உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை (கோயில்கள்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

தானியங்கி மூலமாக இந்து கோவில் கட்டுரைகளை கொண்டு வர இருக்கும் வேளையில் கோயில்கள் குறித்தான குறிப்பிடதக்கமை குறித்து வரையரை செய்தல் நலம். இதற்கு முன்பு பல இடங்களில் இதற்கான துவக்கம் மேற்கொள்ளப்பட்டு பின்பு திசைமாறிச் சென்றுள்ளது. எனவே பிற விக்கிப்பீடியர்கள் உதவ வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:12, 21 சூன் 2016 (UTC)Reply

பொதுவாக, கோயில்களைப் பற்றிய குறிப்பிடத்தக்கமை உரையாடல் வேறு. தமிழக அரசு இந்து அறநிலையத்துறை அளித்துள்ள தரவில் காணப்படும் கோயில்கள் யாவும் பழமையானவாக உள்ளன (குறைந்தது 50 ஆண்டுகள்). எனவே, மரபு முக்கியத்துவம் கருதி இவற்றை ஏற்றலாம். --இரவி (பேச்சு) 07:46, 21 சூன் 2016 (UTC)Reply

அக்கட்டுரைகளுக்கு மட்டுமாக கேட்கவில்லை. இடம், குடமுழுக்கு செய்தி, மூலவர் பெயர் இவற்றை மட்டும் கொண்டுள்ள கோயில் கட்டுரைகள் உள்ளன. சில கோயில் கட்டுரைகளில் போதுமான குறிப்பிடத்தக்கமை இல்லையென அவ்வப்போது வார்ப்புரு இடப்படுகின்றன. ஒரு வழிகாட்டுதல் இருந்தால் நன்றாக இருக்கும். கைப்பேசியில் தட்டச்சிடுவதால் மேலும் விரிவாக கூற முடியவில்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:52, 21 சூன் 2016 (UTC)Reply