விக்கிப்பீடியா பேச்சு:சூன் 13, 2009 வலைப்பதிவர்களுக்கான விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல இடங்களில் இருந்து இந்தப் பக்கத்துக்குத் தொடுப்பு வேண்டி இருக்கிறேன். நிகழ்வுக்கு வர இயலாத பதிவர்களும் இப்பக்கத்தைக் காண்பர். எனவே, இதனைப் பொதுவான வழிகாட்டுப் பக்கமாக வளர்க்கலாம். வலைப்பதிவர்கள் எப்படி எப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கலாம் என்பதற்கான குறிப்புகளைத் தர வேண்டுகிறேன். கூட்டத்தில் எடுத்துரைக்கவும் இக்கருத்துகள் உதவும். நன்றி--ரவி 17:57, 8 ஜூன் 2009 (UTC)

வலைப்பதிவர்கள் எவ்வாறெல்லாம் பங்களிக்கலாம்[தொகு]

அறிமுகப்படுத்தல்[தொகு]

தொடுப்பு தருதல்[தொகு]

  • விக்கி திட்டங்களுக்கு தங்கள் வலைப்பதிவில் இருந்து தொடுப்பு தரலாம்.

விக்கிப்பீடியாவுக்குத் தொடுப்பு தர பின்வரும் நிரலைப் பயன்படுத்தலாம்.

<p><a href="http://ta.wikipedia.org" target="_top"><img border="0" alt="தமிழ் விக்கிபீடியா" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/8/8e/புதிய_விக்கி_சின்னம்_3.png"/></a></p>

விக்சனரிக்குத் தொடுப்பு தர பின்வரும் நிரலைப் பயன்படுத்தலாம்.

<p><a href="http://ta.wiktionary.org" target="_top"><img border="0" alt="தமிழ் விக்சனரி" src="http://upload.wikimedia.org/wiktionary/ta/b/bc/Wiki.png"/></a></p>

  • வலைப்பதிவில் எழுதும் போது பொருத்தமான தமிழ் விக்கி கட்டுரைகளுக்கு, தமிழ் விக்சனரி சொற்களுக்குத் தொடுப்பு தரலாம்.

தமிழ் விக்கிப்பீடியா என்று ஒரு திட்டம் இருப்பதே பலருக்குத் தெரியாததால் மேற்கண்ட செயல்கள் மிகவும் உதவும்.

கட்டுரையாக்கம் அல்லாத பணிகள்[தொகு]

  • விக்கிப்பீடியா கட்டுரைகளில் எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை, தகவற் பிழை திருத்துதல்.
  • கட்டுரைகளில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றி பேச்சுப் பக்கத்தில் கருத்து சொல்லல்.
  • அனுமதி பெறப்பட்ட பிறரின் கட்டுரைகளைப் பதிவேற்றல்
  • கட்டுரைகளுக்குப் பொருத்தமான படங்களை (புகைப்படம், விளக்கப்படம், நிலப்படம், வரைகலை) உருவாக்குதல், சேர்த்தல்.
  • கட்டுரைகளுக்குப் பொருத்தமான தொடுப்புகளைச் சேர்த்தல்.
  • வலைப்பதிவுகளில் புழக்கமாக உள்ள சொற்களை விக்சனரியில் சேர்த்தல்.
  • பகுப்பு:தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள்
  • நிரலாக்கம் (தமிழ் தட்டச்சை விக்கியில் ஏதுவாக்கல்)
  • தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் ஒழுங்கமைத்து நடத்துதல்