விக்கிப்பீடியா பேச்சு:கலைச் சொல் கையேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொதுவான கருத்துக்கள்[தொகு]

 • இது ஒரு மிகவும் பயனுள்ள முயற்சி. நன்றி ரவி. Mayooranathan 04:49, 8 ஏப் 2005 (UTC)
 • A very good effort. Thanks -Santhoshguru

கணிதக்கலைச்சொல் கையேடு தேவை[தொகு]

ஒவ்வொரு முக்கிய அறிவியல் துறைக்கும் ஒரு விக்கி கலைச்சொல்கையேடு இருந்தால் அதை விக்கி எழுத்தாளர்கள் பயன்படுத்தலாம். இந்த கருத்து மற்ற பலருக்கும் சம்மதமானால் நான் கணிதக்கலைச்சொல் கையேட்டைத்தொடங்க தயார். --Profvk 22:09, 25 ஏப்ரல் 2007 (UTC)

நல்ல கருத்து! கட்டாயம் செய்யலாம். தொடங்குங்கள்! --செல்வா 01:19, 26 ஏப்ரல் 2007 (UTC)

இயற்பியலுக்கும் ஒரு கலைச்சொல் கையேடு தேவை[தொகு]

Profvk அவர்கள் வலியுறுத்தியதைப் போல் இயற்பியலுக்கும் ஒரு கலைச்சொல் கையேடு தேவையென்பதை நான் உணர்த்த விரும்புகின்றேன்! -நரசிம்மவர்மன்10 07:50, 24 செப்டெம்பர் 2007 (UTC)

குறிப்பிட்ட வார்த்தை மீதான கருத்துக்கள்[தொகு]

A[தொகு]

Access[தொகு]

Don't know whether "aNukkam" is a commonly accepted word in tamil computer jargon.Have never heard the word in common usage.We can think of some simple words like பயன்படுத்து or தொடர்பு கொள்.--ரவி (பேச்சு) 11:54, 8 ஏப் 2005 (UTC)

 • அணுக்கம் is a word generally accepted by Tamil computer community. I adopted this word after going through several IT dictionaries. See TVU dictionary of technical terms. There are many IT dictionaries for Tamil in the web. We can check more. Mayooranathan 13:45, 8 ஏப் 2005 (UTC)
 • If that is the case, we can finalise on the word. Sorry, I am not much aware of the tamil IT jargon. Will learn it :)--ரவி (பேச்சு) 14:57, 8 ஏப் 2005 (UTC)

Ambiguation[தொகு]

See discussion on Disambiguation--ரவி (பேச்சு) 11:54, 8 ஏப் 2005 (UTC)

Anonymous[தொகு]

அடையாளம் காட்டாத is the best word, I think--ரவி (பேச்சு) 11:54, 8 ஏப் 2005 (UTC)

 • "அநாமதேயம்" என்ற சொல்லும் Anonymous என்ற பொருளில் வரும் - Santhoshguru
 • My opinion is that அடையாளம் காட்டாத gives a correct sense that user does not prefer to show his identity and the word is also a simple pure tamil word which any one can understand compared to அநாமதேயம்.--ரவி (பேச்சு) 12:21, 8 ஏப் 2005 (UTC)
 • I too prefer "அடையாளம் காட்டாத" for Anonymous. I initially used the word "முகவரியற்ற", but it gives a bit "down grading" feeling. Mayooranathan 13:45, 8 ஏப் 2005 (UTC)
 • May be "அடையாளமற்ற" also will mean the same. Tamil has uniq words then english. So, I would prefer to use Anonymous 1, Anonymous 2, Anonymous 3 with different meaning. please let me know if it would be good. kvenkat_2k1 14:45, 2 Feb 2007 (IST)

இதற்கிணையான வடசொல் அநாமிகா. பெயரிலி என்று தமிழ்ப்படுத்தலாம், (பயனர் பெயரை எழுதவேண்டுமா அல்லது பெயரிலியாகவே விட்டுவிடலாமா :)) )

 • பெயரிலி என்பது பெயர் இல்லாதவர் என்றவாறு பொருள் வருகின்றது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. அடையாளம் காட்டாத என்பது கூடுதலான விள்ளக்கத்தைத் தருகின்றது. பெயரில்லாதாவர் ஒருவர் இருக்கமுடியுமா? இல்லையா ஹரிகிருஷ்னா?--Umapathy 17:46, 31 மே 2007 (UTC)


