விக்கிப்பீடியா பேச்சு:சிறப்பு கட்டுரைப் படைப்பாளர் கையேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்பு கட்டுரைப் படைப்பாளர்[தொகு]

சில நாட்கள் முன்பு பெர்கிளி தமிழ் அன்பர் (ஏற்கெனவே எனக்கு அறிமுகமானவர் தான்) ஒருவர் கேண்டரின் குறுக்குக்கோடு சார்பின்மாறியைப் பற்றிய என்னுடைய வலைப்பதிவைப் பார்த்துவிட்டு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டார். பேராசிரியர். ஹார்ட் போன்ற பல தமிழறிஞர்கள் மற்றும் அறிஞர் குழுக்களுடன் அவருக்கு நல்ல அறிமுகம் உண்டு. அவர் தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கும், ஆங்கில விக்கிபீடியாவில் தமிழைப் பற்றிய கட்டுரைகளின் வளர்ச்சிக்கும் என்ன உதவி தேவை என்று கேட்டார். அப்பொழுது எண்ணிப் பார்க்கையில், மேலும் பயனர்கள் வர வேண்டும்; அதிலும் குறிப்பாக துறை வல்லுநர்கள் முதலில் வந்து பங்களித்து ஒரு நல்ல அடித்தளம் அமைத்துத் தந்தால், பொதுப் பயனர்கள் அவற்றின் மீது ஒரு நல்ல கலைக்களஞ்சியத்தை உருவாக்க முடியும் என்று தோன்றியது. இதற்கு வகை செய்ய, துறை வல்லுநர்களில் இருந்து வாரம் ஒருவரை அழைத்து சில கட்டுரைகளைப் பதியுமாறு கோரலாம். அவர்களின் கட்டுரைகளை விக்கிப்படுத்த நாம் உதவலாம். இதன் மூலம் பல துறைகளிலும் நல்ல கட்டுரைகள் வருவது மட்டுமின்றி தமிழ் விக்கிபீடியாவைப் பற்றிய செய்தி அறிஞர்களிடையே பரவவும் வழி ஏற்படும். இவ்வல்லுநர்கள் இணைய அறிமுகம் இல்லாதவராயின், கையெழுத்தாக வாங்கி நம்மில் எவரேனும் பதிவேற்றம் செய்யலாம். இந்த சிறப்பு விருந்தினர்களைப் பற்றிய சிறு குறிப்பை கட்டுரைப் பெயர்வெளியில் அல்லாமல் [[விக்கிபீடியா:]] பெயர்வெளியில் ஒரு சிறப்புப் பக்கத்தில் தரலாம். மற்றபடி அவர்களின் பங்களிப்பு காப்புரிமை விலக்கப்பட்டதாகவும், எவர் வேண்டுமானாலும் தொகுக்கப்படக்கூடியதாகவும் விக்கிபீடியாவின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை அவர்களிடம் முன்கூட்டியே தெளிவு படுத்திவிடலாம். இந்தத் திட்டத்தைப் பற்றி மற்ற பயனர்களும் தங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள். -- Sundar \பேச்சு 08:13, 23 பெப்ரவரி 2006 (UTC)

இந்த முயற்சி பாராட்டத்தக்கது. தெளிவான துறை சார் கட்டுரைகள் இருப்பது இப்பக்கம் மீதான ஏனைய பயனரின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும் அத்துடன் பல புதிய பயனர்களை ஈர்ககவும் உதவும்.--ஜெ.மயூரேசன் 09:47, 23 பெப்ரவரி 2006 (UTC)

திட்டம் மிகவும் நன்று. நம்பகத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்க செய்யும். விக்கி நடைபற்றி சற்று முன்கூட்டியே தெரிவித்து விட்டீர்கள் என்றால் அவர்கள் அதற்கு ஏற்ற மாதிரி எழுதி தர முடியும்.

மேலும், மருத்துவ சமூகத்தையும் நாம் அணுகவேண்டும். மருத்துவ துறை தமிழின் ஒரு மரபு சார்ந்த துறை. தமிழில் அத்துறையில் பல்கலைக்கழக கல்வியே கற்கலாம் என்ற நிலையில் ஒரு சமயம் இருந்த துறை. பல நல்ல பழைய புதிய நூல்கள் தமிழில் உள்ளன. எனவே, அச்சமூகத்தையும் நாம் நாட வேண்டும். --Natkeeran 14:14, 23 பெப்ரவரி 2006 (UTC)

