விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சட்டைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆன்டன்!, தாரிக்! மிக அருமையாக செய்திருக்கிறீர்கள். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:48, 18 செப்டம்பர் 2013 (UTC)

செகதீசுவரன், சட்டை தயாரிப்புப் பணியை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருவதற்கு நன்றியும் பாராட்டுகளும். நீங்கள் தற்போது கொடுத்துள்ள செலவுக் கணக்கின் படி, விக்கிமீடியா நல்கைத் தொகையான 15,000 இந்திய உரூபாயில் 62 சட்டைகள் அடிக்கலாம். யாராவது விலை கொடுத்து கூடுதலாக சட்டைகள் பெற்றுக் கொள்ள விரும்பினால், அது குறித்து விவரங்களை இங்கு தெரிவிக்கலாம்.--இரவி (பேச்சு) 09:15, 18 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி நண்பரே, தற்போது Small 3, Medium 10, Large 20, Extra Large 15, XXL 2 என்ற எண்ணைக்கையில் அவர்களிடம் அச்சடிக்க கூறியுள்ளேன். 5 % வாட் வரியுள்ளது என்பதால் 60 என்று எண்ணைக்கையை நிர்ணயம் செய்யலாம். அச்சகத்தார் சட்டையை ஆர்டர் செய்யும் முன்பே எண்ணைக்கை அதிகரிப்பினை கூறினால் ஒரு மாதிரியான சட்டைகள் கிடைக்கும். 60 என்ற எண்ணைக்கை வரும் பொழுது எந்தெந்த அளவுகளில் (S,M,L,..) கூடுதல் சட்டைகளைப் பெற வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:35, 18 செப்டம்பர் 2013 (UTC)
Small 3, Medium 12, Large 25, Extra Large 18, XXL 2, மொத்தம் 60 என்பதைப் புதிய எண்ணிக்கையாகக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 09:43, 18 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:15, 18 செப்டம்பர் 2013 (UTC)
இக்கூடலுக்காக உழைக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. மேன்மேலும் தங்கள் பணியில் சிறக்க வாழ்த்துக்கள்.ஒரு சட்டையின் விலை ரூ.250(X60=15,000) என்பது சரிதானே? கூடுதல் சட்டைக்கு, என்றைக்குள் சொல்லவேண்டும், செகதீசுவரன்!--≈ உழவன் ( கூறுக ) 16:56, 18 செப்டம்பர் 2013 (UTC)
ரூ 240x60 = 14,400 + 720 (5% VAT) = ரூ 15120 நண்பரே. NANA DESI அச்சகரிடம் தற்போதைக்கு 60 என்ற அளவில்தான் குறிப்பிட்டுள்ளேன். வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் சட்டையின் முதல் பிரதியை கொடுத்துவிடுவதாக கூறினார்கள். திங்களன்று 60 சட்டைகளும் கைக்கு கிடைக்கலாம். டிஜிட்டல் பிரிண்டிங் விலையில் சற்று ஏற்றம் இருப்பதால் இந்த விலையானது சற்று மாறுபடலாம். அதுபற்றி பிறகுதான் தெளிவாக தெரியும். எனினும் பெரிய அளவில் இந்த விசயங்கள் மாற்றமில்லை. தங்களுக்கு தேவையான சட்டைகளை குறிப்பிடுங்கள். மாதிரி சரிபார்க்கப்பட்டுவிட்டால் அதனைப் போல அச்சடிப்பது சுலபமே. இருப்பினும் அச்சகரிடம் கேட்டுதான் கூடுதல் சட்டைகளும் கூடலுக்கு முன்பு கிடைக்குமா என்பதை உறுதி செய்ய இயலும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:35, 18 செப்டம்பர் 2013 (UTC)
நன்றிங்க! ஒன்றிரண்டு சட்டைகள் தேவைப்படலாம். சனியன்று கூறிவிடுகிறேன். இல்லையென்றாலும், பரவாயில்லை. உங்களின் பங்களிப்புக்கு தமிழ் விக்சனரி நண்பர்களின் சார்பாக நன்றியைக் கூறிக் கொள்ளவிரும்புகிறேன். மிக்க நன்றி.--≈ உழவன் ( கூறுக ) 19:16, 18 செப்டம்பர் 2013 (UTC)
ஒன்றிரண்டு என்றால் 60சட்டைகளிலிருந்து தர இயலுகின்றதா என்று பார்க்கலாம் நண்பரே. அதிகம் தேவையுற்றால் மீண்டும் அச்சிட்டு தர வேண்டலாம். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:25, 19 செப்டம்பர் 2013 (UTC)
சரிங்க! செகதீசுவரன்! நேரில் சந்திப்போம். ஆவலுடன்... வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 07:58, 19 செப்டம்பர் 2013 (UTC)

நான் இந்தச் சட்டயைப் பெருமையாக அணியலாம்.எனக்கும் L அளவில் ஒரு சட்டை வேண்டும். யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்? BALA.R,Sankaranputhoor. (பேச்சு) 07:02, 19 செப்டம்பர் 2013 (UTC)

