can be ellaborated with notes to "Vision 2015" - Global South objective)

We need to provide more details for this section.

Measures of success[தொகு]

  • At least 100 active wikipedians and enthusiasts attend the conference.
  • At least 15 media articles highlighing Wikimedia projects.
  • A detail document capturing ideas/issues/stretegies/policies discussed in the conference.

We need to provide more details for this section. --Natkeeran (பேச்சு) 01:34, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சஞ்சீவி சிவகுமார்[தொகு]

நல்லது. நற்கீரனின் பரிந்துரைகளுடன் பின்வரும் விடயங்களும் சேர்க்கப்படுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

1. கட்டுரைப்போட்டியில் இதுவரை விரிவாக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை. எதிர்பார்ப்பு எண்ணிக்கை. 2. நூல்வெளியீடு முதலான புறப்பங்களிப்புகளும் அவற்றின் தாக்கமும். 3. சுற்றுலாவின் போது பொதுமக்கள் கவனம் ஈர்க்கப்படுவது முதலானவை. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:03, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பவுல்[தொகு]

நன்றி. --Natkeeran (பேச்சு) 13:23, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இற்றை[தொகு]

அனைவரின் கருத்துகளுக்கும் திருத்தங்களுக்கும் நன்றி. மேல் விக்கியில் தற்போது உள்ள நல்கை விண்ணப்ப வடிவத்துக்கு ஏற்ப இற்றைப்படுத்திய விண்ணப்பத்தை http://meta.wikimedia.org/wiki/Grants:Ravidreams_-_Tamil_Wikimedians/TamilWiki_10_years பக்கத்தில் இட்டுள்ளேன். தேவைப்படும் மேம்பாடுகளை அங்கு நேரடியாகச் செய்யலாம். தற்போது விண்ணப்பம் draft நிலையில் உள்ளது. திங்களன்று விண்ணப்பத்தை முறைப்படி அளிக்க எண்ணியுள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:12, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தற்போது நல்கை விண்ணப்பத்தை முறைப்படி அளித்துள்ளேன். தொடர்ந்து விவரங்களை இற்றைப்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:40, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நிகழ்ச்சி நடப்பதற்கு சரியான நேரத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்றால் நாம் இரண்டு மாதம் முன்பே WMF இடம் நல்கையை முன் வைத்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது :) என்றாலும், பாதகம் இல்லை. நல்கை குறித்த உரையாடல் ஓடிக் கொண்டிருக்கிறது. கேட்ட தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் நிகழ்ச்சியையும் பிற திட்டங்களையும் சரியாகச் செய்து முடிக்க மாற்று நிதி ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக இந்திய விக்கிமீடியா கிளை, CIS A2K ஆகிய இரு அமைப்புகளிடம் பேசி வருகிறேன். இந்த CIS A2K என்பது முன்பிருந்த விக்கிமீடியாவின் இந்திய அலுவலகத்துக்கு மாற்றாக விக்கிமீடியாவிடம் இருந்தே நல்கை பெற்று இயங்கும் ஒரு தொண்டு அமைப்பு.

இருவருமே நிகழ்ச்சி வெற்றி பெற அனைத்து வகையிலும் இயன்ற அளவு உதவ முன்வந்துள்ளனர். இந்திய விக்கிமீடியா கிளையின் நிதி நிலையில் தற்போது சிக்கல் உள்ளதால், நிதியுதவி அல்லாத பிற விசயங்களில் உதவியைக் கோரலாம். எடுத்துக்காட்டுக்கு, நிகழ்ச்சி பற்றிய பரப்புரை, ஊடக அறிமுகங்கள் முதலியன. CIS A2Kயால் அதன் எல்லைக்கு உட்பட்டு நிதியுதவி அளிக்க முடியும். இதில் இரண்டு வழிகள் உள்ளன: 1. தேவைக்கு ஏற்ற அளவு CIS A2Kயிடம் பணம் பெற்றுக் கொண்டு பிறகு WMF நல்கை கிடைத்தவுடன் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவது. WMFன் முடிவு தெரிய இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம் என்பதால், ஒரு வேளை, நாம் கேட்ட அளவு அங்கு பணம் கிடைக்காவிட்டால் இவர்களுக்குத் திருப்பித் தருவதில் சிக்கல் வரும். 2. WMF முன் வைத்த நல்கையைச் சற்றுக் குறைத்துக் கொண்டு அந்தப் பணத்தை CIS A2Kயிடம் இருந்து பெற்றுக் கொள்வது. இதைத் திருப்பத் தரத் தேவை இருக்காது. இதில் இரண்டாம் வழியை இயன்ற அளவு பயன்படுத்திக் கொள்ளவது நலம் என்று தோன்றுகிறது. இதில் CIS A2K வின் ஒரே விருப்பம் என்னவென்றால், வெறும் நிதி ஆதரவு அளிப்பவராக இல்லாமல் நிகழ்ச்சியில் இயன்ற அளவு தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பது. என்ன வகையில் அவர்கள் பங்களிப்பு இருக்கலாம் என்பது குறித்து பேசி வருகிறேன். பெரும்பாலும், இரண்டாம் நாள் கூடல் நிகழ்வில் காலையில் சில அமர்வுகள் செய்து தருமாறு கேட்கலாம். குறிப்பு: இதே போன்ற உதவியை அவர்கள் தெலுங்கு விக்கிப்பீடியர்களின் கூடலுக்கு அளித்துள்ளார்கள். பல இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றி வருகிறார்கள். தமிழுக்குத் தேவையான வளங்களை நாம் இவர்களிடம் இருந்து இன்னும் கோரிப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே ஒரு குறையாக இருந்து வந்துள்ளது.

