உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:கூகுள்25

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிந்துரைகள்- நீச்சல்காரன்

[தொகு]

இந்தக் கூட்டுத் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் பாதிக்காத வகையில் ஏப்ரல் 2025 முதல் தொடங்கலாம். விருப்பமுள்ள வெளிநாட்டுப் பயனர்களுக்கான நிதி ஆதாரத்தை அறக்கட்டளை மூலம் தனியாகப் பெற்றுக் கொள்ளவும் இந்தக் கால இடைவெளி உதவும். ஐயாயிரம் கட்டுரைகள், கூகிள் பரிந்துரைக்கும் தலைப்புகளுடன் நமது தலைப்பு போன்ற இலக்குகளை ஏற்கலாம். இது பொதுவான மேம்பாட்டுத் திட்டமில்லை என்பதால் இதில் வழக்கமாக நடைபெறும் பயிலரங்குகள் குறிப்பாக மாணவர்களை மையமாகக் கொண்டு அல்லாமல் பரந்துபட்ட துறை வல்லுநர்களை மையமாகக் கொண்டு நடத்தலாம் என நினைக்கிறேன். கூகிள் தொழில்நுட்பங்களைப் (google vision, Gemini API, google books) பெற்று விக்கிப்பீடியாவை வளர்க்கத் திட்டமிட விரும்புகிறேன். கட்டுரைகளை வளர்க்க உதவும் நூல்களை விக்கிமூலத்தில் மெய்ப்புப் பார்க்கவும், கலைச்சொற்களை அதிகரிக்க விக்சனரியையும் கூட்டாகக் கொண்டு திட்டமிடப் பரிந்துரைக்கிறேன். அதன் விளைவாக நல்ல மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை உருவாக்கலாம். சட்டம், அறிவியல் தொடர்பான தகவல்களில் இடைவெளியிருப்பதாக நினைக்கிறேன் இவற்றைப் போல நான்கு கருவை அடையாளங் கண்டு அதை வைத்து நான்கு காலாண்டில் நான்கு நேரடிப் பயிலரங்கு, 12 இணையவழிப் பயிலரங்கு, அவ்வப்போது தொடர்தொகுப்பு என்று வடிவமைக்கலாம். பன்னிரண்டு மாதமும் பரிசுப் போட்டியாக அல்லாமல் இயல்பான பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். போட்டிக்குப் பிறகு பரிசளிக்காமல் பயனரின் கருப் பொருளுக்கேற்ற நூல்களை முன்னதாகவே வாங்கிப் பரிசளிக்கலாம். பணமாக அல்லாமல் அடையாளப் பரிசாக கூகிள் நிறுவனப் பொருட்களைப் பரிசாக அளிக்கக் கேட்கலாம். கூகிளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள நிரலாக்கப் போட்டியினை நடத்தலாம். பொதுவாகப் பள்ளி, கல்லூரிகளைவிட பல்கலைக் கழகங்கள், பதிப்பகங்கள், ஆய்வு நிறுவனங்களுடன் கூட்டாண்மை செய்யலாம் என நினைக்கிறேன். இந்தியாவிற்கு வெளியே எத்தனை ஆர்வமுள்ள பயனர் இதைப் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்று தெரிந்த பின்னர் அதற்கான கோரிக்கையை முன்னெடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களின் கருத்திற்கேற்ப காலக்கோட்டைப் பின்னர் திட்டமிட விரும்புகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:49, 30 நவம்பர் 2024 (UTC)Reply

  1. 👍 விருப்பம் * விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பிற தமிழ் வளங்களையும், தொழினுட்பங்களையும் உள்ளடக்கியது என்ற அடிப்படையில் உங்கள் முன்மொழிவுகள் ஈர்ப்பாக உள்ளது. கல்லூரி பயிலரங்குகளை ஏறத்தாழ தொடர்ந்து 5 வருடங்களாக நடத்தி வருகிறேன் என்ற முறையில் எனது அனுபவம் யாதெனில், அப்பயிலரங்குகள் விக்கிமீடியத் திட்டங்களின் அறிமுக விழா என்ற அளவிலேயே நின்றுவிடுகின்றன. தொடர்ந்து அவர்களிடம் உரையாடுதலும், அவர்களைப் புரிந்து கொள்ளுதலுக்கும் பல மணிநேரம் செலவிட வேண்டியுள்ளது. அவர்களை தொடர்ந்து பரிசுகள் மூலம் ஊக்கப்படுத்தவில்லை எனில் சமூக விரிவாக்கம் என்பது ஐயமே. தற்போது விக்கிமூலம், இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. (மஞ்சள் நிலையைச் சொடுக்கவும்)
    • விக்கிமூலத்தில், 2016 முதல் ஏறத்தாழ 4 இலட்சம் பக்கங்களை, 3000 நூல்களினால் (s:ta:பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்) பலரது துணையுடன் உருவாக்கியுள்ளேன். இந்த பட்டறிவு கொண்டு, s:ta:பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள் (19, 000 பக்கங்கள்- 2025 ஆம் ஆண்டு இலக்கு) என்பதே விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும் என முன்மொழிகிறேன். இக்களஞ்சியம் பன்னாட்டு, பல்துறை அறிஞர்களால் உருவானவை என்பதையும் எண்ணுக. சிறு மாற்றங்கள் செய்தால், இங்கு சில ஆயிரம் சிறப்பான கட்டுரைளை ஏற்றவும், புதிய சொற்களை விக்சனரிக்கும், பொதுவகத்திற்கும், விக்கித்தரவிலும் படியிட முடியும். மேலும், இதனால் பல்லாயிரம் புதிய சொற்கள், தர அறிவியல் ஆய்வுகளுக்கும் (Tamil data science research) உதயமாகும். ஆனால், இத்திட்டத்தின் கீழ் அமையும் கட்டுரைகளை, அவைகளில் இருந்து வடிகட்ட வேண்டும்.--உழவன் (உரை) 02:52, 1 சனவரி 2025 (UTC)Reply

இணைப்புகள்

[தொகு]

சிஐஎஸ் நம்முடன் பகிர்ந்த இரு இணைப்புகள் தகவலுக்காக இங்கு இற்றை செய்யப்படுகிறது.

ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 08:50, 2 திசம்பர் 2024 (UTC)Reply

திட்டப் பக்கத்தில் இருந்ததை உரையாடல் பக்கத்திற்கு நகர்த்துகிறேன்:

  1. Outreach, Engagement, and Content Creation: The Hindi Wikimedians User Group - diff.wikimedia.org தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை
  2. Engage, Encourage and Empower = Editing Growth - diff.wikimedia.org தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை

-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:27, 31 திசம்பர் 2024 (UTC)Reply

தலைப்பு மாற்றப்பட்டது

[தொகு]

பக்கத்தின் தலைப்பானது இரண்டு காரணங்களுக்காக மாற்றப்பட்டது:

  1. 4 அமைப்புகளுக்கு இடையேயான இணைவாக்கத்திற்கான பரிந்துரை மீது நடத்தப்படும் உரையாடல் இதுவாகும். முன்மொழிவு என இருந்தால் யாருடைய முன்மொழிவு என்பதில் குழப்பம் ஏற்படும். தேவைப்பட்டால், தமிழ் விக்கிப்பீடியாவின் முன்மொழிவுக்கென இன்னொரு பக்கத்தை ஆரம்பித்துக் கொள்ளலாம்.
  2. தமிழ் விக்கிப்பீடியா அல்லாத மற்ற அமைப்புகளின் பயன்பாட்டிற்காக தலைப்பில் ஆங்கிலக் கலப்பு இருந்தது. ஆனால் அந்த அமைப்புகள் இந்தப் பக்கத்தை பயன்படுத்துவதில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:54, 3 திசம்பர் 2024 (UTC)Reply
இந்தப் பக்கத்தை எளிதில் தேடிக் கண்டுபிடிக்கும்படியும் தட்டச்சு செய்து அடையும்படியும் விக்கிப்பீடியா:கூகுள்25 அல்லது விக்கிப்பீடியா:புதிய கூகுள் திட்டம் என்பது போன்ற தலைப்புகளைத் தந்தால் உதவியாக இருக்கும். 25 என்பது 2025ஆம் ஆண்டு நடக்கும் திட்டத்தைக் குறிக்கும். இதில் இடையில் திட்டத்திற்கு உதவியாக CIS, WMF இருந்தாலும், கூகுள் திட்டமாகவே நாம் பேசிவருகிறோம். - இரவி (பேச்சு) 15:12, 21 திசம்பர் 2024 (UTC)Reply
@Ravidreams பரிந்துரைகளுக்கு நன்றி. 'விக்கிப்பீடியா:கூகுள்25' எனும் தலைப்பு எனது தெரிவு. சில ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு (புதிய) கூகுள் திட்டமும் வரலாம். எனவே, தலைப்பில் ஆண்டைக் குறிப்பிடுதல் நன்று என நினைக்கிறேன். உங்களுக்கு ஏற்புடையது எனில் நகர்த்தி உதவுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:25, 22 திசம்பர் 2024 (UTC)Reply
நன்றி. Y ஆயிற்று-இரவி (பேச்சு) 08:54, 22 திசம்பர் 2024 (UTC)Reply