"பெயர் இல்லாதவர் என்றவாறு பொருள் வருகின்றது" என்று சொல்கிறீர்கள், ஆங்கிலத்தில் உள்ள anonymus என்பதற்கும் அதுதானே பொருள்! unknown nym (nym=name) என்பதுதானே ஒரு -ous விகுதியுடன் சேர்ந்து அனானிமஸ்--அல்லது சுருக்கமாக anon--என்றாகி இருக்கிறது! (whose name is not known or not given என்பது என்கார்ட்டா தரும் பொருள் வரையறை,) வடமொழியில் உள்ள அநாமிகா என்பதும் அப்படி அ-நாம் (பெயரற்ற) என்பதிலிருந்து உருவானதுதான். (மோதிர விரலுக்கு வடமொழியில் அநாமிகா--அல்லது பெயரிலி--என்பது பெயர். மற்ற விரல்களுக்குத் தனித்தனிப் பெயர் உண்டு. மோதிர விரலுக்கு (வடமொழியில்) பெயர் கிடையாது, ஆகவே அநாமிகா என்று சொல்வார்கள், 'பெயர் அறியப்படாத' என்பது இதற்குப் பொருள்.

நான் தமிழ் விக்கிபீடியாவுக்குப் புதியவன் என்பதால் நேற்று இந்த இடுகையை இடும் சமயத்தில் பயனருடைய பெயரை இடுவதற்கான வழிமுறையை அறிந்திருக்கவில்லை. இப்போது 'பெயருளி'யாகவே வந்திருக்கிறேன். சரிதானே! --ஹரி கிருஷ்ணன் 04:02, 1 ஜூன் 2007 (UTC)

 • ஆம், ஹரி கிருஷ்ணா, நீங்கள் சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கின்றது. வடமொழியில் ஒரு சில பிரயாணத்திற்கு ஏற்ற சொற்களையும் பொருட்களை வாங்குவதற்கான சொற்களையும் தவிர பெரிதாக வேறேதும் எனக்குத் தெரியாது இருந்தாலும் தாங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கின்றது. வெப்ஸ்டரின் (சற்றே பழைய 1995 இல் வெளிவந்த) அகராதியில் பார்தபோது.

anonymous (e nane mes) adj.

 1. with no name known or acknowledged
 2. given, written, etc. by a person whose name is withheld or unknown
 3. not easily distinguished from others or from one another because of a lack of individual features or character

anonymously adv.

Etymology [LL anonymus < Gr anonymos < an-, without + onyma, name]

(C)1995 ZCI Publishing, Inc. (C)1994, 1991, 1988 Simon & Schuster, Inc.

என்றவாறுள்ளது. --Umapathy 17:22, 3 ஜூன் 2007 (UTC)

Anonymous - என்ற சொல்லுக்கு "அடையாளமற்ற, பெயரற்ற, முகவரியற்ற / அநாமதேய / அடையாளம் காட்டாத/முகமறியா"' போன்ற சொற்களில்:
1. "அடையாளமற்ற" எனும் போது அடையாளம் இல்லாத ஒருவர் என்றே பொருள் படுகிறது. இங்கே அடையாளம் காட்டாதவர் எனும் பொருள் வரவேண்டும்.
2. "பெயரற்ற" என்பதும் சரியானதல்ல. பெயர் எல்லோருக்கும் இருக்கிறது.
3. முகவரியற்ற என்பது எந்தவகையில் பொருத்தமற்றது. முகவரிக்கும் அநாமதேயருக்கும் தொடர்பில்லை.
4. முகமறியா என்பதும் நெருக்கமான பொருள் தரவில்லை.
சில முக்கிய வழக்குகளின் போது, அநேகமாக அரசு அல்லது அரசுக்கு எதிரான வழக்குகளை உயர் நீதிமன்றங்களில் தொடுப்போர், தமது வழக்குத் தாக்கலின் போது தமது பெயர் ஊடகங்களில் வெளிவந்து, தமக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுவதனைத் தவிர்க்க (Anonymity order) பெயர் மறைப்பு அனுமதியினை உயர் நீதிமன்றில் பெற்றுக்கொள்வர். இங்கே "Anonymous" என்பதும் ஒரு வகையில் "'பெயர் மறைப்பாளர்"' தான். இருப்பினும் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை புகுபதிகை செய்யாமல் ஏதேனும் சில தொகுப்புகளை மட்டும் அடையாளம் காட்டாமல் செய்துவிட்டுச் செல்வோரை குறிப்பதாகச் சொல் அமைய வேண்டும்.
அட்டவணையில் உள்ள சொற்களில் அநாமதேய(ர்) அல்லது அடையாளம் காட்டாத(வர்) போன்ற சொற்கள் மட்டுமே நெருக்கமான பொருளைத் தருகின்றன. ஏனையவற்றை அழித்துவிடுதல் நல்லது.

