விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை அளவு குறித்த கொள்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிபீடியாவின் தரத்தை உயர்த்தும் தொடர் முயற்சிகளில் ஒன்றாக இக்கொள்கை பக்கத்தை உருவாக்குவது அவசியம் என்று கருதுகிறேன். இவ்வாறான எளிய கொள்கை ஒன்றை கொண்டிருப்பது தள நிர்வாகிகளுக்கும் பங்களிப்பாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். முதற்கட்டமாக, சில பரிந்துரைகளை தெரிவிக்கிறேன். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், அவற்றை திட்டப்பக்கத்திலும் பதியலாம்.

  • தலைப்பை விளக்கும் ஒரு வரிக்கட்டுரை கூடவே கூடாது (எடுத்துக்காட்டு - சுர்ஜித் சிங் பர்ணாலா). இது போன்ற கட்டுரைகளை விரைந்து குறுங்கட்டுரை அளவுக்காவது (இரு பத்தி) வளர்க்க வேண்டும். அல்லது நீக்கிவிட வேண்டும்.
  • நடப்புச் செய்திகள், நாடுகள், கோள்கள் போன்று மிக முக்கியமான தலைப்புகளைத் தவிர்த்து பிற தலைப்புகளில் வெறும் தகவல் பெட்டி மட்டும் சேர்க்கப்படுவதை (அதுவும் முழுக்க ஆங்கிலத்தில்) வரவேற்காமல் இருப்பது. இது போன்ற தொடர் பங்களிப்புகளை செய்வோரை ஒவ்வொரு கட்டுரையாக வளர்த்தெடுத்த பின் அடுத்த கட்டுரையை தொடங்குமாறு வலியுறுத்தலாம் (எடுத்துக்காட்டு - பரமசிவன்).
  • 100 கிலோபைட்டுக்கு அதிகமாக நீளும் பக்கங்களின் உள்ளடக்கங்களை சிறிய தனித் தனிக் கட்டுரைகளுக்கு நகர்த்துவது.

--ரவி 13:02, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


ரவி, இக்கொள்கைகளுக்கு எனக்கு உடன்பாடில்லை. விக்கிபீடியாவை ஒரு கட்டுரை சேகரிப்பு அல்லது பகிர்ப்பு முறையாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக அது கட்டுரை ஆக்கும் ஒரு முறை. ஆகவே, ஒரு கட்டுரையின் பல வளர்ச்சி நிலைப்படிகள் இருப்பது தவிர்க்க முடியாதது. ஒரு வரிக் கட்டுரையிலும் அத்தலைப்பின் ஆங்கில விக்கி இணைப்பு இருந்த்தால் பிற பயன்ர்கள் வளர்த்து எடுக்கலாம். தவிபீ ஆரம்ப நிலையில் இப்படிப்பட்ட கொள்கை அனாவசியமானது. எப்பொழுது எல்லா தலைப்புகளும் காலப்போக்கில் வளர்த்தெடுக்கப்படும் என்ற ஒரு தொலைநோக்கு அடிப்படையே தேவை. --Natkeeran 13:19, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நற்கீரன், இப்பரிந்துரைகள் பங்களிப்புகளில் கட்டுப்பாடு ஏற்படுத்துவது போல் உள்ளது உண்மை தான். புதிய பயனர்கள் இது போன்ற பங்களிப்புகள் செய்வது புரிந்துக்கொள்ளத்தக்கது. காலப்போக்கில் அவர்களின் பங்களிப்பு மேம்படும் என்று எதிர்ப்பார்க்கலாம். ஆனால், அனுபவம் வாய்ந்த பயனர்கள் இது போன்ற குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை தமக்குத் தாமே கொண்டு பங்களிக்க முன்வர வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். சிறுநீர், வியர்வை போன்ற முக்கியத் தலைப்புகளில் ஓரிரு வரிகளிலாவது கட்டுரையை இடம்பெறச்செய்வது மேலதிக பயனர்களின் ஈர்க்கும் என்று நம்பலாம். அது போன்ற தலைகப்புகளுக்கான முக்கியத்துவம், ஒரு வரியாவது இடம்பெறச் செய்ய வேண்டிய அவசரம் சுர்ஜித் சிங் பர்ணாலா கட்டுரைக்கு இல்லையென்று தோன்றுகிறது. உண்மையில், இது போன்ற ஒரு வரிக்கட்டுரைகள படிக்கும் வாசகர்களுக்கு தமிழ் விக்கிபீடியா குறித்த நன்னோக்கு வராது என்பது எண்ணம். இது போன்ற கட்டுரைகள் இடம்பெறுவதால் மிகுந்த பயனும் இல்லை, நீக்குவதால் மிகுந்த இழப்பும் இல்லை. பங்களிப்பாளர் அல்லாத பயனர்களுக்கு இது போன்ற கட்டுரைகள் ஏமாற்றத்தை அளிக்கும். தமிழ்நாடு கட்டுரையில் இவர் ஆளுனர் என்பது குறிக்கப்பட்டுள்ளது. அதையே திரும்பவும் சொல்ல தனிக்கட்டுரை எதற்கு? எனவே தான், ஒன்று வளர்க்க வேண்டும், இல்லாவிட்டால் speed delete வார்ப்புரு இட்டு நீக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தேன். அனைத்து திரைப்படங்களுக்கும் குறுங்கட்டுரை அளவில் கூட கட்டுரை எழுத முடியாது என்பது உண்மை தான். ஆனால், குறைந்தபட்சம் தகவல் பெட்டியை தமிழிலாவது இட வேண்டும் என்பது நியாயமான எதிர்ப்பார்ப்பு. இதன் மூலம், துறை சார் தகவல்களை விரைந்து சேர்க்க விரும்புபவர்கள் விக்கிபீடியாவின் குறைந்தபட்ச தரக்கட்டுப்பாடுகளை நிறைவு செய்யும் பொறுப்பை உணர்வர் அல்லவா?--ரவி 13:43, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

