விக்கிப்பீடியா பேச்சு:சிறப்புப் படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்:

  1. கருத்து முக்கியத்துவம் அல்லது அழகு வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.
  2. இயன்ற வரை தெளிவான உரிம விவரங்கள் தரப்பட்டிருக்க வேண்டும். இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு தற்பொழுது தமிழ் விக்கிபீடியாவில் உள்ள படிமங்களை ஒழுங்குபடுத்தலாம். விக்கிமீடியா காமன்சிலிருந்து சிறப்புப் படங்களை எடுப்பதும் வேலையை எளிதாக்கும் ஒரு வழி.
  3. கூடுமானவரை நுணுக்கம் (resolution) அதிகமான படங்களாக இருக்க வேண்டும்.
  4. வெறும் படமாக இல்லாமல் கூடுமானவரை தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை கொண்டு விளக்கக்கூடியதாகவோ கட்டுரைகளுக்குத் தொடர்புடையதாகவோ இருத்தல் நலம். இல்லை, படம் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும்போது அதற்கென தனிப்பட்ட முறையிலாவது விளக்கம் எழுதப்பட வேண்டும்.
  5. சிறுவர்களும் காணத்தகுந்த படங்களாக இருக்க வேண்டும்.

தற்பொழுது, சிறப்புப் படங்களை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு ஏதும் இல்லை. மேற்கண்ட வரையறைகளுக்கு உட்பட்டு படிமங்களை இப்பக்கத்தில் காட்சிக்கு வைக்கலாம். ஒவ்வொன்றாக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும். ஆட்சேபணைக்குரிய படிமங்களை குறித்து இங்கு கருத்து தெரிவிக்கலாம்.--Ravidreams 10:36, 12 நவம்பர் 2006 (UTC)