சட்டைகள் தயாரிப்பு பணியில்தான் உள்ளது நண்பரே. வினியோகம் குறித்து இரவி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:25, 19 செப்டம்பர் 2013 (UTC)
பாலா, தற்போது இருக்கிற 60 சட்டைகளை தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை முயற்சிகளில் ஈடுபடுவோர்களுக்கும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வழங்க எண்ணியுள்ளோம். இப்போது அச்சடிக்கும் சட்டைகளைப் பெரும்பாலும் சென்னையில் நடக்கும் நிகழ்வுக்கு வரும் விக்கிப்பீடியர்களுக்குத் தர இருக்கிறோம். நீங்கள் நிகழ்வுக்கு வருகிறீர்கள் என்றால் கூடுதல் சட்டைகளை பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்வதாக இங்கு உறுதி அளிக்கலாம். அப்படி சென்னைக்கு வர இயலவில்லை எனில், அடுத்து இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் அச்சடித்து அஞ்சல் மூலமாக வேண்டியோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.--இரவி (பேச்சு) 08:12, 19 செப்டம்பர் 2013 (UTC)

நண்பர் இரவி : நான் தற்போது சிங்கப்பூரில் இருப்பதால் என்னால் சென்னையில் நடக்கும் நிகழ்வுக்கு வர இயலாது. நவம்பர் 14 அன்று சென்னை வருகிறேன். அப்போது சட்டைகள் இருக்குமா எனத் தெரியவில்லை. அஞ்சல் மூலம் அனுப்பும் திட்டம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.நன்றி.ஆர்.பாலா (பேச்சு) 10:10, 19 செப்டம்பர் 2013 (UTC)

எனக்கும் ஒரு சட்டை கிடைத்தால் நல்லது. இலங்கையிலிருந்து வரும் சிவகோசரனிடம் கொடுத்துவிட்டால், நான் இலங்கை போகும்போது, அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.--கலை (பேச்சு) 14:16, 19 செப்டம்பர் 2013 (UTC)
அஞ்சலில் அனுப்புவதெனில் எனக்கும் ஒரு சட்டை பெறுவதில் விருப்பம். கூறவும் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:32, 19 செப்டம்பர் 2013 (UTC)
இலங்கையில் உள்ள பயனர்களுக்கு என்று சில சட்டைகளைத் தனியாக எடுத்து சஞ்சீவி சிவக்குமாரிடமும் சிவகோசரனிடமும் தந்து விடுகிறேன். அங்குள்ள பயனர்கள் நேரிலோ அஞ்சலிலோ பெற்றுக் கொள்ளலாம்.--இரவி (பேச்சு) 15:13, 19 செப்டம்பர் 2013 (UTC)
சரி ரவி :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 02:38, 20 செப்டம்பர் 2013 (UTC)
நிகழ்விற்கான சட்டை அச்சுப்பணிகள் முடிந்த பின்பு, விருப்பமுள்ளோருக்கான சட்டைகளை மறுமுறை அச்சிட்டுதர அச்சகத்தார் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இதே விலையில் வேண்டுவோர் பெற்றுக் கொள்ள பிறகு வழிவகை செய்யலாம். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:37, 21 செப்டம்பர் 2013 (UTC)

இற்றை குறித்து[தொகு]

இற்றைப் பகுதி அனுபவ மொழிகளாக இருக்கின்றன. சட்டை அச்சிடும் பொறுப்பினை ஏற்கும் பொழுது இத்தனை எதிர்ப்பார்ப்புகள் அனைவரிடமும் இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. அச்சகத்தாரும் இரண்டு மூன்று முறை சட்டை மாதிரியைக் காண்பிக்க காலம் கடத்திவிட்டார்கள். இறுதி இரு நாட்கள் இரவி அவர்களே பொறுப்பினை ஏற்று செம்மையாக செய்து முடித்தார். அத்துடன் கூடலன்று சட்டைகளைப் பெற்று நண்பர்கள் அணிந்துகொள்ளுகையில் ஒரு பெருமிதம் தெரிந்தது. விக்கிப்பீடியாவிற்காக பல கூடல்களிலும், பயிற்சி கூடங்களிலும் கலந்து கொள்கின்ற விக்கிப்பீடியர்கள் கூடுதல் சட்டைகளை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். மற்றபடி பார்வையாளர்களுக்கு இலவசமாக சட்டைகளை வழங்குவது பரப்புரை என்ற நோக்கில் மட்டுமே வரவேற்கத்தக்கதாக இருக்கும். இங்கு இலவசமாக தருவதை பெற்றுக்கொண்டு வீட்டில் முடக்கிவிட வாய்ப்புண்டு என்பதால் பார்வையாளர்களுக்கு தருவதை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்க மாட்டேன்.

  1. பெண்கள் அணிவதற்கும், அலுவலகத்திற்கும் ஏற்றதாக இருந்தது.
  2. விக்கியின் சின்னம் மிகத்துள்ளியமாக வரவில்லையென்றாலும், பொருட்செய்யும் அளவிற்கு குறையாக இல்லை.
  3. ராயல் புளு போலவே, கருப்பு நிறமும், வெள்ளை நிறமும் கொண்ட மற்ற விக்கி சட்டைகள் கவர்ச்சியாக இருந்தது. வருங்காலத்தில் மாற்று நிறங்களையும் பரீசிலிக்கலாம்.

நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:52, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  • திரும்பவும் சட்டைகளை பணம் கொடுத்து வாங்கி எண்ணுகிறேன். வெவ்வேறு நிறங்கள் என்றால் மூன்று தேவை. முடிந்தால் மற்ற விக்கித்திட்டங்களைப் பற்றியும் அதில் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். அத்தகையதொரு திட்டத்தை செயற்படுத்தும் போது, இக்குறிப்பினையும் நினைவில் கொள்க. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 20:13, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]