கூகுள் பரிந்துரைக்கும் கட்டுரைகளின் பக்கப் பார்வைகள்

[தொகு]

அடுத்து நாம் விக்கிமீடியா அறக்கட்டளையுடன் கூகுள்25 திட்டம் தொடர்பாக உரையாடுவதற்கு முன், அத்திட்டம் தொடர்பான நமது வரையறைகளைப் (Benchmarks) பரிந்துரைக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், நமக்கு அளிக்கப்படும் தலைப்புகள் தமிழ்ச் சூழலிற்கு எந்தளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்க சில வரையறைகளை முன்வைக்க வேண்டியுள்ளது. கூகுள் பரிந்துரைக்கும் தலைப்புகளுக்கான ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 3000 பார்வைகளாவது (அதாவது, ஒவ்வொரு நாளும் 100 பார்வைகள்) பெற்றிருந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறேன். ஆங்கிலத்திலேயே அதற்குக் குறைவாக இருந்தால் தமிழ் விக்கிப்பீடியாவில் அத்தகைய தலைப்புகளை யாரும் அவ்வளவு முன்னுரிமை கொடுத்துப் படிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். கூகுள் இந்தி விக்கிப்பீடியாவுக்கு அளித்திருந்த தலைப்புகளை randomஆகச் சோதித்துப் பார்த்தேன். அவற்றுள் சில தலைப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, இடைநிலையளவு, குழிவுச் சார்பு போன்ற கட்டுரைகள். இவை துறை சார்பில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் தாம். ஆனால், அவற்றைத் துறை சார்ந்து அவற்றோடு இணைந்த பிற கட்டுரைகளோடு சேர்ந்து துறைசார் வல்லுநர்கள், ஆர்வலர்கள் உருவாக்குவது பொருத்தமாக இருக்கும். பயனர்:Booradleyp அவ்வாறு இக்கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். ஒருவேளை, நம்மிடம் குறிப்பிட்ட தலைப்புகளை உருவாக்க துறைசார் வல்லுநர்கள் இல்லை, நாம் துறைசார்ந்நு அல்லாமல் randomஆக சில தலைப்புகளில் எழுதுவோமெனில், அதிகம் பக்கப்பார்வை பெறும் பக்கங்களுக்கு முன்னுரிமை தரலாமென நினைக்கிறேன். @Balajijagadesh கூகுள் இந்தி விக்கிப்பீடியாவுக்கு அளித்திருந்த தலைப்புகளின் மாதாந்திர பக்கப் பார்வைகள் தரவுகளை எடுத்துத் தர முடியுமா? இவ்வாறான தரவுகளை எப்படிப் பெறுவது என்பதற்கா உதவிக் குறிப்பு இருந்தாலும் தெரிவியுங்கள். நன்றி. - இரவி (பேச்சு) 19:48, 27 திசம்பர் 2024 (UTC)Reply

உலகளாவிய மற்றும் இந்திய அளவில் அதிக பக்கப்பார்வைகள் பெறும் கட்டுரைகளைத் தெரிவுசெய்து தருமாறு கூறலாம்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 13:41, 29 திசம்பர் 2024 (UTC)Reply
கூகுள் நிறுவனம் பரிந்துரைக்கும் கட்டுரை என்பது அவர்களின் தேடுதளத்தில் அதிகம் தேடும் தலைப்புகளாக அல்லாமல் ஆங்கிலத்தில் கட்டுரை இருந்து அதை நமது மொழியில் உருவாக்கும் இலக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளலாம்.--Balu1967 (பேச்சு) 05:12, 2 சனவரி 2025 (UTC)Reply

பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:34, 31 திசம்பர் 2024 (UTC)Reply

நன்றி பாலாஜி. இவை எத்தனை நாட்களில் கிடைத்த பக்கப் பார்வைகள்? - இரவி (பேச்சு) 13:15, 31 திசம்பர் 2024 (UTC)Reply
@Ravidreams: இவையனைத்தும் கடந்த 30 நாட்களில் கிடைத்தப் பக்க பார்வைகள். இங்கு இருக்கும் பைத்தன் நிரல் மூலம் பக்க பார்வைகள் எடுக்கப்பட்டது.-- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:55, 1 சனவரி 2025 (UTC)Reply
பைத்தான் நிரல் பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி. - இரவி (பேச்சு) 11:25, 1 சனவரி 2025 (UTC)Reply

கட்டுரைகளின் அளவு

[தொகு]

வேங்கைத் திட்டம் 1ல் கட்டுரைகளில் 9000 பைட்டுகளும் 300 சொற்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று விதி இருந்தது. அதுவே, வேங்கைத் திட்டம் 2ல் கட்டுரைகளில் 6000 பைட்டுகளும் 300 சொற்களும் சேர்க்கப்படம் என்று விதி மாறியது. தற்போதைய திட்டத்தில் இந்தி விக்கிப்பீடியர்கள் 200 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரைகள் உருவாக்கியதாகத் தெரிகிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் தர நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு நாம் இந்தத் திட்டத்திற்கு, கட்டுரை அளவைப் பொருத்து எத்தகைய விதிகளை உருவாக்கலாம் என்று அனைவரின் பரிந்துரையையும் தெரிவிக்கக் கோருகிறேன். நன்றி. -இரவி (பேச்சு) 12:48, 28 திசம்பர் 2024 (UTC)Reply

பன்னாட்டுத் தமிழ் விக்கிப்பீடியர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகள் இருப்பதை விரும்புவதில்லை. ஆகவே, வேங்கைத்திட்டம் 2-இல் குறிப்பிட்டவாறு 6000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் என்ற அளவு வரையறை அனைவருக்கும் ஏற்புடையதாய் இருக்கும்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 13:43, 29 திசம்பர் 2024 (UTC)Reply
  1. 👍 விருப்பம்உழவன் (உரை) 02:15, 1 சனவரி 2025 (UTC)Reply
  2. கூகுள் கொடுக்கும் தலைப்புகள் ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இல்லாமல் இருக்கலாம். போதுமான மேற்கோள்கள் கிடைக்காத அளவுக்கு புதிய கட்டுரைகளாக அவை இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே 6000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் என்பதை குறைத்து குறைந்தது 200 சொற்கள் அல்லது 5000 பைட்டுகள் என்ற அளவு வரையறை அனைவருக்கும் ஏற்புடையதாய் இருக்கும் என்பது என்னுடைய பரிந்துரையாகும்.--கி.மூர்த்தி (பேச்சு) 03:26, 1 சனவரி 2025 (UTC)Reply
  3. 6000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:21, 1 சனவரி 2025 (UTC)Reply
  4. 5000 பைட்டுகள் மற்றும் 200 சொற்கள் என இருக்கலாம் என்பது எனது கருத்து.--Balu1967 (பேச்சு) 05:08, 2 சனவரி 2025 (UTC)Reply
  5. 6000 பைட்டுகள், 300 சொற்கள் எனும் வரையறை எனது பரிந்துரையாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:25, 2 சனவரி 2025 (UTC)Reply
  6. 6,000 பைட்டுகள் / 300 சொற்கள் --பொதுஉதவி (பேச்சு) 13:13, 2 சனவரி 2025 (UTC)Reply
  7. 6,000 பைட்டுகள் / 300 சொற்கள் எனும் பரிந்துரையை வைத்துக் கொள்வது சராசரியாக ஓரளவு கனமான ஒரு கட்டுரை ஆகும். கட்டுரைகளின் பட்டியல் குறித்து தமிழில் தேடப்படும் அல்லது தமிழ்ச் சூழலில் அவசியம் எனக் கருதும் கட்டுரைகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:10, 4 சனவரி 2025 (UTC)Reply

கூடுதல் பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை

[தொகு]

