விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Stop.png

இன்றைய சிறப்புப் படம் திட்டம் குறித்த கலந்துரையாடல் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. --Anton (பேச்சு) 15:33, 15 செப்டெம்பர் 2012 (UTC)

பல படிமங்கள் குறித்த கலந்துரையாடிய பிறகே முடிவெடுப்பது மகிழ்ச்சி. ஒரு சில படிமங்கள் நன்றாக இருந்தாலும் கட்டுரையில் இணைக்கப்படவில்லை என்று காரணம் சுட்டப்படுகிறது. கட்டுரையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமாகத் தோன்றவில்லை. அது குறித்த கட்டுரை இருந்தாலே போதுமானது. எடுத்துக்காட்டுக்கு, வளையல் வழிபாடு பற்றிய படிமத்தை வளையல் கட்டுரையில் இணைக்கலாம். அல்லது, படிமத்தைக் காட்சிப்படுத்தும் போது வளையல் கட்டுரையைச் சுட்டலாம். புத்தர் சிலைகள் உள்ள ஒரு படிமத்தைக் கூட இதே போல அணுகலாம். நல்ல படிமங்களைத் தவறவிட வேண்டாம் என்பதே நோக்கம்.--இரவி (பேச்சு) 07:34, 27 சனவரி 2013 (UTC)

நிகழ்படங்கள்[தொகு]

ஊடகப் போட்டி நேரத்தில் நிறைய நிகழ்படங்களும் வந்தனவே? தமிழர் வாழ்வியல் தொடர்பான நிகழ்படங்களைக் காட்சிப்படுத்தினாலும் சிறப்பாக இருக்கும். இதில் படிமத்தின் நேர்த்திக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அளவுக்கு இறுக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன். சிறப்புப் படிமம் என்று குறிப்பிட முடியாதெனில், தனியே நிகழ்படத்துக்கு என முதற்பக்கத்தில் ஒரு இடம் ஒதுக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் பன்முகத் தன்மையைக் காட்ட உதவும்--இரவி (பேச்சு) 07:37, 27 சனவரி 2013 (UTC)