B[தொகு]

C[தொகு]

Category - வகை, பக்க வகை, கட்டுக் கூற்று? பகுப்பு என்று விக்சனரியிலியே பாவிக்கப்பட்டுள்ளதே !

'பக்க வகை' என்பது page category என்பதற்க்கும், 'கட்டு' என்பது pack என்பதற்க்கும், 'கூற்று' என்பது statement என்ற சொல்லுக்கும் பொறுத்தமானதாக இருக்கும். 'பகுப்பு' என்பது analysis என்ற சொல்லுக்கு மிக சரியாக இருக்கும். அதனால் 'வகை' என்பதே பொறுத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். சங்கர் வையாபுரி (பேச்சு) 11:28, 8 சூன் 2012 (UTC)

Current events[தொகு]

நடப்பு நிகழ்வுகள் seems a better choice.--ரவி (பேச்சு) 11:54, 8 ஏப் 2005 (UTC)

 • I used both terms. however I prefer "நடப்பு நிகழ்வுகள்"

D[தொகு]

Disambiguation[தொகு]

Since the word describes a process of resolving the dispute of sharing a natural title between two or more articles, I think some word like பங்கு தீர் may be discussed.The suggested word கவர்படுநிலைதீர் is very difficult to understand, atleast for me : )--ரவி (பேச்சு) 11:54, 8 ஏப் 2005 (UTC)

 • It is a difficut word. At the same time it is difficult to find a correct and simple word. I searched a few Tamil - English dictionaries, many of them give a long discription (like பல பொருள்களைத் தரும் ஒரு சொல்). I adopted this word too from a dictionary, which I am unable to locate now. It is not sharing a title, but a word means several things. I feel பங்கு will not give the correct meaning. I accept that a more suitable word needs to be found. Mayooranathan 13:45, 8 ஏப் 2005 (UTC)
  • I found the usage of the word Irunmai(ஈருன்மை) for ambiguity in the UPSC syllabus. please Google the word Irunmai. If the word ஈருன்மை doesn't sound good too, why don't we look for tamil word for Vague, unclear etc to fit in here? --Harikishore 07:17, 15 ஏப் 2005 (UTC)
   • IruNmaiththiir might be an option. palporuLthalaippuththiir might also be an option. But, 1. it is long 2. I don't know if it covers both types of ambiguity due to en:connotation and en:denotation. I think poruL only refers to en:denotation. -- Sundar 05:18, 18 ஏப் 2005 (UTC)


எந்தச் சொல்லை மொழிபெயர்க்கி;றோமே அந்தச் சொல்லின் வேர்ச்சொல்லைப் பார்த்து, அந்த வேருக்கு இணையான தமிழ் வேர்ச்சொல்லைப் பிடித்தால்தான் மொழிபெயர்ப்பு சரியாக அமையும். அப்படியும் செய்யலாம். இன்னொரு மொழியில் சுற்றிவளைத்துச் சொல்வதை நேரடியாகவே சொல்லிவிடவும் செய்யலாம். ambi என்ற முன்னொட்டுக்கு 'ஒன்றுக்கு மேற்பட்ட' என்பது பொருள். 'பலவிதமாகப் பொருள்படுதலை நீக்குதல்' என்பது இந்த ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள். தெளிவித்தல் என்பது நேரடிப் பொருள், 'தெளிவு அடையச் செய்தல்' என்ற தொடரை ஒரே சொல்லாக 'தெளிவித்தல்' என்று சொல்லலாம், தெளிமை என்ற பெயர்ச் சொல்லாகப் படைக்கவும் செய்யலாம்.--ஹரி கிருஷ்ணன் 11:01, 2 ஜூன் 2007 (UTC)

தெளிவித்தல் நல்ல சொல். பரிந்துரைக்கு நன்றி ஹரி அவர்களே!.--Sivakumar \பேச்சு 16:29, 2 ஜூன் 2007 (UTC)