எந்த ஒரு கட்டுரைக்கும் பல வளர்ச்சி படிநிலைகள் இருக்கும். பங்களிக்கும் பயனர்களே தற்சமயம் விக்கிபீடியாவின் பிரதான வாசகர்கள், எனவே அவர்கள் விக்கிபீடியாவின் தன்மையை நன்கு புரிந்தே இருப்பர். இதனால் விக்கிபீடியாவின் தரவுகள் சற்று ஆட்டம் காணலாம், ஆனால் தரவுகளையும் பார்க்க பரந்த பங்களிப்பை உள்வாங்க முனைவதே எமது நோக்கமாக தற்சமயம் இருக்க வேண்டும். அனுபவம் உள்ள பயனர்கள் குறைந்தது ஒரு இரு பந்தி கொண்ட குறுங்கட்டுரைகளைச் சேர்ப்பது நியாயமான எதிர்பார்ப்பே.

சில சமயங்களில் சில தலைப்புக்களில் ஒரு இரு வரிகொண்ட வரையறைகளை எழுதுவதற்கு நீங்கள் எதிர்பார்ப்பதைவிட பல மணித்துளிகள் செலவிடவேண்டியிருக்கின்றது. எனவே விரைந்து அப்படிப்பட்ட வரையறைகளை நீக்குவது அவ்வளவு பொருத்தமாக படவில்லை. என்னைப்பொறுத்தவரை ஆங்கில இணைப்பையும் பிற வெளி இணைப்புகளையும் சேர்தே தருகின்றேன். பலவற்றை காலப்போக்கில் விரிவாக்கவும் எண்ணமுண்டு. சில இடுகைகள் ஒருவித வகைக்குள் வருவாதலும் அப்படி ஆகின்றன. ஆகவே இக்கொள்கை நோக்கி விரிவான விளக்கமும் தெளிவும் தேவை.

நற்கீரன், விரிவான ஆழமான கட்டுரைகள் எழுதுவதில் உள்ள சிரமம் நாம் அனைவரும் உயர்ந்ததே. இக்கொள்கையில் கடின நிலை எடுக்கப்படாது, கூடாது என்றாலும் பங்களிப்பாளர்களின் கருத்துக்கள், நிலையை அறிய இப்பக்கம் உதவும் என எதிர்ப்பார்க்கிறேன்--ரவி 14:41, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