இந்தத் திட்டத்தில் புதிதாக 80 பயனர்கள் பங்களிக்கத் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்து இருந்தது. ஆனால், இந்த 80 பயனர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் ஒரு ஆண்டு முழுக்க இருக்க வேண்டுமா? குறைந்தது எத்தனைத் தொகுப்புகளைச் செய்திருக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கான விடைகளை நம்மையே வரையறுத்துத் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்கள். இது குறித்த பயனர் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

என் எண்ணம்: வெறுமனே 80, 100 போன்ற பயனர் எண்ணிக்கைகளுக்குப் பெரிதாகப் பொருள் கிடையாது. ஏனெனில், ஒரு குறிப்பிட்ட போட்டியோ திட்டமோ நடக்கும்போது, புதிதாக 100 முதல் 1000 பயனர்களைக் கூட தமிழ் விக்கிப்பீடியா பெற்றிருக்கிறது. ஆனால், இப்படி வரும் பயனர்களில் எத்தனைப் பயனர்களைத் தக்க வைக்கிறோம் என்பதில் தாம் நீண்ட கால நன்மை இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒரு தொகுப்பாவது செய்து பங்களிப்பாளர் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே தோராயமாக 250 என்ற எண்ணிக்கையை ஒட்டி இருக்கிறது. ஆனால், தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, கடந்த நவம்பர் மாதம் குறைந்தது 5 தொகுப்புகளாவது பங்களித்தோர் 63 பேர் மட்டுமே. கடந்த 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை சராசரியாக 81ஆக இருந்திருக்கிறது. இந்த எண்ணிக்கையை 100ஆக உயர்த்துவதை ஒரு பொதுவான இலக்காகக் கொண்டு, கூகுள்25 திட்டம் உள்ளிட்ட அடுத்த ஆண்டுக்கான அனைத்துச் செயற்பாடுகளையும் அமைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறேன். நாம் இந்த எண்ணிக்கை எட்ட முடிந்தால், ஒவ்வொரு மாதமும் பங்களிப்போர் எண்ணிக்கையும் அதற்கு ஏற்ப 300-400 வரை அமையலாம். புதிதாக வந்த பயனர்களும் 100+ தாண்டிச் செல்லக்கூடும். - இரவி (பேச்சு) 13:17, 28 திசம்பர் 2024 (UTC)Reply

ஒரு 6 மாத காலத்தில் சராசரியாக செயலுறு பயனர்களின் எண்ணிக்கையை 25% விழுக்காடு அதிகரிக்கச் செய்வது என்பதே இமாலயச் சாதனை தான். இந்த இலக்கே தமிழ் விக்கிப்பீடியாவின் நீண்ட கால வளர்ச்சிக்கான இலக்காக அமையும். --மகாலிங்கம் இரெத்தினவேலு 13:46, 29 திசம்பர் 2024 (UTC)Reply
Active Editors எண்ணிக்கையை மாத சராசரியாக 100 எனும் எண்ணிற்கு உயர்த்தும் இலக்கு சிறப்பாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் குறைந்தது 100 பேருக்கு பயிற்சிகள் தந்து அவர்களை புதிய பயனர்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்வோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:42, 2 சனவரி 2025 (UTC)Reply
  • குறுங்கட்டுரைகளைப் படைக்கும் புதுப்பயனர்களையும், அவர்களின் கட்டுரைகளின் தரத்திற்கேற்ப, அவர்களின் பேச்சுப் பக்கத்தில் அவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துங்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாது, கட்டுரைகளின் எண்ணிக்கை மற்றும் தரமும் உயரும். -- பொதுஉதவி (பேச்சு) 13:41, 2 சனவரி 2025 (UTC)Reply
  • வைக்கப்படும் இலக்கு எட்டப்படக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இலக்கு மிகச் சிறிதாக இருந்தால் நீண்டகாலப் பயன் இருக்காது. புதுப்பயனர்களுக்கு பங்களிப்பு அளவுக்கு ஏற்ப ஏதும் ஊக்குவிப்பை/ அல்லது பாராட்டை சிறப்பிப்பை செய்வதும் அவர்களை சமூக முன்னிலையில் அறிவிப்பதும் ஊக்குவிக்கலாம். சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:19, 4 சனவரி 2025 (UTC)Reply

இற்றை (04-பிப்ரவரி-2025)

[தொகு]

விக்கிமீடியா அறக்கட்டளையின் பிரவீன் தாஸ் தகவல் அனுப்பியிருக்கிறார். அதன் சுருக்கம்: தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அளித்திருந்த விரிவாக்கத் திட்டத்தை கூகுள் நிறுவனம் மதிப்பீடு செய்துவருகிறது. தமக்குள் கலந்துரையாடல்கள் நடத்திய பிறகு அடுத்தக்கட்ட தகவல்களை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கூகுள் நிறுவனம் தெரிவிக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:33, 4 பெப்பிரவரி 2025 (UTC)

இற்றை (06-பிப்ரவரி-2025)

[தொகு]

நேற்று இரவு 7 மணியளவில், விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலர் பிரவீன் தாஸ் நகர்பேசி வழியாக என்னிடம் பேசினார். 2025 ஆம் ஆண்டில், புதிய கட்டுரைகளின் எண்ணிக்கைக்கான இலக்கை 3,000இலிருந்து 4,000 என்பதாக அதிகரிக்குமாறு கூகுள் வேண்டுகோள் வைத்திருப்பதாக தெரிவித்தார். குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் இயங்கும் தமிழ் விக்கிப்பீடியாவில் 4,000 கட்டுரைகள் எனும் இலக்கை கூகுள் எதிர்பார்ப்பதாக பிரவீன் கூறினார். Content gap குறித்து தமிழ் விக்கிப்பீடியா சமூகம் தானே ஒரு பட்டியல் தயாரித்து அவற்றிலுள்ள கட்டுரைகளை எழுதும் செயல் தமக்கு ஏற்புடையது என்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. அதிக தலைப்புகளைக் கொண்டுள்ள பட்டியலை தருவதற்கு கூகுள் முயற்சி செய்யும் எனவும் பிரவீன் தெரிவித்தார்.

எண்ணிக்கை அதிகரிப்பை தெலுங்கு விக்கிப்பீடியா ஏற்றிருப்பதாக பிரவீன் தாஸ் கூறினார். சமூகத்தின் முடிவை வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் தெரிவிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். பயனர்கள் தமது கருத்துகளை இங்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:46, 6 பெப்பிரவரி 2025 (UTC)