கண்டிப்பாக. மருத்துவத் துறை சார்ந்த கட்டுரைகள் விக்கிபீடியாவிற்கு மிகவும் தேவையானவை. பிற பயனர்களுக்கு இந்தத் திட்டத்தில் உடன்பாடு உண்டென்றால், இதற்கென ஒரு கொள்கைப் பக்கமும், அழைப்பிதழ் ஒன்றும், துறை வல்லுநர்களின் பட்டியல் ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும். -- Sundar \பேச்சு 04:04, 24 பெப்ரவரி 2006 (UTC)
சுந்தர், உங்களின் "சிறப்பு கட்டுரைப் படைப்பாளர்" திட்டம் தமிழ் விக்கிபீடியாவை பொறுத்தவரை, நீங்கள் குறிப்பிட்டபடி ஒரு நல்ல அடித்தளம் அமைக்கும் செயல்பாடாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் விக்கிபீடியா சூழலுக்கும், ஆங்கில விக்கிபீடியா சூழலுக்கு அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. ஆங்கில விக்கிபீடியாவை காட்டிலும் ஆக்கங்களின் உள்ளடக்கத்தை நோக்கி நாம் சற்று கூடிய பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும், செயல்படவேண்டிய தேவை இருப்பதாகவும் உணர்கின்றேன். இதையே மயூரநாதன், ரவி மற்றும் பிற பயனர்களும் பல சந்தர்ப்பங்களில் உறிதிப்படுத்தியுள்ளனர்.


ஆங்கில உலகில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படும் "என்சைக்லோபீடியா ஒஃ பிரிற்-ரானிக்கா"விற்கு துறை வல்லுநர்களின் நேரடி பங்களிப்பே அடித்தளமாக அமைந்தது. அதே வகையில் உங்கள் திட்டமும் நம்பிக்கை பெற்று தரும் என்று நம்பலாம். அந்த பெர்கிளி தமிழ் அன்பரின் உதவி அடித்தளமாக அமையகூடும். --Natkeeran 13:16, 24 பெப்ரவரி 2006 (UTC)

இந்த திட்டத்திற்குத் தேவையான கோட்பாடுகளை எவரேனும் உருவாக்குங்கள். விரைவில் செயல்படுத்தலாம். -- Sundar \பேச்சு 11:30, 1 மே 2006 (UTC)[பதிலளி]

See also related discussion at பயனர் பேச்சு:மு.மயூரன்#expert contributors--ரவி 11:40, 1 மே 2006 (UTC)[பதிலளி]

சில கூறுகள்[தொகு]

  • இவ்வார சிறப்புக்கட்டுரையாளர் (முதல் பக்கம்)
  • பெயர், இடம், துறை உட்பட்ட சிறு அறிமுகம்
  • விரும்பினால் பட இணைப்பு
  • கட்டுரையாளர் தனது ஆக்கங்கள் () கீழ் த.வி. சேர்க்கப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்தல்.
  • குறைந்தது மூன்று கட்டுரைகள், பிற குறுங்கட்டுரைகளாகவும் இருக்கலாம் ?!
  • த.வி. மேம்படுத்தல் நோக்கி கட்டுரையாளரின் கருத்துக்கள்
  • முடிந்தால் நேரடி கருத்து பரிமாற்றம், தொடர் பங்களிப்பு

(எளிமையாக ஆரம்பிக்கலாம், தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பை விரிவாக்கி கொள்ளலாம்)--Natkeeran 13:06, 2 மே 2006 (UTC)[பதிலளி]

Forgive me if iam pessimistic or harsh but I have lot of second opinions about the suggestions made above. I am completely against featuring the expert's photo, profile etc., or whatsoever in the main page or in any wikipedia namespace page. I think this is against the wiki philosophy and donno whether similar things have been done in other language wikis. I understand there are unique ways to make things work in tamil society and this is one such thing but doesnt go well with how wikipedia works. Natkeeran's suggestion might make experts feel important and happy in contributing to wiki but I think it will divert our attention and make wikipedia like a regular online tamil magazine. There are more regular useful contributors working here and giving spotlight to new comer experts may be unfair. And then comes the next tough question of determining who is an expert in what field. If we want to apprecaite contributors specially in a separate page, then we can do so surely. But it should take into account the quality and quantity of user's wiki activity and nothing else.
If the expert himselves created an user account here, then he can include whatsoever he wants about himself in his user page. I don object it. Also, implementing natkeeran's suggestion would be time consuming and not sustainable in the long run. Sundar's idea that we can receive articles by email and post them here is fine. We can just mention in the article's talk page that the basic content was received from so and so, though its really not necessary. Its just a token of gratitude for participating in tamil wikipedia in someway.
The best thing is to spread the awareness about the importance of tamil wikipedia and the need for expert involvement and wait for such people to come and participate in wiki. I think thats how en wiki or any other successful wiki works. Once wiki becomes a significant resource the experts would automatically chip in to add thier contribution. If they are computer illiterate or reluctant to learn the way wiki works, then we can just receive content through email or writing and post it here. Credit can be mentioned in the talk page. If the content is from a previous published work, then we can cite it as source in the article page. I feel anything more we do about regularisig this expert contributions will distract us. --ரவி 13:28, 2 மே 2006 (UTC)[பதிலளி]
Ravi, you raise some important points. In retrospect, I agree with many of your comments. Perhaps, we can do some limited version in a separate page and notify in the Community Pages or Current Events pages!. I am not sure what are the best guide lines, but no one was responding to Sundars repeated requests, that’s why I forwarded few notes. Sundar, what sort of structure are you looking for? --Natkeeran 14:37, 2 மே 2006 (UTC)[பதிலளி]
Yes, I agree with Ravi. Their contributions would merit a mention in the Talk page at best. The structure I'm looking for is this a policy page explaining that they release their contributions under GFDL and anyone can edit it in anyway and with introductory material addressing the guest contributor. Some of them might eventually become regular contributors. -- Sundar \பேச்சு 06:55, 3 மே 2006 (UTC)[பதிலளி]


