விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரைப் போட்டி முன்தேர்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைப் போட்டிக்கான பதிவுகள் வரத் தொடங்கியுள்ளன. இவற்றை முன் தேர்வுக்கென நம் குழுவுக்கு மின்மடல் வழியாக அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தோடு முன் தேர்வுக்கான முறையையும் நாம் இறுதி செய்ய வேண்டும். என் கருத்து கீழே. -- சுந்தர் \பேச்சு 16:33, 5 ஏப்ரல் 2010 (UTC)

தகுதிகள்[தொகு]

முதற்கண் அடிப்படை ஏற்புத் தகுதிகளை உறுதி செய்ய வேண்டும். அவை நம் விதிமுறைகளில் இருந்த வரும். காட்டாக, மிகச் சிறிய கட்டுரை, கலைக்களஞ்சியத் தலைப்பு அல்லாமல் வலைப்பதிவு போன்ற அமைப்பு, தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் உரை, அளவுக்கதிகமான எழுத்து மற்றும் இலக்கணப்பிழைகள் போன்றவற்றைப் பரணேற்றிவிட்டுப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

முறை[தொகு]

  1. பதிவாகும் கட்டுரைகளை மென்பொருள் தானாக ஒரு மின்முகவரிக்கோ, ஓப்பன் கான்ஃபு போன்ற தளத்துக்கோ அனுப்ப வகை செய்ய வேண்டும்.
  2. கட்டுரையில் பெயர் முகவரி இருப்பின் நீக்க வேண்டும். கோப்பின் பெயர் ஒரு அடையாளமாக இருக்கும்.
  3. ஒவ்வொரு அடையாளக் குறியீட்டுக்கும் ஒரு வரியென ஒரு விக்கி அட்டவணையிலோ, கூகுள் அட்டவணையிலோ இட்டு மேற்கூறி தகுதிகளின் அடிப்படையில் தேர்வானதா இல்லையா எனக் குறிப்பிடலாம்.
  4. ஒரு குழுவின் பரிந்துரையை மற்றொரு குழு மீளாய்வு செய்யலாம். முன்தேர்வுக்கு இது அவ்வளவு அவசியம் இல்லை.
  5. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைத் துறைவாரியாக நடுவர் குழுவிடம் அனுப்ப வேண்டும். அவர்களுக்கும் ஒரு அட்டவணையைப் பகிர வேண்டும். அதோடு, மதிப்பெண் தருவதற்கான ஒரு வழிகாட்டலையும் தந்தால் அனைத்து நடுவர்களும் ஒரே மாதிரி மதிப்பிட வாய்ப்புண்டு.

மேற்கூறிய முறையைச் செப்பம் செய்து ஒத்த தகவல் பக்கத்தில் இடலாம். செல்வா போன்று ஆசிரியப் பணியில் இருப்பவர்கள் தாம் பின்பற்றும் மதிப்பிடுதல் முறையைப் பரிந்துரைத்தால் நன்று. -- சுந்தர் \பேச்சு 16:33, 5 ஏப்ரல் 2010 (UTC)

கட்டுரைகளை வடிகட்டும் குழு[தொகு]

சுந்தர் மேலே குறிபிட்ட படி, வரும் கட்டுரைகளில் பொருந்தாதவற்றை வடிகட்டி அடுத்த நிலை மதிப்பீட்டுக்கு அளிக்க வேண்டும். இதில் உதவ ஆர்வம் / நேரம் உள்ளோர் தயவு செய்து உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவிக்கவும். நன்றி--ரவி 07:10, 7 ஏப்ரல் 2010 (UTC)

மதிப்பிடும் முறை சரிவரத் தெரிந்தால், என்னால் உதவ முடியும் என நம்புகின்றேன். --கலை 09:47, 7 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி கலை. முதல் தொகுதி கட்டுரைகள் கிடைத்து, குழுவையும் உருவாக்கிவிட்டால் நாமே கூடி உரையாடி தேவையான வழிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம்--ரவி 09:55, 7 ஏப்ரல் 2010 (UTC)

  • சுந்தர், ரவி, கலை அனைவருக்கும் வணக்கம்.
  • கட்டுரைகளை வடிகட்டும் குழுவில் தங்களனைவருடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:43, 10 மே 2010 (UTC)[பதிலளி]