விக்கிமீடியா அறக்கட்டளை தரும் நல்கைகளுக்குக் கூட அளவுக்கு அதிகமான இலக்குகளை அவர்கள் வலியுறுத்துவதில்லை. கூகுள் இத்திட்டத்தில் புரவலர் என்கிற அளவிலே ஈடுபடுகிறது என்னும்போது, நம் செயல்கள், மாற்றங்களில் தான் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, குறிப்பிட்ட இலக்குகளைத் திணிப்பது உவப்பாக இல்லை. தெலுங்கு விக்கிப்பீடியா 4,000 கட்டுரை இலக்கை ஏற்றுக் கொண்டுள்ளது என்று நம்மிடம் சொல்கிறார்கள். நாமும் ஏற்றுக்கொண்டால், அதையே பிற விக்கிப்பீடியாக்களிடமும் சொல்வார்கள். தமிழ் விக்கிப்பீடியா தான் ஒருமனதாக முன்மொழிந்த 3000 கட்டுரை இலக்கை மீண்டும் வலியுறுத்த வேண்டும். அதில் கூகுளுக்கு உடன்பாடு இல்லையெனில், நாம் நிதியுதவி ஏதும் பெற்றுக் கொள்ளாமல், கட்டுரைத் தலைப்புகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் மட்டும் பெற்றுக் கொள்ளலாம். கூகுள் தருவதை விட கூடுதலான தொகையை விக்கிமீடியா அறக்கட்டளை மூலம் கூட பெற முடியும். நாம் இயல்பாக 4000 என்ன 6000 கட்டுரை கூட உருவாக்கலாம். ஆனால், அவை இயல்பான விளைவாக இருக்க வேண்டுமே ஒழிய முன் நிபந்தனையாக இருத்தல் கூடாது. அவர்கள் முதலில் 5000 கேட்டார்கள். நாம் 3000 என்றோம். இப்போது நடுவே 4000 என்கிறார்கள். இது சந்தையில் காய்கறி பேரம் வாங்கிப் பேசுவது போல் ஆகி விடக்கூடாது. இதில் எத்தனை ஆயிரம் கட்டுரைகள் என்று சொன்னாலும், கொடுக்கப்படுகிற தொகைக்கு எத்தனை ஆயிரம் கட்டுரைகள் எழுதுவது தகும் என்பதற்கு எந்த ஒரு தர்க்க அடிப்படையும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாமே arbitrary எண்களாகவே பேசப்பட்டு வருகின்றன. நன்றி. - இரவி (பேச்சு) 05:32, 6 பெப்பிரவரி 2025 (UTC)
எனது கருத்து: 'முதல் ஆண்டில் 3,000 கட்டுரைகள்' எனும் எண்ணிக்கையானது தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தால் ஒருமனதாக முன்மொழியப்பட்ட இலக்காகும். பல்வேறு காரணிகளை கருத்திற் கொண்டு, இந்த இலக்கினை முடிவு செய்திருந்தோம். தமிழ் விக்கிப்பீடியா தெரிவித்திருந்த இன்னொரு குறிப்பிடத்தக்க கூறு, தொடர்ந்து பங்களிப்பவர்களின் எண்ணிக்கையை (active editor count) 79 என்பதிலிருந்து 100 என்பதற்கு உயர்த்துவது ஆகும். இதனை அடைவது என்பது எளிதான ஒன்றல்ல; நுணுக்கமான / விரிவான திட்டமிடலும், பயிற்சியாளர்கள் / நீண்ட நாள் பயனர்களின் பெருமளவு உழைப்பும் தேவைப்படும். அத்தோடு, இந்தப் பயனை அடைவதுதான் நீண்ட காலத்திற்கான தேவைகளை நிறைவு செய்யும். கட்டுரைகளின் எண்ணிக்கையை 4,000 என்பதாக அதிகரிக்குமாறு கூகுள் கேட்பது அழுத்தம் தருவது போன்றுள்ளது. 'முதல் ஆண்டில் 3,000 கட்டுரைகள்' எனும் நிலைப்பாட்டில் தமிழ் விக்கிப்பீடியா நிற்கவேண்டும் என்பது எனது திடமான கருத்தாகும். Active editor count தொடர்பான நமது தனித்துவமான இலக்கை அவர்களிடத்து விளக்கிக் கூறுவோம். அதற்குப் பிறகும் கூகுள் ஏற்கவில்லையெனில்... கட்டுரைத் தலைப்புகளுக்கான பட்டியலையும், தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளையும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்; புதிய பயனர்களுக்கு பயிற்சியளித்தல், கட்டுரைப் போட்டிகள் நடத்துதல் ஆகிய செயல்பாடுகளுக்கு விக்கிமீடியா அறக்கட்டளை மூலமாக நிதியைப் பெற்றுக்கொள்ளலாம். Rapid Funds கோரிக்கைகள் வாயிலாக இது சாத்தியம் என்பதாக கருதுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:10, 7 பெப்பிரவரி 2025 (UTC)
ஆம், சமூக வளர்ச்சிக்காகவே இந்தத் திட்டம் என்று அவர்கள் கூறினாலும் கட்டுரைகள் எண்ணிக்கையிலேயே குறியாக இருப்போது போல் தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிடுவது போல் கட்டுரைகள் எண்ணிக்கையை அடைவதைக் காட்டிலும் தொடர்ந்து பங்களிப்பவர்கள் எண்ணிக்கையைக்கூட்டுவது தான் மிகவும் சவாலானது. இந்த வகையில் நம்முடைய இலக்கும் அதனை அளவிடும் முறையும் மற்ற விக்கிப்பீடியர்கள் ஏற்றுக் கொண்டுள்ள இலக்கில் இருந்து மாறுபட்டது. - இரவி (பேச்சு) 07:53, 8 பெப்பிரவரி 2025 (UTC)
3000 கட்டுரைகள் என்பதில் உறுதியாக இருப்போம். --இரா. பாலாபேச்சு 08:52, 8 பெப்பிரவரி 2025 (UTC)
3000 கட்டுரைகள் என்பதையே வலியுறுத்துவோம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:24, 8 பெப்பிரவரி 2025 (UTC)
கைக்கு கிடைத்த நிதியை நாம் இழக்கலாமா? கூகுளுடன் இணைந்து செயல்பட்டால் பயனர் 79 எண்ணிக்கை என்பதிலிருந்து 100 என்பதற்கு உயர்த்துவது சற்று எளிதாகும். 4000 முயற்சித்துதான் பார்ப்போமே? முடியாவிட்டால் என்ன ஆகும்? காலத்தை கூடுதலாக மார்ச்சு 2026 வரை கேட்கலாம். புதியவர்களை திட்டத்தில் ஈடுபடுத்த கட்டுரையின் அளவை பெண்ணியமும் நாட்டார் மரபும் போட்டியைப் போல 250 சொற்கள் 5000 பைட்டுகள் எனக் குறைத்துக் கொள்ளலாம். Rapid fund கோரிக்கையின் மூலம் நிதி பெற்று புதிய திட்டத்திற்குப் பயன்படுத்தலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 11:16, 8 பெப்பிரவரி 2025 (UTC)
நாம் முன் மொழிந்த திட்டத்தில் உறுதியாக இறுப்போம். @Ravidreams@Selvasivagurunathan mகருத்துக்களை ஏற்கிறேன். பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:24, 8 பெப்பிரவரி 2025 (UTC)
3,000 கட்டுரைகள் என்பதை முடிவாகக் கொண்டு, சாதிப்பதை 4,000 கட்டுரைகள் என்று கொள்ளலாம். பொதுஉதவி (பேச்சு) 13:00, 8 பெப்பிரவரி 2025 (UTC)
3000 கட்டுரைகள் இலக்கு போதுமானது என நினைக்கிறேன் --தியாகு கணேஷ் (பேச்சு) 14:04, 8 பெப்பிரவரி 2025 (UTC)
3000 கட்டுரைகள என்பது நமது தொடர்பங்களிப்பாளர்களால் எளிதில் அடையக் கூடிய ஒன்றுதான். ஆனால் பயனர் எண்ணிக்கை 100 என்பது சாத்தியமா? என்பது எனது ஐயம். மற்றபடி கூகுளுடன் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்ளலாம்.--Balu1967 (பேச்சு) 02:06, 9 பெப்பிரவரி 2025 (UTC)
3000 தரமான கட்டுரைகள் என்பதேயே இலக்காகக் கொள்ளலாம்.
சரவணன் பெரியசாமி சரவணன் பெரியசாமி 11:29, 9 பெப்பிரவரி 2025 (UTC)
@Balu1967: தங்களின் கருத்திற்கு நன்றி. தொடர்ந்து பங்களிப்பவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது என்பது சவாலானது என்றாலும், இத்தகைய இலக்குகளே தமிழ் விக்கிபீடியாவின் நீண்டகாலத்திற்கான தேவைகளை நிறைவு செய்யும் என முந்தைய உரையாடல்களில் (இந்த உரையாடல் பக்கத்திலும்) நம்மில் பலரும் தெரிவித்துள்ளோம். இந்தக் கடினமான இலக்கை எட்டுவதற்கு பல்வேறு செயல்பாடுகளைச் செய்யவேண்டியிருக்கும் எனும் காரணத்தினாலேயே முதலாம் ஆண்டில் 3,000 கட்டுரைகள் எனும் இலக்கை கூகுள் நிறுவனத்திற்கு நாம் தெரிவித்திருந்தோம். உங்களுடன் பகிர நினைத்திருந்த இன்னொரு விசயம்: விக்கிமீடியாவின் வரையறைப்படி, ஒருவர் ஒரு மாதத்தில் 5 தொகுப்புகளைச் செய்திருந்தால் அவர் தொடர்பங்களிப்பாளர் என கருதப்படுவார். இங்கு காணுங்கள்: Wikimedia Statistics, Wikipedia – Tamil, Active editors. இது குறித்து, பிப்ரவரி மாதாந்திரக் கூட்டத்தில் நாம் உரையாடுவோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:51, 9 பெப்பிரவரி 2025 (UTC)
@கி.மூர்த்தி: தங்களின் கருத்துகளுக்கு நன்றி. எனது பதில்களையும், கூடுதல் எண்ணங்களையும் இங்கு தந்துள்ளேன்:
  1. மற்ற இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் தந்துள்ள இலக்குகளுக்கும், தமிழ் விக்கிப்பீடியா தந்துள்ள இலக்குகளுக்கும் தனித்துவமான வேறுபாடுகள் உள்ளன. கட்டுரைகளின் தரம் குறித்து நாம் மிகுந்த அக்கறை செலுத்துகிறோம். பயிற்சிகள் வழியாக புதிய பயனர்களை உருவாக்குதல் என்பதோடு நிறுத்தாமல், அவர்களை தொடர்பங்களிப்பாளர்களாக மாற்றுதல் எனும் இலக்கை தமிழ் விக்கிப்பீடியா முன்வைத்துள்ளது. தொடர்ந்து பங்களிக்கும் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் தமிழ் விக்கிபீடியாவின் எதிர்கால வளங்குன்றா செயல்பாடுகளுக்கு முக்கியம் என முந்தைய உரையாடல்களில் (இந்த உரையாடல் பக்கத்திலும்) நம்மில் பலரும் தெரிவித்துள்ளோம்.
  2. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு காரணங்களாலேயே 3,000 கட்டுரைகள் எனும் இலக்கை முன்வைத்தோம். முதல் ஆண்டில் செய்து பார்த்து, வரும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்பதுவும் நமது எண்ணமாக இருந்தது. 9 மாதங்கள் மட்டுமே இருப்பதுவும் ஒரு காரணம். காலத்தை அடுத்தாண்டிற்கு நீட்டிப்பது கூகுள் நிறுவனத்திற்கு வாகுவாக அமையாது என நினைக்கிறேன்.
  3. 3,000 கட்டுரைகள் எனும் இலக்கை கூகுள் நிறுவனம் ஏற்காவிட்டால், நிதியை மட்டுமே பெற்றுக்கொள்ளாமல் இருப்போம். மற்றபடி, கட்டுரைத் தலைப்புகளுக்கான பட்டியலையும் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ளவே செய்வோம். புதிய பயனர்களை அங்கீகரிக்கும் சான்றிதழ்களை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் செயலை செய்ய இயலும் என்றே கருதுகிறேன். ஒருவேளை Operational difficulties அவர்களுக்கு இருக்குமெனில், CIS அமைப்புடனான இணைவாக்க முறையில் இந்தச் சான்றிதழ்களை உறுதியாக வழங்க இயலும்.
  4. Rapid fund கோரிக்கையின் மூலம் நிதி பெறுதல் என்பது எளிதானதே. ஒரு சமூகத்தின் பயனர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றிற்கு USD 10,000 வரை நிதியைப் பெற இயலும். எடுத்துக்காட்டாக, நம்மில் யாரேனும் இருவர் இந்தாண்டில் தனித்தனியாக இரு கோரிக்கைகளை வைத்தால், USD 5,000 + USD 5,000 = USD 10,000ஐ பெற்றுக்கொள்ள இயலும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:14, 9 பெப்பிரவரி 2025 (UTC)