E[தொகு]

(The free) encyclopedia[தொகு]

See archive on previous discussions on this topic

கட்டற்ற கலைக்களஞ்சியம் நல்ல சொற்றொடராகவும்,"The free encyclopedia" என்பதின் சரியான பொருளைத் தருவதாகவுமே இருக்கிறது. இதை விட சிறப்பான சொற்றொடர் கிடைக்கும் வரை இதையே பயன் படுத்தலாம். விடுதலை, தளையற்ற, சுதந்திரம் போன்ற வார்தைகள் "Independence" என்ற பொருள் தான் தரும். இந்த விக்கிபீடியா முயற்சிக்கு அவை சரியான தலைப்பாக இருக்காது என்பது என் பணிவான கருத்து.--ரவி (பேச்சு)

தமிழில் Article இல்லை. ஒரு indefinite article-ஐக் குறிக்கும். ஆதலால் நாம் அதைப் பயன்படுத்தத் தேவை இல்லை. en:Tamil language#Auxiliaries-ஐப் பார்க்கவும். -- Sundar 06:52, 21 மார் 2005 (UTC)
கட்டற்ற களஞ்சியம் மட்டுமே போதுமானதென்று தோன்றுகிறது. -- Sundar 09:54, 29 மார் 2005 (UTC)

I think just the word "kaLanjchiyam" can only give the meaning of store house( like நெற்களஞ்சியம் is a store house for Paddy). So I suggest தகவற்களஞ்சியம் which gives the meaning Information storehouse can be a good translation for encyclopedia.--ரவி (பேச்சு) 05:12, 5 ஏப் 2005 (UTC)

Encyclopedia வின் உள்ளடக்கத்தைத் "தகவல்" என்ற வகைக்குள் அடக்கிவிட முடியாது, எனவே தகவற்களஞ்சியம் என்பது பொருத்தமானதல்ல என்பது எனது கருத்து. நிற்க, கலைக் களஞ்சியம் என்பது Encyclopedia என்பதன் தமிழ்ச் சொல்லாக நீண்ட காலம் பயன்பாட்டில் உள்ளது. இன்று நாங்கள் "கலை" என்னும்போது, "Arts" என்னும் பொருளையே எடுத்துக்கொள்கிறோம். ஆனால் தமிழில் கலை என்னும் சொல் எல்லா அறிவுத்துறைகளையும் குறிக்கவே பயன்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மருத்துவம் கூட ஒரு கலையாகவே கருதப்பட்டது. அனைத்துக் கல்வித் துறைகளுக்கும் தெய்வமான சரஸ்வதியைக் "கலைமகள்" என்றுதானே குறிப்பிடுகின்றோம். எனவே "கலைக்களஞ்சியம்" என்பது பொருத்தமான சொல்தான் என்பது எனது கருத்து. Mayooranathan 17:36, 5 ஏப் 2005 (UTC)

I think everyone is ok with the word கட்டற்ற. Regarding the translation for encyclopedia, I feel it should be கலைக்களஞ்சியம், because

 • It is the popularly established translation for encyclopedia and many people easily understand the meaning.
 • the arguement that கலைக்களஞ்சியம் means "Art encyclopedia" may not be appropriate as the usage of word கலை in கலைக்களஞ்சியம் has comprehensive meaning as pointed out by Mayooranathan.
 • the meaning of just the word களஞ்சியம் can be "store house" only and doesn't give the meaning of encyclopedia.
ரவி, கலைக்களஞ்சியம் என்பது நல்ல பொருத்தமான சொல். களஞ்சியம் எனபது திரண்ட தொகுதி எனவே பொருத்தமாந்துதான். மயூரனாதன் கூறியது போல, கலை என்பது எல்லாக் கலைகளையும் சுட்டும். கலை என்பது பிரிவு என்று பொருள் படுவது. நுட்பமும் உணர்த்தும். நிலாவின் பல்வேறு கூறுகளையும் கலை என்றுதான் கூறுவர். கலை மான் என்று சொல்லும் பொழுது கலை என்று சிறப்பாகக் குறிப்பிடுவது, ஆண் மானின் கிளைபோல் பிரிவுற்று இருக்கும் கொம்பைத்தான். கட்டிடக் கலை, வார்ப்புக் கலை, போர்க்கலை என்று எல்லா அறிவுத்துரைகளும் கலைதான்.--C.R.Selvakumar 22:17, 20 ஜூன் 2006 (UTC)செல்வா

