விக்கிப்பீடியா பேச்சு:சுற்றுக்காவல்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Balurbala
அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய இன்னும் கூடுதல் உதவி தேவை. இவ்வணுக்கத்தை இன்னும் யார் யாருக்கு வழங்கலாம் என்று அனைவரின் பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. நன்றி. --இரவி (பேச்சு) 12:32, 26 சூன் 2017 (UTC)
- கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ஒவ்வொன்றையும் துப்புரவு செய்ய ஆரம்பித்துள்ளேன். நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இவ்வணுக்கைத்தை எனக்கு வழங்கினால் துப்புரவுப் பணிக்கு உதவியாய் இருக்கும். நன்றி.--இரா. பாலாபேச்சு 06:52, 11 சூலை 2017 (UTC)
Autopatroller அணுக்கம் வழங்குவதற்கான நடைமுறை என்ன?
[தொகு]வணக்கம் @Kanags, @AntanO - சுற்றுக்காவல் செய்யப்படாத புதிய பக்கங்கள் குவிந்துள்ளன. இவற்றுள் பல கட்டுரைகள் தொடர்ந்து நல்ல முறையில் பங்களித்து வருபவர்கள் உருவாக்கிய கட்டுரைகள். இவர்களுக்கு Autopatroller அணுக்கம் தருவது தொடர்பாக கொள்கை/நடைமுறை ஏதேனும் உள்ளதா? அல்லது, நிருவாகிகள் தாமாகவே சரியானவர்களை இனங்கண்டு இந்த வசதியை வழங்கலாமா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 08:20, 11 பெப்பிரவரி 2025 (UTC)