expert contributors[தொகு]

mayuran, do u have personal intro / rapport with people like venkat, raama.ki? I wonder how nice it would be if people like them could write articles in wiki in their fields of knowledge and expertise? I am sure that people like them should be aware of the tamil wiki projects but donno why they are coming forward. If u could bring them to tamil wikipedia, it would be something along the lines sundar suggested at Wikipedia:ஆலமரத்தடி#சிறப்பு கட்டுரைப் படைப்பாளர். Is it possible? --ரவி 09:21, 1 மே 2006 (UTC)[பதிலளி]

உண்மைதான் ரவி, துறை சார் விற்பன்னர்கள் விக்கிபீடியாவுக்கு பங்களித்தல் நல்லதுதான். ஆனால் அவர்கள் இங்கெ வருவதற்கு ஏதோ தடை இருக்கிறது. அதனை நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் சொன்ன இருவருடனும் சொல்லும் படியான தனிப்பட்ட நெருக்கம் எதுவும் கிடையாது. முத்து நெடுமாறனுடன் அப்படியான நெருக்கம் உண்டு. ஆனால் அவருக்கு நேரமில்லை. வெங்கட் தமிழ் லினக்சுக்கென தனியான விக்கி ஒன்று வைத்திருக்கிறார் (மீடியா விக்கி தான்). அது தோல்வி கண்டுவிட்டது. அங்கே செய்யத்தக்க பணிகளை இங்கேயே செய்யலாம். இதில் அவர் கவனமெடுத்தால் நல்லது. இப்போது எங்கள் நூலகம் திட்டத்தில் நான் பயன்படுத்திய உத்தி காரணமாக சில வரவுகள் தமிழ் விக்கிபீடியாவுக்கு கிடைத்திருக்கிறது. இப்படியான உத்திகளையே நாம் கையாளவேண்டியுள்ளது.

முடிந்தால் ஒன்று செய்யலாம் மேலே நீங்கள் கூறியவர்களது ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரைகளை அவர்கள் அனுமதியுடன் விக்கி பீடியாவுக்கு பயன்படுத்தலாம். --மு.மயூரன் 10:58, 1 மே 2006 (UTC)[பதிலளி]

I think that the main block for any expert to write here is that u cannot have any credit for the article, or u cannot create a image/brand for urself as u do in blogs, personal websites. Also, they might like to have complete control over the article and may not find time or like to answer criticisms in the talk pages. But these are my straight guesses for any expert and not for the names mentioned above. And if we are going to get permission from them to borrow part or full of their articles, they should be clearly informed that there will be no mention or credit given to them for the content in wikipedia and also that the content is open for modification. Will this work? Donno. I think the best would be to get themselves involved here, understand the wiki philosophy and then start writing articles or atleast give their comments on articles related to their expertise. The first thing we could do is to list out experts (or te so-called !) and let them know formally or informally about wiki and how they could contribute and why we need them. The rest in their hands !!!

Then its true and I am glad that there have been a good number of people from noolakam project to wikipedia. We have to think about more such ideas to link and make wiki work together with other projects --ரவி 11:13, 1 மே 2006 (UTC)[பதிலளி]

I invited number of "experts" at Tamilzmanam to contribute to TWpedia. Most are very positive, and have suggested that they would do so at some future point. There exist number of barriers to contributing to TWpedia.

Barriers to contributing to TWpedia for Experts

  1. Some experts simply do not have sufficient know - about how to edit TWpedia, and/or how TWpedia works or whether it works.
  2. Some consider contributing to TWpedia as a formal exercise, and are not aware of how articles evolve in TWpedia.
  3. Some experts find it difficult to express their expertise in Tamil.
  4. Many are time constrained.
  5. Experts from some fields such as Medicine and Law are not well represented at Tamilzmanam, and probably would have to be approached using different methods.

Solutions:

  1. I think implementing Sundars idea would certainly be the starting point. Experts who may not want to tie themselves to TWpedia activities for long term can be invited, reconized, and enabled to share their thoughts.--Natkeeran 13:51, 1 மே 2006 (UTC)[பதிலளி]