If we are unable to reach a consensus in this regard, we may just display the wikipedia symbol and the the word விக்கிபீடியா beaneath it for time being and continue to discuss this.--ரவி (பேச்சு) 09:55, 20 ஏப் 2005 (UTC)

 • I agree with Ravi on this. We just can use the image which has the name Wikipedia (inTamil). Later we can decide on the exact word for Encyclopedia and include it in the image. Lets do this soon. Sundar, I think you can help us in this regard. - Santhoshguru 07:40, 21 ஏப் 2005 (UTC)
m:Requests for logos#Manage yourself: Wiki.png and m:Wikipedia in other languages are the pages we need. m:U:Nohat is the guy in-charge for this. -- Sundar 08:16, 21 ஏப் 2005 (UTC)
 • I am not against discussion in this matter. However I strongly believe கலைக்களஞ்சியம் is more approprate. As the concept of encyclopedia is relatively new to Tamil, it is difficult to find a word that gives 100% exact meaning. If we find any word that is already established, it is better to use it. If each one is to find his/her own words, it will not help Tamil.
I give here the entry for Encyclopedia in the "Universal Deluxe Dictionary, English-English-Tamil" by Deluxe Publishers, Coimbatore.
en-cy-clo-pae-dia- book(s) giving information about every branch of knowledge. கலைக்களஞ்சியம்.
There was a logo earlier, but it vanished during an update, I think. I prepared a new Tamil Logo (with கட்டற்ற கலைக்களஞ்சியம்) and uploaded it long back, but it did not work. The same logo is found in m:Wikipedia in other languages. I uploaded this there. If you all agree we can request a developer to put it in place. After the decision is made on a consensus word we can change it. Mayooranathan 13:12, 21 ஏப் 2005 (UTC)

Encyclopedia என்பதற்கான தமிழ்ச் சொல் பற்றிய கருத்து வேறுபாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இது பற்றி எல்லோரும் மறந்து விட்டதுபோல் தெரிகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் நான் சென்னையில் இருந்தேன். புத்தகங்கள் வாங்குவதற்காகச் சில புத்தக விற்பனை நிலையங்களுக்கும் சென்றேன். சென்ற இடங்களில், Encyclopedia வடிவத்தில் தமிழில் அண்மையில் வெளியிடப்பட்ட நூல்கள் பற்றியும் அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்கள் பற்றியும் அறிய முயன்றேன். இந்தத் தேடலில் பின்வரும் நூல்கள் எனது கண்களில் பட்டன.

சிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக்களஞ்சியம் - நர்மதா பதிப்பகம்.
இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் - யூனிவர்சல் பப்ளிஷர்ஸ்
சைவசமயக் கலைக்களஞ்சியம் - திருவரசு புத்தக நிலையம்
திருமுருகன் கலைக்களஞ்சியம் - ???

இவை அனைத்திலுமே கலைக்களஞ்சியம் என்பது Encyclopedia என்ற பொருளில்தான் வருகிறது. மேலும் Encyclopedia க்குச் சரியான வேறெந்தத் தமிழ்ப் பெயரிலும் அண்மையில் வெளிவந்த நூல்கள் எதையும் நான் காணவில்லை. கலைக்களஞ்சியம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்டதென்பதையே இது காட்டுகிறது. இதற்குப் புதிய பெயர் ஒன்றைத் தேடுவது பொருத்தமானதாக எனக்குத் தெரியவில்லை. Mayooranathan 08:29, 30 ஜூன் 2005 (UTC)

Ok, then. We'll go by the same translation. If anyone insists on alternatives, we can have a vote running for 1 week. Otherwise, let this version be final. -- Sundar 10:42, 30 ஜூன் 2005 (UTC)
Time to insert the wikipedia symbol ! a poll regarding this can be declared in some appropriate page ( for formality and democracy sake ! if the losers of the poll are not happy, We can even re do the poll after some time after more members come in )--ரவி (பேச்சு) 11:23, 11 ஜூலை 2005 (UTC)

F[தொகு]

G[தொகு]

H[தொகு]

I[தொகு]

J[தொகு]

K[தொகு]

L[தொகு]

M[தொகு]

N[தொகு]

O[தொகு]

P[தொகு]

Project[தொகு]

Add the word project also . - இராஜ்குமார் 8:43 ரியாத் , 31 மார்ச் 2010 .