இன்னொரு வழி, செலவுகளுக்கு ஈடு கட்டும் விதமாக முனைப்பாக புரவலர்களைத் தேடுவது. புரவலர்கள் கொடுக்கும் பணத்துக்கு ஈடாக என்ன தரலாம் என்றால், நிகழ்ச்சியின் முறையான ஆதரவாளர்களாக அறிவிக்கலாம் (பதாகைகள், திட்டப்பக்கங்கள், நன்றி நவிலல் முதலிய இடங்களில்). ஆதரவாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களுக்குச் சரியான வெளிச்சம் அளிக்க, குறைந்தபட்ச நிதி ஆதரவாக பத்தாயிரம் இந்திய ரூபாயில் இருந்து தொடங்கலாம். WMFல் இருந்து நல்கை கிடைத்தாலும் நம்மால் இயன்ற அளவு புரவலர்கள் மூலம் செலவுகளை ஈடு கட்ட வேண்டும் என்று முன்பே பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அனைவரின் கருத்துகளையும் தந்தால் விரைந்து ஏற்பாடுகளைக் கவனிக்க ஏதுவாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 18:14, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இம்முறை எது நடைமுறைக்கு ஒத்து வருமோ அதைச் செய்வோம். ஆனால் பொதுவாக ஒருசில புரவலர்களிடம் பெரிய உதவிகளைக் காட்டிலும் நூற்றுக்கணக்கானோரிடமிருந்து சிறுநிதி பெற்றால் விடுபாட்டுணர்வைப் பேணலாம்.
இவ்வாண்டு இந்திய விக்கிப் பிரிவுக்கு ஒரு நல்கை கிட்டியுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து இந்தியாவில் இருந்து வரும் கொடைகளில் அவர்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். அது போன்ற தொடரும் நிதிநிலையை அடைய வழிதேட வேண்டும். நிற்க.
இப்போதைக்கு நிதிபெற CIS A2K சரியெனப்படுகிறது. வேறு ஒத்த உணர்வுடைய அமைப்புகளையும் நாடலாம். நீண்டநாள் தாக்கம் இல்லாதபடி பதாகைகள் போன்ற விளம்பர வாய்ப்புக்களுக்காகவும் தங்கள் சமூக அக்கறைச் செலவிலிருந்து தருவதாக இருந்தால் அமேசான் போன்ற நிறுவனங்களையும் அணுகலாம். - சுந்தர் \பேச்சு 01:15, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]


நிகழ்வும், நிகழ்வை ஒட்டிய செலவுகளும் முதன்மைச் செயற்பாடுகள் ஆகவும், பிறவற்றை தெரிவுச் செயற்பாடுகள் அல்லது அல்லது பிற்போடத்தக்கவையாகக் கணிக்கலாம். இதில் தெரிவு அல்லது பிற்போடத்தக்க செயற்பாடுகள், மற்று இதர செலவுகள் அண்ணவாக 100 000 இ.ரூபாய்கள் வருகின்றன. எனவே நாம் ஆக அவசியாமாகத் திரட்ட வேண்டியது 100 000 இ.ரூபாய்களே.

