விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கணக் கொள்கைகள்
Jump to navigation
Jump to search
தமிழ் இலக்கணப் படி, எந்த ஒரு தமிழ்ச் சொல்லும் மெய்யெழுத்தில் தொடங்கலாகாது. இதனை தமிழ் விக்கிப்பீடியா பின்பற்றும் தமிழ் இலக்கணக் கொள்கைகளுள் ஒன்றாக அறிவிக்கப் பரிந்துரைக்கிறேன். பார்க்க விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#மெய்யெழுத்தில் சொல் தொடங்குதல் --ரவி 17:34, 12 ஜனவரி 2009 (UTC)
ஆதரவு: 5
எதிர்ப்பு: 0
கருத்துகள்[தொகு]
- ஆதரவு --செல்வா 18:18, 12 ஜனவரி 2009 (UTC) தமிழ் முறையை மீறி பெயரிடும் தனியாட்களின் பெயர்களும், நிறுவனங்ககளின் பெயர்களும், திரைப்படத் தலைப்புகளும் எவ்வாறு தமிழ் விக்கிப்பீடியா, கொள்கைகள், பரிந்துரைகள் என்னும் நோக்கில் எதிர்கொள்ளும் என்றும் கருத்து தேர்வது நல்லது. மொழியைக் காக்க வேண்டிய சில அகராதிகளும், கலைக்களஞ்சியங்களுமே கூட, வேலியே பயிரை மேய்வது என்பது போல, சில வேளைகளில் மெய்யெழுத்தில் தொடங்கிப் பெயரிடுகிறார்கள். எடுத்துக் காட்டு: "க்ரியாவின்" தற்காலத் தமிழ் அகராதி.--செல்வா 19:08, 12 ஜனவரி 2009 (UTC)
- எந்த தமிழ் சொல்லும் மெய்யெழுத்தில் தொடங்குதல் கூடாது குறிப்பாக தலைப்பு கூடவே கூடாது. --குறும்பன் 22:54, 6 ஜனவரி 2009 (UTC)
- இது ஒரு அடிப்படை தமிழ் இலக்கண விதி. இதை நாம் நிச்சியம் பின்பற்ற வேண்டும். விக்கிப்பீடியா:தமிழ் இலக்கணக் கையேடு பரிந்துரைக்கலாம். அல்லது விக்கிப்பீடியா:தமிழ் இலக்கணக் கொள்கைகள் என்று உருவாக்கி அதில் இடலாம். --Natkeeran 19:58, 6 ஜனவரி 2009 (UTC)
- வழிமொழிகிறேன். விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கணக் கொள்கைகள் பக்கத்தில் பரிந்துரைத்து ஒரு வாரம் கழித்து கொள்கையாக அறிவிக்கலாம்--ரவி 04:00, 7 ஜனவரி 2009 (UTC)