இற்றை (10-பிப்ரவரி-2025)

[தொகு]

தமது கருத்துகளை பதிவுசெய்த 10 பயனர்களில் 9 பேர் தமது நிலைப்பாடாக 3,000 கட்டுரைகள் என்பதனைக் குறிப்பிட்டிருந்தனர். பயனர்:கி.மூர்த்தி அவர்கள் தனது நிலைப்பாட்டாக 4,000 கட்டுரைகளை முயற்சி செய்து பார்க்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். 90% பேரின் எண்ணத்தை இறுதி முடிவாகக் கருதி, விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலர் பிரவீன் தாஸ் அவர்களுக்கு மடல் அனுப்பியுள்ளேன். பதில் கிடைத்த பிறகு இற்றை செய்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:14, 10 பெப்பிரவரி 2025 (UTC)

இற்றை (22-பிப்ரவரி-2025)

[தொகு]

விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலர் பிரவீன் தாஸ் அவர்கள், 22-பிப்ரவரி-2025 அன்று மின்னஞ்சல் வழியாக நமக்கு மடல் அனுப்பியிருந்தார். இது தொடர்பான தகவல்களை ஆலமரத்தடியில் அறிவிப்பாக பதிவு செய்துள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:20, 26 பெப்பிரவரி 2025 (UTC)

ஒருங்கிணைப்பாளர்கள்

[தொகு]

கூகுள்25 திட்டம் உறுதியாகியுள்ள நிலையில், இந்தத் திட்டம் தொடர்பான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க விருப்பமுள்ள பயனர்கள் தமது பெயரை திட்டப் பக்கத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழு எனும் பகுதியில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:26, 26 பெப்பிரவரி 2025 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் எனது நேரடிப் பங்களிப்புகளை அதிகளவில் தர விரும்புவதாலும், புதிய பயனர்களை இங்கு கொண்டுவருதல், பங்களித்து வருபவர்களை ஊக்குவித்து / உதவிகள் செய்து அவர்களை தொடர்பங்களிப்பாளர்களாக மாற்றுதல் ஆகிய பணிகளை செய்ய விரும்புவதாலும் கூகுள்25 திட்டத்திற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க என்னால் இயலவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டம் தொடர்பான பங்களிப்புகளை ஒரு பயனராக செய்வேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:39, 26 பெப்பிரவரி 2025 (UTC)

விக்கிமீடியா அறக்கட்டளையின் அலுவலர் பிரவீண் அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல் மடலின் உள்ளடக்கம்

[தொகு]
  • மின்னஞ்சல் பெறப்பட்ட நாள்: 12-சூலை-2025
  • மின்னஞ்சல் மடலின் உள்ளடக்கம்:

Hi Selva,

Hope you're doing well. We wanted to share a brief update on the current status of our partnership with Google, supporting the community expansion plan for the Tamil Wikipedia community.

Due to changes in CIS compliance and to ensure we meet our timeline commitments, we onboarded Balarc Foundation as the fiscal host for this project. Balarc Foundation is a grassroots-focused non-profit organization with extensive experience working with marginalized communities across India. They focus on promoting education, healthcare, and social development for underserved groups. Their work includes digital and vocational skill-building, education access, HIV/AIDS awareness, and community-led health and rights initiatives. They work closely with self-help groups, regional CBOs, and national and international networks to deliver inclusive, peer-led programs, especially for vulnerable populations such as women, youth, LGBTQIA+ individuals, and those affected by HIV. They work on managing large-scale projects and partnerships with organizations like UNAIDS, Azim Premji Foundation, UPSDM, TISS, National Law Universities, and IIIM-L. With their strong operational presence and commitment to social equity, we believe Balarc will be a capable and aligned fiscal host for this collaboration.

In the coming days, we’ll be sharing reimbursement process documentation from Balarc for your reference, along with scheduling a call with their team to address any finance or operational related queries.

Project Overview:

  • Total Approved fund for Tamil community expansion plan: USD 7,000
  • Activity Timeline: July 2025 - June 2026 (please let us know in case an extension is needed)
  • Community Benchmark:
Community New Articles New Editors Workshops Edit-a-thons Partnerships
Tamil 3,000 (6,000 bytes / 300 words) 100 3 Workshops (2 days in-person) with focused groups, followed by a 60 days/8 weeks internship with students 1 Month long writing contest

2 Month long writing contest (Regular content creation sprint on content gap throughout the year)

2 Institutional and focused language group collaboration

Please let me know if you have any further questions, and thanks for your patience in the process.

Best, Praveen & Rachit

-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:19, 13 சூலை 2025 (UTC)Reply

திட்டத்தைத் தொடங்குதல்

[தொகு]

மேலேயுள்ள உரையாடல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் மடலின் அடிப்படையில், திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளது.

தமிழ் விக்கிப்பீடியா - கூகுள் நிறுவனம் இணைவாக்கத்திற்கான விக்கிமீடியா அறக்கட்டளையின் பரிந்துரை, CIS-A2K அமைப்பின் வழியாக நம்மிடம் வந்தது (23-நவம்பர்- 2024). இந்த முன்னெடுப்பிற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை அந்த காலக்கட்டத்தில் செய்வதற்கு என்னால் இயன்றது. ஆனால் சொந்தப் பணிகளின் காரணமாக, திட்டத்தை மேற்கொண்டு ஒருங்கிணைக்க இயலாத சூழல் எனக்கு தற்போது உள்ளது. இதுவரை ஒத்துழைப்பு நல்கிய பயனர்கள் அனைவருக்கும் நன்றிகள்!

