விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2022

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு பல்கலைக்கழத் தேர்வுகள் சூன் இரண்டாம் வாரத்தில் ஆரம்பித்து நடைபெற இருப்பதால் பயிற்சியினை சூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஏற்பாடு செய்தால் நல்லது. --சத்திரத்தான் (பேச்சு) 04:21, 31 மே 2022 (UTC)[பதிலளி]

சரி. அவ்வாறே செய்வோம். கல்லூரிகளிடம் பேசிவிட்டு தேதியை இறுதி செய்வோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 04:49, 31 மே 2022 (UTC)[பதிலளி]

முதல் உரையாடல்[தொகு]

ஆலமரத்தடியில் உரையாடியதன் அடிப்படையில் இத்திட்டத்தை இவ்வாண்டும் தொடர்வோம். கடந்த இரு ஆண்டு நடந்த நிகழ்வினைப் போல இப்பயிற்சியினை அளிக்கலாம். விருப்பமுள்ள கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி வழியாகத் தொடர்பு கொள்ளலாம். அறிமுக வகுப்பில் விக்கித் திட்டங்கள் குறித்து, அறிந்து பயனர் பெயர் உருவாக்கி பதிவு செய்யும் மாணவர்களை மட்டும் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வோம். சுமார் 50-55 மாணவர்கள் என்ற அளவில் மட்டும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று கொள்வோம். இணையவழியில் பயிற்சியினை அளித்து இறுதி நிறைவு விழாவை விக்கிமேனியாவுடன் மதுரையில் நடத்திக் கொள்ளலாம். திட்டத்தில் மாணவர்களின் இலக்குகள் மற்றும் பயிற்சி முறைகள் குறித்து விரிவாக உரையாடி இறுதி முடிவினை எடுப்போம். இப்போதைக்கு சிஐஎஸ்சிடமும் விக்கிமேனியா குழுவிடமும் விண்ணப்பிக்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். துரித உரையாடலுக்கும் பயிற்சி ஒருங்கிணைப்பிற்கும் வாட்சப் குழுவிலும் உரையாடுவோம். ஆர்வமுள்ள பயனர்கள் இணைந்துகொள்க.-நீச்சல்காரன் (பேச்சு) 04:49, 31 மே 2022 (UTC)[பதிலளி]

இணையவழியில் நடத்துவதைவிட நேரடிச் சந்திப்புக்களின் மூலம் பல இடர்பாடுகளை தவிர்க்கலாம் மூர்த்தி அவர்கள் கூறிய கலைத்திட்ட உருவாக்கம் என்பது நல்ல பலனைத் தரும் என்பது எனது கருத்து.ஸ்ரீதர். ஞா (✉) 08:09, 31 மே 2022 (UTC)[பதிலளி]
பல மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொள்வதால் நேரடிச் சந்திப்பை முறையாகத் திட்டமிட இயலாதெனப் பார்க்கிறேன். ஆனால் ஐயம் களையும் வகுப்புகளைப் பயிற்சியாளர்களும் கல்லூரி தரப்பிலும் ஆர்வம் கொண்டால் நேரடியாகச் சந்திக்கலாம். மூர்த்தி அவர்கள் குறிப்பிட்டது மூன்றுநாள் நிகழ்வில் பரப்புரைப் பயிற்சிக்கு உதவும் வழிகாட்டல்தானே. உள்ளகப் பயிற்சிக்கு இத்தகைய வழிகாட்டல்களைப் பயிற்சியாளர்கள் உருவாக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:36, 31 மே 2022 (UTC)[பதிலளி]
// பல மாவட்டங்களில் இருந்து // தங்கள் கருத்தினை ஏற்கிறேன். மூர்த்தி அவர்கள், பொதுவாகவே பயிற்சி என யார் கொடுத்தாலும் அதற்கு ஒரு கலைத்திட்டத்தை உருவாக்கலாம் எனக் கூறினார் என நான் கருதுகிறேன். அவரது கருத்தினையும் அறியலாம். //இத்தகைய வழிகாட்டல்களைப் பயிற்சியாளர்கள் உருவாக்கலாம்.// இந்த முறை நாம் உருவாக்கலாம் என கருதுகிறேன். மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து செயல்படுவோம் ஸ்ரீதர். ஞா (✉) 15:53, 31 மே 2022 (UTC)[பதிலளி]
சரி. நல்லது. கடந்த ஆண்டு பயிற்சிகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. அதைக் கொண்டு ஆய்வு செய்து, நீங்களே வழிகாட்டலை விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கித்தரவு, விக்கிமூலத்திற்கு, பொதுவகத்திற்கு உருவாக்குங்கள். மற்றவர்கள் உதவியுடன் சரிபார்த்து மேல்விக்கியில் திட்டப்பக்கத்தின் துணைத் தலைப்பில் வழிகாட்டலை உருவாக்குவோம். அனைத்துத் திட்டத்திற்குமான பொதுவான இடமாக அது அமையும். கடந்த ஆண்டு கலந்து கொண்ட கல்லூரிகளுடன் பேசிய போது ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெறுவதால் ஜூலையில் தொடங்கப் பரிந்துரைத்தனர். எனவே இந்த ஆவணத்தை உருவாக்கவும் போதிய காலமும் நமக்குக் கிடைத்துள்ளது. -நீச்சல்காரன் (பேச்சு) 16:15, 31 மே 2022 (UTC)[பதிலளி]
@Sridhar G: நீங்கள் குறிப்பிட்டது போல ஏதேனும் ஆவணங்கள் உருவாக்கமுடிந்தனவா? அல்லாவிட்டால் இதற்காக மெனக்கெடாமல் முந்தைய ஆண்டுகளைப் போலப் பயிற்சியினைத் தொடங்கி, பின்னர் ஆவணங்களை உருவாக்கிக் கொள்வோமா? -நீச்சல்காரன் (பேச்சு) 08:08, 3 சூலை 2022 (UTC)[பதிலளி]
//பின்னர் ஆவணங்களை உருவாக்கிக் கொள்வோமா?// நல்லது . அவ்வாறே செய்யலாம். ஸ்ரீதர். ஞா (✉) 13:19, 3 சூலை 2022 (UTC)[பதிலளி]