தெரிவுச் செயற்பாடுகள் அல்லது பிற்போடத்தக்கவை: (மொத்தம்: 81 000)

  • Essay contest prizes
  • Essay contest certificates and postage
  • T-shirts
  • Contribution Handbook
  • Felicitation Certificates

CIS A2K தற்காலிகமாகவோ, அல்லது பங்களிப்பாகவே தந்தால் அதைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் ஒரு தரமான அமைப்பு என்று ஊகம் செய்கிறேன். எவ்வளவு மீதம் தேவைப்படுகிறதோ நாம் புரவலர்களை நாடலாம். CIS A2K விடம் இருந்து பெற முடியாவிட்டால் குறுகிய நேரத்துக்குள் போதிய புரவலர்களை அணுக முடியுமோ என்று தெரியவில்லை. எனவே நாம் வேறு திட்டமும் வைத்திருக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 01:50, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சுந்தர், நற்கீரன் கருத்துகளுக்கு நன்றி. சட்டை, கையேடு, பத்திரம் ஆகியவை நேரடியாக நிகழ்வுக்குத் தொடர்பில்லை என்றாலும் 100+ பேர் கூடும் இடத்தில், நேரத்தில் தருவது சிறப்பாக இருக்கும். எனவே, இயன்றவரை அதனைக் கொண்டு வர முனைவோம். CIS A2Kயிடம் இருந்து தகுந்த நேரத்தில் பணம் பெற முடியும். அதற்கு முன் வைப்பை அடுத்து இங்கு வைக்கிறேன். சுந்தர், வழக்கமான தொழில்நுட்பக் கூடல்களுக்கு யாகூ முதலிய பெருநிறுவனங்கள் ஆதரவு வழங்குவதைக் கண்டிருக்கிறேன். அது போல் இதற்கும் முயன்று பார்க்கலாம். விக்கிப்பீடியா இல்லாமல் இணையம் இல்லை தானே :) நிதி திரட்டலுக்கான இன்னொரு வழி: சட்டை, நிகழ்ச்சிக்கான பெயர் பதிவு, சுற்றுலா ஆகியவற்றுக்கு விருப்பக் கட்டணம் / நன்கொடை அளிக்குமாறு கலந்து கொள்ளும் அனைவரையும் வேண்டுவது. --இரவி (பேச்சு) 06:29, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நற்செய்தி: நாம் கேட்ட நல்கைத் தொகை முழுதையும் தர விக்கிமீடியா அறக்கட்டளை இசைந்துள்ளது. பார்க்க - http://meta.wikimedia.org/wiki/Grants:Ravidreams_-_Tamil_Wikimedians/TamilWiki_10_years . அடுத்து பணம் எப்போது கைக்கு வரும் என்பதைப் பொருத்து இடைப்பட்ட செலவுகளுக்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்கிறேன். சட்டைகள், பேருந்து, தங்குமிடம் போன்ற சில பணிகளுக்கு முன்பணமாகத் தர சிறு தொகை தேவைப்படும். அவ்வளவே.--இரவி (பேச்சு) 08:38, 12 செப்டம்பர் 2013 (UTC)

மகிழ்ச்சியும் முயற்சிக்கு வாழ்த்துக்களும்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:07, 12 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துக்கள், இரவி. ---மயூரநாதன் (பேச்சு) 11:58, 12 செப்டம்பர் 2013 (UTC)

இறுதி இற்றை - திருத்திய நல்கை விண்ணப்பம்[தொகு]

முன்பு விக்கிமீடியா அறக்கட்டளையிடம் 1,98,400 இந்திய உருபாய்க்கு நல்கை விண்ணப்பம் வைத்திருந்தோம். அத்தொகையை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. நிகழ்வு நடந்து முடிந்ததை அடுத்து உண்மையில் ஏற்பட்ட செலவுகளை அடுத்து 2,47,860 தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒளிப்படச் சேவை, அரங்குச் செலவுகள் ஆகியவை எதிர்பார்த்ததை விட அதிகம் வந்துள்ளன. இந்தத் திருத்திய நல்கை விண்ணப்பத்தைக் கூடிய விரைவில் அளிக்க வேண்டும். எனவே, ஏதேனும் மாற்றுக் கருத்துகள், ஐயங்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். இன்னும் 48 மணி நேரம் பொறுத்திருந்து திருத்திய நல்கை விண்ணப்பம் விக்கிமீடியா அறக்கட்டளையிடம் அளிக்கப்படும்.