திட்டம் தொடர்பான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க விருப்பமுள்ள பயனர்கள் தமது பெயரை திட்டப் பக்கத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழு எனும் பகுதியில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். திட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்த 'முதன்மை ஒருங்கிணைப்பாளர்' ஒருவரும் அவருக்கு உதவிபுரிய குறைந்தது ஐந்து தன்னார்வலர்களும் முன்வந்தால், திட்டத்தை சிறப்பாக நடத்த இயலும் என உறுதியாக நம்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:12, 13 சூலை 2025 (UTC)Reply

எனக்கு அக்டோபர் வரை பணிச்சூழல் உள்ளது. அதுவரை தேவையின் பொருட்டு நேரத்தை செலவிட இயலும். @Sridhar_G உங்களால் முன்னெடுக்க இயலுமா?-நீச்சல்காரன் (பேச்சு) 11:56, 14 சூலை 2025 (UTC)Reply
தங்களது கருத்திற்கு நன்றி நீச்சல். இந்த நீண்டகாலத் திட்டத்தில் ஐந்து தன்னார்வலரில் ஒருவராக இணைய விருப்பம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:40, 14 சூலை 2025 (UTC)Reply

திட்டம் தொடர்பான இணையவழிக் கலந்துரையாடல் (20-சூலை-2025)

[தொகு]

ஆலமரத்தடியில் அறிவித்திருந்தபடி, தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பயனர்கள் மா. செல்வசிவகுருநாதன், சத்திரத்தான், கி.மூர்த்தி, நா. ரெ. மகாலிங்கம், ஸ்ரீ. பாலசுப்ரமணியன், ஸ்ரீதர். ஞா, சிவகோசரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • திட்டப் பக்கம் / பேச்சுப் பக்கத்தில் ஏற்கனவே தனது விருப்பத்தை பதிவு செய்திருந்த பயனர்கள் சத்திரத்தான், ஸ்ரீதர். ஞா ஆகியோர் ஐந்து தன்னார்வலர்களில் ஒருவராக செயல்படவிருக்கும் தமது எண்ணத்தை உறுதி செய்தனர்.
  • பயனர்கள் நா. ரெ. மகாலிங்கம், ஸ்ரீ. பாலசுப்ரமணியன், சிவகோசரன் ஆகியோர் ஐந்து தன்னார்வலர்களில் ஒருவராக செயல்படவிருக்கும் தமது விருப்பத்தைத் தெரிவித்தனர்.
  • முதன்மை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினை ஏற்கும் விருப்பம் உள்ளதா என்பதனை மற்ற பயனர்களிடமும் கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
  • முதன்மை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினை யாரும் ஏற்கவில்லை எனில், அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து உரையாடலாம் என முடிவெடுக்கப்பட்டது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 20 சூலை 2025 (UTC)Reply

கருத்து

[தொகு]

செல்வசிவகுருநாதன் அவர்களை நிதி சார்ந்த பொறுப்புகளை மட்டும் ஏற்கச் சொல்லி வேண்டியும், சத்திரத்தான் அவர்களின் தலைமையில் மற்ற தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பு பணிகளைக் கவனிக்க வேண்டுமாறும் கருத்து தெரிவிக்கிறேன். நன்றி! பொதுஉதவி (பேச்சு) 11:51, 20 சூலை 2025 (UTC)Reply

@பொதுஉதவி தங்களின் கருத்திற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள 'நிதி சார்ந்த பொறுப்புகள்' தொடர்பான பரிந்துரையும் இன்றையக் கூட்டத்தில் உரையாடப்பட்டது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:35, 20 சூலை 2025 (UTC)Reply

இற்றை (24-சூலை-2025)

[தொகு]

விக்கிமீடியா அறக்கட்டளையின் அலுவலர் பிரவீண் அவர்களிடமிருந்து 23-சூலை-2025 அன்று வந்த மின்னஞ்சல் மடலின் உள்ளடக்கம்:

  • செலவுகளுக்கான பணத்தைப் பெறுவதற்கான 'செயல்முறை ஆவணம்' அடுத்த வாரத்தில் பகிரப்படும்.
  • பலார்க் பவுண்டேசன் (Balarc Foundation) அமைப்பின் அலுவலருடனான உரையாடல் அடுத்த வாரத்தில் ஏற்பாடு செய்யப்படும்.
  • திட்டத்தை ஆகத்து 2025 - சூலை 2026 காலகட்டத்தில் நடத்துவதற்கான தமிழ் விக்கிப்பீடியாவின் முடிவை கூகுள் நிறுவனத்திடமும் பலார்க் பவுண்டேசன் அமைப்பிடமும் விக்கிமீடியா அறக்கட்டளை தெரிவிக்கும்.
  • திட்ட ஒருங்கிணைப்பாளர்களுடனான மாதாந்திரக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். இக்கூட்டத்தின் போது, திட்டத்தின் போக்கு குறித்து உரையாடப்படும்.

குறிப்பு: திட்டத்தின் முக்கியக் கூறுகள் உறுதியாகியுள்ள நிலையில், மின்னஞ்சல்களின் உள்ளடக்கச் சாரம் தமிழ் மொழியில் உரையாடல் பக்கத்தில் வெளியிடப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:46, 24 சூலை 2025 (UTC)Reply

இற்றை (07-ஆகத்து-2025)

[தொகு]

ஆலமரத்தடியில் அறிவித்திருந்தபடி, 27-சூலை-2025 அன்று இணையவழிக் கலந்துரையாடல் நடைபெற்றது. பயனர்கள் கி.மூர்த்தி, ஸ்ரீ. பாலசுப்ரமணியன், சத்திரத்தான், தகவலுழவன், பார்வதிஸ்ரீ, நா. ரெ. மகாலிங்கம், மா. செல்வசிவகுருநாதன், ஜெ. பாலாஜி, ஸ்ரீதர். ஞா ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • கூகுள் பெருந்திட்டம் தொடர்பாக இதுவரை நடைபெற்ற உரையாடல்கள், தமிழ் விக்கிப்பீடியா - விக்கிமீடியா அறக்கட்டளை இடையே எட்டப்பட்ட கருத்தொற்றுமை இவற்றை அடிப்படையாகக் கொண்டு Excel கோப்பு ஒன்றினை பயனர்:மா. செல்வசிவகுருநாதன் ஏற்கனவே தயாரித்திருந்தார்; கோப்பிலுள்ள உள்ளடக்கங்களை இக்கூட்டத்தில் விளக்கினார்.
  • அடையாளங் காணப்பட்டிருந்த பல்வேறு பணிகளில், தமக்கு விருப்பமான பணிகளை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவு செய்துகொண்டனர்.
  • முதன்மை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதற்கான தனது விருப்பத்தை பயனர்:ஸ்ரீதர். ஞா தெரிவித்தார்.
  • இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளாத ஒருங்கிணைப்பாளர்கள், தாம் ஏற்க விரும்பும் பணிகளை தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டப் பக்கத்தில் பதிவு செய்தனர்.
  • ஏற்றுகொண்ட பொறுப்புகள் குறித்த அட்டவணையை இங்கு காணலாம்.
  • ஒருங்கிணைப்பாளர்களை உள்ளடக்கிய WhatsApp குழு 27-சூலை-2025 அன்று உருவாக்கப்பட்டது.
  • கூகுள் பெருந்திட்டம் குறித்தான உரையாடல்களை மாதந்தோறும் நடைபெறும் தமிழ் விக்கிப்பீடியா மாதாந்திரக் கூட்டத்தில் நிகழ்த்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் நேரங்களில், ஒருங்கிணைப்பாளர்கள் தமக்குள் கூடுதலாக கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:27, 6 ஆகத்து 2025 (UTC)Reply

இற்றை - ஆகஸ்ட் 26

[தொகு]

நிதித் திட்டமிடல் குறித்து Balarc Foundation உடன் உரையாடுவதற்காக ஆகஸ்ட் 26,2025-இல் கூகுள் மீட்டில் சந்திப்பு நடைபெற்றது. தமிழ் விக்கிச் சமூகம் சார்பாக செல்வசிவகுருநாதன், பாலு, பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டோம். கலந்துரையாடலின் சுருக்கம் பின்வருமாறு.

