விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 29, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உங்களுக்குத் தெரியுமா செய்திகளுக்கான மேற்கோள் அக்கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:16, 29 சனவரி 2014 (UTC)

ஆம் அன்ரன். இந்த விதிமுறை உள்ளது. வேலை நடைபெறுகிறது வார்ப்புருவை இப்போதைக்கு இடுகின்றேன். திருத்தி உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:21, 29 சனவரி 2014 (UTC)
சோழ அரசாங்கமே முதலில் தென் இந்தியா முழுமையையும் ஒரு குடையின் ஆட்சி செய்த பெருமைக்குரிய அரசாகும் என்பது ஏற்புடையதாயினும். மேற்கோள் மூலம் உறுதி செய்வது நல்லது. தென்காசி சுப்பிரமணியன் உதவக்கூடும். நானும் முயற்சிக்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:28, 29 சனவரி 2014 (UTC)

# முதலில் இக்கட்டுரையை சோழப் பேரரசு என்ற கட்டுரையோடு இணைக்க வேண்டும். நான் சோழப் பேரரசு தனிக்கட்டுரை என நினைத்துவிட்டேன்.

  1. சோழர் வட கர்நாடகத்தில் சில பகுதிகளை ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் தென்னிந்தியா முழுதும் ஆதிக்கம் செய்தார்கள் என்பது உண்மையே. ஆனால் முதன்முதலில் என்று கூற இயலாது. சங்ககாலம், களப்பிரர், பல்லவர், ரணதீரன், பராந்தகன் போன்றோர் தென்னிந்தியா முழுதும் படையெடுத்துச் சென்று வென்றவர்களே. ஒவ்வொருவர் ஆட்சியிலும் கர்நாடக ஆந்திரப்பகுதிகளில் சில விடுபட்டிருக்கும். களப்பிரர் துளுநாடு வரை ஆண்டதாக எல்லாம் வரலாற்று நூல்கள் சொல்கின்றன. இருந்தாலும் கி.பி.250 - 550 கால பல்லவர் களப்பிரர் ஆட்சிப்பகுதிகளை கணிப்பது தற்போதைக்கு முடியாத காரியம். அதனால் முதன்முதலில் என்பதை சேர்க்க வேண்டாம் என்பது என் கருத்து.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:00, 29 சனவரி 2014 (UTC)
இந்த உரையாட்லின் சில பகுதிகள் சோழ அரசாங்கம்/சோழப்பேரரசு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் நகர்த்தப்படுவது பயன் தரும் எனக் கருதுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:17, 29 சனவரி 2014 (UTC)