விக்கிப்பீடியா பேச்சு:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் எவ்வளவு முயன்றும் என் கணீணியில் உள்ள புகைப்படத்தை என் கட்டுரையுடன் இணைக்கமுடியவில்லை. எளிதான வழி சொல்லவும். அந்த புகைப்படம் ஓரு புத்தகத்திலிருந்து எடுத்த அரிய புகைப்படம் அந்த நபர் வாழ்ந்த காலம் 1940 சர் அ தா பன்னீர் செல்வம்.

இடது பக்க கருவிப் பெட்டியில் கோப்பைப் பதிவேற்று என்ற ஒரு இணைப்பு உண்டு. அதை சுட்டவும். அந்தப் பக்கம் சென்று மூலக் கோப்பின் பெயர் என்ற பெட்டியில் Browse என்ற பொத்தானை செடுக்கினால், உங்கள் கணினியின் கோப்பு ஒழுங்கு தெரியும். அதன் வழி சென்று உங்கள் படத்தைத் தேர்தெடுங்கள். பின்னர் தகுந்த உரிமத்தைத் பற்றி சுருக்கத்தில் குறிப்பிடுங்கள். பின்னர் கோப்பை பதிவேற்ற என்ற பொத்தானை அமுக்குங்கள். படம் பதிவேற்றப்படும். அதன் பின்னர்

[[படிமம்:Carl Friedrich Gauss.jpg|right|100px]] என்பது போல் எழுதினால், படம் இங்குள்ளது போல் வலப்பக்கம் தோன்றும். --Natkeeran 19:38, 19 ஜனவரி 2009 (UTC)