  • ஒவ்வொரு திட்டத்திற்கான நிதித் திட்டமிடலை 15 நாட்களுக்கு முன்னதாக அனுப்ப கூறினர்.
  • ஒரு நபருக்கு ரூபாய் 2000 க்கும் அதிகமான தொகையினை செலவழிக்கும் போது அதற்கான இரசீதினை வழங்குதல் அவசியம். அதற்கு குறைவான தொகையினை பணமாக செலவழித்தற்கு அதற்கென உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
  • 90,000 -க்கும் அதிகமான தொகையினை செலவழிக்கும் போது ஜி.எஸ்.டி இரசீது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • பணமாக பரிசுகள் வழங்கப்படாது. வன்பொருட்கள் அல்லது பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படும்.
  • Balarc Foundation நேரடியாக வழங்க வேண்டிய செலவினங்கள் குறித்தான File ஒன்றினை செல்வசிவகுருநாதன் வழங்கி, அதுகுறித்தான சிறு அறிமுகத்தினை வழங்கினார். அந்தக் கோப்பு அவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகப் பகிரப்பட்டுள்ளது.

--ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 19:03, 26 ஆகத்து 2025 (UTC)Reply

👍 விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:41, 27 ஆகத்து 2025 (UTC)Reply
👍 விருப்பம் --மகாலிங்கம் இரெத்தினவேலு 07:54, 27 ஆகத்து 2025 (UTC)Reply
👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 14:30, 30 ஆகத்து 2025 (UTC)Reply
👍 விருப்பம்-- சா. அருணாசலம் (உரையாடல்) 14:48, 30 ஆகத்து 2025 (UTC)Reply

இற்றை - செப் 14

[தொகு]

செப் 7, 2025 இல் நடைபெற்ற இணைய வழிக் கலந்துரையாடலில் கூகுள் 25 திட்டத்திற்கான தலைப்புகள் கூகுளிடமிருந்து கிடைக்கப்பெறாதது குறித்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் பிரவீனுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அவர்கள் செப் 8 இல் இந்தத் தலைப்புகளைப் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், சுமார் 9600 தலைப்புகளில் சுமார் 2200 தலைப்புகள் மட்டுமே 6000 பைட்டுகளுக்கு மேலே உள்ளதாகவும் கூடுதல் தலைப்புகள் தேவைப்படுவதாகவும் நாம் மின்னஞ்சல் அனுப்பினோம். அதற்கான பதில் கிடைக்கப்பெறுவதில் தாமதம் உள்ளது. எனவே இருக்கும் தலைப்புகளை வைத்து நாம் திட்டத்தினைத் துவங்கலாமா? --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:42, 14 செப்டெம்பர் 2025 (UTC)Reply

தலைப்புகளின் பட்டியலில், விரிவு படுத்தக்கூடிய கட்டுரைகள் அடங்குமா?

[தொகு]

கூகுள்25 என்ற இத்திட்டத்தில், புதிய கட்டுரைகளை மட்டும் உருவாக்க வேண்டுமா? அல்லது நஞ்சுப் படர்க்கொடி என்பது போன்ற கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கட்டுரைகளையும் மேம்படுத்தலாமா? உழவன் (உரை) 15:45, 30 செப்டெம்பர் 2025 (UTC)Reply

வணக்கம், கூகுள்25 திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய கட்டுரைகளின் பட்டியலும் உள்ளது (விரைவில் தமிழ் விக்கிப்பீடியாவில் பட்டியல் இடப்படும்). கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு உருவாக்கிய கட்டுரைகளுக்கென்று இந்தத் திட்டத்திலேயே போட்டி ஒன்று நடைபெற உள்ளது. நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:49, 30 செப்டெம்பர் 2025 (UTC)Reply
நன்றி.
  • விரிவாக்கம் செய்யப்பட்ட வேண்டிய கட்டுரைகளைக் காண ஆவலாக உள்ளேன்.
  • மொழிபெயர்ப்புக் கருவியிலான கட்டுரைகளை மேம்படுத்த எண்ணுகிறேன்.
  • முன்மொழிவு: தமிழ் நாடு, தமிழ் சார்ந்த கட்டுரைகளை உருவாக்குதலுக்கும், விரிவு படுத்துதலுக்குமான வாய்ப்புகள் இருப்பின் நன்றாக இருக்கும்.
உழவன் (உரை) 04:42, 1 அக்டோபர் 2025 (UTC)Reply
// தமிழ் நாடு, தமிழ் சார்ந்த கட்டுரைகளை// குறிப்பாக ஏதேனும் ஒரு ஆங்கில பகுப்பினை பரிந்துரைத்தீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:47, 1 அக்டோபர் 2025 (UTC)Reply
பல ஆங்கில விக்கிப்பீடியப் பகுப்புகளில் நம்மைச் சார்ந்த கட்டுரைகள் இல்லை. எடுத்துக்காட்டாக,
  1. அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம் - விரிவு படுத்துவேன்
  2. புதிய கட்டுரை - தமிழ் மின் நூலகம் - தமிழ்நாடு அரசு இட்ட பெயர் - உருவாக்குவேன் - Tamil digital library
  3. விரிவாக்கம் தேவை - அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்ற தமிழ் நாட்டிலுள்ள நூலகங்கள் வெகுகுறைவான செய்திகளே உள்ளன. - விரிவு படுத்துவேன்.
ஆங்கிலம் சார்ந்து நான் இயங்குவத்தில்லை. நமது மொழி, இருப்பிட மேன்மையை வாய்ப்பு கிடைக்குப்போதெல்லாம் பலர் மேம்படுத்த, உருவாக்க வாய்ப்புண்டு. நடுவராக இருப்பவர் மதிப்பிட்டு, அக்கட்டுரைகளை இக்குறிப்பிட்ட நிகழ்வில் இணைத்துக் கொள்ளுதல் நன்று. நம்மைப் பற்றி நாம் அதிக கட்டுரைகளை உருவாக்க வேண்டும். தற்போது நடக்கும் இக்கூகுள் நிகழ்வில் வாய்ப்பு இருந்தால், தேடு பொறி சார்ந்த கட்டுரைகளோடு, இவற்றையும் இணைத்துக் கொள்ளுங்கள். விக்கிமூலம் சார்ந்து அதிகம் ஈடுபடுவதால் இங்கு பங்களிப்பது குறைவாக உள்ளது. பொறுக்கவும். உரையாடியமைக்கு நன்றி. உழவன் (உரை) 01:38, 5 அக்டோபர் 2025 (UTC)Reply

அறிவியல் உள்ளடக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறிமுகமான பயனர்களின் கட்டுரைகளையும் கூகுள் 25 திட்டத்தின் கீழ் கொண்டு வருவது குறித்த முன்மொழிவு

[தொகு]

இத்திட்டத்தின் கீழ் அறிமுகமான பயனர்கள் சிலர் கட்டுரைகளை உருவாக்கி வருகின்றனர். அவர்களின் கட்டுரைகளை மேம்படுத்தி அக்கட்டுரைகளின் உரையாடல் பக்கத்தில் உரிய வார்ப்புருவை இடச்செய்வது குறித்து பொதுக்கருத்தினை வேண்டுகிறேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 14:56, 23 அக்டோபர் 2025 (UTC)Reply

 ஆதரவு -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:54, 23 அக்டோபர் 2025 (UTC)Reply
 ஆதரவு-- சா. அருணாசலம் (உரையாடல்) 18:04, 23 அக்டோபர் 2025 (UTC)Reply
வணக்கம்@TNSE Mahalingam VNR, எதிர்ப்புக் கருத்துக்கள் வரவில்லை என்பதனால் இதனைச் செயற்படுத்தலாமா? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:37, 6 நவம்பர் 2025 (UTC)Reply

இது குறித்து அறிவியல் உள்ளடக்க மேம்பாட்டுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நீச்சல்காரன் அவர்களின் கருத்தினைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு செயற்படுத்தலாம். --மகாலிங்கம் இரெத்தினவேலு 15:16, 6 நவம்பர் 2025 (UTC)Reply

தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். கூகிள்25 திட்டத்தில் நடைபெறும் பயிற்சி/நிகழ்வுகளில் வாய்ப்புள்ள அந்தப் பயனர்களையும் இணைத்துக் கொள்ளலாம். @கி.மூர்த்தி and Chathirathan: அவர்களுக்கு மாற்றுக் கருத்திருக்காதென நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 17:42, 6 நவம்பர் 2025 (UTC)Reply
 ஆதரவு --Chathirathan (பேச்சு) 00:30, 7 நவம்பர் 2025 (UTC)Reply
 ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 02:14, 7 நவம்பர் 2025 (UTC)Reply
 ஆதரவு--மகாலிங்கம் இரெத்தினவேலு 02:27, 7 நவம்பர் 2025 (UTC)Reply

நோபல் பரிசு பெற்றவர்கள் குறித்த கட்டுரைகளையும் கூகுள் 25 திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முன்மொழிவு

[தொகு]