Protect[தொகு]

how about the word காக்கவும்.

 • The word காக்கவும் may not be wrong, but as this word is used in day-to-day matters, it seems that it does not give the intended meaning in this context. I have seen in many Tamil softwares "காப்புச் செய்" is used. We will see others' openion on this.

சொற்களுக்கு இணைச் சொற்களைத் தேடும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, ஒரு வினைச் சொல்லுக்கு ஏற்ற வினைச் சொல்லைத் தேடாமல், ஒரு பெயர்ச்சொல்லை எடுத்துக்கொண்டு, அதற்கு ஒரு வினை ஒட்டு சேர்த்து, தேவையில்லாமல் சொற்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதுதான். 'முயல்கிறேன்' என்று ஒரு வார்த்தையில் சொல்வதைவிட்டு, 'முயற்சி செய்கிறேன்' என்பது போல் என்று எடுத்துக்காட்டு சொல்லலாம். ஆகவே, protect என்ற சொல்லுக்கு காப்பு, காத்தல்--ஏன், 'கா' என்பதே கூட--போதுமானது. கா என்பதே ஏவல் வினைமுற்றுதான். --ஹரி கிருஷ்ணன் 11:11, 2 ஜூன் 2007 (UTC)

Q[தொகு]

R[தொகு]

Redirect[தொகு]

Redirect என்பதற்கு ஆற்றுப்படுத்துதல் (ஆற்றுப்படுத்தல்) எனக் கொள்ளலாம் -நரசிம்மவர்மன்10 12:07, 21 செப்டெம்பர் 2007 (UTC) ஆம், இது சரியான சொல். ஆற்றுப்படுத்தல் என்றால் வழிப்படுத்தல், அறிந்து வழிகாட்டுதல் என்று பொருள். ஆற்றுப்படை என்னும் நூல் வகையின் பொருளும் வழிகாட்டுதல், வழி உணர்த்துதல் நூல் என்னும் பொருளதே.--செல்வா 14:34, 21 செப்டெம்பர் 2007 (UTC)

S[தொகு]

Session[தொகு]

Normally for court session அமர்வுகள் is used. For Parliament Session, போன்றனவற்றில் நாடாளுமன்றத் தொடர், என தொடர் என்ற சொல் பாவிக்கப்படுகிறது.

கணினியியலில் ஒரு session என்பது வழங்கிக்கும் கணினிக்கும் ஒரு காலகட்டத்தில் உள்ள தொடர்பு. A lot of data interchange is exchanged. When a browser is closed, the session ends. to denote this பிணையத் தொடர் சரியான சொல்லாக இருக்குமா ?

sister projects[தொகு]

is there a translation other than உடன்பிறப்புத் திட்ட்ங்கள் for sister projects? We may just call it is விக்கிபீடியாவின் பிற திட்ட்ங்கள்.My humble opinion is that உடன்பிறப்புத் திட்ட்ங்கள் seems a too literal translation. Such an idea doesn't exist in tamil language tradition.Thnaks.--ரவி (பேச்சு) 04:55, 31 மார் 2005 (UTC)

 • You may be right. If others also agree we can change it. Mayooranathan 07:56, 31 மார் 2005 (UTC)

ஆங்கிலத்தில் உள்ளதைச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கத் தேவையில்லை. 'இணைத் திட்டம்' என்ற தொடர் இதற்கான பொருளைத் தரும் இணைச் சொற்றொடராக இருக்கும். --ஹரி கிருஷ்ணன் 11:13, 2 ஜூன் 2007 (UTC)

T[தொகு]

Tutorial[தொகு]

For tutorial, "பணிமலர்" சரியான பொருளைத் தரவில்லை. "கற்கைவழி" சரியாக இருக்குமோMayooranathan 17:52, 29 மார் 2005 (UTC)
 • I too feel that "பயிற்சிக்குறிப்பு" is not the correct word. Mayooranathan 13:47, 8 ஏப் 2005 (UTC)
படிப்பினை பொருந்துமா? -நரசிம்மவர்மன்10 12:22, 21 செப்டெம்பர் 2007 (UTC)

U[தொகு]

Update[தொகு]

இற்றைப்படுத்து seems a better choice--ரவி (பேச்சு) 11:54, 8 ஏப் 2005 (UTC)


V[தொகு]

X[தொகு]

Y[தொகு]

Z[தொகு]