இவை பற்றி என்னால் ஒரு இறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. என் தனி விருப்பப்படி வெறும் தகவல்பெட்டி மட்டும் உள்ள கட்டுரைகளில் எனக்கு ஈடுபாடு கிடையாது. தகவல்பெட்டியுடன் ஒருவரியாவது வரைவிலக்கண நடையில் இருத்தல் வேண்டும். நடைக் கையேட்டில் பரிந்துரைத்தபடி முதல் வரியில் தடித்த எழுத்துக்களில் தலைப்பும் வர வேண்டும். ஒருவரிக் கட்டுரைகளைப் பொருத்தவரையில் மேல்லே கூறிய தகுதியிருப்பின் எனக்கு உடன்பாடே. அதே நேரம் இந்த "வழிகாட்டலை" (கொள்கை அல்ல) இடம்பார்த்து வலியுறுத்த வேண்டும். விலை கட்டுரைபோல கட்டுரைகள் முதல்பக்கத்தில் சிவப்பு இணைப்பைத் தவிர்க்கும் வகையில் அவ்வப்போது உருவாக்கப்படலாம். ஆனால் முன்னதாக மூலிகைகள் தொடர்பாக வரிசையாக ஒரு பயனர் உருவாக்கியவற்றை அனுமதிக்காமல் அவற்றைப் பட்டியலாகத் தரச் சொல்லலாம். அல்லது ஒவ்வொரு கட்டுரையாக வளர்த்தெடுக்கும்படி கோரலாம். இவ்வேண்டுகோள்களுக்குத் தகுந்த வார்ப்புருக்களை உருவாக்கிப் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றில் சில தீவிர சூழல்களைத் தவிர மற்றவற்றை ஒரு கட்டாயக் கொள்கையாக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. -- Sundar \பேச்சு 16:55, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

தேவையும் தரமும் கவனிக்கப்பட வேண்டும்[தொகு]

தமிழ் விக்கிபீடியாவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பக்கங்கள் தொடர்ந்து வளர்த்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. ஆதலால் ஒரு வரிக் கட்டுரைகள் எதிர்மறையான விளைவுகளையே எற்படுத்துகின்றன. உதாரணமாக உள்ளடக்கமற்றிருந்த வங்கி நீக்கப்பட்டதால் தான் அது மீண்டும் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது.

விக்கிபீடியா கட்டுரை ஆக்கும் முறையாக இருக்கலாம். ஆனால் ஒருங்குகுறியில் தேடுவது இப்பொழுது பரவலாக அறியப்பட்ட தொன்றே. விக்கிபீடியாவில் கட்டுரை இருந்தால் நிச்சயம் அது முதற்பக்கத்தில் வரும் என்பது நாம் அறிந்ததொன்றே. அந்த வகையில் வெறும் 15 - 20 பேர் தான் பங்களிப்பதால் எமக்கு பெரிய பொறுப்பிருக்கிறது. நீக்கப்பட்ட குன்றுதோறாடல் போன்ற ஒரு வரிகள் தமிழ் விக்கிபீடியா தொடர்பில் எதிர்மறையான அறிமுகத்தை ஏற்படுத்தும்.

31.07.2006 புள்ளிவிபரங்களின்படி இருந்த 3600 கட்டுரைகளில் 200 எழுத்துக்களை விடப் பெரியவை 3100 தான். எனைய 500 உம் கட்டுரைகளே அல்ல.

கட்டுரை அளவு குறித்த யோசனையை ஒரு விதிபோலக் கூறாமல் பரிந்துரையாகக் கூறுவதே நல்லது. நான் இதற்கான நடைமுறைச் சாத்தியமான வழியாகவே குறுங்கட்டுரைகள் பக்கத்தைப் பயன்படுத்தினேன். இப்போது அப்பக்கத்தில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்கள் குறுங்கட்டுரைகளை கவனித்து அவற்றை விரிவாக்குவதிலும், அவசியமற்றவற்றை நீக்குவதிலும் ஈடுபட்டால் பயனுள்ளதாயிருக்கும்.

மேலும் நிரோஜன் போன்ற ஆர்வமுள்ள, பயனுள்ள ஆனால் விக்கி நடைமுறைகளை உடனடியாக விளங்கிக் கொள்ள முடியாத அல்லது விளங்கிக் கொள்ள அக்கறை காட்டாத பயனர்களை புதுக் கட்டுரைகள் உருவாக்கும்போது சரியான விதத்தில் கருத்துக்கள் கூறி வழிப்படுத்துவது நல்லது. ஆங்கிலத்திலிருந்து தகவல் பெட்டிகளை பிரதி செய்து இடுவது கலைக்களஞ்சியக் கட்டுரையாகாது. ஓரளவுக்கேனும் பொருத்தமானதாக, தரமானதாக இருக்க வேண்டும்.