பல்வேறு காலகட்டங்களில் அறிவியல், இலக்கியம், அமைதி ஆகிய பொருண்மைகளின் கீழ் நோபல் பரிசு பெற்ற ஆளுமைகள் குறித்து தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத கட்டுரைகள் எழுதப்படும் போது அவற்றையும் கூகுள் 25 திட்டத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சமூகத்தின் நிலைப்பாட்டினை வேண்டுகிறேன். அவ்வாறான கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அவசியமாதலால் அவற்றைக் குறித்து அனைவரின் கருத்தைப் பெற்று நோபல் பரிசு பெற்றவர்கள் குறித்த பகுப்பினையும் தலைப்புகளில் உள்ளடக்க வேண்டுகிறேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 13:28, 15 சனவரி 2026 (UTC)Reply

இற்றை 06.11.2025

[தொகு]

இன்றைய கூகுள் மீட்டில் சத்திரத்தான், மகாலிங்கம், பாலு ஆகியோர் ரச்சித் மற்றும் பிரவீனுடன் கலந்துரையாடினோம். அதில் தற்போது வரையிலான கூகுள்25 திட்டத்தின் நிலை குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை மற்றும் விரிவாக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை ஆகியன தெரிவிக்கப்பட்டது. திசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளகப் பயிற்சித் திட்டம் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் சிறப்பாகப் பங்களிக்கும் மாணவர்களை கூகுள் அலுவலகத்தைப் பார்க்கும் வாய்ப்பினை வழங்கலாம் எனும் யோசனையினை பிரவீண் கூறினார். இது மிகவும் பயனுள்ள உத்தியாக இருக்கும். இந்தி சமூகத்தினரின் பயிற்சி குறித்தும் தெலுங்கு சமூகத்தினரின் நடவடிக்கைகள் குறித்தும் உரையாடப்பட்டது. தற்போதைய செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டனர். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:10, 6 நவம்பர் 2025 (UTC)Reply

அனைத்துக் கட்டுரைகளையும் கூகுள்25 திட்டத்தில் சேர்க்கக் கோருதல்

[தொகு]

கூகுள்25 திட்டத்தின் பரிந்துரைக்கும் தலைப்புகளைத்தாண்டி அனைத்துப் பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகளையும் கூகுள் 25 திட்ட வார்ப்புருவை இடலாம் என்பது எனது கருத்து. இது குறித்து இத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களின் கருத்து அறியத் தரவும்--Balu1967 (பேச்சு) 08:13, 2 பெப்ரவரி 2026 (UTC)Reply

எனது கருத்து:

  • புதிய பயனர்கள் எழுதும் கட்டுரை எந்தத் தலைப்பாக இருந்தாலும் 6,000 பைட்டுகளைத் தாண்டினால், கூகுள்25 திட்ட வார்ப்புருவை இடலாம். ஏனெனில், புதிய பயனர்களைக் கொணர்தல் என்பது திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
  • ஏற்கனவே பங்களித்து வருபவர்கள், பட்டியலிடப்பட்டுள்ள தலைப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்து எழுதுதல் சிறப்பானதாக இருக்கும். பட்டியலில் இல்லாத தலைப்பு கட்டுரையாக எழுதப்பட்டு, 6,000 பைட்டுகளைத் தாண்டினால், கூகுள்25 திட்ட வார்ப்புருவை இடலாம் என்பது எனது கருத்தாகும்.
  • எப்படியாயினும், கட்டுரைப் போட்டிகள் என வரும்போது பட்டியலிடப்பட்டுள்ள தலைப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்து எழுதவேண்டும் எனும் விதியைக் கொண்டுவருதலே நன்மை தரும். புதிய பயனர்களுக்கான போட்டி, ஏற்கனவே பங்களித்து வருபவர்களுக்கான போட்டி ஆகிய இரண்டிற்கும் இவ்விதியைப் பொருத்த வேண்டும்.
  • கூடுதலாக, திட்ட வார்ப்புரு இடப்பட்டுள்ள கட்டுரைகள் 6,000 பைட்டுகளைத் தாண்டியுள்ளனவா என்பதனையும் ஒருமுறை சரிபார்ப்பது நன்று.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:14, 11 பெப்ரவரி 2026 (UTC)Reply

  • போட்டிகளைத் தவிர்த்து மற்ற நேரங்களில் எழுதும் கட்டுரைகளில் 6000 பைட்டுகளைத் தாண்டி வரும் கட்டுரைகளைத் திட்டத்தின் கீழ் கொண்டுவரலாம் என்பதில் உடன்படுகிறேன்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 14:59, 11 பெப்ரவரி 2026 (UTC)Reply
  • 6000 பைட்டுகளுக்கு மேல் உள்ள கட்டுரைகளை மட்டும் கூகுள்25இல் சேர்க்கவும், ஏற்கனவே அவர்கள் பரிந்துரைத்த தலைப்புகளில் கட்டுரைகளை முதன்மையாக உருவாக்கவும் பரிந்துரைக்கிறேன். காரணம் மற்ற கட்டுரைகளை உருவாக்க முனைப்பு காட்டும்போது கூகுள்25 தலைப்புகள் கிடைப்பில் போட வாய்ப்புள்ளது.--ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:52, 15 பெப்ரவரி 2026 (UTC)Reply

6000 பைட்டுகளுக்கும் குறைவாக

[தொகு]

கூகுள் 25 திட்டத்தில் சேர்க்கப்பட்ட பின்வரும் கட்டுரைகள் 6000 பைட்டுகளுக்கும் குறைவாக உள்ளது. எனவே இதனை துப்புரவு செய்ய வேண்டும்.

No. Title Page ID Type Size (bytes) Last Edited (YYYYMMDDHHMMSS)
1 பேன் ஜிக்சின் 707767 Article 2139 Y ஆயிற்று
2 புலிவர்த்தி வெங்கட மணி பிரசாத் 708151 Article 2281 20251001161627
3 கிட்டி சத்யநாராயணா 711224 Article 2593 20251106174019
4 மத்சியராசா விசுவேசுவர ராஜு 710858 Article 3064 20251106042553
5 ரேகம் மதியலிங்கம் 710700 Article 3126 20251101040106
6 வனமதி வெங்கடேஸ்வர ராவ் 711216 Article 3385 20251106164942
7 இஷா லக்கானி 718721 Article 3553 Y ஆயிற்று
8 பிரணவ் குமார் யாதவ் 711809 Article 4174 20251114091047
9 தேவ வரபிரசாத் 711222 Article 4180 20251107002823
10 ஆள்கூட்டத்தில் தனியே 707769 Article 4328 Y ஆயிற்று
11 சீதா (மலையாள நடிகை) 718754 Article 4469 20260205002751
12 சில்பகலா வேதிகா 710428 Article 4555 Y ஆயிற்று
13 தாவர் சந்த் 710657 Article 4740 20251031135651
14 புத்த கிருஷ்ண சைதன்யா ரெட்டி 708031 Article 4740 20251101154048
15 ருத்ரா (திரைப்படம்) 707879 Article 4890 Y ஆயிற்று
16 தாரியாவாட் சட்டமன்றத் தொகுதி 710655 Article 5065 20251031153634
17 எம். சிவராமன் அம்பலம் 706445 Article 5112 20250913010312
18 தெனாலி சிரவன் குமார் 708342 Article 5141 20260116153831
19 புழுதிவாக்கம் தொடருந்து நிலையம் 706173 Article 5249 20250909003848
20 ஊமைப்பெண்ணின் உரியாடாப்பையன் 707336 Article 6297 Y ஆயிற்று
21 இரெபா ஹோர் 710291 Article 5385 Y ஆயிற்று
22 கரையிலெக்கு ஒரு கடல் தூரம் 707774 Article 5462 Y ஆயிற்று
23 போக்ரண் சட்டமன்றத் தொகுதி 710072 Article 5533 Y ஆயிற்று
24 பொக்குலா தஸ்தகிரி 710129 Article 5591 20260118134632
25 கண்டிகுண்ட வெங்கட பிரசாத் 708101 Article 5618 20260118140114
26 ஒரு யாத்திரமொழி 707592 Article 5758 20250927023041
27 பாப்லோ சலினாசு எர்ரெரா 710907 Article 5930 20251122032401
28 கிஞ்சல் ராஜ்பிரியா 718759 Article 5987 Y ஆயிற்று
29 சசரானா சட்டமன்றத் தொகுதி 714730 Article 5999 Y ஆயிற்று

ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:34, 15 பெப்ரவரி 2026 (UTC)Reply