விக்கிப்பீடியா பேச்சு:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏற்கனவே நடந்த நிகழ்வின் ஊடாக இன்னும் பெரிய பரப்புரைக்கான களத்தைப் பெற்றிருப்பது சிறப்பு. பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம், தமிழக அரசின் வேலைவாய்ப்பு , பயிற்சித்துறையுடன் இணைந்து சேலம் சுழற்சங்கமும் இதனைச் செய்வது வரவேற்பிற்குரியது. நிகழ்வு நல்ல முறையில் நடக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 14:11, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி தோழர். இந்த நிகழ்வின் பொருட்டு இணைய இணைப்புடன் கணினிகளை பெரியார் பல்கலைக்கழகம் அளித்துள்ளது. இந்நிகழ்வின் பின்னூட்டங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட பயிலரங்குகளை திட்டமிட உள்ளோம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 18:02, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இந்தப்பயிற்சி மிகப்பயனுடையது.--Shanthini (பேச்சு) 09:50, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:37, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வரும் 9ந்தேதியும் பயிலரங்கு நடக்க உள்ளது. ஆர்வமுள்ள எவரும் வந்து கலந்து கொள்ளலாம் என பல்கலைக்கழகத்தினர் கூறியுள்ளனர். அதற்கு அடுத்தும் தொடர்ந்து நடத்த அனுமதி கோரியுள்ளனர். --≈ உழவன் ( கூறுக ) 17:12, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் நான் கடந்த மாதம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் கணிணி பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றேன். இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் கணினியை பயன்படுத்திய நான் தற்பொழுது தமிழில் மிக எளிமையாக தட்டச்சு செய்ய இயலும்.--Tamil05 (பேச்சு) 07:49, 6 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 09:27, 6 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்வருக! தமிழரசன். ஒரு புவியமைப்பியல் ஆராய்ச்சியாளரை, வரவேற்பதில் மிகழ்ச்சி. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 14:24, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் ---மயூரநாதன் (பேச்சு) 10:43, 9 நவம்பர் 2013 (UTC) மகிழ்ச்சி. தொடர்ந்து தமிழ் விக்கிக்குப் பங்களிப்புச் செய்யுங்கள்.[பதிலளி]
தாய்மொழியாகிய தமிழை எவ்வாறு கணினியில் பயன்படுத்துவது என அறிந்தேன். மகிழ்ச்சி.--MURALIMANOHARAN.M (பேச்சு) 10:07, 9 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் ---மயூரநாதன் (பேச்சு) 10:43, 9 நவம்பர் 2013 (UTC) மகிழ்ச்சி. தொடர்ந்து தமிழ் விக்கிக்குப் பங்களிப்புச் செய்யுங்கள்.[பதிலளி]


  • நேற்று நடந்த பயிலரங்கத்திற்கு தஞ்சை பூண்டி பல்கலைகழக முனைவர்கள் மகிழுந்து ஏற்பாடு செய்துகொண்டு வந்திருந்தனர். மேலும் திருவணந்தபுரம், வேலங்குடி, திருவண்ணாமலை, மேட்டூர் மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் சேலம் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காகவே வந்ததாகத் தெரிவித்தனர். அதனைக் கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் தட்டச்சு, விக்கி பொது, விக்சனரி, விக்கிப்பீடியா முதலியவற்றில் பயிற்சி வழங்கப்பட்டது. இறுதியாக சேலம் விக்கிப்பீடியர்கள் மன்றம் தொடங்கப்பட்டது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை கூடுவது, பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் போன்ற ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் முனைவர். திரு. வெங்கடாசலபதி துணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பரிதி மாரி ஆகியோர் பெரும ஈடுபாட்டுடன் திட்டத்தை முன்னின்று நடத்தியது மகிழ்வாக இருந்தது. நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:56, 10 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
பல ஊர்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டார்கள் என அறிந்து மகிழ்ச்சி. இவர்கள் எவ்வாறு நிகழ்வு குறித்து அறிந்து கொண்டார்கள்?--இரவி (பேச்சு) 17:27, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நிகழ்வு சிறப்பாக நடந்து குறித்து மகிழ்ச்சி. விக்கிப்பீடியா:சேலம் விக்கிப்பீடியர்கள் மன்றம் தொடர்பாக மேலும் அறிய அவால். நல்ல முன்மாதிரியாக அமைய வாழ்த்துக்கள்., --Natkeeran (பேச்சு) 05:08, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]