விக்கிமூலம், விக்சனரி[தொகு]

  • விக்கிமூல ஆலமரத்தடியில் அறிவிப்பு செய்துள்ளமையால், அதற்கான பின்னூட்டத்தைத் தந்துள்ளேன். கருத்தில் கொள்க. அந்தந்த திட்டங்கள் குறித்து அங்கேயே முதலில் கலந்துரையாடலால் விதிகளை உருவாக்கலாம். பிறகு, யாவரும் பின்பற்றுதலே சிறப்பாகும்.--உழவன் (உரை) 01:43, 1 சூன் 2022 (UTC)[பதிலளி]
    விக்சனரியில் உரையாட அழைக்கிறீர்கள். ஆனால் புதிய திட்டங்களை எதிர்க்கிறீர்கள். ஒரு மாதமாக உங்களிடம் அனுமதியும் பெறமுடியாமல் உரையாடவும் முடியாமல் இருக்கிறேன். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தால் அதன் அடிப்படையில் மாணவர்களை சொற்குவைத் திட்டச் சொற்களுக்குப் பயன்படுத்த முடியும். -நீச்சல்காரன் (பேச்சு) 03:19, 1 சூன் 2022 (UTC)[பதிலளி]
  1. நீங்கள் சிறப்பான திட்டங்களை அறிமுகப் படுத்துகிறீர்கள். அகமகிழ்கிறேன். மிக்க நன்றி. ஆனால், ஒரே நேரத்தில் பல திட்டங்களை அறிவிக்காதீர்கள். செயற்படுபவர் குறைவாகவே உள்ளனர். நாம் ஒவ்வொன்றாக சிறப்பாக செய்யவே விருப்பம். எனது எண்ணங்களைத் தெரிவிக்கக் கூடாதா; சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இதற்கு முன் பயிற்சிஎடுத்தவர்கள் கலந்து கொள்ளாததன் காரணங்களை நாம் அறிந்து, நம் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஒரு மாணவருக்குச் சான்றிதழ் வழங்குவது மட்டுமே நமது இலக்கு அல்ல. இத்திட்டம் மாதக்கணக்கில் நடந்தும் உள்ளகப் பயிற்சியின் விழைவு விரிவடையவில்லை; ஒரு குறிப்பிட தமிழ் விக்கித்திட்டங்களை எடுத்து செயற்பட கேட்டுக் கொள்கிறேன். கல்லூரியினர் NAAC அழுத்தங்களுக்காக/ கணக்கிற்காக நம்மை பயன்படுத்திக் கொள்வதாகவே நான் எண்ணுகிறேன். கல்லூரியினரை உரையாட அழையுங்கள்.
  2. //ஆனால் புதிய திட்டங்களை எதிர்க்கிறீர்கள்.// நீங்கள் தமிழக அரசின் சொற்குவைத்திட்டம் குறித்து பேசுகிறீர்கள் என்றே புரிந்து கொள்கிறேன். 'எதிர்ப்பு' என்பது உங்கள் புரிதல். சிறப்பாக இல்லை என்பதற்கான விளக்கம். (இது குறித்த முழுமையான உரையாடல்களை அறிய) இங்குள்ளவர் இது குறித்து அறிய, பின்வரும் சுருக்கத்தினைத் தருகிறேன். விக்சனரியில் நானும், இரவியும் கூறியுள்ளோம். எனது வேண்டுகோள் யாதெனில், பிறரின் எண்ணங்களை (consensus) கைகொள்ள வேண்டும். மெதுவாக வளர்ந்தாலும் பெரிய இழப்பு ஒன்றுமில்லை. ஆனால் தமிழக அரசு தந்த தரவுகள் பல்வேறு அழுத்தங்களால் பிழைகளோடு உள்ளன. அவற்றினை ஏற்றித் திருத்தலாம் என்கிறீர்கள். திருத்திய பின்பு படிப்படியாக ஏற்றுதலே சிறப்பு. அங்கே தொடர்ந்து செயற்படுவோம். இப்பகுதியில் இருந்து விடைபெறுகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 03:53, 7 சூன் 2022 (UTC)[பதிலளி]