கட்டுரையின் நீளத்தை விட அதன் தேவைக்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. சிறிதானாலும் கலைக்களஞ்சியத் தரம் இருக்கிறதா மற்றும் வளர்த்தெடுக்கப்படுமா என்பவற்றை அவதானிக்க வேண்டும். மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு; ஆனால் கட்டாயமாக்க வேண்டியதில்லை. கோபி 16:27, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கட்டுரை ஆக்குவது தொடர்பில் சில குறிப்பிட்ட கொள்கைகளை பின்பற்றுவது சிறந்தது என நான் கருதுகின்றேன்.ஒவ்வோர் கட்டுரைக்கும் பொருத்தமான விளங்கங்கள் அவசியமானதுமான சொல்லாடல்களும் படிமங்கள் மற்றும் வெளி இணைப்புக்கள் கட்டாயமாக்கப்படவேண்டும் அதுவே தவிக்கியின் தரத்தினை,அழகினை கொடுக்கும் வேறுமனே எண்ணிக்கையில் இல்லை.எண்ணிக்கையினை நோக்கமாகவும் கட்டுரையின் அளவினை அதாவது மேல் நான்கூறியது கொள்கையாகவும் இருக்கவேண்டும்.அப்போடுதான் தவிக்கி ந்ல்ல எதிர்காலம் இருக்கும் என நம்புகின்றேன்.--கலாநிதி 17:14, 5 செப்டெம்பர் 2006 (UTC) kalanithe


பங்களிக்கும் பயனர்களே தற்சமயம் விக்கிபீடியாவின் பிரதான வாசகர்கள் என்ற நற்கீரனின் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன். ஆனால், top 100 பக்கங்களை பார்க்கும் வரை பலருக்கும் இந்த எண்ணம் இருந்திருக்ககூடும் என்பது உண்மை தான். பங்களிப்பாளர்கள் அதிகம் பார்க்கும் பக்கமாக அண்மைய மாற்றங்கள் பக்கமும், அதில் இடம் பெறும் பக்கங்களும் தான் இருக்கும். ஆனால், அப்படியில்லாத முதற் பக்கம், நடப்பு நிகழ்வுகள், தமிழ், இலங்கை, சிக்குன்குனியா போன்ற பக்கங்களுக்கு அதிகம் பேர் வந்து போவது கவனிக்கத்தக்கது (பரவால, நம்மள தவிர நாலு பேருனாச்சும் வராங்கனு சந்தோஷம் தான் அதுல ! ;) ) மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி பக்கத்துக்கு யார் எங்கிருந்து எப்படி வருகிறார்கள் என்பதே புரியவில்லை. இக்கட்டுரை மிகக் குறுகிய அளவில் இருப்பது விக்கிபீடியாவுக்கு நல்ல அறிமுகத்தை தராது. எனவே தான் விரைந்து மேம்படுத்தும் வார்ப்புருக்களை இட்டு வருகிறோம். திரைப்படங்கள் குறித்த தேடல் மூலமும் பயனர்கள் இங்கு வரக்கூடும். வெறும் ஆங்கிலத் தகவல் பெட்டி கண்டு ஏமாற்றமுறும் பயனர்கள், பின்னர், கூகுல் தேடலில் வரும் நல்ல விக்கிபீடியா கட்டுரைகளின் நம்பகத்தன்மையை கூட சந்தேகிக்ககூடும். எனவே ஒரு கால வரையறைக்குட்பட்டு முக்கிய குறுங்கட்டுரைகளை வளர்த்தெடுப்பதிலும் யாரும் ஆர்வம் காட்டாத ஒரு வரிக்கட்டுரைகளை நீக்குவதிலும் முனைப்பு காட்ட வேண்டும். எந்த ஒரு விக்கிபீடியா கொள்கையும் வலிந்து திணிக்க இயலாது; கூடாது. ஆனால், இது போன்ற தரக்கட்டுப்பாடுகளில் ஒரு விழிப்புணர்வை வளர்க்க, வழிகாட்டியாக இருக்க இது போன்ற உரையாடல்கள் இருக்கும் என்பது என் நம்பிக்கை.--ரவி 18:06, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]